என் மலர்
நீங்கள் தேடியது "Drought Relief"
- சங்கரன்கோவில் தொகுதியில் மானாவாரி சாகுபடி வடகிழக்கு பருவமழை பருவத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- சாகுபடி காலங்களில் பயிர் நஷ்டம் ஏற்பட்டதாக அரசால் வறட்சி என அறிவிக்கப்பட்டுள்ளது
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சங்கரன்கோவில் தொகுதியை பொறுத்தவரை விவசாயம் என்பது மிக முக்கிய பிரதான தொழிலாகும்.சங்கரன்கோவில் தொகுதியில் மானாவாரி சாகுபடி வடகிழக்கு பருவமழை பருவத்தி்ல் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.
சில நேரங்களில் பருவமழை பொய்த்து விடுவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது. திருவேங்கடம் வட்டம் அ.கரிசல்குளம் பழங்கோட்டை குறுவட்ட விவசாயிகள், நடுவக்குறிச்சி பிர்க்கா விவசாயிகள் 2020 - 21, 2021-22-ம் ஆண்டுகளில் மானாவாரி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய உரிய உரிமை தொகை கட்டியுள்ளனர்.
அந்த சாகுபடி காலங்களில் பயிர் நஷ்டம் ஏற்பட்டதாக அரசால் வறட்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசால் அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரண தொகை அறிவிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படாமல் ஒருசில கிராமங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க உத்தரவான தொகை விவசாய உயர் அதிகாரி களால் முழுமை யாக வழங்கப்படாமல் இருப்ப தாக விவசாயிகளிடமிருந்து புகார் வரப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து வறட்சி நிவாரண தொகை வழங்கப்பட வேண்டிய அனைத்து விவ சாயிகளுக்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இதை நம்பி கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி யதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
அபிராமம்
ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீடு நிவாரண தொகையை உடனே தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் தமிழக அரசின் சிறப்பு செயலாளர் சமயமூர்த்தியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட அபிராமம் பகுதியில் பருவமழை குறைவால் நெற்பயிர்கள் சாகுபடி மகசூல் பாதிக்கப்பட்டது. வறட்சி நிவாரணம் வழங்ககோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அபிராமம் பகுதியை சுற்றியுள்ள தரைக்குடி, வல்லகுளம், அகத்தாரிருப்பு, தீர்த்தாண்டதானம் உள்பட பல்வேறு கிராமங்களில் கடந்த ஆண்டு பருவமழை இல்லாததால் நெல் விவ சாயம் பாதிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் பொருளாதார நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கொடுத்த பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கூறினர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாய சங்க பொறுப்பாளர் முத்து ராமலிங்கம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் மழை அளவு குறைந்துவிட்டதால் நெல் பயிர் விளையக்கூடிய நேரத்தில் மழை இல்லாமல் போய்விட்டது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது.
இதை நம்பி கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி யதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதை மனதில்கொண்டு விவசாயி கள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்வதுடன், பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இதை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை. விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்க்குள் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வறட்சி நிவாரணம் ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஏக்கருக்கு ரூ.5400 அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்பயிர் 98 ஆயிரத்து 314 ஹெக்டேரிலும், மக்கா சோளம் 40 ஹெக்டேரில் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்குரிய வறட்சி நிவாரணமாக ரூ.132 கோடியே 71 லட்சம் பேரிடர் மேலாண்மை நிதியாக கோரப்பட்டு உள்ளது.
கடந்த 2022-23ம் ஆண்டில் சம்பா பருவத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 859 எக்டேரில் நெல் சாகுபடி நடந்தது. வட கிழக்கு பருவ மழை -2022ல் குறைவாக பெய்துள்ளதால் அறுவடை நேரத்தில் நெல், மக்கா சோளப்பயிர்கள் மகசூல் பாதிப்படைந்தன.
கடந்த பிப்ரவரி மாதம் வருவாய்த் துறை, வேளாண்துறை அலுவலர்கள் இணைந்து கணக்கெடுத்தனர். இதில் நெல்- 98 ஆயிரத்து 314 ஹெக்டேரும், மக்காச்சோளம் - 40 ஹெக்டேரும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய இழப்பீட்டுத்தொகை ரூ.132 கோடியே 71 லட்சம் பேரிடர் மேலாண்மை நிதி கோரி அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அறிக்கை அனுப்பினர்.
தொடர்ந்து விவசாய சங்கங்கள் வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதன் விளை வாக 2022ம் ஆண்டு பேரி டர் மேலாண்மை, மழை குறைவால் 33 சதவீதத்திற்கு மேலாக பயிர் தேசம் ஏற்பட்ட ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங் ளை மிதமான வேளாண் வறட்சி' என அரசு நிவாரணம் வழங்க ஆணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 வட்டாரங் களுக்கு வறட்சி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.132 கோடியே 70 லட்சத்து 95 ஆயிரத்து 775 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 34 ஆயிரத்து 305 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5400 வீதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
- வறட்சி நிவாரணம் அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
- யூனியன் மானேஜர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் சன்முகப் பிரியா ராஜேஷ் தலைமை யில் வட்டார வளர்ச்சி அலு வலர் அன்புக்கண்ணன் (கிராம ஊராட்சிகள்) ஆணையாளர் ஜானகி ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. யூனியன் மானே ஜர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார். மொத்தம் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:- லட்சுமி (தி.மு.க.):- கீழத்தூவல் கண்மாயை தூர்வார வேண்டும்.
சசிகலா(அ.தி.மு.க.):- எஸ்.ஆர்.என்.பழங்குளம் கிராமத்தில் சத்துணவு கூடம் இடிந்து கிடக்கிறது. புதிதாக சத்துணவுகூடம் கட்டித்தர வேண்டும். காமாட்சிபுரத்திலிருந்து சடையனேரி செல்லும் சாலையை தார்சாலையாக மாற்றித் தரவேண்டும்.
அர்ச்சுனன் (வளநாடு, அ.தி.மு.க.):- மட்டியரேந்தல், தாழியரேந்தல் கிராமத்திற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே மக்கள் போராட்டம் நடத்திய போது குடிநீர் வந்தன. அதன் பின்பு காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை. மக்களுக்கு முறையாக குடிநீர் கிைடக்கிறதா? என பார்வையிட குடிநீர் வாரிய அதிகாரிகள் வருவதில்லை. மக்கள் கவுன்சிலரிடம் புகார் செய்கிறார்கள். நாங்கள் ஆைணயாளரிடம் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை. செலவை அங்கீக ரிக்கவே கூட்டம் நடத்து கிறீர்கள்.
சண்முகப்பிரியா ராஜேஷ் (சேர்மன்):- ராமநாதபுரம் மாவட்ட வறட்சி நிவாரணத்திற்கு ஏக்கருக்கு ரூ.5400 அறிவித்த முதல்-அமைச்சருக்கும், வறட்சி நிவாரணம் வழங்க கோரி சட்டமன்றத்தில் குரல் கொடுத்த காதர் பாட்சா முத்துராமலிங்கத் திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
- மழை இல்லாததால் பயிரிட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சருகாக காய்ந்து விட்டன.
- நெல்லை மாவட்டத்தில் 25 வட்டாரங்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. அதனால் பயிர்கள் அனைத்தும் நீரின்றி கருகி விட்டன.
விவசாயிகள் கோரிக்கை
இந்நிலையில், நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட தேவர்குளம், மேலே இலந்தகுளம், மூவிருந்தாளி உள்ளிட்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக்கோரி ஏற்கெனவே மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மழை இல்லாததால் பயிரிட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சருகாக காய்ந்து விட்டன. அதனால் அதற்கான காப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அதற்கு இதுவரை பதில் இல்லை என கூறி அதனை கண்டித்தும், நெல்லை மாவட்டத்தில் 25 வட்டாரங்கள், அரசால் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வன்னிகோனேந்தல் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட 9 ஊராட்சிகளையும் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட வில்லை. எனவே வன்னிக்கோனேந்தல் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட 9 கிராமங்களையும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து போர்க்கால அடிப் படையில் நிவாரணமும் பயிர் காப்பீட்டும் முறையாக வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் இன்று வன்னிக்கோனேந்தலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில் 500-க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
- கண்ணங்குடி ஒன்றிய விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
- இது சம்பந்தமாக கோட்டாட்சியரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தேவகோட்டை
தேவகோட்டை கோட்டாட்சியரிடம் கண்ணங்குடி ஒன்றிய சேர்மன் சித்தனூர் சரவணன் மெய்யப்பன் தலைமையில் பொதுமக்கள் வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
அவற்றில் கூறியிருப்ப தாவது:-
கண்ணங்குடி ஒன்றியத்தில் பெரும் பகுதி மழை இன்றி விவசாயம் பொய்த்துவிட்டது. அதிலும் குறிப்பாக சித்தானூர், அனுமந்தகுடி, தத்தணி, திருப்பாக்கோட்டை, மனைவி கோட்டை போன்ற ஊராட்சிகளில் முழுமை யான மழை இன்றி பயிர்கள் கருகி விட்டது.
இதை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரி கள் நேரடியாக பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்கள். இருப்பினும் இதுவரை வறட்சி நிவாரணம் வழங்க வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனு அளித்துவிட்டு கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சித்தனூர் சரவணன் மெய்யப்பன் கூறுகையில், 2022-23 ம் ஆண்டிற்கான வறட்சி நிவாரண நிதி கண்ணங்குடி ஒன்றியத்திற்கு வழங்கப்படவில்லை, மாவட்டத்தில் ஒரு சில ஒன்றியங்களோடு சேர்த்து கண்ணங்குடி ஒன்றியத்திற்கும் வறட்சி நிவாரண நிதி வழங்கப்படவில்லை. இது குறித்து ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இதனால் தற்பொழுது கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இதற்கு பிறகும் வறட்சி நிவாரண நிதி வழங்கவில்லை என்றால் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் விசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் சங்கர் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை ஆய்வாளர் நாகராஜன், துணை தாசில்தார் முருகு, விவசாய சங்கத்தலைவர் ராஜன், செயலாளர் ஒளிச்சந்திரன், புலவர் மன்றம் கந்தசாமி, முன்னோடி விவசாயி மணியன், காவேரி தமிழ்தேச விவசாய சங்கத்தைச் சேர்நத சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், மற்றும் வேளாண்மைத்துறையினர், பொதுப்பணித்துறையினர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் காவிரியில் கடைமடை பாசன பகுதியான ஆதனூர், கருப்பம்புலம், கடினல்வயல், கைலவனம்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளில் மின் இறவை பாசனத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். கோவில்தாவில் உள்ள சட்ரஸ் பழுதடைந்து சரிசெய்யப்படாமல் உள்ளது. இதை சரிசெய்ய நிதி ஒதுக்கி ஓராண்டு ஆகியும் இதுவரை எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இந்த சட்ரஸை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்.
வண்டுவாஞ்சேரியில் உள்ள அரசுக்கு சொந்தமான 144 ஏக்கர் நிலத்தை தூர்வாரி நீர்தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2013-14-ம் ஆண்டிற்கான வறட்சி நிவாரணம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக மேட்டூரில் தண்ணீர் திறந்ததையொட்டி விவசாயிகள் தாலுக்கா அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். #Farmersmeeting