என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drums"

    • கணவனை கொலை செய்து பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகில் கைது செய்யப்பட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சவுரவ் சுக்லா என்பவரை அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகிலுடன் சேர்ந்து கொலை செய்து பிளாஸ்டிக் டிரம்மில் சிமெண்ட் கலவையை நிரப்பி அடைத்து வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகில் கைது செய்யப்பட்டனர்.

    தண்ணீர் நிரப்பி வைக்கப்படும் பிளாஸ்டிக் டிரம்மில் கணவனை கொலை செய்து அடைத்து வைத்த சம்பவத்தால் அப்பகுதியில் டிரம் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    அக்கம் பக்கத்தினரின் கிண்டலுக்கு உள்ளாவோம் என புதிய டிரம் வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுவதால், மாதம் 60 டிரம் வரை விற்பனையான நிலையில் தற்போது 15 டிரம் விற்பனையாவதே சவாலாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • லிடியன் நாதஸ்வரம் ஏ . ஆர். ரகுமானின் கே. எம். இசைப் பள்ளியில் பயின்றவர்.
    • லிடியன் நாதஸ்வரம் மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' படத்திற்குப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்

    லிடியன் நாதஸ்வரம் ஏ . ஆர். ரகுமானின் கே. எம். இசைப் பள்ளியில் பயின்றவர். தனது இசைத் திறமைக்காக உலக அளவில் பாராட்டப்பட்டவர். உலக அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி 2019-ல் சிறந்த வெளிப்பாட்டாளருக்காண ஏழு கோடி ரூபாய் பரிசைப் பெற்றவர்.

    அவர் பியானோ, டிரம் போன்ற பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கத் தெரிந்தவர்.

    அவரது ஒருங்கிணைப்பில் சென்னை டிரம் பெஸ்ட் 2024 என்கிற இசை விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.சர்வதேச அளவில் புகழ்பெற்ற டிரம்மர்கள் ஆறுபேர் வரவிருக்கிறார்கள்.

    விழா பற்றி லிடியன் பேசும் போது,

    "இந்த விழாவில் உலக அளவில் புகழ்பெற்ற டிரம்ஸ் கலைஞர் டேவ் வெக்கில் பங்கேற்கிறார்.

    ஜினோ பேங்க்ஸ், ஸ்டீவன் சாமுவேல் தேவசி போன்றோருடன் சென்னையைச் சேர்ந்த சித்தார்த் நாகராஜ்,திறமையுள்ள ஆனால் பலரால் அறியப்படாத கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இவ்விழாவில் 32 கிராமிய விருது வாங்கிய சிக்காரியோவின் புகழ்பெற்ற வெற்றி பெற்ற இசை வடிவங்களை வாசிக்க இருக்கிறார்கள்.

    மூன்று மணி நேரம் நடக்கும் இந்த அதிரடி இசை விழாவில் பல்வேறு பிரமுகர்கள் எதிர்பாராத வருகை தரவிருக்கிறார்கள்'' என்றார்.

    லிடியன் நாதஸ்வரம் மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' படத்திற்குப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் .இது ஒரு 3டி படமாகும். பரோஸ் ஐந்து மொழிகளில் தயாராகிறது.

    அதுமட்டுமல்லாமல் லிடியன் நாதஸ்வரம் ஓர் உலக சாதனை முயற்சியில் இறங்கி இருக்கிறார். அது பற்றி அவர் பேசும்போது,

    " நானும் என் அக்கா அமிர்தவர்ஷினியும் சேர்ந்து 1330 திருக்குறளுக்கு இசையமைத்துப் பாடி உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

    ஏராளமான பிரமுகர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். மலையாள நடிகர் மோகன்லால் கூட ஒரு திருக்குறளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.இந்த முயற்சி விரைவில் நிறைவு பெற்று வெளிவர உள்ளது.

    ஓமன், மலேசியா, சிங்கப்பூரிலிருந்தெல்லாம் பார்வையாளர்கள் வருகிறார்கள்.அனைவரும் வந்து ஆதரவு கொடுங்கள். இந்த விழாவை முன்னிட்டு திரட்டப்படும் நிதி பல்வேறு சமூக சேவைகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது ''என்றார். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் Book my showவில் கிடைக்கும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
    • மகா அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அய்யம்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மேற்கு மாத்தூர் கிராமத்தில் மருந்தீஸ்வரர் என்கின்ற பெரிய நாயகி உடனாய ஒளதபுரீஸ்வரர் கோவில் மற்றும் 15 கிராம தேவதை கோவில்கள் உள்ளது.

    மருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்குஇக் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து சிற்பங்களுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து குடமுருட்டி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது. இதையடுத்து நான்கு கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

    பின்னர் மேளதாளங்கள், வாணவெடிகள் முழங்க கிராம பரிவார தெய்வங்களுக்கும் அதையடுத்து பெரிய நாயகி, மருந்தீஸ்வரர் விமானங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.

    தொடர்ந்து மகா அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. விழாவிற்கு தருமபுரம் ஆதினம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பராமாசாரிய சுவாமிகள், தஞ்சை அரண்மனை மூத்த இளவரசர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்ப டுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்ப ட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக கடந்த சில நாட்களாக பள்ளி வளாகம், வகுப்பறைகள், தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று கடை வீதிகளில் ஸ்கூல் பேக், நோட்டுப் புத்தகம் விற்பனை அமோகமாக இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    ஈரோடு எஸ்.கே. சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் சுமதி தலைமையில் ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆரத்தி எடுத்தும், கதர் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து இனிப்பும் வழங்கினர். இதேப்போல் பல்வேறு பகுதிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.

    பவானி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் விதமாக டிரம்ஸ் வாசிக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மலர்தூவி நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். திருமண வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பது போல் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர். அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளன.

    இதுபோல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி பெருந்துறை மொடக்குறிச்சி சத்யமங்கலம் உட்பட மாவட்டம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் வழங்கக்கூடிய இலவச பாடப்புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. இன்று பள்ளிகள் தொடங்கினாலும் ஒரு வாரத்திற்கு மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த படாது என்றும் அதற்கு பதிலாக அவர்களுக்கு புத்துணர்ச்சிக்கான வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

    ×