என் மலர்
நீங்கள் தேடியது "Eggs"
- புரதச்சத்து நிறைந்தது முட்டைகள் உயர்தர புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது.
- இரண்டு ஆக்ஸிஜனேற்றிகள் கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் அவசியம்.
முட்டை என்பது பெரும்பாலான சமையலறையில் பொதுவாகக் காணப்படும் பொருட்களில் ஒன்றாகும். பல வழிகளில் சமைக்கக்கூடிய ஆரோக்கியமான மற்றும் சுவையான வெகுசில உணவுகளில் முட்டையும் ஒன்றாகும். பல வடிவங்களில் சமைக்கக்கூடிய, முட்டைகள் சீரான உணவின் ஒரு பகுதியாக தனித்து நிற்கின்றன.
முட்டைகள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அவை நமது கோடைகால உணவில் அவசியம் இருக்க வேண்டும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவது முதல் எடையை பராமரிப்பது வரை, வெயில் காலத்தில் நாம் ஆரோக்கியமாக வாழ உதவும் பலவிதமான நன்மைகளை முட்டைகள் வழங்குகின்றன. உங்கள் உணவில் கோடைகாலத்தில் முட்டையை சேர்க்க வேண்டியதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
புரதச்சத்து நிறைந்தது முட்டைகள் உயர்தர புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது. உடலின் தசை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளன. தசை வலிமையை உருவாக்கவும், பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கவும் மற்றும் மனநிறைவை மேம்படுத்தவும் புரதம் தேவைப்படுகிறது. முட்டைகள் அதற்கு சிறந்த ஆதாரமாக இருக்கிறது. கண் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் கோடைகால நடவடிக்கைகள் பெரும்பாலும் சூரிய ஒளியின் வெளிப்பாடுகளை உள்ளடக்கியது. இது கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மூலமாகும். இந்த இரண்டு ஆக்ஸிஜனேற்றிகள் கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் அவசியம்.

இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் முட்டை இதய ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். அவற்றில் நிறைவுறா கொழுப்புகள் உள்ளன, குறிப்பாக அதிலுள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. ஆனால் முட்டையை குறிப்பிட்ட அளவிற்கு மேல் முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது முட்டைகள் வைட்டமின் டி-இன் நல்ல மூலமாகும், இது கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆரோக்கியமான மற்றும் வலுவான எலும்புகளை பராமரிக்க போதுமான அளவு வைட்டமின் டி அவசியம். இது எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் தடுக்கிறது. எடையை நிர்வகிக்க உதவுகிறது கலோரிகளில் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், முட்டையில் அதிக புரதம் உள்ளது, இது உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கவும் கூடுதல் பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது, குறிப்பாக கோடை மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் போது எடையை நிர்வகிக்க முட்டை மிகவும் அவசியம்.

மூளை செயல்பாடு முட்டைகளில் ஏராளமாக காணப்படும் கோலின், மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். குறிப்பாக கருவின் வளர்ச்சி மற்றும் குழந்தை பருவத்தில் இது நரம்பியக்கடத்தி தொகுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் மூளையில் உள்ள செல் சவ்வுகளின் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை பராமரிக்க உதவுகிறது. சரும ஆரோக்கியம் வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ, செலினியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட முட்டைகளில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள், செல் மீளுருவாக்கம், ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாத்தல் மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கின்றன. கோடைகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளைத் சரிசெய்ய முட்டை அவசியமானது.
- தொற்று பாதித்த பண்ணையில் மொத்தம் 9 ஆயிரம் கோழிகள் இருக்கின்றன.
- பறவை காய்ச்சல் பரவலை தடுக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வாத்து பண்ணைகளில் கடந்த மாதம் ஏராளமான வாத்துகள் தொடர்ச்சியாக இறந்தன. இதையடுத்து இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்ததுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
அதில் இறந்த வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொற்று பாதித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. தொற்று பரவல் காணப்பட்ட பண்ணைகளை சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வளர்க்கப்பட்ட வாத்து, கோழி உள்ளிட்ட உள்நாட்டு பறவைகள் கொல்லப்பட்டன.
ஆலப்புழா பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. அந்த பறவைகள் தனியாக ஒரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு எரித்து அழிக்கப்பட்டன. பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.
மேலும் மற்ற பகுதிகளுக்கு தொற்று பரவாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினரும் ஆலப்புழாவுக்கு வந்தனர். அவர்கள் மாநில சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளபபடும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் கோட்டயம் மாவட்டத்திலும் பறவை காய்ச்சல் பரவியது. மணற்காடு பகுதியில் செயல்படும் கால்நடை பராமரிப்பு துறையின் வட்டார கோழிப் பண்ணையில் வளர்க்கப்பட்ட ஏராளமான கோழிகள் அடுத்தடுத்து இறந்தன. இறந்த கோழிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் போபால் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.
அதில் அந்த கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று பாதித்த பண்ணையில் மொத்தம் 9 ஆயிரம் கோழிகள் இருக்கின்றன. அந்த பறவைகளுக்கும் தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பறவை காய்ச்சல் பரவலை தடுக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மணற்காடு ஊராட்சிக்குட்பட்ட 12, 13, 14 ஆகிய வார்டுகளிலும், புதுப்பள்ளியில் 2, 3 வார்டுகளிலும் அனைத்து வகையான கோழி இறைச்சி மற்றும் அவை சார்ந்த முட்டை உள்ளிட்டவைகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த ஊராட்சிகளில் உள்ள மற்ற வார்டுகளிலும் இறைச்சி விற்க வருகிற 29-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பறவை காய்ச்சல் பாதிப்பில் தான் அவை இறந்துள்ளன என உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தீவிரமடைந்து உள்ளது. ஆலப்புழா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இது கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என கருதப்பட்டதால் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த மாவட்டத்தில் ஏராளமான கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில் கோட்டயம் மாவட்டத்துக்கும் தற்போது பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 29-ந் தேதி வரை இந்தப் பகுதியில் கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டயம் மற்றும் அதனை சுற்றி உள்ள 10 கி.மீட்டர் தொலைவு பகுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கோட்டயம் அருகே உள்ள மணற்காட்டில் அரசு கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான கோழிகள் திடீரென இறந்தன. அவற்றின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், பறவை காய்ச்சல் பாதிப்பில் தான் அவை இறந்துள்ளன என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை கொல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- பாதாம் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, நினைவாற்றலை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
- பால் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.
பொதுவாக குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதில்லை, அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் ஊட்டச்சத்து குறைவாகவே காணப்படுகிறது. எனவே குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்து, வயதிற்கேற்ற உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்கவேண்டும்.
எல்லா குழந்தைகளும் விளையாட்டுத்தனமாகதான் இருக்கும், எனவே நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை, அவர்களுடன் விளையாடிக்கொண்டே ஊட்ட முயற்சிப்பது மிக சிறந்த வழியாகும். குறைந்தது 1 மணி நேரமாவது உணவு தர செலவிடவேண்டும்.
எதை விரும்புகிறார்கள் என்பதை நன்கு அறிந்து, அவர்களுடன் குழந்தைகளை சாப்பிடவைப்பது என்பது சற்று கடினமான விஷயம் என்றாலும், விடாமுயற்சியால் அவற்றை இலகுவாக்க முயற்சிக்கவேண்டும்.

தற்போது உணவிலும் ரசாயன கலவை இருப்பதால், எதிர்பார்க்கும் அளவிற்கு ஊட்டச்சத்துள்ள பொருட்கள் நமக்கு கிடைப்பதில்லை. இருப்பினும் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க எவ்வகையான உணவு கொடுக்கலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
வால்நட் பொதுவாக குழந்தைகளுக்கு மூளை செயல்பாடு எப்போதும் சுறுசுறுப்பாக தான் இருக்கும்.சில முக்கியமான உணவுகள் மூளையின் போதுமான வளர்ச்சிக்கு மேலும் உதவுகிறது.வளரும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த வகையான உணவுகள் சேர்த்துக்கொள்ளுங்கள். யதேர்ச்சையாக மூளையைப் போன்றே தோற்றமளிக்கும் வால்நட் மூளை வளர்ச்சிக்கும் உகந்ததாக உள்ளது. நுங்கு சாப்பிடுவது மார்பகத்திற்கு நல்லது என்ற சித்த மருத்துவர் கருத்து மாதிரி இல்லை இது. பல முன்னணி ஆங்கில இதழ்களில் வெளியான தகவல்தான் வால்நட்டின் நன்மைகள். வால்நட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு மூளை அல்சைமர் நோய்களைத் வராமல் தடுக்கிறது. தினமும் 3-5 வால்நட் கொடுத்தாலே போதுமானது.
பாதாம் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, நினைவாற்றலை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாமை காலை அல்லது மாலையில் கொடுக்கலாம், இரவில் கொடுக்கக்கூடாது இரவில் கொடுப்பது செரிமான கோளாறு ஏற்படலாம்.தினமும் 5 முதல் 10 பாதாம் வரை கொடுக்கவேண்டும்,அதிக அளவு வயிற்றுப்போக்கு உண்டாக்கும்.
முட்டை இதில் ஒமேகா 3 கொலஸ்ட்ரால் அமிலங்கள் மற்றும் கொலின் ஊட்டச்சத்து உள்ளது,தினமும் ஒரு 1 வேகவைத்த முட்டையை கொடுங்கள், 1 அல்லது 2 முட்டை கொடுக்கலாம், குழந்தைகள் ஆக்டிவ்வாக, சுறுசுறுப்பாக இருக்க உதவும்,மேலும் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும்

மீன் வைட்டமின் டி மற்றும் பி12 கால்சியம், பாஸ்பர் நிறைந்துள்ளன, எனவே இது ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு நல்லது மற்றும் நினைவக சக்தியை அதிகரிக்கிறது.எந்த வகையான மீனாக இருந்தாலும் கொடுக்கலாம்,ஆனால் முள் அதிக அளவு உள்ள மீனை கட்லெட்,புட்டு போன்ற ஸ்னாக்ஸ் முறையில் கொடுத்தால்,குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் வாரம் இருமுறை மீன் கொடுக்கலாம், இது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தி மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
பால் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது,அதில் கால்சியம், புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன, இவை அனைத்தும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் நல்ல ஞாபக சக்தியை அளிக்கிறது,பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் வரும்.
- தனியார் உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.
- சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு சத்துணவு முட்டை கள்ள சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது.
துறையூரில் உள்ள தனியார் உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
குழந்தைகளுக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் முட்டை கள்ளச்சந்தையில் விற்பனையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு முட்டையை விற்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- துறையூரில் உள்ள உணவகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு சத்துணவு முட்டை கள்ள சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது. துறையூரில் உள்ள தனியார் உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கூறுகையில்,
அரசு முட்டையை விற்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துறையூரில் உள்ள உணவகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரசு முட்டையை விற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
- ஓட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ஓட்டல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு சத்துணவு முட்டை கள்ள சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது. துறையூரில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசு முட்டையை விற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் திருச்சி துறையூரில் அரசு முட்டைகளை பயன்படுத்தி வந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் உத்தரவையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அங்கன்வாடியில் இருந்து அரசு முட்டைகள் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கன்வாடியில் இருந்து அரசு முட்டைகளை விற்றவர் யார், விற்பனை செய்தவர் இந்த ஓட்டலுக்கு மட்டும் தான் விற்றார்களா? இல்லை வேறு ஓட்டலுக்கும் விற்பனை செய்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஓட்டல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஓட்டல் உரிமையாளரிடம் அரசு முட்டைகளை அவருக்கு விற்றது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தனியார் ஓட்டலில் தமிழக அரசின் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
- ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.
துறையூர்:
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பகுதியிலும் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டு, அப்பகுதி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளித்தல், முன்பருவ கல்வி, சுகாதாரம், தன் சுத்தம், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மதிய உணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் மதிய உணவு உடன் இலவசமாக முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசின் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இந்த முட்டைகளை அங்கன்வாடி மைய பணியாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து முட்டைகளை தனியார் ஓட்டலுக்கு விற்பனை செய்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் ஆகியோர் மீது காவல்துறை மூலம் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விவரம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை அந்த ஓட்டலில் சோதனை நடத்தினர். பின்னர் தாசில்தார் மோகன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். மேலும் துறையூர் தனியார் ஓட்டலில் அரசின் இலவச முட்டைகள் விற்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் துறையூர் அருகே உள்ள மதுராபுரி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருந்து இந்த முட்டைகள் ஓட்டலுக்கு விற்கப்பட்டது தெரியவந்தது. அந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி(58) என்பவர் ஓட்டல் உரிமையாளர் ரத்தினம்(46) என்பவரிடம் முட்டைகளை விற்றுள்ளார்.
இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜாஸ்தீன் ஜோ துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி, ஓட்டல் உரிமையாளர் ரத்தினம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் யார்? யார் உள்ளனர்? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், தமிழக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான 'ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில்' இதுபோன்ற முறைகேடுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் தமிழக அரசு அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு ஆதார் அடிப்படையிலான வருகையினை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- சில முட்டைகளை ஓட்டலுக்கு கொடுத்ததும் தெரியவந்தது.
- 4 பேரை பிடித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருச்சி:
கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு ஓட்டலில் அரசின் இலவச முட்டைகள் விற்கப்பட்டது. இத தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர், சத்துணவு அமைப்பாளர் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு ஓட்டலில் இலவச முட்டை விற்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சத்துணவு முட்டை பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த 5 முட்டைகளில் தமிழக அரசால் மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் இலவச முட்டைக்கான முத்திரை இருந்தது தெரியவந்தது. இதுபற்றி ஓட்டல் நடத்தி வந்த பெண் உரிமையாளர் ஜீனத்குபுராவிடம் (வயது 61) விசாரித்தபோது, அவர் தனது அக்காள் சல்மாதான் (66), பக்கத்து தெருவில் வசிக்கும் சத்துணவு அமைப்பாளரான சத்யா (43) என்ற பெண்ணிடம் இருந்து ஒரு அட்டை (30 முட்டை) ரூ.110 வீதம் 2 அட்டை முட்டைகளை வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார்.
உடனே, அதிகாரிகள் குழுவினர் சத்யா வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, முட்டை வியாபாரியான அவருடைய கணவர் ரகுராமன் சப்-கான்டிராக்ட் எடுத்து சத்துணவுக்கு முட்டைகளை வினியோகம் செய்வதும், அதில் சில முட்டைகளை ஓட்டலுக்கு கொடுத்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சத்யா, அவருடைய கணவர் ரகுராமன், ஓட்டல் உரிமையாளர் ஜீனத்குபுரா, அவருடைய அக்காள் சல்மா ஆகிய 4 பேரையும் பிடித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபிஉமா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். கைதான 4 பேரும் நீததி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதை தொடர்ந்து சத்துணவு அமைப்பாளர் சத்யா, ஓட்டல் உரிமையாளர் ஜீனத்குபுரா, அவரது அக்காள் சல்மாதான் ஆகியோர் திருச்சி மகளிர் சிறையிலும், சத்யாவின் கணவர் ரகுராமன் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
- பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் துணை ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது.
- முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே துணை ஊட்டச்சத்துக்காக வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் துணை ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது.
கடலை மிட்டாயில் சர்க்கரை மற்றும் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே துணை ஊட்டச்சத்துக்காக வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒழுங்காக சேமிக்கப்படாத கடலை மிட்டாய், காலாவதி தேதியை தாண்டிய கடலை மிட்டாய் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக தார்வாட் கூடுதல் ஆணையர் கல்வித்துறையின் கவனத்திற்குக் கொண்டு வந்த மற்றொரு கடிதத்தையும் இந்த உத்தரவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மதிய உணவுடன் கடலைமிட்டாய் விநியோகிப்பதை நிறுத்துமாறும் அவர் துறைக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதை பரிசீலித்த கல்வித்துறை துணை ஊட்டச்சத்துக்காக முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கடலை மிட்டாய் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக தனி வழிகாட்டுதல்களை வெளியிட துறை ஆணையர்களுக்கு உத்தரவிட்டது.
- தினசரி சுமார் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- ஒரு மாதத்தில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்:
அகில இந்திய அளவில் முட்டைக்கோழி வளர்ப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1,000 கோழிப்பண்ணைகளில், 5 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த முட்டைகள் தமிழக சத்துணவு திட்டத்துக்கும், தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குறைந்த அளவிலான முட்டை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
என் முட்டை, என் விலை என்ற அடிப்படையில், முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) வாரத்தில் 2 நாட்கள் நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நிர்ணயிக்கப்படும் விலையை அனுசரித்தே, தமிழகத்திலும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக என்இசிசி நிர்ணயம் செய்து அறிவித்தது. தொடர்ந்து 9-ம் தேதி ரூ.5.20, 11-ம் தேதி ரூ.4.90, 14-ம் தேதி ரூ. 4.60, 16-ம் தேதி ரூ. 4.40, 25-ம் தேதி ரூ. 4.20, நேற்று (1-ம் தேதி) ரூ.4 என முட்டை விலையில் தொடர் சரிவு ஏற்பட்டு ஒரே மாதத்தில் ஒரு முட்டைக்கு ரூ.1.50 குறைந்துள்ளது.
மேலும் நெஸ்பேக் என்ற முட்டை மற்றும் பண்ணையாளர்கள் கூட்டமைப்பு, முட்டை கொள்முதல் செய்யும் மொத்த வியாரிகளுக்கு ஒரு முட்டைக்கு 40 பைசா குறைத்து வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.60 மட்டுமே கிடைக்கும். சில நேரங்களில் மேலும் விலை குறைத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் என்இசிசி அறிவிக்கும் விலைக்கும், பண்ணையாளர்களுக்கு கிடைக்கும் விலைக்கும் பெரிய இடைவெளி உருவாகிறது.
ஆனால் வியாபாரிகள் விலையைக் குறைத்து வாங்கி சில்லரையில் விற்பனை செய்யும் போது, என்இசிசி விலைக்கும் கூடுதலாக லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் முட்டை வாங்கும் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள், முட்டை கொள்முதல் விலை தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கோழிப்பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்–பட்டுள்ளனர். கோழிப்பண்ணைத் தொழிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிப் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது.
- கொள்முதல் விலை 20 காசுகள் குறைத்து ரூ. 4-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணை யாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
மற்ற மண்டலங்களில் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாலும், ஆடிப் பண்டிகை காலமாக இருப்பதால் மக்களிடையே முட்டை நுகா்வு வெகுவாக குறைந்துள்ளதாலும், தேக்கத்தை கட்டுப்படுத்தவும் முட்டை விலையைக் குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைத்து ரூ. 4-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
கறிக்கோழி
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 81-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 90-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.