என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "distribution"

    • தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் கம்பி தரம் உயர்த்தும் பணி நாளை நடைபெற உள்ளது.
    • அலிகுப்தா தைக்கால் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியி–ட்டுள்ள செய்தி–க்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் கம்பி தரம் உயர்த்தும் பணி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனால் கீழவாசல் மின் வழித்தடத்தில் உள்ள கரம்பை முதல் புறவழி–ச்சாலை வரையும், வ.உ.சி. நகரில் மின் வழித்தடத்தில் ராமநாதன் மருத்துவமனை, மைனர் ஜெயில் ரோடு, திருச்சி ரோடு, தீர்க்க சுமங்கலி மகால், அலிகுப்தா தைக்கால் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இரு–க்காது.

    இவ்வாறு அதில் கூற–ப்பட்டுள்ளது.

    • பூக்குளம் மின்பாதையில் மின்கம்பிகள் மாற்றும் பணி நாளை நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை துணை மின் நிலையத்தில் பூக்குளம் மின்பாதையில் மின்கம்பிகள் மாற்றும் பணி நாளை (செவ்வாய்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அன்பழகன்நகர், ஆனந்தம்நகர், மேட்டுத்தெரு, சுங்கான்திடல், சின்னத்தெரு, பெரியதெரு, ஜெகநாதன்நகர், வடுகத்தெரு, ராஜராஜசோழன்நகர், திருவள்ளுவர் காலனி, பள்ளியக்கிரஹாரம் கடைதெரு மற்றும் பைபாஸ் ஆகிய இடங்களிலும், கம்பம் மாற்றும் பணிக்காக மூலைஅனுமார்கோவில், போலீஸ் ராமசாமி நாயக்கர் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்து உள்ளார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறைக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறை கண்காணிப்பாளர் சின்னமருதுபாண்டியன் செய்திருந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறைக்கு வத்திராயிருப்பு அலையன்ஸ் சங்கங்கள் சார்பில் 650 புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தலைமை வகித்தார். அலையன்ஸ் சங்க மாவட்ட துணை ஆளுநர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார்.

    விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு வட்டார அலையன்ஸ் சங்கங்களின் சார்பில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டது. சிறைத்துறை டி.ஐ.ஜி.யிடம் மாவட்ட நீதிபதி புத்தகங்களை வழங்கினார்.

    பின்னர் சிறையில் வருகைப்பதிவு, உணவு மற்றும் விசாரணை சிறை கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்த கிறிஸ்டோபர் தேவையானவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்டார். இந்த விழாவில் தலைமை குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) செல்வன் ஜேசுராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன், சிறைத்துறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன், அரசு வழக்கறிஞர்கள் அன்னக்கொடி, ஜான்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில குழு உறுப்பினர் நித்தியானந்தன், எழுத்தாளர் தமிழ்பித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை சிறை கண்காணிப்பாளர் சின்ன மருதுபாண்டியன் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறை கண்காணிப்பாளர் சின்னமருதுபாண்டியன் செய்திருந்தார்.

    • அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி டி எப் பைலாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.
    • பிரிண்டரில் இருந்து வினாத்தாள்களை பிரிண்ட் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு, 

    பள்ளிகளில் தேர்வு வினாத்தாள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அச்சகங்களில் அச்சிடப்பட்டு பின்னர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இது போன்ற வினாத்தாள்கள் சில நேரங்களில் முன்கூட்டியே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அந்தப் பள்ளிகளில் பிரிண்டர் வழங்கி அதன் மூலம் மாணவ, மாணவி களுக்கு வினாத்தாள் கொடு க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முதற்கட்டமாக சென்னை, கிருஷ்ணகிரி, ஈரோடு உட்பட 9 மாவட்டங்களில் பிரிண்டர் முறை மூலம் வினாத்தாள்களை எடுத்து மாணவ- மாணவி களுக்கு தேர்வென்று வழங்கும் முறை சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையினர் கூறியதாவது:- தேர்வு தினத்தன்று பள்ளிக்கல்வி த்துறை மூலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி டி எப் பைலாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.

    அவற்றை பிரிண்ட் எடுத்து மாணவ- மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வழங்க வேண்டும். ஏற்கனவே பிரிண்டரில் இருந்து வினாத்தாள்களை பிரிண்ட் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 480 அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு எஸ். எஸ்.எ. மூலம் பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    500-க்கும் மேல் மாணவர்களை கொண்ட பள்ளிகளுக்கு பெரிய பிரிண்டரும், 500க்கும் கீழ் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு மீடியம் சைஸ் பிரிண்டரும் வழங்கப்பட்டுள்ளது. பிரிண்டர்கள் ஜூன் முதல் பயன்பாட்டுக்கு வரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சாலை விரிவாக்கத்திற்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நாளை நடைபெறுகிறது.
    • நாளை காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலைய பகுதியில் நெடுஞ்சாலை துறையால் சாலை விரிவாக்கத்திற்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர் மின் வழித்தடத்தில் உள்ள காவேரி கல்யாணமண்டபம் முதல் கல்லுக்குளம் வரை உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேலும் மேரீஸ்கார்னர் மின்பாதையில் அருளானந்ததம்மாள் நகர் 1-வது தெரு வரை உள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஸ்டேடியம் மின்வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், எஸ்.பி.குளம், விக்னேஸ்வராநகர், உமாசிவன் நகர், வெங்கடாசலபதி நகர், ஆர்.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன்நகர், டி.சி.டபிள்யூ.எஸ்.காலனி, களிமேடு.திலகர் திடல் மின்வழித்தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடிரோடு, மேலஅலங்கம். வண்டிக்காரத்தெரு மின்வழித்தடத்தில் ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில் தெரு, சேவியர் நகர், சோழன்நகர்.

    கீழவாசல் மின்வழித்தடத்தில் பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம். சர்க்யூட் ஹவுஸ் வழித்தடத்தில் ஜி.ஏ.கேனல் ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிநகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர்.மார்க்கெட் வழித்தடத்தில் பர்மாபஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். நகர், அரிசிக்காரத்தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு. வ.உ.சி. நகர் மின் வழித்தடத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேசன், வ.உ.சி.நகர். எனவே பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தில் வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தில் வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு பருவத்திற்கு விதைப்பு செய்ய ஏற்ற நிலக்கடலை ரகங்கள் டி.எம்.வி 14, கதிரிலப்பாக்ஸி 1812, பிஎஸ்ஆர் 2, உளுந்து விதைகள் வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10, சோளவிதைகள்- கோ-32, கே-12 ஆகிய சான்று பெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விதைகள் தேவைப்படும் விவசாயிகள் பரமத்தி வேளாண் விரிவாக்கம் மையத்தில் வாங்கி பயன்பெறலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • நாளை கரந்தை மற்றும் பூக்குளம் மின்பாதைகளில் மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
    • கல்லரைமேட்டுத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை கரந்தை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கரந்தை மற்றும் பூக்குளம் மின்பாதைகளில் மனி்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

    எனவே ஏ.எஸ்.அன்பழகன் நகர், எஸ்.ஏ.ஆனந்தம் நகர், மேட்டுத்தெரு, சுங்கான்திடல், சின்னத்தெரு, பெரியத்தெரு, ஜெகநாதன் நகர், வடுகத்தெரு, ராஜராஜசோழன் நகர், திருவள்ளுவர் காலனி, பள்ளியக்ரஹாரம் கடைத்தெரு, பைபாஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேலும் கரந்தை மின் வழித்தடத்தில் உள்ள கங்காநகர், புண்ணியமூர்த்தி தோட்டம், அழகப்பா ரைஸ்மில், சிரேஷ்சந்திரம் ரோடு, வடக்கு வாசல், சத்தியா நகர், எம்.ஜி.ஆர்.நகர், கல்லுக்கட்டித்தெரு, கல்லரைமேட்டுத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நகராட்சி சார்பில் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது
    • குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மாற்று ஏற்பாடு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் கோடை காலம் தொடங்கிய நிலையிலும், குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகளின் காரணமாகவும் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவதற்காக நகராட்சி நிர்வாகம் மூலம் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த வார்டுகளில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகிக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் நேற்று முதல் லாரிகளில் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கியது. திருவள்ளுவர் நகர் கோல்டன் நகரில் அருகே லாரிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட்டதை பொதுமக்கள் வரிசையில் நின்று குடங்களில் பிடித்து சென்றனர். இதனை தஞ்சை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திலும், பல்வேறு திட்டப்பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

    • பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.

    இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2 ஆயிரம் டன் நெல், 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் நெல்மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது.
    • 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு அரசு, ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறம் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவ சிய பொருட்களை வினி யோகம் செய்து வருகிறது.

    இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி கள்ள சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். இவர்கள் பற்றியும், ரேசன் பொருட்கள் பதுக்கல் குறித்தும் பொதுமக்கள், 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ரகசியம் பாதுகாக்கப்படும்.

    இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு ள்ளது. இது காவல்துறை தலைவரின் நேரடி கண்கா ணிப்பில் செயல்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் .
    • சரக்கு ரயிலின் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவை க்காக அனுப்பப்படும்.

    இது தவிர வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படும் அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் .

    இந்த நிலையில் இன்று தஞ்சையில் இருந்து 2500 டன் புழுங்கல் அரிசி லாரிகளில் ஏற்றப்பட்டு ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரயிலின் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ×