என் மலர்
நீங்கள் தேடியது "Council Meeting"
- யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
- முடிவில் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் ராஜ வேணி, ஆணையாளர் செந்தாமரை செல்வி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவா தங்கள் வரு மாறு:- கவுன்சி லர் ராஜ்குமார்:-வெண்ணத்தூர் ஊராட்சி முத்த ரவு நாதபுரம் கிராம கண்மா யில் தேவி பட்டி னம் ஊராட்சி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கண்மாயில் கொட்டாமல் மாற்று இடம் தேர்வு செய்து குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் மனோ கரன்:-கலெக்டர் அலுவலக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பேராவூர் ஊராட்சி குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதி மக்கள் பாதிப்படை கின்றனர். எனவே அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும். ஆணை யாளர்:- கவுன்சிலர்கள் தெரிவித்த குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் உலக ராணி, சீனி இப்ராஹிம் அம்மாள், மாணிக்க சாரதி, கல்பனா தேவி, பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முடிவில் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் நன்றி கூறினார்.
- திருப்பூரில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் கடந்த 27 ஆண்டுகளாக இயங்கி வருகிறது
- நிர்வாக வசதிக்காக தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக்குழு அமைக்கப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் கடந்த 27 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இவற்றில் 19 தொழில் அமைப்புகள் உறுப்பினராக இணைந்துள்ளன. நிர்வாக வசதிக்காக தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக்குழு அமைக்கப்படுகிறது. ஆர்பிட்ரேஷன் நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் அவசர கூட்டம் சைமா அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சைமா சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்பிட்ரேஷன் கவுன்சில் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் நிர்வாகக்குழு, மேலும் ஓராண்டுக்கு பதவியில் தொடருவது என்று தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் புதிதாக 20 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். டீமா உள்ளிட்ட சங்கங்கள், ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் இணைந்து தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
- தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் நகர் மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.
- குடிநீர், சுகாதாரம் மற்றும் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் செல்வம், ஆணையாளர் வீரமுத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி கவுன்சிலர்கள் சூர்யா பாலமுருகன், கடவுள், நாராயண பாண்டியன், பிரிட்டிஷ், விஜயன் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் வார்டு பகுதியில் உள்ள குடிநீர், சுகாதாரம் மற்றும் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.
நகர் மன்ற தலைவர் மற்றும் அலுவலர்கள் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிலளித்தனர். இதற்கிடையே கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் எல்.இ.டி தெரு மின்விளக்குகள் ரூ.3.79 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
- அலங்காநல்லூரில் சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
- பாலமேடு பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூரில் வட்டார சுகாதாரப் பேரவை கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொன் பார்த்திபன், விஜய் ஆனந்த், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். சுகாதார பேரவை குழுவின் மூலம் கிராம மக்களின் சுகாதார தேவைகள் குறித்து கேட்டறிந்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பி தேவையை பூர்த்தி செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஜீலான் பானு, தேவி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் உஷா, தானம் அறக்கட்டளை கிராமப்புற ஒருங்கிணைப்பாளர் முத்தையா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை அருகே நெற்குப்பை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
- இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி கூட்டம் சேர்மன் புசலான் தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் கணேசன், துணை சேர்மன் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிளாமடம் கிராம பகுதியில் பொது கழிப்பிட கட்டிடம் கட்டப்படுவது குறித்தும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவது குறித்தும், 2021-22 மானிய தவணையில் சுகாதார மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், மழைநீர் சேகரிப்பு பகுதிகளை மறுசுழற்சி செய்தல், சின்டெக்ஸ் டேங்க் பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல் போன்றவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பருவமழை தொடங்க இருப்பதால் கொசு உற்பத்தியை கட்டுப்ப டுத்தவும், நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் உபகரணங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தபுள்ளி கோருவது குறித்தும், பேரூராட்சி பயன்பாட்டிற்கு பேட்டரி வாகனங்கள் வாங்குவது குறித்தும், விவாதிக்கப்பட்டது.
இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது
- பெரம்பலூரில் ரெயில் போக்குவரத்தை உருவாக்க வலியுறுத்தல்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அறிவழகன் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். மாநில துணை செயலாளர் சிங்காரவேலன் நிறைவுரையாற்றினார். பெரம்பலூர் மாவட்டத்தில் ரெயில் போக்குவரத்தை உருவாக்கிட வேண்டும். பெரம்பலூரில் அரசு வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும். சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை தொடங்க வேண்டும்.
கொட்டரை மருதையாறு நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். கை.களத்தூர் பஸ் நிறுத்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். கை.களத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ரூ.1 கோடியே 50 லட்சம் அரசு நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்ட அந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 11, 12, 13-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
- மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேரூராட்சி மன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயமூர்த்தி தலைமையில் நடைபெற்றது துணைத் தலைவர் சாதிகா, பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி பேசுகையில், மழைக்காலங்களில் கரையான் குட்டையில் மழைநீர் அதிக அளவில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் தூர்வாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது மேலும் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி பகுதியில் குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேரூராட்சி மன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒட்டன்சத்திரத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது
- இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. நகரச் செயலாளரும், நகர் மன்ற துணைத் தலைவருமான வெள்ளைச்சாமி, நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, ஆணையாளர் தேவிகா மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணி க்கு ஒப்பந்த பணியாளர் நியமிப்பது, பழனி கவுண்டன் புதூர், கொசவபட்டி காலனி பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டுவது,
புதிய மின் விளக்குகள் அமைத்தல், காப்பிலியபட்டி உரக் கிடங்குகளில் மியாவாக்கி அடர்வன காடுகள் அமைத்துப் பராமரித்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதி கேட்டோம். ஆனால் பொதுமக்களை அனுமதிக்கவில்லை
- கூட்டம் முடிந்ததும் சந்திப்பதாகவும் அதுவரை வெளியில் காத்து இருக்கும் படியும் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள தளி ஊராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் வெ. உதயகுமார் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கல்பனா மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் திருமூர்த்தி மலை அருகே உள்ள இலங்கைத்தமிழர்கள் முகாமிற்கு ரூ. 4 லட்சம் செலவில் 10.000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைப்பது உட்பட மே மாதத்திற்கான தொழில், சொத்து ,குடிநீர் வரி வசூல் விவரங்கள் உட்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் போது தளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மன்றக் கூட்டத்தை பார்வையாளர் பகுதியில் இருந்து காண வந்தனர். இதற்கு மன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர் அதனால் அவர்கள் கூட்ட அரங்கிற்கு வெளியே அமர்ந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, மன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதி கேட்டோம். ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து செயல் அலுவலர் கல்பனாவிடம் கேட்டபோது, மன்ற கூட்டம் நடைபெறும் போது பொதுமக்கள் வந்து பார்வையாளர் பகுதியில் அமர முற்பட்டனர். அப்போது சில கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக வந்ததாக தெரிவித்தனர். எனவே கூட்டம் முடிந்ததும் சந்திப்பதாகவும் அதுவரை வெளியில் காத்து இருக்கும் படியும் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. அதன்படி கூட்டம் முடிந்ததும் அவர்களை அழைத்து கோரிக்கை விபரம் கேட்கப்பட்டது என்றார்.