என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "COW DIED"
- கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பசு மாடு கடித்தது.
- உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் தாயப்பா (61) விவசாயி. இவர் 5 பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருந்தார். தொடர்ந்து அங்கு உள்ள மானாவாரி நிலத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் ஒரு நாட்டு வெடிகுண்டு கிடந்தது. கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை ஒரு பசுமாடு கடித்தது.
அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அந்த பசு மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சிதைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அந்த பசு மாடு தாயப்பா வீட்டிக்கு தானாக நடந்து வந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பசு மாட்டுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மாடு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சிலர் காட்டுபன்றிகளை வேட்டையாட நாட்டுவெடி குண்டு (அவுட்காய்) வைத்து வேட்டையாடி வருகின்றனர். அந்த நாட்டு வெடிகுண்டுகளை மாடுகள் உள்பட கால்நடைகள் தெரியாமல் கடித்து விடுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே நாட்டு வெடிகுண்டு வைக்கும் நபர்கள் மீது வனத்துறை மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பசுமாட்டை மேய்க்க சென்றுவிட்டு மீண்டும் வீட்டைநோக்கி சென்றுள்ளார்.
- மின்கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி பசுமாடு பரிதாபமாக இறந்தது.
நீலகிரி
பந்தலூர் தாலுகா எருமாடு அருகே இண்கோநகர ்பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் 2 வயதுடைய பசுமாட்டை புல்வெளிக்கு மேய்க்க சென்றுவிட்டு மீண்டும் வீட்டைநோக்கி நடைபாதையில் நடந்து சென்றுள்ளார். பசுமாடு முன்னால் சென்றது. அப்போது நடைபாதையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பசுமாடு பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல்அறிந்ததும் சேரம்பாடி உதவிசெயற்பொறியாளர் முத்துகுமார், வருவாய்ஆய்வாளர் விஜயன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் மற்றும் மின்வாரியதுறையினரும் விரைந்துசென்று மின்சாரத்தை துண்டித்தனர். அதன்பிறகு பசுமாட்டின் உடலை மீட்டனர். மேலும் மின்வாரியதுறை மூலம் பசுமாட்டை இழந்தவருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று மின்வாரியதுறையினர் தெரிவித்தனர்.
- மாடுகள் குளத்தில் இறங்கும்போது சகதியில் சிக்கி கொள்வதால் வெளியே வர முடியாமல் அவை இறந்து போவது வாடிக்கையாகிவிட்டது
- தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாடுகளை உயிருடன் மீட்டனர்.
உடன்குடி:
உடன்குடி அனல்மின் நிலைய பின்புறம் உப்பு நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இது எல்லப்பநாயக்கன் குளத்தின் உபரிநீர் தேங்கும் தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால் அதன் தரையை உயர்த்த சுற்றுவட்டார பகுதிகளில் மணல் அள்ளி நிரப்பினர். தற்போது ஆபத்தான பகுதியாகிவிட்டது
காடுகளில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் தண்ணீர் குடிக்க குளத்தில் இறங்கும்போது கால்கள் சகதியில் சிக்கி கொள்வதால் வெளியே வர முடியாமல் அவை இறந்து போவது வாடிக்கையாகிவிட்டது. மேலும் இதுஆட்கள் அதிகம் நடமாடாத காட்டுப்பகுதி என்பதால் அதிகம் வெளியே தெரிவதில்லை.
இந்த நிலையில்ஒரு பள்ளத்தில் மாடுகள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பக்கத்து தோட்டக்காரர் சிவலூர்ஜெயராஜ் உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து மாடுகளை உயிருடன் மீட்டனர். இதில் ஒரு மாடு பலியாகி விட்டது.
- களக்காடு பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை பெய்தது.
- இறந்த மாட்டின் மதிப்பு ரூ 70 ஆயிரம் ஆகும்.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள செங்குளகுறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது 45). தொழிலாளி. இவர் மாடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று மாலை இவர் தனது வீடு அருகே உள்ள வேப்ப மரத்தில் மாடுகளை கட்டி போட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மாடுகள் கட்டி போடப்பட்டிருந்த வேப்பமரத்தில் மின்னல் தாக்கியது.
இதில் வேப்பமரம் சேதமடைந்தது. மேலும் மரத்தில் கட்டி போடப்பட்டிருந்த ஒரு பசு மாடும், கோழியும் பலியானது. இறந்த மாட்டின் மதிப்பு ரூ 70 ஆயிரம் ஆகும். மின்னல் தாக்கிய போது, சுந்தரபாண்டி தனது குடும்பத்தினர்களுடன் வெளியே நின்று கொண்டிருந்தார்.
மின்னல் தாக்கிய போது பயங்கர சத்தத்துடன் அதிர்வும் ஏற்பட்டதால் அவர்கள் வீட்டுக்குள் ஓடி விட்டனர். பலியான பசு மாட்டிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சுந்தரபாண்டி வலியுறுத்தியுள்ளார்.
- மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலியானது.
- வயலில் மேய்ந்து கொண்டிருந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள விஜயகோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு சொந்தமான பசுமாடு அங்குள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது உயர் மின்னழுத்த கம்பத்தில் இருந்த கம்பிகள் காற்றினால் ஏற்பட்ட உராய்வின் காரணமாக அறுந்து பசு மாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பசுமாடு பலியானது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி, வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்