என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு கல்லூரியில் மாணவிகள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்
- அடிப்படை வசதிகள் இல்லாத குறை நீடித்து வருவதால் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
- கல்லூரி சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த செல்லூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மழை காலங்களில் கல்லூரி வாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி இருப்பதாலும், கழிவறை, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத குறை நீடித்து வருவதாலும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள மழைநீரை வடியவைக்க வேண்டும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். அடிப்படை வசதிகளை துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து கொடுக்கவில்லை என்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.