என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drunkenness"

    • ராஜவேல் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து.
    • ஆட்டோ டிரைவர் பாஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மயிலம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (வயது 57).இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரும் இவரது மனைவி மஞ்சுளா (50). ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்துபோ திண்டிவனம் போலீஸ் நிலையம் எதிரில் வந்து கொண்டிருக்கும்போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஆட்டோ ராஜவேல் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து.

    இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தலைமையாசிரியர் ராஜவேல், அவரது மனைவி மஞ்சுளா, ஆட்டோவில் பயணம் செய்த ராஜன் தெருவைசேர்ந்த யாகவல்லி, ஆட்டோ டிரைவர் வேங்கை பகுதியை சேர்ந்த பாஸ்ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்றனர். மேலும் ஆட்டோ டிரைவர் பாஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து விட்டார். இதுகுறித்து திண்டி வனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • போதையில் இருந்த ராமலிங்கம் நிலை தடுமாறி வீட்டு வாசலில் கீழே விழுந்தார்.
    • ராமலிங்கம் மனைவி முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் தெரி வித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கீழ கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். மேலும் ராமலிங்கத்திற்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடித்து விட்டு தன் வீட்டிற்கு வந்தார். அப்போது போதையில் இருந்த ராமலிங்கம் நிலை தடுமாறி வீட்டு வாசலில் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடி ஏற்பட்டது. இதைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் ராம லிங்கத்தை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமலிங்கம் மனைவி முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிங்கம்புணரியில் குடிபோதையில் சிக்கிய நபரிடம் ரூ.90 ஆயிரம் பணம்-கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • அது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள சமத்துவபுரம் அருகே கோட்டை வேங்கைபட்டி ரோட்டில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரித்த போது மதுரை மாவட்டம் கொடுக்கம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பாண்டி(வயது50) என்பதும், குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.அப்போது அவரிடம்

    ரூ.90 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 500 கிராம் கஞ்சா இருந்தது. அதுகுறித்து கேட்ட போது சரியாக தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அவர் வைத்திருந்த பணம் மற்றும் கஞ்சா பற்றி போலீசார் விசாரித்தனர். குடிபோதையில் இருந்ததால் அவரிடம் இருந்து எந்த தகவலையும் போலீசாரால் பெற முடியவில்லை. கஞ்சா வுடன் சிக்கி இருப்பதால் கஞ்சா வியாபாரியாக இருக்கலாம் என்றும், அவர் வைத்திருந்த பணம் கஞ்சா விற்ற பணமாக இருக்கலாம் எனவும் தெரிகிறது.

    அது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார்.
    • இதனை தொடர்ந்து தலைமறைவான ராஜியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி 12வது ஆண்டு விழா வரும் ஜனவரி 15-ந்தேதி தைப்பொங்கல் அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார். அந்த டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று இது குறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெரு ராஜி என்பவர் இந்த பேனரை குடிபோதையில் கிழித்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து தலைமறைவான ராஜியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • குழந்தைசாமி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • அப்போது தகராறு ஏற்பட்டு அருகில் இருந்த விறகை எடுத்து சக்திவேல்ராஜாவை தாக்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியில் வசிப்பவர் சக்திவேல்ராஜா, (வயது 54) சமையல் மாஸ்டர்.

    இவர் நேற்று இரவு தன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி (48). கட்டிட கூலி வேலை செய்பவர் சக்திவேல்ராஜா, குழந்தைசாமியிடம், தனக்கு வேலை எதாவது கிடைக்குமா? என்று கேட்டுள்ளார்.

    குழந்தைசாமி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.அப்போது தகராறு ஏற்பட்டு அருகில் இருந்த விறகை எடுத்து சக்திவேல்ராஜாவை தாக்கினார்.

    இதனால் சக்திவேல்ராஜா பலத்த காயமடைந்த நிலையில் குமாரபாளையம் அரச ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து சக்திவேல்ராஜா குமார–பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து புகாரின் பேரில் வழக்குப்–பதிவு செய்து குழந்தைசாமி போலீசார் கைது செய்தனர்.

    • அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
    • இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணா மலைநகர் போலீஸ் சரகம் வடக்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். (வயது 54). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்டார். ஆனால் இரவுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அண்ணாமலைநகர் டாஸ்மாக் கடை அருகே கிருஷ்ணராஜ் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல்அறிந்த அண்ணா மலைநகர் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்ேபாது கிருஷ்ணராஜ் பிணமாக கிடந்தார். அவர் குடிபோதையில் சுருண்டு விழுந்து இறந்து இருப்பது தெரிய வந்தது. உடனே உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கான அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    • குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • கரிமேடு போலீசார் பாட்டி- பேரன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

    மதுரை

    மதுரை கரிமேடு, கருப்பையா தோப்பை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (60). இவர் நேற்று மதியம் பேரன் ஆகாசுடன்(13) மேல அண்ணா தோப்பு, டீச்சர்ஸ் காலனி அருகே நடந்து சென்றார். அங்கு வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்புலட்சுமி, ஆகாஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    வேகமாக சென்ற கார் மேலும் 2 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து கரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது படுகாயம் அடைந்தவர்களில் மதுரை கீழ அண்ணா தோப்பு கருப்பையா மகன் பிரபாகரன் (13) என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

    படுகாயம் அடைந்த இன்னொரு சிறுவன் முத்து (14) என்பது தெரியவந்தது. இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கரிமேடு போலீசார் பாட்டி- பேரன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

    அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் (43) குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. அவரை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • ஆடுகளை விற்று மது குடித்ததால் குடிபோதையில் அடித்து துன்புறுத்தியதால் இரும்பு கம்பியால் தாக்கினோம் என்று பெற்றோர் உள்பட 3 பேர் வாக்குமூலம் அளித்தனர்.
    • கிராம நிர்வாக அலுவலர் சோணை கொடுத்த தகவலின்பேரில் வில்லூர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தாலுகா உவரி கிராமத்தை சேர்ந்தவர் சப்பாணி என்ற தவிடன் (வயது 55). இவருக்கு காளியம்மாள் (50) என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூத்த மகன் சங்கன் (30) என்பவருக்கு திருமணம் நடந்தது. 2-வது மகன் சரவணன் (27). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். பெற்றோருடன் வசித்து வந்த சரவணன் மது பழக்கத்துக்கு அடிமையா னதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சரவணனை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் சங்கன் ஆகியோர் இரும்பு கம்பியால் தாக்கியதில் இறந்தார். இதையடுத்து தவிடன், காளியம்மாள், சங்கன் ஆகிய 3 பேரும் மறவப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரண் அடைந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சோணை கொடுத்த தகவலின்பேரில் வில்லூர் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மூத்த மகனுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தனிக்குடித் தனம் சென்று விட்டார். நான், எனது மனைவி மற்றும் 2-வது மகன் சரவணனுடன் வசித்து வந்தோம். போதைக்கு அடிமையான சரவணன் அடிக்கடி வீட்டில் வந்து தகராறு செய்து வந்தார். ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லாமல் மது குடித்தார். இதனை கண்டித்ததால் சரவணன் கம்பால் எங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தான். மேலும் பணம் கேட்டும் தொந்தரவு செய்தான். பணம் தராத நேரத்தில் செம்மறி ஆடுகளை விற்று மது குடித்து வந்தான். இதனால் குடும்பத்தில் நாள்தோறும் பிரச்சினை ஏற்பட்டது.

    கடந்த 5-ந்தேதி இரவு வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சரவணன், தரக்குறைவாக பேசியதோடு எங்களை சரமாரியாக தாக்கினான். அப்போது அங்கு வந்த சங்கனையும் தரக்குறைவான வார்த்தை களால் பேசினான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் இரும்பு கம்பியால் சரவணனை தாக்கினோம். இதில் அவன் மயங்கி விழுந்தான். குடிபோதையில் சரவணன் தூங்கி இருக்கலாம் என்று சென்று விட்டோம். காலையில் பார்த்தபோது சரவணன் இறந்தது தெரிய வந்தது.

    இவ்வாறு அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.

    • கண்டமங்கலத்தில் குடிபோதையில் ரகளை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இது குறித்து கண்டமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (26). இவர் உள்பட 6 பேர் கண்டமங்கலத்தில் குடி போதையில் ரகளையில் ஈடுபட்டனர். கையில் உருட்டுக் கட்டையை வைத்து கொண்டு அந்த வழியாக சென்றவர்களை தாக்கினார்கள். மேலும் கடைகளை அடைக்க சொல்லியும் ரகளை செய்தனர். ரகளையில் ஈடுபட்ட கும்பல் தாக்கியதில் சங்கர் மற்றும் ஒரு வாலிபர் காயம் அடைந்தனர். இது குறித்து கண்டமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். ரகளையில் ஈடுபட்ட மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • நிரவி கிராமத்தைச்சேர்ந்த ஸ்ரீமதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீமதி 5 மாத கர்ப்பினியாக உள்ளார்.
    • நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சக்திவேல் புடவையில் வீட்டின் வளாகத்தில் உள்ள மூங்கில் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு காணப்பட்டார்

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே கோட்டுச்சேரி முக்கூட்டு ஆலமரம் பகுதியைச்சேர்ந்தவர் சக்திவேல் (வயது31). சக்திவேல் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதனால், தாய் காளியம்மாளுடன் வசித்துவந்தார். கொத்தனார் வேலை செய்துவரும் இவர் கடந்த 6 மாதத்திற்கு முன், நிரவி கிராமத்தைச்சேர்ந்த ஸ்ரீமதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீமதி 5 மாத கர்ப்பினியாக உள்ளார்.  சக்திவேலுக்கு குடிபழக்கம் உண்டு. மது அருந்திவிட்டு மனைவி மற்றும் தாயுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இருவரும் பலமுறை எடுத்துகூறியும், சக்திவேல் தொடர்ந்து குடித்துவிட்டு சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீமதி, கணவர் மற்றும் மாமியாரிடம் கூறாமல், நிரவியில் உள்ள அவரது பெரியம்மா வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சக்திவேல் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், தாய் காளியம்மாள் அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சக்திவேல் புடவையில் வீட்டின் வளாகத்தில் உள்ள மூங்கில் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு காணப்பட்டார். இது குறித்து, காளியம்மாள் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இதனை பார்த்த பாலமுருகன் உறவினர் கார்த்திகேயன் தடுக்க சென்ற போது அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • ராஜேஷ், ரஞ்சித், விமல், புதுவை சேர்ந்த முரளிதரன், விஜய் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சந்திக்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அந்த பகுதியில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த கும்பல் திடீரென்று பாலமுருகனை வழிமறித்து குடிபோதையில் சரமாரியாக தாக்கினார்கள்.

    அப்போது இதனை பார்த்த பாலமுருகன் உறவினர் கார்த்திகேயன் தடுக்க சென்ற போது அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் பாலமுருகன், தாய் அஞ்சலை கொடுத்த புகாரின் பேரில் சந்திக்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ், ரஞ்சித், விமல், புதுவை சேர்ந்த முரளிதரன், விஜய் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது குடித்து தடுமாறியபடி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.
    • வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்த ஜெயக்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி க்குட்பட்ட கூத்தன்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 36). கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு திட்டக்குடி டாஸ்மாக்கில் அளவுக்கு அதிகமாக மது குடித்து தடுமாறியபடி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். திட்டக்குடி - ராமநத்தம் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர். அந்த வழியாக வந்த ஜெயக்குமாரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் குடித்து விட்டு வந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனைதொடர்ந்து அவரால் மோட்டார் சைக்கிளை இயக்க முடியாது என்பதால், ஜெயக்குமாரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். நாளை காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல கூறி அனுப்பி வைத்தனர். 

    அப்போது போதையில் ஜெயக்குமார், திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மரவாடியில் இருந்த மரங்களை எடுத்து சாலையில் குறுக்கே வைத்தார். மரவாடியில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து நடுரோட்டில் போட்டு அமர்ந்தார். அவ்வழியே வந்த வாகனங்கள், இந்த சாலையில் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சாலையில் இருந்த மரங்களை அப்புறப்படுத்தினர். மேலும் இதுபற்றி திட்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் கொடுத்து புகாரின் பேரில் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தலைக்கேறிய போதையில் சாலையில் மரக்கட்டகளை போட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்த ஜெயக்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.

    ×