என் மலர்
நீங்கள் தேடியது "District Collector"
- அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும்
- இதற்கென தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மே 15ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டுமென ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெயர்ப்பலகை தமிழில் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் இதற்கென தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி - கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மே மாதம் 15-ந்தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும்.
- பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி - கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும்.
தமிழில் பெயர்ப்பலகை வைப்பவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் குறிப்பிடப்படும் வார்த்தைகளை தமிழ் எழுத்தை விட சிறிய அளவில் வைக்க வேண்டும்.
வருகின்ற மே மாதம் 15-ந்தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும். பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் பிளஸ்-1 மாணவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
- படுகாயம் அடைந்த தேவேந்திரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.
அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாணவர்களிடம் பெயிண்ட்டை கொடுத்து சுவரில் வரையப்பட்டிருந்த சாதிய அடையாளங்களை அழிக்க வைத்தனர்.
மேலும் சாதி பாகுபாட்டுக்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
- ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான இருவரும் தமிழகத்தில் பணியமர்த்தப்பட்டார்கள்.
- முதலில் தேவகோட்டை சப்-கலெக்டராக ஆஷா அஜித்தும், பரமக்குடி சப்-கலெக்டராக விஷ்ணுசந்திரனும் பணியாற்றினார்கள்.
சென்னை:
தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில் ராமநாதபுரம் கலெக்டராக விஷ்ணுசந்திரனும், சிவகங்கை மாவட்ட கலெக்டராக ஆஷா அஜித்தும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 3 வயதில் பத்மா என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் கணவன்-மனைவி மற்றும் சின்ன குழந்தையும் இருப்பதால் பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் பணியாற்றும் வகையில் இவர்களை அரசு நியமித்துள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான இருவரும் தமிழகத்தில் பணியமர்த்தப்பட்டார்கள். முதலில் தேவகோட்டை சப்-கலெக்டராக ஆஷா அஜித்தும், பரமக்குடி சப்-கலெக்டராக விஷ்ணுசந்திரனும் பணியாற்றினார்கள். நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக ஆஷா அஜித் பணியாற்றிய போது விஷ்ணுசந்திரன் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பணியாற்றினார்.
கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ஆஷா அஜித் கூறியதாவது:-
நாங்கள் இருவருமே முதல் முறையாக கலெக்டர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளோம். இது மிகுந்த மகிழ்ச்சியை தருவதோடு எங்கள் பொறுப்பையும் அதிகமாக்கி இருக்கிறது.
எங்களை போன்று பல தம்பதிகள் உயர் அதிகாரிகளாக பணிபுரிகிறார்கள். குடும்பம் நடத்துவதை இருவரும் சிரமமாக கருதுவதில்லை. பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் பணிபுரிவதால் அவசர தேவைகளுக்கு இருவரும் எளிதாக சந்தித்து கொள்ள முடியும். அரசு நம்பி பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம்.
சென்னையில் முறையாக பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதள ஆன்லைன் போர்ட்டல் மூலமாக பதிவு செய்யலாம்.
அதன்படி அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டிடம்/வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறையின் மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களிலும் நாளை விடுமுறை.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.
பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டது.
புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை வெள்ள பாதிப்பு காரணமாக நெல்லை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக நடவடிக்கை.
- தூத்துக்குடியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இம்மாதம் (டிசம்பர்) 31ம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெருவாரியான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- மழை வெள்ள பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 1,064 குடிசை வீடுகள் முற்றிலும் இடிந்து சேதம்.
நெல்லை :
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேற்றுவரை எடுக்கப்பட்ட பாதிப்பு விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மழை வெள்ள பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 67 மாடுகள், 135 கன்றுகள், 504 ஆடுகள், 28,392 கோழிகள் உயிரிழப்பு. 1,064 குடிசை வீடுகள் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

இழப்பீடு நிவாரணமாக ரூ.2.87 கோடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.58.14 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.
- டோக்கன் பெற்றவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள், வயல்வெளிகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்தது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் நிவாரண தொகை பெற இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் பெற்றவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் நெல்லை மாவட்டத்தில் 92 சதவீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனவரி 4-ந்தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழக்கம்போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களில் ரூ.6000 நிவாரண நிதிக்கு பதிலாக ரூ.1000 வழங்கப்படுவதை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும்.
- ஜல்லிக்கட்டு போட்டியின்போது உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக்கூடாது.
2024 பொங்கல் பண்டிகைகைய முன்னிட்டு, மதுரை ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஜனவரி 16ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும், 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவித்துள்ளார்.
மேலும், மாடு பிடி வீரர்கள், காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை அவிழ்க்கும்போது உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக்கூடாது.
போட்டிகள் தொடங்கும் முன் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்.
- சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை.
தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக் காடானது. வீடுகளுக்கும் மழை நீர் புகுந்து மக்கள் பெறும் சிரமத்திற்கு ஆளாகினர். இதில், தங்களது முக்கிய ஆவணங்களை மக்கள் பறிகொடுத்தனர்.

இதனால், நெல்லையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது:-
வெள்ளத்தால் ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்களை வழங்க திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.