என் மலர்
நீங்கள் தேடியது "construction worker"
- வாக்குவாதத்தில் கோபமடைந்த ஜவகர், ஜெகதீசை வெட்டியுள்ளார்.
- கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் ஜவகரை கைது செய்தனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி பக்கில் புரத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார்(வயது 32). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி திருச்செந்தூர், அடைக்கலாபுரம் பிலோமிநகரை சேர்ந்த அந்தோணி பிச்சை என்பவருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்து அவருடன் வாழ்ந்து வருகிறார்.
தன்னை பிரிந்து வேறொருவருடன் வாழும் மனைவி இருக்கும் இடத்தை கண்டறிய கணவர் கணேஷ்குமார் மற்றும் அவரது நண்பரான அதே பிலோமிநகரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஜெகதீஷ்(32) ஆகிய இருவரும் ஜெகதீஷின் சித்தி மகனான ஜவகர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த ஜவகர், ஜெகதீசை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜெகதீஷ் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் தூத்துக்குடிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் ஜவகரை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட ஜவகரின் தாயாரும், உயிரிழந்த ஜெகதீஷ் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவார்கள்.
- பெரம்பலூர் அருகே மனைவியிடம் கோபித்து சென்ற கட்டிட தொழிலாளி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்
- வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்
பெரம்பலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அரங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், சதீஷ்குமார் (23), விக்னேஷ்வர் (20) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் செந்தில்குமார் தமது மாமனார் வீட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் சண்டை போட்டுவிட்டு வெளியேறியவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 2 நாட்களாகியும் அவர் திரும்பாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் குன்னம் தாலுகா வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வெள்ளாற்றுக்கு விரைந்து சென்ற மங்களமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மிதந்தவரை மீட்டனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மாயமான செந்தில்குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து மங்களமேடு போலீசார் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அடுத்துள்ள திரளி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது40), கட்டித் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஹம்சவர்தணி என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று தனது மகளை கல்லூரிக்கு பஸ் ஏற்றி விட்டு சென்ற குமரேசன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் திரளி கவுண்டமா நதி தடுப்பணை அருகே ஆண் பிணம் மிதந்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.
இதுதொடர்பாக போலீ சார் விசாரணை நடத்திய போது தடுப்பணை யில் இறந்து கிடந்தது குமரேசன் என தெரியவந்தது. அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா?என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தச்சநல்லூர் மேல ஊருடையார்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). கட்டிட தொழிலாளி.
- நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேல்முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
தச்சநல்லூர் மேல ஊருடையார்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). கட்டிட தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேல்முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தச்ச நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தவளக்குப்பத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உடல் கருகி இறந்து போனார்.
- ஜல்லி போடுவதற்கு முன்பாக அவர் மாடிக்கு சென்று அந்த இடத்தினை பார்வையிட்டுக்கொண்டி ருந்தார்.
புதுச்சேரி:
தவளக்குப்பத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உடல் கருகி இறந்து போனார்.
புதுவை-தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் 4 முனை ரோட்டில் முரளி என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டின் முதல்மாடி தளத்துக்கு இன்று காலை ஜல்லி போடும் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கட்டிட தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அதுபோல் இந்த பணிக்கு புதுவை ஒட்டம் பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பலராமன் (வயது52) என்பவர் வந்திருந்தார்.
ஜல்லி போடுவதற்கு முன்பாக அவர் மாடிக்கு சென்று அந்த இடத்தினை பார்வையிட்டுக்கொண்டி ருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் பலராமனின் கை உரசியதாக தெரிகிறது.
இதனால் மின்சாரம் தாக்கியதில் பலராமன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இப்பகுதியில் உயர்மின்னழுத்த கம்பி குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்வதால் பாதிப்பு இல்லாத வகையில் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை மின்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டும், அதனை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால் இந்த சம்பவம் நேர்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிட தொழிலாளி.
- கருப்பசாமிக்கும் அவரது சகோதரிகளுக்குமிடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிட தொழிலாளி. கருப்பசாமிக்கும் அவரது சகோதரிகளுக்குமிடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்றும் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்தவர்கள் கருப்பசாமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக கருப்பசாமி தட்டப்பாறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ் பெக்டர் முத்துக் கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருக்குறுங்குடி மேலநம்பி தோப்பை சேர்ந்தவர் ரவி . இவரது வீட்டு கார் செட்டில் கட்டுமான பணி நடந்து வருகிறது.
- ரவி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வள்ளியூருக்கு சென்று விட்டார்.
களக்காடு:
திருக்குறுங்குடி மேலநம்பி தோப்பை சேர்ந்தவர் ரவி (வயது52). இவரது வீட்டு கார் செட்டில் கட்டுமான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணியில் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரத்தை சேர்ந்த செல்வலிங்கமும், தொழிலாளர்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரவி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வள்ளியூருக்கு சென்று விட்டார்.
இதனை கவனித்த செல்வலிங்கம் வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், ரூ. 26 ஆயிரம் ஆகியவற்றை திருடியுள்ளார். மேலும் ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதுபற்றி ரவி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக கட்டிட தொழிலாளி செல்வலிங்கத்தை தேடி வருகின்றனர்.
- அவரை நண்பர்கள் தேடிய போது அங்குள்ள விசைத்தறி கூடம் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்
- விசைத்தறி கூட உரிமையாளர் முத்துசெல்வத்தை தாக்கியதால் அவர் இறந்தது தெரிந்தது.
திருப்பூர்:
விருதுநகரை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது 35) . இவர் மங்கலம், கோம்பக்காட்டு புதுாரில் பகுதியில் தங்கியிருந்து கட்டட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, இரு மகன்கள் உள்ளனர்.
முத்துசெல்வம் கடந்த ஜனவரி 1-ந் தேதி அதிகாலை நேரத்தில் அறையில் இருந்து சென்றவர் நீண்ட நேரமாக காணவில்லை. இதையடுத்து அவரை நண்பர்கள் தேடிய போது அங்குள்ள விசைத்தறி கூடம் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.இது குறித்து மங்கலம் போலீசார் விசாரித்தனர்.
இதில் அதிகாலை நேரத்தில் விசைத்தறி கூடம் அருகே முத்து செல்வம் நடந்து சென்ற போது திருடன் என சந்தேகித்து, விசைத்தறி கூட உரிமையாளர் முத்துசெல்வத்தை தாக்கியதால் அவர் இறந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, துரைபழனிசாமி (45), சவுந்தரராஜன் (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வந்தனர்.
போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில் இச்சிபட்டியை சேர்ந்த மணிகண்டன் (50), கோம்பக்காட்டு புதுாரை சேர்ந்த முருகேசன் (35) ஆகிய இருவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
- மாரியப்பன் நேற்று இரவு பணி முடிந்து தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று சென்றார்.
- இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள கிழக்கு காமராஜர்நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது44). கட்டிட தொழிலாளி.
இவர் நேற்று இரவு பணி முடிந்து தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று சென்றார். எட்டயபுரம் ரோடு ஜோதிபுரம் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த வாகனம் அவரது சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.
- தமிழ் அழகன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழ் அழகன் (31). கட்டிட தொழிலாளி. இவர் சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில் தமிழ் அழகனுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக் கிடையே சண்டை ஏற்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சவுமியா, தமிழ் அழகனை விட்டு குழந்தை களுடன் பிரிந்து அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அதிகமாக மது குடித்து வந்த தமிழ் அழகன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் தமிழ் அழகனை மீட்டு பெருந்து றையில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தமிழ் அழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் அழகாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். அவரது வீட்டில் 3-வது மாடியில் கட்டிட வேலை நடந்து வருகிறது.
- நேற்று மதியம் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு கட்டிட பணிகள் நடந்தது.
சேலம்:
சேலம் அழகாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். அவரது வீட்டில் 3-வது மாடியில் கட்டிட வேலை நடந்து வருகிறது. இந்த பணியில் கட்டிட தொழிலாளர்களான சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தபுஷ்பராஜ் (வயது 23), கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த மணி, வீரன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
இந்த வீட்டையொட்டி மின்சார கம்பம் இருப்பதுடன் ஒயரும் செல்கிறது. நேற்று மதியம் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு கட்டிட பணிகள் நடந்தது. மின்சார கம்பி மீது படாமல் இருக்க தடுப்புகளால் மறைக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் புஷ்பராஜ் அலுமினியத்தால் ஆன மட்டை பலகையை எடுத்த போது, அது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்சார கம்பி மீது உரசியது.
இதனால் புஷ்பராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்த வீரன், மணி ஆகியோர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே புஷ்பராஜ் பரிதாபமாக இறந்தார். வீரன், மணி ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே மின்சாரம் தாக்கி பலியான புஷ்பராஜ் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. புஷ்பராஜ் சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கட்டிடத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- கட்டிடத்தொழிலாளி, தற்கொலை, Construction worker, suicide,
திருமங்கலம்
பேரையூரை சேர்ந்தவர் முருகேசன்(வயது60), கட்டிடத்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்கான அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் இறந்துவிட்டார். இதுபற்றி அவரது மகன் தர்மர் பேரையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.