என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூரில்முதல் அமைச்சர் கோப்பை போட்டி::சிலம்ப வீரர்கள் தர்ணா போராட்டம்
- கடந்த 13-ந்தேதி நடக்க இருந்த சிலம்பம் போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.
- போட்டி நடத்துவதற்கான விதிமுறைகள் மாறுபட்டு இருப்பதாக கூறி ஒரு பிரிவினர் போட்டியை நடத்தக்கூடாது என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
மாநில அளவிலான தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 12-ந் தேதி தொடங்கி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் கைப்பந்து, கிரிக்கெட், சிலம்பம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 13-ந்தேதி நடக்க இருந்த சிலம்பம் போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டிகள் மீண்டும் இன்று நடத்தப்படும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சிலம்பம் போட்டி தொடங்க இருந்த நிலையில் போட்டி நடத்துவதற்கான விதிமுறைகள் மாறுபட்டு இருப்பதாக கூறி ஒரு பிரிவினர் போட்டியை நடத்தக்கூடாது என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் துறையினர், மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் படுத்தினர். பின்னர் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.