என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corpse"

    • சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
    • நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் பிணமாக கிடந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன்.

    இருசக்கர வாகனம் மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா என்று மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இன்று காலை செங்கோட்டையன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் செங்கோட்டையனின் உடலை மீட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செங்கோட்டையன் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 24-ந் தேதி இரவு படுதா ர்கொல்லை ஏரியில் குளிக்க செல்வதாக நாராயணசாமி மனைவியுடன் கூறி சென்றார்.
    • முதியவர் பிணம் குறித்து, திரு.பட்டினம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் படுதார்கொல்லை ஏரியில் மிதந்த, முதியவர் பிணம் குறித்து, திரு.பட்டினம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் படுதா ர்கொல்லை முத்தாம் பள்ளம் பேட்டை ச்சேர்ந்தவர் நாரா யணசாமி (வயது70). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நாராயணசாமி மனைவியுன் வசித்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த 24-ந் தேதி இரவு படுதா ர்கொல்லை ஏரியில் குளிக்க செல்வதாக நாராயணசாமி மனைவியுடன் கூறி சென்றார். நீண்டநேரம் ஆகியும் நாராயணசாமி வீட்டுக்கு வராததால், உறவினர்கள் ஏரி மற்றும் அதன் சுற்று பகுதியில் தேடினர். நாராயணசாமி கிடைக்கவில்லை.

    இந்நிலையில், நாராயண சாமி ஏரியில் பிணமாக மிதப்ப தாக திரு.பட்டினம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார், நாராயணசாமி உடலை கைபற்றி, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்க்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    6 தீயணைப்பு வீரர்கள் பாலமான் ஓடையில் மிதந்த பிணத்தை மீட்டனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே பாலமான் ஓடை உள்ளது. இதில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதைக் கண்ட பொது மக்கள் சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிதம்பரம் நகர தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சிதம்பரம் நகர தீயணைப்பு நிலைய அதிகாரி பழனிச்சாமி தலைமையில் 6 தீயணைப்பு வீரர்கள் வந்து பாலமான் ஓடையில் மிதந்த பிணத்தை மீட்டனர்.

    பிரேதத்தை கைப்பற்றி போலீசார், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    கடலூர்:

    திட்டக்குடி அ அருகே ராமநத்தத்தில் ராமநத்தம்-கண்டமத்தான் செல்லும் சாலையில் தனியார் ஓட்டல் எதிரே சாலையோரம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் அருகில் உள்ள ராமநத்தம் நி போலீஸ் லையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன நபர் குறித்து அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என முதல் கட்ட விசாரணை செய்தனர். இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டைஅருகே உள்ள நூத்தப்பூர் கிராமத்தில் இவரது தங்கை குமாரி வசிப்பதாக தகவல் கிடைத்தது.

    இவர் கட்டம் போட்ட கைலி, வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் பார்சல் உணவு, தண்ணீர் பாட்டில் இருந்தது.

    இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • ஜோதி தியேட்டர் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார்.
    • சாக்கடை கால்வாயில் இருந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம் :

    சேலம் அம்மாப்பேட்டையில் ஜோதி தியேட்டர் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அம்மாபேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், சாக்கடை கால்வாயில் இருந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் யார்?

    என்பது குறித்த விசாரித்தபோது, பொன்னம்மாப்பேட்டை சக்தி நகரைச் சேர்ந்த இளங்கோ (வயது 48) என்பது தெரிய வந்தது. எலக்ட்ரீசியனான அவர் குடிபோதையில் சாக்கடை கால்வாயில் விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்
    • மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் வாலிபர் பிணமாக தொங்கினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன். இவர் தற்போது கும்பகோணத்தில் தங்கி உள்ளார். இவரது மகன் அசோக்குமார்(வயது 19). இவர் தனது நண்பர் கணேசனின் அக்காள் வீடான சின்னவளையம் தெற்கு தெருவில் உள்ள மணிகண்டன்- கவுரி தம்பதியின் வீட்டில் சுமார் 3 மாதங்களாக தங்கி, தள்ளுவண்டியில் பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஏதோ மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலாயுதம் பாளையம் அருகே காவிரி ஆற்றில் பெண் சடலம் மிதந்துள்ளது.
    • வெள்ளைநிற சேலை அணிந்திருந்த படி மிதந்த சடலத்தை பார்த்தவர்கள், இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி பகுதியை சேர்ந்த சிலர் காவிரி ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளனர்.அப்போது காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் தண்ணீரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதந்துள்ளது. வெள்ளைநிற சேலை அணிந்திருந்த படி மிதந்த அந்த சடலத்தை பார்த்தவர்கள், இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இறந்த பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர், குளிக்கும் போது தவறி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டாரா அல்லது எவரேனும் அவரை கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிவிட்டனரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் அம்மாபேட்டை ராமநாதபுரம் பகுதியில் வட மாநில தொழிலாளி தங்கி இருந்து, அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
    • அப்போது கழிவறையில் இருந்து திடீரென அவரின் அலறல் சத்தம் கேட்டது. கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    ஒடிசா மாநிலம் ஜெரபேடா அடுத்த கஞ்சிரா பகுதியைச் சேர்ந்தவர் சரோஜ்குமார் பேரா (வயது 38). இவர் தனது நண்பர்களுடன் சேலம் அம்மாபேட்டை ராமநாதபுரம் பகுதியில் தங்கி இருந்து, அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மாலை சரோஜ்குமார், தான் தங்கி இருந்த வீட்டு கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறையில் இருந்து திடீரென அவரின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அவருடன் தங்கியிருந்த நண்பர்கள், கழிவறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு சரோஜ்குமார் மயங்கி கிடந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சரோஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகார் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சரோஜ்குமாருக்கு ஊர்வசி என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர்.

    • வயல்வெளியில் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி, மேல் நாச்சிகுளம், கீழ் நாச்சிகுளம், கரட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஒரு சமுதாயத்திற்கு தனி சுடுகாடு உள்ளது.

    இந்த சுடுகாடு கோட்டை மேடு-நரிமேடு 2 கிராமங்களுக்கும் மைய பகுதியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல முன்பு பெரியாறு பாசன கிளை கால்வாய் வழியாக படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது. அதையொட்டி உள்ள கரை ஓரமாக சென்று மயானத்திற்கு சென்று வந்தனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு கிளை கால்வாய் அகலப்படுத்தப்பட்ட போது படிக்கட்டுகள் இருந்த இடத்தில் மீண்டும் படிக்கட்டு அமைக்காமல் சமதளமாக பூசி விட்டனர்.இதனால் மயானத்திற்கு செல்லும் வழி தடைபட்டது.

    தற்போது நரிமேடு சாலை வழியாக வயல்வெளியில் பிணத்தை தூக்கி செல்ல வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்து பொதுப்பணித்துறை மூலம் சிறுபாலம் அமைக்க உத்தரவு பெறப்பட்ட பிறகும் பாலம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த அவல நிலை தொடராமல் இருக்க விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து பி.ஏ. பி., வாய்க்கால் தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டது.
    • சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வெள்ளகோவில்:

    காங்கயம், ஏ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(30). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா இவர்களது 3 1/2 வயது மகன் ரிதன் .

    இந்த நிலை இந்த மாதம் பிப்ரவரி 2-ந் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ரிதன் மாயமானார்.இந்த புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை யாராவது கடத்தி சென்றுள்ளார்களாக அல்லது அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் சிறுவனை தேடி வந்தனர்.

    ஆனால் சி.சி.டி.வி காட்சிகளில் சிறுவன் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பி.ஏ.பி வாய்க்காலில் தேடி வந்தனர். இருப்பினும்வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து பி.ஏ. பி., வாய்க்கால் தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டது.பின்னர் போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் வாய்க்காலில் தேடியும் சிறுவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் ஏ.சி நகர் பகுதியில் வீடு வீடாக சென்று நிலத்தடி தொட்டிகள், புதர்கள் உள்ளிட்ட சந்தேகப்படும் படியான பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் அழுகியநிலையில் ஒரு சிறுவனனின் உடல் கிடப்பதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் வாய்க்காலில் கிடந்த சிறுவனின் பிணம் பிப்ரவரி 2-ந் தேதி காங்கயத்தில் மாயமான 3 வயது சிறுவன் ரிதன் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கயம் பகுதியில் மாயமான 3 வயது சிறுவன் வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் காங்கயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் ரோட்டியில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தின் வேலி அருகில் இருந்து துர்நாற்றம் வீசியது.
    • அங்கு சென்று பார்த்தபோது. அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார்

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் ரோட்டியில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தின் வேலி அருகில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அவ்வழியே சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது. அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார். இது குறித்து முள்ளிகிராம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு நெல்லிக்குப்பம் போலீசார் சென்றனர். அங்கு இறந்து கிடந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எவ்வாறு இறந்தார்? போன்றவைகள் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே தோட்டத்து கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் நதியா(வயது23).

    நர்சிங் முடித்துள்ள இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கற்பகம் வேலைக்கு செல்லு ம்போது மகளையும் உடன் அழைத்துச்சென்று வந்தார்.

    சம்பவத்தன்று கற்பகம் வேலைக்கு செல்லும்போது மகளை வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு நதியா வரவில்லை என கூறி மறுத்து விட்டார். இதையடுத்து கற்பகம் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களிடம் மகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறி வேலைக்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் வீட்டில் இருந்த நதியா திடீரென மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்த கற்பகம் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே அதே ஊரை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் நதியா பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். நதியா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×