என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "driver arrest"
- டிரைவர் மதுபோதையில் இருந்ததை அறிந்த போலீசார் அபராதம் விதிக்க முயன்றதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- பரபரப்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அரியானாவில் ஃபரிதாபாத் பகுதியில் போக்குவரத்து போலீசார் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார் டிரைவரிடம் ஆவணங்களை கேட்டார். அப்போது, டிரைவர் மதுபோதையில் இருந்ததை அறிந்த போலீசார் அபராதம் விதிக்க முயன்றதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திடீரென டிரைவர் காரை இயக்கியதால், போக்குவரத்து போலீஸ் காரின் கதவில் தொங்கிய படியே சில மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டார். இதைக்கண்ட மற்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் காரை மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "ஆவணங்களை சரிபார்ப்பதற்காக போலீசார், டிரைவரின் பக்கவாட்டில் உள்ள கதவு வழியாக கேட்டபோது, திடீரென டிரைவர் காரில் போக்குவரத்து போலீசை இழுத்து சென்றார். சில மீட்டர் தூரத்துக்கு சென்ற காரை மற்றவர்கள் மடக்கி பிடித்தனர்," என்றனர்.
மதுகுடித்து விட்டு காரை ஓட்டியது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அபிராமி அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
அரக்கோணம்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை சேர்ந்தவர் அபிராமி. இவர்கடந்த வாரம் ஆவடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.
அங்கிருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு திருத்தணியில் இருந்து ஆவடி செல்வதற்கு மின்சார ரெயிலில் இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது ரெயில் அரக்கோணம் அருகே வந்த போது சிக்னலுக்காக நின்றது.
திடீரென மர்ம நபர் ஒருவர் திடீரென அபிராமி கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிசெயினை பறித்துக் கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து அபிராமி அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் டி.எஸ்.பி கர்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அரக்கோணம் ரெயில் நிலைய 4-வது பிளாட்பாரத்தில் போலீசுக்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் நேரு நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகராஜ் (வயது 35) என்பதும், அவர் ரெயிலில் பெண் பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
- சிறுமியின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து மகளை அழைத்துச் சென்று துக்காராம் கேட் போலீசில் புகார் செய்தனர்.
- போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சந்திப்பை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். இதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர் மகளை கண்டித்தனர்.
இதனால் விரக்தி அடைந்த சிறுமி திங்கட்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியேறினார். எங்கு செல்வது என தெரியாமல் சிறுமி கால் போன போக்கில் சென்றார்.
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டாவை சேர்ந்தவர் சந்திப் (வயது 28). இவர் செகந்திராபாத்தில் வாடகை பைக் ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் அழுதபடி சென்ற சிறுமியை பார்த்த சந்திப் தன்னுடன் வருமாறு சிறுமியை அழைத்தார். ஆனால் சிறுமி சந்திப்புடன் செல்ல மறுத்தார்.
இருப்பினும் சந்திப் சிறுமியிடம் நைசாக பேசி காச்சிகுடாவிற்கு அழைத்துச் சென்றார்.
அங்குள்ள தங்கும் விடுதியில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
மகள் வீட்டில் இல்லாததால் அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். பின்னர் மகள் காணாமல் போனது குறித்து துக்காராம் கேட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி அந்த வழியாக வந்த ஒருவரிடம் செல்போனை வாங்கி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
சிறுமியின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து மகளை அழைத்துச் சென்று துக்காராம் கேட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சந்திப்பை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
- பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகேயுள்ள ஒடசல்பட்டி பத்திரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று காலை திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டுக்கு ஒரு தனியார் பஸ்சில் அந்த கட்சியை சேர்ந்த 60 பேர் சென்றனர்.
அப்போது பொம்மிடி பகுதியில் தருமபுரி சாலையில் உள்ள ரெயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென்று பஸ் எதிரே வைக்கோல் பாரம் ஏற்றி லாரி வந்தது. அந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் பஸ்சில் பயணித்த கட்சியினர் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து பொம்மிடி போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டனர்.
அப்போது மாநாட்டுக்கு செல்லும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மதுப்போதையில் இருப்பது தெரியவந்தது. எதிரே வந்த லாரி டிரைவர் சாதூர்யமாக செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
காயமடைந்தவர்களை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தனியார் பஸ் நிர்வாகத்தை கண்டித்து பஸ்சில் வந்த விடுதலை கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தொப்பூர் கணவாய் பகுதில் நடந்த விபத்தில் 4 பேர் இறந்த நிலையில் இன்று பொம்மிடியில் நடந்த விபத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
- மதுபோதையில் வந்த மர்மநபர் ஒருவர், கடலில் குளித்த பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தவளக்குப்பம் அடுத்த பூ.புதுக்குப்பம் கடற்கரையும் ஒன்றாகும். இங்குள்ள மணல் பரப்பை ரசிக்க உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சம்பவத்தன்று இந்த பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் இறங்கி உற்சாக குளியல் போட்டனர்.
அப்போது மதுபோதையில் வந்த மர்மநபர் ஒருவர், கடலில் குளித்த பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளிடம் ரகளையிலும் ஈடுபட்டார்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீசாருக்கு சுற்றுலா பயணிகள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த குமார் (வயது 48) என்பதும், டிரைவரான இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வேனில் சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
- சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- இந்திரா வேலை பார்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மீண்டும் வளைகுடாவுக்கு சென்றுவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள நரிக்கல்லு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு என்பவரின் மனைவி சுமித்ரா(வயது63). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர், நெற்றியில் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில் படுக்கையில் கிடந்தார்.
இதனை பார்த்த அவரது மகன் பாபு, அவரை அங்கிருந்து மீட்டு மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சுமித்ரா இறந்தார். தனது தாய், அறையில் இருந்த மரக்கட்டிலில் தவறி விழுந்ததில் தலையில் காயமடைந்து இறந்து விட்டதாக போலீசில் பாபு தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் திருநெல்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சுமித்ரா கழுத்தை நெரித்து கொன்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சுமித்ராவை கொன்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர்களது வீட்டில் சுமித்ராவின் மகளுடன் முருகன்(42) என்பவர் லிவ்-இன் பார்ட்னராக வாழ்ந்து வந்த விவகாரம் தெரியவந்தது.
திருவண்ணாமலையை சேர்ந்த அவருக்கு, வளைகுடா நாட்டில் டிரைவராக வேலை பார்த்த போது அங்கிருந்த இந்திராவுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் கேரளாவுக்கு திரும்பிவந்து ஒன்றாக வாழ தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் இந்திரா வேலை பார்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மீண்டும் வளைகுடாவுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு முருகன், இந்திராவின் குழந்தைகள், சகோதரர் பாபு மற்றும் தாய் சுமித்ரா ஆகியோருடன் இந்திராவின் வீட்டில் வசித்து வந்தி ருக்கிறார்.
இதனால் அவருக்கு கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினர். அதன் அடிப்படையில் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் தனக்கும், சுமித்ரா கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இருந்தபோதிலும் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், சுமித்ராவை கொன்றதை ஒப்புக்கொண்டார். மகள் இந்திராவுடன் லிவ்-இன் பார்ட்னராக முருகன் வாழ்வது சுமித்ராவுக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. இதனால் சுமித்ரா மற்றும் முருகனுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டபடி இருந்திருக்கிறது.
இதனால் சுமித்ராவை கொல்ல முருகன் திட்டமிட்டார். சுமித்ராவின் மகன் பாபு இல்லாத நேரத்தில் அவரை கொல்ல முடிவு செய்திருக்கிறார். அதன்படி பாபு வெளியே சென்றிருந்த நேரத்தில், சுமித்ராவை கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார். பின்பு சுமித்ரா தவறி விழுந்து காயமடைந்தது போன்று செட்-அப் செய்துவிட்டு, சென்றிருக்கிறார்.
சுமித்ராவின் சாவுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லாதது போன்று வழக்கம்போல் நடமாடிய படி இருந்திருக்கிறார். ஆனால் போலீசார் நடத்திய துரித விசாரணை காரணமாக முருகன் சிக்கிக்கொண்டார். கைது செயயப்பட்ட முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
- சத்தியவேடு சாலை மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் சோதனையிட்டனர்.
- ஒரு லாரியில் சோதனை செய்தபோது அதில் வளர்ப்பு மீன் தொட்டிகளுக்கு நடுவே மூட்டை மூட்டையாக மறைத்து கஞ்சா கடத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை பகுதியில் நேற்று இரவு சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சத்தியவேடு சாலை மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் சோதனையிட்டனர். ஒரு லாரியில் சோதனை செய்தபோது அதில் வளர்ப்பு மீன் தொட்டிகளுக்கு நடுவே மூட்டை மூட்டையாக மறைத்து கஞ்சா கடத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா கடத்தி வந்து இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து லாரியுடன் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டிவந்த டிரைவரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் விசாகப்பட்டினத்தில் இருந்து கோவைக்கு கஞ்சாவை கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. கஞ்சா கடத்திலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்துள்ளார்.
- பாதிக்கப்பட்ட இளம்பெண் குரும்பூர் போலீசில் புகார் செய்தார்.
குரும்பூர்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 25 வயது மதிப்புள்ள இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் குரும்பூருக்கு வந்துள்ளார்.
பின்னர் குரும்பூர் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஆட்டோவில் வந்த டிரைவர் அவர் செல்ல வேண்டிய முகவரிக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் இளம்பெண் கூறிய முகவரிக்கு செல்லாமல் மாறாக ஏரல் சாலையில் அழைத்து சென்றுள்ளார்.
ஏரல்-குரும்பூர் சாலை மறுகால் ஓடை பாலத்தின் கீழ் காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்துள்ளார். அவரை தொடர்ந்து அந்த வழியாக மோட்டார் கை்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். பின்னர் ஆட்டோ டிரைவரும், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் குரும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா விசாரணை நடத்தினார். அதில் இளம்பெண்ணை ஆட்டோவில் அழைத்து சென்று கற்பழித்தது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் சன்னிதி தெருவை சேர்ந்த அய்யப்ப நயினார் மகன் முத்துராம்குமார் என்ற தங்கம் (வயது 22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குரும்பூர் நெட்டையன்காலனியை சேர்ந்த 4 வாலிபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண் வேலை முடிந்ததும் குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர் செல்வதற்காக அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏறினார்.
- ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டிரைவரை கைது செய்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.
இவர் தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி துறையில் முதன்மை செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண் தினமும் தான் வேலை பார்க்கும் கல்லூரிக்கு பஸ்சிலேயே பயணித்து செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று காலை இளம்பெண் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலையில் வேலை முடிந்ததும் குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர் செல்வதற்காக அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏறினார்.
அப்போது பஸ்சை ஓட்டிச்சென்ற சிறுமுகையை சேர்ந்த 35 வயது டிரைவர் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பஸ் அன்னூருக்கு சென்றதும், பஸ்சை விட்டு இறங்கி நேராக அன்னூர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இளம்ெபண்ணின் கணவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் டிரைவர் ஜெயபாலை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கிறார்கள்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தேவி நகரை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
நேற்று மாலை 6 மணியளவில் இளம்பெண் தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது மேல் வீட்டில் வசித்து வரும் டிரைவர் ஜெயபால் (வயது 47) என்பவர் மறைந்து இருந்து ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். உடனடியாக ஜெயபால் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து இளம்பெண் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த டிரைவர் ஜெயபாலுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கிறார்கள்.
- பாண்டித்துரையும்,கருப்பசாமியும் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.
- ஆத்திரமடைந்த பாண்டித்துரை, இரும்பு கம்பியால் கருப்பசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மேல பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்தவர் பூல்சாமி என்ற கொம்பையா.
மதுபோதை தகராறு
இவருடைய மகன்கள் பாண்டித்துரை (வயது 29), கருப்பசாமி (26). இவர்கள் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.
இவர்கள் 2 பேரும் நேற்று இரவில் தங்களது லோடு ஆட்டோவில் கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு- ஊத்துப்பட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றனர்.
தம்பி அடித்து கொலை
அப்போது மது போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் பாரில் இருந்து வெளியே வந்த அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டித்துரை, இரும்பு கம்பியால் கருப்பசாமியை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் பாண்டித்துரை அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாண்டித்துரையை தேடி வந்தனர். இந்நிலையில் கோவில்பட்டி அருகே பதுங்கி இருந்த பாண்டித்துரையை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நம்பியாற்றில் ஈஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- ஈஸ்வரியின் நடத்தையில் மகாராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மைலாப்புதூர் மேலூரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு என்ற மகாராஜன் (வயது40). கார் டிரைவர். இவரது மனைவி ஈஸ்வரி (34). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
பெண் கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் நம்பியாற்றில் ஈஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் அவரது கணவரே கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சுடலைக்கண்ணுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
நடத்தை சந்தேகம்
நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இதற்கு முன்பு மதுரையில் வாடகைக்குவீடு எடுத்து தங்கியிருந்தோம். அப்போது ஈஸ்வரியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
பின்னர் மதுரையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நாங்கள் நாங்குநேரி அருகே உள்ள துலுக்கர்பட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினோம்.
கடந்த 16-ந்தேதி நம்பியாற்று பகுதிக்கு நாங்கள் சென்றோம். அப்போது இது தொடர்பாக எங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் ஈஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை ஆற்றில் வீசிவிட்டு அங்கிருந்த தப்பி சென்றேன். போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்