என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "crash"
- இன்று அதிகாலை 2 மணியளவில் விமானி உட்பட 2 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
- ஹெலிகாப்டர்களின் 2 புரொபெல்லர்களும் [propellers] செயலிழந்ததால் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது
ஆஸ்திரேலியாவில் நட்சத்திர ஹோட்டலின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.வடக்குப் பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் Cairns நகரில் இயங்கி வரும் ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலின் நீச்சல் குளம் அமைந்துள்ள மேற்கூரையில் இன்று அதிகாலை 2 மணியளவில் விமானி உட்பட 2 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
BREAKING - Helicopter crashes into roof of Double Tree Hotel by Hilton in Cairns, Australia pic.twitter.com/bYMDsE8RGV
— Insider Paper (@TheInsiderPaper) August 11, 2024
விழுந்த வேகத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றியெரிந்த நிலையில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஹோட்டலில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஹோட்டலில் இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
வானில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர்களின் 2 புரொபெல்லர்களும் [propellers] செயலிழந்ததால் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விபத்துக்குப் பின் ஹெலிகாப்டர் தீப்பற்றியும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
VIDEO: 2 people hospitalized after helicopter crashes into roof of Double Tree Hotel by Hilton in Cairns, Australia https://t.co/Jx740xFJzy pic.twitter.com/v2q7GpBqWA
— Cedar News (@cedar_news) August 12, 2024
- விமானம் விழுந்த வேகத்தில் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியே தீப் பிழம்பாக மாறியது.
- விமானம் விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது
பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்திலிருந்து 61 பயணிகளுடன் புறப்பட விமானமானது நேற்று [வெள்ளிக்கிழமை] மதியம் வின்ஹெடோ நகருக்கு அருகே வந்தபோது விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது. 2283 என்ற அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாக இறங்கி அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் விழுந்து வெடித்துச் சிதறியது.
விமானம் விழுந்த வேகத்தில் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியே தீப் பிழம்பாக மாறியது. விமானத்தில் பயணித்த 57 பயணிகளும் 4 பணியாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா,ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தற்போது விபத்து குறித்து விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுகிறது. பின்னர் வின்ஹெடோ நகரில் உள்ள வீடுகளின் மீது தலைகீழாகக் கவிழ்ந்து விழுகிறது. இதில் சில நொடிகளில் விமானத்தின் ஒரு பெரிய பகுதியில் தீப்பிடித்து எரிகிறது. பின்னர் விமானத்திலிருந்து பெரிய கரும்புகை வானத்தை நோக்கி வெளியேறுவது பதிவாகியுள்ளது.
BREAKING: Voepass Flight 2283, a large passenger plane, crashes in Vinhedo, Brazil pic.twitter.com/wmpJLVYbB3
— BNO News (@BNONews) August 9, 2024
- அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே நேற்று வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் 100 பேர் கடலில் தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பனி தொடங்கியுள்ளது. அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்த உள்ளூவர் மீனவர்கள் உடனே விரைந்து கடலில் தத்தளித்த 78 அகதிகளை மீட்டனர். இன்னும் சுமார் 100 பேர் கடலில் தொலைந்தனர் என்று அம்மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து ஐ.நா வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டையும் நாட்டையும் இழந்து நிர்கதியில் வேற்று தேசம் நோக்கி பயணிக்கும் அகதிகள் சாரை சாரையாக கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.
- ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியது.
- அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியது. ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.
ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது ஈரானி தொலைக்காட்சி ஒன்றில் சம்பவ இடத்தில் இருந்து ஒருவர் மீட்பு படையினருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க பிரதமரான ஜோ பைடன் விபத்துக்குள்ளான ஹெலிக்காப்டரை கண்டுப்பிடிப்பதற்கு அவர்களது சாடிலைட் மேப்பிங் தொழில் நுட்பத்தை வழங்கி உதியுள்ளார்.
இந்த விபத்தை குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கவலை பதிவை பதிவிட்டுள்ளார் அதில் இப்ராஹிம் ரைசி மற்றும் சக அதிகாரகளின் நல்வாழ்வுக்காக பிராத்திக்கிறேன் என்று அவரது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது 63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.
ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது 63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- இவர் திண்டிவனத்தில் உள்ள வேல்டிங் கடையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார்.
- அதிவேகமாக வந்த தனியார் பஸ் ராமதாஸ் மீது மோதியது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல் சிவிரி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்( வயது 33). இவர் திண்டிவனத்தில் உள்ள வேல்டிங் கடையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாரில் உள்ள ராமதாசின் மாமியார் வீட்டில் தங்கி உள்ளனர். அவர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக திண்டிவனத்தில் இருந்து பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் தெள்ளார் நோக்கி ராமதாஸ் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த ஊரல் அருகே வரும்போது அதிவேகமாக வந்த தனியார் பஸ் ராமதாஸ் மீது மோதியது.இந்த விபத்தில் ராமதாஸ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த ரோசனை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமதாஸின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ்சை பறிமுதல் செய்து வேலூர் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் தினேஷ்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆயுத பூஜை கொண்டாடச் சென்ற வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில் இந்த பகுதி மிகவும் குறுகிய சாலை பகுதியாகவும் இந்த பகுதியில் திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி,வேலூர், செல்லும் தனியார் பஸ்கள் அதிக ஒலி எழுப்பி அதி வேகமாக செல்வதே தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதாக தெரிவித்தனர்.எனவே டிரைவர்களுக்கு போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
- சாலைகள் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணி.
- சாலை ஓரங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணி தொடக்கம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை செய்யும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க ஐந்தாயிரம் மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை என தெரிவித்தனர் வேதாரண்யம் தாலுகாவில் வடகிழக்கு பருவமழையால் சாலைகள் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தற்போது மணல் முட்டைகள் தயார் செய்யும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் இங்கு தற்போது ஜந்து ஆயிரம்மண் மூட்டையில் தயார் செய்யப்பட்டு சாலை ஓரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வகையில் சாலை ஓரங்களில் மண் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் சமாளிக்க நெடுஞ்சாலைத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி கணவன்-மனைவி லாரி மோதியது விபத்தில் பெண் பலியானார்.
- இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று ராஜேஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு கணவர் சண்முகம் தனது மொபட்டில் அழைத்து சென்றார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
சாந்தி தியேட்டர் பிரிவு அருகே ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சண்முகம் மொபட் மீது மோதியது. இதில் சண்முகம், ராஜேஸ்வரி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
அப்ேபாது அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். சண்முகம் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, சூடானில் ஐ.நா. அமைதிப்படையில் அங்கம் வகித்து செயல்பட்டுக்கொண்டிருந்தது.
இந்த ஹெலிகாப்டர் 23 பேருடன் சூடான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கடுக்லி நகரத்தில் இருந்து எல்லையோரம் உள்ள அப்யெய் பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர், ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை வளாகத்தினுள் நேற்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் அந்த ஹெலிகாப்டரின் 3 ஊழியர்கள் பலியாகினர். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதை ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை, ஒரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது. இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்