என் மலர்
நீங்கள் தேடியது "daughter"
- மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்-மகளை கீழே தள்ளி மர்ம நபர்கள் நகையை பறித்தனர்.
- கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பக நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 45). அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். இவருக்கு காமாட்சி (34) என்ற மனைவியும், பார்த்தசாரதி (13) என்ற மகனும், தாரணி (10) என்ற மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று முருகன் மதுரையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு மனைவி, மகன், மகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
திருமங்கலம் பகுதியில் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் பின்தொடர்ந்தனர்.நாராயணசாமி நகர் பகுதியில் வந்தபோது திடீரென மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த காமாட்சி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். நகை பறிப்பின்போது நிலைதடுமாறி முருகன், காமாட்சி, அவரது மகன், மகள், ஆகியோர் மோட்டார் ைசக்கிளில் இருந்து தவறி கீேழு விழுந்தனர்.
இதில் காமாட்சி, தாரணி படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரண மாக நடந்து வருகிறது.
குறிப்பாக திருமங்கலம் 4 வழிச்சாலையில் நாள்தோறும் நகை பறிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பெண்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த சோமனூர் ரெயில் நிலையம் அருகே 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா காயத்ரி,சப் -இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் 15 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பிணமாக கிடந்தனர்.உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் இறந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் அடுத்த சாமளாபுரம் பவலந்தான்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி தனலட்சுமி (32),மகள் தட்சணா (15) என்பது தெரியவந்தது. சரவணன் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு தனலட்சுமி மகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற அவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.தொடர்ந்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
- சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் :
உடுமலை பொன்னேரியை சேர்ந்த 59 வயது கூலித் தொழிலாளி தனது 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.கடந்த 2-12-2019 அன்று வீட்டில் இருந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக தனது மகளை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
மகளை பாலியல் கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும்,ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராத தொகையை சிறுமியின் படிப்புக்கு வழங்கவும், மேலும் சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு ரூ.2.50 லட்சம் வழங்கவும் நீதிபதி பாலு உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.
- தந்தை- மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாவட்டம் உத்தப்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கார்மேகம் குடும்பத்திற்கும் பண விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மதியம் முருகன், மகள் நாகவல்லி ஆகியோர் வீட்டில் இருந்தனர். அங்கு வந்த கார்மேகம், மகன்கள் ராமகிருஷ்ணன், ஜெயராமன், மனைவி சுந்தரம்மாள், மகள் அபிராமி ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கும்பல் முருகனையும், அவரது மகள் நாகவல்லியையும் அரிவாளால் வெட்டியது.
காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்மேகம், ராமகிருஷ்ணன், ஜெயராமன், சுந்தரம்மாள், அபிராமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வழக்கில் சுந்தராம்பாள் கொடுத்த புகாரின்பேரில் முருகன், மாரியப்பன், முருகன் மனைவி செல்வி, மாரியப்பன் மனைவி சங்கீதா, நாகவல்லி, லட்சுமி, ஈசுவரன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
- அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காங்கயம் :
காங்கயம் பழையகோட்டை சாலை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவருடைய தங்கை மகள் மனநலம் பாதிக்கப்பட்ட கலாமணி (33). வாடகை வீட்டில் வசித்து வந்த இருவரும் ஆதரவற்ற நிலையில் வறுமையின் கொடுமையால் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களை காங்கயம் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் காங்கயம் போலீசார் அனுமதியுடன் 2 பெண்களின் உடல்களை காங்கயத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் காங்கயம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
- பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவிக்க அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து நின்று உள்ளனர்.
- போலீசார் அவர்களை தடுத்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.
பல்லடம் :
பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது 17 வயது மகளும், அவர்களுக்கு 2 நபர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவிக்க நேற்று மாலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து நின்று உள்ளனர்.
அவர்கள் புகாரை நீண்ட நேரமாக விசாரிக்காததால், போலீஸ் நிலைய வளாகத்திலேயே திடீரென தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்குள் போலீசார் அவர்களை தடுத்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் தற்போது இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸ் நிலைய வளாகத்தில் தாயும் மகளும் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நலமாக உள்ள குழந்தை உடல்நலம் சரியில்லை எனக்கூறி மருத்துவம் பார்க்க வற்புறுத்தல்
- ஒருவகை நோயால் மனநோய்க்கு உள்ளாகி இவ்வாறு செய்திருக்கக் கூடும்
பல அரிய மனநல குறைபாடுகளில் ஒன்றாக கருதப்படுவது முன்சாஸன் சிண்ட்ரோம் (Munchausen's syndrome) மற்றும் அதன் ஒரு வகையான முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி (Munchausen Syndrome by proxy).
இது ஒரு அரிய உளவியல் நடத்தை நிலை.
முதல் வகையில் ஒருவர், இல்லாத நோய் அறிகுறிகளை தனக்குள்ளேயே கற்பனையாக உருவாக்கிக் கொண்டு, தான் நோய்வாய்பட்டதாக தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பார்.
இரண்டாவது வகை "முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி" என்பது ஒரு குழந்தை துஷ்பிரயோக குற்றமாக கருதப்படுகிறது. இதில் ஒரு குழந்தையின் பராமரிப்பாளர் (பெரும்பாலும் தாய்) போலியான நோய் அறிகுறிகளை தன் குழந்தைக்கு இருப்பதாக கூறி அக்குழந்தை உண்மையிலேயே நோய்வாய்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆட்படுத்துவார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிப்பவர் 27 வயதான ஜெசிகா கேஸர். இவர் சமூக ஊடக பிரபலமானவர். இவர் தற்போது முன்சாஸன் பை பிராக்ஸி என மனநோய்க்கு உள்ளாகியிருக்கிறார்.
டெக்சாஸ் மாநில சட்ட அமலாக்க மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி, கேஸர் தனது 3 வயது மகளுக்கு இல்லாத அரிய நோய்களை இருப்பதாக கூறி தேவையற்ற மருத்துவ நடைமுறைக்கு உட்படுத்தும்படி கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
டார்ரன்ட் கவுன்டி ஷெரீப் அலுவலகம் தனது முகநூல் பதிவில், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெசிகாவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
டார்ரன்ட் கவுன்டி ஷெரீப் அலுவலகம் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்த வழக்கு இந்த அரிய மனநோய்க்கான ஒரு நல்ல உதாரணம். இது தொடர்பாக நீங்கள் ஜெசிகாவுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தால், மைக்கேல் வெபர் எனும் காவல்துறை அதிகாரியை தொடர்பு கொள்ளவும் எனத் தெரிவித்துள்ளது.
ஜெசிகா தனது குழந்தைக்கு பல தேவையற்ற சிகிச்சைகளை அளிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். இந்த துஷ்பிரயோகம் எவ்வளவு காலம் தொடர்ந்தது என்பது இன்னும் உறுதியாகவில்லை.
கேஸர் தனது குழந்தையின் உடல்நலம் குறித்த தனிப்பட்ட செய்திகள் உட்பட முகநூலில் உள்ள தனது அனைத்து தரவுகளையும் நீக்கப்போவதாக தனது நண்பருக்கு செய்திகள் அனுப்பியுள்ளார்.
காவல்துறையினர் கடந்த வாரம் ரஸ்க் கவுண்டியில் ஜெசிகாவை கைது செய்து டாரன்ட் கவுண்டி சிறையில் அடைத்தனர்.
- மகள்-மகனுக்கு தோசை கரண்டியால் தந்தை சூடு வைத்தார்.
- மது போதையில் நடந்த சம்பவம்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 35), கொத்தனார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், புகழினி (10) என்ற மகளும், நித்திஷ் (8) என்ற மகனும் உள்ளனர். கவுல்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புகழினி 5-ம் வகுப்பும், நித்திஷ் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இவர்கள் 2 பேரும் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளியில் ஆசிரியை ஒருவர் நித்திசுக்கு சாக்லேட் வழங்கும் போது, அவனது வலது கை மணிக்கட்டு அருகில் தீக்காயம் இருப்பதை கண்டு விசாரித்தார். அதற்கு நித்திஷ் தனது தந்தை மது போதையில் தனக்கும், அக்காள் புகழினிக்கும் கடந்த 2-ந்தேதி தோசை கரண்டியால் சூடு வைத்ததில், 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும், இதனை தட்டி கேட்ட தனது தாயை தந்தை மத்துக்கட்டையால் தாக்கினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியதாக நாங்கள் இதுகுறித்து யாரிடம் கூறவில்லை என்று கூறினான்.
இதையடுத்து அந்த ஆசிரியை இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். அவர் குழுந்தைகள் நலக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பள்ளிக்கு வந்த குழந்தைகள் நலக்குழு பணியாளர் வந்து நித்திஷிடம் விசாரணை நடத்தி, அவனுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்து குன்னத்தில் உள்ள காப்பகத்திலும், புகழினியை பெரம்பலூரில் உள்ள காப்பகத்திலும் சேர்த்துள்ளனர்.
- தன் மகள் என்றும் பாராமல் தொழிலாளி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
- மயக்கமடைந்த சிறுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பேகம்பூர் ஏ.பி. நகரைச் சேர்ந்தவர் 36 வயது கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் முதலாவது 12 வயது மகள் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு தன் மகள் என்றும் பாராமல் தொழிலாளி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து தனது தாயிடம் கூறியபோது அவர் தனது கணவரை கண்டித்தார். இருந்த போதும் அவரது தொல்லை அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது.
நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த போது தனது மகளை வலுக்காட்டாயமாக அவர் பலாத்காரம் செய்தார். இதில் மயக்கமடைந்த சிறுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்து மேரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மகளை பலாத்காரம் செய்த தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
- அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டியில் சாலம்மாள் (வயது50).
இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக, 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தால் அதன் அருகில் உள்ள சாலம்மாளின் சகோதரியான முனியம்மாள் (60) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதில், சாலம்மாள் தன்னுடைய நிலத்தை நில அளவயர் மூலம் முழுமையாக அளவீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி நிலத்தை அளவீடு செய்ய தாசில்தாரிடம் மனு அளித்து, தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் பாகலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், நில அளவயர் ஜோதி உள்ளிட்டோர் தண்டு காரம்பட்டி ஏரி அருகே உள்ள நிலத்தை அளவீடு செய்ய சென்றனர்.
இந்த நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் கோபமடைந்து அதிகாரிகளிடம் முனியம்மாளும், மாதம்மாளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நில உரிமையாளர் சாலம்மாள் அவருடன் வந்த உறவினர் மற்றும் தொப்பூர், எஸ்.எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்டோர் மீது முனியம்மாள் அவரது மகள் மாதம்மாள் கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை ஊற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து முனியம்மாள், அவரது மகள் மாதம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இதன் புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராம் இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்
- ஐஸ்வர்யாராய் போல ஆராத்யா அழகாக வசீகரமாக உள்ளார்
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் 1994 - ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
பிரபல இயக்குனர்மணி ரத்னம் ' இருவர் ' படத்தில் தமிழில் அறிமுகமானார். இவர் 2007-ல் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 'ஆராத்யா' என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் குஜராத் ஜாம்நகரில் அம்பானி மகன் திருமண முந்தைய விழா கொண்டாட்டத்தில் ஆராத்யா புதிய சிகை அலங்காரத்தில் பங்கேற்றார்.அதை தொடர்ந்து நேற்று ஐஸ்வர்யா ராயின் தந்தை, கிருஷ்ணராஜ் ராய்,நினைவு தினத்தில் ஆராத்யா கலந்து கொண்டார்.
இதன் புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராம் இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.இந்த புகைப்படங்களில் தனது தாத்தாவின் போட்டோ முன் சிறுமி ஆராத்யா,ஐஸ்வர்யாராய், அவரது தாய் பிருந்தியாராய் நிற்பது போன்று இடம் பெற்று உள்ளது.

ஐஸ்வர்யா தனது அப்பாவை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்வது வழக்கம்.இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பார்த்து ரசிகர்கள் வியந்து உள்ளனர்.
மேலும் ஐஸ்வர்யாராய் போல ஆராத்யா அழகாக வசீகரமாக உள்ளார். மிகவும் நன்றாக வளர்க்கப்பட்டவளாகவும் இருக்கிறார் என புகழ்ந்து உள்ளனர்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
- ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், பாரதிராஜா,மணிரத்னம் ,விக்னேஷ் - நயன்தாரா, உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.
பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார்.
இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.ஏப்ரல் 15 - ந்தேதி அன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி திருமண பணிகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டார்.பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கினார். மேலும் திருமண விழாவை தடபுடலாக நடத்த ஏற்பாடு செய்தார்

இந்நிலையில் இன்று (15- ந்தேதி) சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், விஷால், அர்ஜுன் இயக்குனர்கள் பாரதிராஜா,மணிரத்னம் -சுஹாசினி, கே. பாக்யராஜ்,பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி - ப்ரிதா ஹரி, விஷ்ணு வர்தன் - அனுவர்தன், விக்னேஷ் சிவன் - நயன்தாரா, ரவி குமார்,

நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் நாசர் - கமிலா நாசர், ஜீவா,சித்தார்த், நடிகை அதிதி ராவ், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, ஜெயந்திலால் காடா, ஏ.எம்.ரத்னம்,தில் ராஜு, ஐசரி கணேஷ்,ராஜசேகர்,திருப்பதி பிரசாத், இசையமைப்பாளர் ஹாரில் ஜெயராஜ்,உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.

மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர்கள் லிங்குசாமி,அட்லி, வசந்த பாலன், நடிகர் பரத், ஆகியோர் வரவேற்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.