search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Executive Committee meeting"

    • வருகிற 7-ந்தேதி நடக்கிறது
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரான பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க.செயற் குழுக்கூட்டம் வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோட்டில் சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடக்கிறது.

    கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால் தலைமை வகிக்கிறார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அ.ராஜேந் திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கூட்டத்தில் வருகிற 21,22-ந் தேதிகளில், தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை வருகை குறித்தும், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி குழுவின் அலைபேசி எண்களை முறைப்படுத்துதல், கூட்டுறவு சங்கத்தேர்த லுக்கான புதிய உறுப்பினர் சேர்த்தல், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், சென்னை மகளிர் அணி மாநாடு மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.

    இதில் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க. உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். எனவே மாநில அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்
    • கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் போன்றவை நடைபெற உள்ளது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டல வாடி ஊராட்சியில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி முன்னிலை வகித்தார். அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

    வாணியம்பாடி பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜோலார்பேட்டை பகுதியில் புதிய பயணிகள் நிழற்கூடம் திறந்து வைத்தல், திருப்பத்தூரில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் போன்றவை நடைபெற உள்ளது.

    இதில் அனைவரும் உற்சாகமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ.சம்பத்குமார், டி.கே.மோகன், சாந்திசீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல், நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன், ம. அன்பழகன், எஸ். சாரதி குமார், ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், கவிதா தண்டபாணி, க. உமா கன்ரங்கம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார் தாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • கருணாநிதி நூற்றாண்டு விழா ஆலோசனை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு துவக்க விழா குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்தும் மற்றும் தி.மு.க. ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், சட்டத்திட்ட திருத்தத்துறை இணை செயலாளர் ஞானசேகரன், தலைமை கழக வழக்கறிஞர் கணேசன், செய்தி தொடர்புக்குழு துணை செயலாளர் சையத் ஹபீல், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், குமுதா, துரைமஸ்தான், மாவட்ட பொருளாளர் சாரதி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய செயலாளர்கள் சேஷா வெங்கட், மாணவர் அணி அமைப்பாளர் வினோத் உள்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
    • அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார்.

    தணிக்கை குழு உறுப்பினரும், சட்டபேரவை துணை தலைவருமான கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்றார்.

    கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தீர்மானங்களை விளக்கி பேசினார்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீ்ர்மானங்கள் விவரம் வருமாறு:-

    திருவண்ணாமலையில் கடந்த 8-ந் தேதி அண்ணா நுைழவு வாயில் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை ஆகியவற்றை திறந்து வைக்க வருகை தந்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கழகம் சார்பில் நன்றி தெரிவிப்பது, கடந்த 9-ந் தேதி அன்று திருக்கோவிலூர் சாலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 246 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, கீழ்பென்னாத்தூரில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் கழக மருத்துவரணி துைண தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஜோதி, பொருளாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் பாரதிராமஜெயம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கு.கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், தெற்கு மாவட்ட அமைப்பாளர்கள் கே.வி.மனோகரன், டி.வி.எம்.நேரு, பொன்.முத்து, இரா.ஜீவானந்தம், ஏ.ஏ.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், சுந்தரபாண்டியன், மெய்யூர் சந்திரன், ஆறுமுகம், ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் நன்றி கூறினார்.

    ×