என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dindigul Sreenivasan"
- எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறார்.
- கூட்டணிக்கு வருபவர்கள் ரூ. 100 கோடி கொடுங்க என்று கேட்கின்றனர்.
திருச்சி மாவட்ட அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. திருச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "பல முனைகளில் இருந்து அ.தி.மு.க.-வை தாக்கி வருகிறார்கள். தனி ஒரு மனிதனாக எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறார்."
"அ.தி.மு.க. கட்சியின் சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் உள்ளன. அதனை முதலில் சரி செய்ய வேண்டும். ஆபரேஷன் செய்தால் மட்டும் தான் மருத்துவம் பலிக்கும் என்ற நிலை உள்ளது. கூட்டணிக்கு வருபவர்கள் 20 சீட் கொடுங்க, ரூ. 50 அல்லது ரூ. 100 கோடி கொடுங்க என்று கேட்கின்றனர்."
"கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார். கூட்டணி குறித்து நீங்கள் பேட்டி கொடுத்து அதை கெடுத்துவிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணிக்கு செல்பவர்கள் ஜெயிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தான் ஜெயிப்பார்," என்று கூறினார்.
- மகளிர் பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்கள். இதுவரை வழங்கவில்லை.
- பாராளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை மக்கள் பரிசாக தர இருக்கிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் வாங்கிய கடனை ரத்து செய்வோம் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறி இருக்கிறது. இதுவரை தமிழக மாணவர்கள் வங்கிகளில் 16 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி இருக்கிறார்கள். கடனை ரத்து செய்ய இந்த 3 ஆண்டுகளில் இதுகுறித்து எந்த அறிக்கையையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை.
ஆனால் தற்போது நிதி நிலை அறிக்கையில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கல்விக் கடன் வங்கியின் மூலம் கிடைக்கச் செய்வோம் என்று கூறியுள்ளார்கள். ஏற்கனவே கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி என்ன ஆனது?
கேஸ் மானியமாக 100 ரூபாய் வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. அறிவித்தது. தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் உள்ளன. எப்போது தருவார்கள். ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று கூறினார்கள். இதுவரை ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். இதுவரை தி.மு.க. ஆட்சியில் 13 பேர் தற்கொலை செய்து விட்டார்கள். நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கோடி பேரிடம் கையெழுத்தை வாங்கி அனுப்புவோம் என்று கூறினார்கள். ஆனால் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் கையெழுத்து வாங்கியவை எல்லாம் குப்பை தொட்டியில் போடப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்தவில்லை. மகளிர் பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்கள். இதுவரை வழங்கவில்லை.
இன்றைக்கு பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பை போல மு.க.ஸ்டாலின் ஜூன் 4-ந்தேதிக்கு கொடி ஏற்ற தயாராகுங்கள் என்று கூறியிருக்கிறார். அதே போல அண்ணாமலையும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கூறி வருகிறார். ஆனால் இன்றைக்கு மக்கள் தெளிந்த நீரோடை போல் இருக்கிறார்கள். இந்த இருவரின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது.
இந்த பாராளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை மக்கள் பரிசாக தர இருக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலைக்கு கனவாகவே இருக்கும்.
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.
- எந்த கட்சி தலைவருக்கு என்ன பெருமை உள்ளது என்பது மக்களுக்கே தெரியும்.
- தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது.
திண்டுக்கல்:
அ.தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் நடந்த ஒருவிழாவில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தேசிய ஜனநாயககூட்டணி கதவுகள் திறந்தே இருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம் என பேசி உள்ளார். அது நிச்சயமாக அ.தி.மு.க.வுக்காக இல்லை.
எந்த கட்சிக்காக கூட்டணி கதவை திறந்துவைத்துள்ளார் என்பது அவருக்கே வெளிச்சம். பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பலமுறை உறுதியாக தெரிவித்துவிட்டார். இதற்குமேலும் விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை.
காமராஜருடன் மோடியை அண்ணாமலை ஒப்பிட்டு பேசியுள்ளார். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதனால் எந்த கட்சி தலைவருக்கு என்ன பெருமை உள்ளது என்பது மக்களுக்கே தெரியும்.
தி.மு.க.வில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேலைகள் நடந்து வருகிறது. இது ஒன்றும் புதிதல்ல. தி.மு.க.வில் வாரிசு அரசியல் உள்ளது என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே தெரியும். அயோத்தி ராமர்கோவில் விழாவில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அழைப்பு வந்தது உண்மை. இதில் கலந்து கொள்வது குறித்து அப்போது முடிவு செய்யப்படும். தமிழகத்தில் தி.மு..கவுக்கும், பா.ஜ.கவுக்கும் தான் நேரடி போட்டி உள்ளதாக ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது. மக்களவை தேர்தல் மட்டுமல்ல. எந்த தேர்தல் நடந்தாலும் அது தி.மு.க.வுக்கும், அ.தி.மு.கவுக்கும் இடையேதான் போட்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
- கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார்.
மதுரை:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் திருஉருவ சிலைக்கு தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
குருபூஜையையொட்டி சில நாட்கள் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்பட்டு, பின்னர் அந்த கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்காக அ.தி.மு.க. மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, கட்சியின் பொருளாளர் பொறுப்பில் அந்த தங்க கவசம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார். தற்போது அவர் அ.தி.மு.க.வில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதனால் தங்க கவசத்திற்கு அவர் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது.
எனவே வருகிற 30-ந்தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி வங்கி லாக்கரில் உள்ள தங்க கவசத்தை தற்போதைய அ.தி.மு.க. பொருளாளர் சீனிவாசன் வசம் ஒப்படைக்க வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே அ.தி.மு.க.வின் சொந்த பொறுப்பில் தங்க கவசம் உள்ளது. அதன்படி அக்கட்சியின் பொருளாளர் சீனிவாசனிடம் தற்போதும் தங்க கவசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- கழுத்தில் ஏற்பட்டுள்ள கட்டிக்கு, அறுவை சிகிச்சை பெற வேண்டி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
- ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனுக்கு, மருத்துவம் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கழுத்தில் ஏற்பட்டுள்ள கட்டிக்கு, அறுவை சிகிச்சை பெற வேண்டி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
நேற்று இரவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவம் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தேவர் தங்க கவசத்தை பெறுவதில் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போட்டி தென்மாவட்ட அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தங்க கவசத்தை யார் கையில் ஒப்படைப்பது? என்பது குறித்து மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பசும்பொன்னில் குவிந்து முத்துராமலிங்க தேவருக்கு புகழஞ்சலி செலுத்துவார்கள்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, பசும்பொனில் உள்ள முத்துராமலிங்கதேவரின் சிலைக்கு அணிவிக்க ரூ.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வழங்கினார்.
இந்த தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின் போது நினைவிடத்தில் உள்ள தேவர் சிலையில் பொருத்தப்படும். விழா முடிந்ததும் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவில் உள்ள லாக்கரில் கொண்டு வந்து தங்க கவசத்தை வைப்பது வழக்கம். இதற்காக அ.தி.மு.க. பொருளாளருக்கு இதற்குரிய முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அப்போது அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வங்கி லாக்கரில் வைத்து நிர்வகித்து வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ம் ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது மதுரை வங்கியில் இருந்து தங்க கவசத்தை பெறுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும், டி.டி.வி. தினகரன் தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இரு தரப்பினரும் வங்கிக்கு வந்து உரிமை கொண்டாடிய நிலையில் வங்கி அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திடம் தங்க கவசத்தை ஒப்படைத்து விழா முடிந்ததும் திருப்பி லாக்கரில் வைக்க ஏற்பாடு செய்தனர்.
பின்னர் அ.தி.மு.க.வில் தினகரன் ஓரங்கட்டப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் ஐக்கியமாகி துணை முதல்வரானார். அதன் பிறகு 2018, 19, 20, 21 ஆகிய ஆண்டுகளில் தேவர் ஜெயந்திக்காக ஓ.பன்னீர்செல்வமே நேரில் வந்து தங்க கவசத்தை பெற்று விழா கமிட்டியிடம் ஒப்படைத்து வந்தார்.
இந்த நிலையில் சில மாதங்களாக அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே தலைமை யுத்தம் நீடித்து வரும் நிலையில் பொதுக்குழுவை கூட்டி அ.தி.மு.க. பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.ன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை நீக்கி அதிரடி காட்டினார். இதனால் கட்சியில் முக்கிய பதவிகளில் யார் யார் உள்ளனர்? என்பதை இன்னும் உறுதி செய்ய முடியாத நிலை அ.தி.மு.க.வில் நிலவி வருகிறது.
வருகிற 28-ந் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா தொடங்க உள்ளது. இதற்காக வருகிற 25-ந் தேதி வாக்கில் மதுரை வங்கியில் வைக்கப்பட்டுள்ள தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் முறைப்படி பெற்று விழா கமிட்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் தங்க கவசத்தை பெறுவதில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இருவருமே தங்கள் வசம் தங்க கவசத்தை ஒப்படைக்க மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தங்க கவசத்தை யார் கையில் ஒப்படைப்பது? என்பது குறித்து மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கலாமா? அல்லது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் வசமே ஒப்படைக்கலாமா? இதில் சட்ட சிக்கல் ஏற்பட்டால் 2017-ம் ஆண்டு செய்தது போல மாவட்ட நிர்வாகத்திடமே தேவரின் தங்க கவசத்தை ஒப்படைக்கலாமா? என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு வங்கி சார்பில் விளக்க நோட்டீசு தரப்படும் என்று தெரியவந்துள்ளது. தேவர் தங்க கவசத்தை பெறுவதில் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த போட்டி தென்மாவட்ட அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்லில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அணியாகவும், அவரது பேரன் ராகுல்காந்தி ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றனர். இரு துருவங்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு ஓட்டு வேட்டை நடக்கிறது.
தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி அ.தி.மு.க. என்று தெரிந்ததால்தான் பா.ஜனதா எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. நாட்டில் இன்றைய நிலையை கருதி பா.ம.க. எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்றது போல இந்தமுறையும் எங்களால் தனித்து நின்று வெற்றி பெற முடியும். எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து தனது பேச்சை பேசிக் கொண்டே இருந்தார்.
இதற்கு முன்பு நடந்த பல கூட்டங்களிலும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையான கருத்துகளை கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் என்றும், ஜெயலலிதாவுக்கு சசிகலா விஷம் வைத்து கொன்று விட்டார் என்றும், அப்பல்லோலில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என நாங்கள் பொய் சொன்னோம் என்றும், மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை தமிழக கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரசிம்மாராவிடம் மனுகொடுத்துள்ளார் என்றும் தொடர்ந்து பலவிதமான சர்ச்சை பேச்சுகளை பேசி வந்தார். பாராளுமன்ற தேர்தலுக்காக தினசரி பிரசாரத்துக்கு சென்று வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று என்ன பேச போகிறார் என கட்சியினரும் செய்தியாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். #DindigulSreenivasan #RahulGandhi
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார். #DindigulSreenivasan #TTVDhinakaran
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்