search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defects"

    • குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒரத்தநாடு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் 3-வது வியாழக்கிழமைகளில் இக்கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் குறைகளை தீர்க்கும் வகையில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி மே மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கி ழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

    எனவே ஒரத்தநாடு, ஊரணிபுரம், திருவோணம், வடசேரி, பாப்பாநாடு, உறந்தரா யன்குடிக்காடு, ஒக்கநாடு கீழையூர், பின்னையூர், பொய்யு ண்டார்கோட்டை, கண்ணுக்குடி மேற்கு, மேஉளூர், சாலியமங்கலம், மாரியம்மன்கோவில், அம்மாப்பேட்டை, சூரக்கோ ட்டை, பனையக்கோட்டை ஆகிய பிரிவு அலுவலகங்களை சேர்ந்த பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.
    • ரெயிலடி நரிக்குறவர் காலனி பகுதியில் இருப்பிட வசதி குறித்து கேட்டறிந்தார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடை பெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ நேரில் ஆய்வு செய்தார்.

    மன்னார்குடி ஜெயின தெருவில் உள்ள அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார் .

    இதனை தொடர்ந்து ரயிலடி நரிக்குறவர் காலனி பகுதியில் இருப்பிட வசதி குறித்து நரிக்குறவர் மக்களிடம் கேட்டறிந்தார்.

    நகராட்சி மாடல் நடுநிலைப்பள்ளி, மற்றும் மன்னார்குடி ருக்மணி குளம், தாமரைக் குளம் பகுதிகளில் நடைபெற்று வரும் கரைகள் மேம்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கண்ணபுரம் ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளி, திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராராந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    புதிய வகுப்பறை கட்டடங்கள் வேண்டுமென்று பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர். புதிய கட்டங்கள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    மேலும், பரமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதையும் விரைந்து நிறைவேற்றுவதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    அப்போது, திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், விசிக ஒன்றிய செயலாளர் கு.சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அடிப்படை வசதிகள் இல்லாத குறை நீடித்து வருவதால் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
    • கல்லூரி சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த செல்லூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மழை காலங்களில் கல்லூரி வாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி இருப்பதாலும், கழிவறை, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத குறை நீடித்து வருவதாலும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள மழைநீரை வடியவைக்க வேண்டும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். அடிப்படை வசதிகளை துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து கொடுக்கவில்லை என்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.    

    ×