search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cymbals"

    • சிலம்பம் போட்டி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் பரமசிவம் செய்திருந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ், இ.சி.ஏ. அகாடமி மற்றும் நேரு யுவ கேந்திர இணைந்து மாவட்ட அளவில், சிலம்ப கிரேடிங் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தியது. இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சிவ கங்கை, காளையார் கோ வில், கல்லல், மானா மதுரை, திருப்புவனம், சிங் கம்புணரி, திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதி களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பதக்கங்கள் வழங் கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் பரமசிவம் செய்திருந்தார்.

    • எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமை
    • 1,200 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

    கடலூர்:

    கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம், மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா கடலுாரில் நடைபெற்றது . இப்போட்டியை வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். பின், சில நிமிடங்கள் சிலம்பம் சுற்றினார்.நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாநகர மேயர் சுந்தரி ராஜா, அகில இந்திய சிலம்பம் சம்மேளன பொதுச் செயலாளர் ஐரின் செல்வராஜ், மாவ ட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க செயலாளர் தட்சணா மூர்த்தி குத்துவிள க்கேற்றினர்.

    செயின்ட் ஜோசப் கல்லுாரி செயலர் சுவாமிநாதன், மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க கவுரவத் தலைவர் வித்யாபதி வாழ்த்துரை ஆற்றினார். விழாவில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், ஒன்றிய செயலாளர் விஜய சுந்தரம், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் பிரசன்னா, பகுதி துணை செயலாளர், கார் வெங்கடேசன் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜமாணிக்கம், அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டியில், தமிழ்நாடு, அரியானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, காஷ்மீர் உட்பட 22 மாநிலங்களைச் சேர்ந்த 1,200 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஏற்பாடுகளை துணைத் தலைவர் ஆறுமுகம், பயிற்சியாளர் எழிலரசன் செய்திருந்தனர்.

    • மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
    • முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. பள்ளி தலைவர் முகைதீன் முசாபர் அலி, முருகேசன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, குரு ஏழுமலை, தேசிய தலைவர், அகத்திய ஞானம் நிறுவன பொதுச் செயலாளர் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் பரமக்குடி நகர் மன்ற கவுன்சிலர் அப்துல் மாலிக், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    போட்டியை அப்துல்கலாம் பள்ளி குழுவினர் மற்றும் பாரதி விளையாட்டு சங்க தலைவர் அசான் சண்முகவேல் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கடந்த 13-ந்தேதி நடக்க இருந்த சிலம்பம் போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.
    • போட்டி நடத்துவதற்கான விதிமுறைகள் மாறுபட்டு இருப்பதாக கூறி ஒரு பிரிவினர் போட்டியை நடத்தக்கூடாது என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    மாநில அளவிலான தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 12-ந் தேதி தொடங்கி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் கைப்பந்து, கிரிக்கெட், சிலம்பம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 13-ந்தேதி நடக்க இருந்த சிலம்பம் போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டிகள் மீண்டும் இன்று நடத்தப்படும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சிலம்பம் போட்டி தொடங்க இருந்த நிலையில் போட்டி நடத்துவதற்கான விதிமுறைகள் மாறுபட்டு இருப்பதாக கூறி ஒரு பிரிவினர் போட்டியை நடத்தக்கூடாது என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் துறையினர், மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் படுத்தினர். பின்னர் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

    • மானாமதுரை அருகே சிலம்பத்தில் உலக சாதனை படைத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
    • கிராம பெண்கள் வாழ்கையில் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என முன் உதாரணமாக வெற்றி பெற்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே திருப்பாசேத்தி மலவராய னேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாலன். இவரது மகள் செல்வ பிரியா (வயது 21). இவர் சிறுவயதில் இருந்தே சாதனை படைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஓவிய போட்டி, தடகள போட்டி, படிப்பு என எல்லா வற்றிலும் திறமையை மெருகேற்றிக் கொண்ட இவர் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திலும் பயிற்சி பெற்று அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கும் வகையில் கோலோச்சி இருக்கிறார். பி.எஸ்.சி. பட்டப்படிப்பு முடித்த இவர் சிலம்ப மாஸ்டர் குமாரிடம் முறையாக கற்று தினமும் பயிற்சி மேற்கொண்டார்.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடை பெற்ற உலக சாதனைப்போட்டியில் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி செல்வ பிரியா உலக சாதனை படைத்துள்ளார்.

    இந்த சாதனைக்கு அவரது பெற்றோர் மற்றும் பேராசிரியைகள் ஜெபா, சுகன்யா உள்ளிட்ட பலர் உறுதுணையாக இருந்துள்ளனர். தொடர்ந்து செல்வபிரியா தனது கிராமத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார்.

    கிராம பெண்கள் வாழ்கையில் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என முன் உதாரணமாக வெற்றி பெற்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிவகங்கையில் என்னைப்போல் சாதிக்க பல்வேறு பெண்கள் இருக்கி றார்கள். அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும், வாய்ப்பையும் கொடுக்க வேண்டும் என்றார்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
    • மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் இடுவம்பாளை யம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பல்வேறு சிலம்பாட்ட கழகங்கள் சார்பில், நோபல் உலக சாதனை முயற்சிக்காக 235 பள்ளி மாணவ&மாணவிகள் தொடர்ச்சியாக 5 மணி நேரம், இடைவெளியின்றி சிலம்பம் சுற்றினர்.

    இதில் திருப்பூர், சேலம், விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    மேலும், மாணவ-மாணவிகளின் பெற்றோர்க ளும் அவர்களை உற்சாகப்ப டுத்தினர். நோபல் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    ×