என் மலர்
நீங்கள் தேடியது "Diwali fest"
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் விற்பனையில் சிறப்பு சலுகைகள்.
- பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ ஆஃபர்களை ஆவின் நிர்வாகம் அறிமுகம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் விற்பனையில் சிறப்பு சலுகைகளை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ ஆஃபர்களை ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில், மைசூர்பாகு 250 கி, மிக்சர் 200 கி, ஆவின் குக்கீஸ் 80 கி, ரூ.10 சாக்லேட் -1 அடங்கிய காம்போ ரூ.300க்கு விற்கப்படுகிறது.
இதேபோல், நெய் பாதுஷா 250 கி, பாதாம் மிக்ஸ் 200 கி, குலாப் ஜாமூன் 250 கி, மிக்சர் 200 கி, ரூ.10 சாக்லேட் -1 காம்போ ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, காஜு பிஸ்தா ரோல் 250 கி, காஜூ கட்லி 250 கி, நெய் பாதுஷா 250 கி, முந்திரி அல்வா 250 கி ஆகிய இனிப்புகள் அடங்கிய காம்போ ரூ.900க்கு சிறப்பு சலுகையில் விற்பனையாகிறது.
- தீபாவளி முன்னிட்டு 30 கிராமங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
- தீபாவளி அன்றும் மலைவாழ் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பல்வேறு மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகளுக்கு, ஈஷா சார்பில் புத்தாடை மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. மேலும் 30 கிராமங்களில் உள்ள மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஈஷாவை சுற்றியுள்ள தாணிக்கண்டி, மடக்காடு, பட்டியார் கோவில்பதி, சாவுக்காடு, முள்ளங்காடு, குளத்தேறி உள்ளிட்ட பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு ஈஷா சார்பில் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. மேலும் தீபாவளி நாளன்றும் இந்த மலைவாழ் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட உள்ளன.
இதனுடன் முட்டத்துவயல், செம்மேடு, காந்தி காலனி, நொய்யல் நகர், இருட்டுப்பள்ளம், சாடிவயல் சோதனை சாவடி, ராஜீவ் காலனி உள்ளிட்ட 30 கிராமங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு வீடாக சென்று இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பழங்குடியின குடியிருப்புகள் மற்றும் கிராம மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு பணிகளை ஈஷாவின் கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் மூலம் கடந்து 20 வருடங்களாக செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- தீபாவளி முன்னிட்டு நேற்று முதலே பட்டாசு வெடிக்கத் தொடங்கிவிட்டனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று முதலே பட்டாசு வெடிக்கத் தொடங்கிவிட்டனர்.
பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நேரங்களில் தீ விபத்து ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. அதனால், பொது மக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தென்னிந்தியாவை பொறுத்தவரை, நரகாசுரனை பகவான் கிருஷ்ணர் வதம் செய்ததை தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டியே ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் அமாவாசையுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து குடிப்பெயர்ந்த மக்கள் அங்கு கொண்டாடுகின்றனர்.
வேலைக்காகவும், படிப்புக்காகவும் பல்வேறு மாநிலங்களுக்கு, நாடுவிட்டு நாடு சென்ற மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது.
- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் நேற்று முதலே பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கிவிட்டனர்.
இதனால், சென்னை மாநகரம் காலையிலேயே புகைமூட்டமாக மாறியது. நேற்று முதலே மக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கியதால், பனியும், புகைமூட்டமும் சேர்ந்து இருந்தது.
இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது.
சென்னையில் எந்த ஒரு பகுதியிலும் காற்றின் தரம் நன்றாக இல்லை என மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 154, கடலூரில் 148, கோவையில் 104, புதுச்சேரியில் 119 என்ற அளவில் காற்றின் தர குறியீடு மிதமான அளவில் அதிகரித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்துள்ளது.
கொடுங்கையூரில் 159, மணலியில் 181, ராயபுரத்தில் 164, வேளச்சேரியில் 163 மிதமாக காற்று மாசு அதிகரித்துள்ளது.
- தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பண்டிகையை தொடர்ந்து மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தெய்வீக தீபத் திருநாளில், அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ வாழ்த்துகிறேன்.
மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ விநாயகப் பெருமானின் ஆசியுடன் அனைவரும் செழிக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை தி.நகரில் டாஸ்மாக் பாரில் மது விற்பனை நடந்து வருகிறது.
- மது பிரியர்கள் மதுபாட்டில்கள் வாங்க ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு காலையிலேயே டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கம். ஆனால், தீபாவளி முன்னிட்டு விதியை மீறி மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
சென்னை தி.நகரில் டாஸ்மாக் பாரில் மது விற்பனை நடந்து வருகிறது.
காலையிலேயே டாஸ்மாக் கடை பார் திறக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் மதுபாட்டில்கள் வாங்க ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.
- தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
- கடந்த 3 ஆண்டுகளாக தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று முதலே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது.
பொது மக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும்போது சென்னையில் 7 பேரும், மதுரையில் 5 பேரும், திருச்சியில் 3 பேரும் தீக்காயத்தால் பாதிப்படைந்துள்ளனர்.
தஞ்சாவூரில் 6 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட 4 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமாகத் தொடங்கியது.
- இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டது.
இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாமல் இருக்கிறது.
அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து சென்று வந்தனர். அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது.
முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமாகத் தொடங்கியது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுத்து எல்.ஏ.சி. எல்லையை ஒட்டி கட்டுமானங்களை மேற்கொண்டு வந்தது.
இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக இந்த பிரச்சனையைத் தீர்க்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டது.
அதன்படி, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த உடன்பாட்டின்படி இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்ல உடன்பாடு ஏற்பட்டது. எனவே எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் முன்பிருந்த முகாம்களின் துாரத்துக்கு பின்னோக்கி செல்லும் நடவடிக்கை தொடங்கின.
இந்தியா– சீனா எல்லையில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துவிட்டதை தொடர்ந்து, தீபாவளியை முன்னிட்டு இன்று இந்தியா- சீனா இடையே இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
- பிரியங்கா காந்தி, மலையாளத்திலும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
- நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.
இந்நிலையில், கேரள மாநிலம், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, மலையாளத்திலும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இருளுக்கு எதிராக ஒளி நிறைந்த தீபத்தின் வெற்றித் திருவிழா. அநீதி, பொய் மற்றும் ஆணவத்துக்கு மத்தியில் நீதி, உண்மை மற்றும் அடக்கத்தின் வெற்றித் திருவிழா. வண்ணங்கள், விளக்குகள் மற்றும் மகிழ்ச்சியின் திருவிழா.
தூய்மை மற்றும் வழிபாட்டுக்கான நேரம் இது. ஒரு பருவம் முடிந்து அடுத்த பருவத்தை அன்புடன் வரவேற்கும் ஒரு சிறந்த பண்டிகை. நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள்" என இந்தி மொழியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மலையாளத்தில் தீபாவளி வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர்.
- தல தீபாவளி கொண்டிய தம்பதிக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் `பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு வெளிவந்த சித்தா படம் வெற்றியை கொடுத்தது.
இதற்கிடையே, நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது.
இதைதொடர்ந்து, நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் தங்களது தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் மற்றும் குடும்பத்தினருடன் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தல தீபாவளி கொண்டிய தம்பதிக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து விதமான இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள் விற்பனைகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
- இனிப்பு மற்றும் கார தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே பொது மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பலகாரங்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து விதமான இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள் விற்பனைகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. எனவே, பலகாரங்கள் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு நிபந்தனைகளைப் பின்பற்றி தரமான மற்றும் பாதுகாப்பான உணவு நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிக ஸ்வீட் ஸ்டால்கள் உட்பட அனைத்து இனிப்பு மற்றும் கார தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே பொது மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். இந்த வணிகர்கள் மட்டுமல்லாது அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தில் உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
இனிப்பு பலகார பெட்டிகளை விற்பனை செய்யும் வணிகர்கள் அந்த பெட்டியில் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்ப பயன்படுத்துதல் கூடாது. பணியாளர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து தான் பணியாற்ற வேண்டும். அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
புகார்
பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான புகார்கள் இருப்பின், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் 0461-2900669 என்ற எண்ணிலோ அல்லது 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் அலுவலக வாட்ஸ் அப் எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.