என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "elderly man dies"
- ஆவேசத்துடன் தாக்கி தூக்கி வீசியது
- வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதிலும் காட்டு யானைகள், சிறுத்தை, கரடி, காட்டெருமை ஆகியை அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது,
வால்பாறை அருகே ரயான் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 65). இவர் சம்பவத்தன்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.
அப்போது தேயிலை தோட்டத்துக்குள் பதுங்கி இருந்த காட்டெருமை ஆவேசத்துடன் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த செல்லப்பன் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார்.இதுகுறித்து தகவலறிந்ததும் வால்பாறை போலீசார் மற்றும் மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் செல்லப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டுமென வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- அப்புசாமி குளியலறைக்கு சென்ற போது வழுக்கி தவறி கீழே விழுந்தார்.
- இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கஸ்பாபேட்டை, செல்லப்பம்பாளையம், மேற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புசாமி (57). இவரது மகன் சிவன். அப்புசாமி மகனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 1½ வருடத்திற்கு முன்பு பாறை உடைக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்புசாமி விபத்தில் சிக்கி அவரது பார்வை பறிபோனது.
இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்புசாமி குளியலறைக்கு சென்ற போது வழுக்கி தவறி கீழே விழுந்தார்.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அப்புசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி (62). கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த பைக் காசி மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த காசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் ஓட்டி வந்த நூங்கம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சத்தியராஜிடம் (23) விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர் விபத்து ஏற்படுத்திய சத்தியராஜிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து சத்தியராஜை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.
ஈரோடு, வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது60). ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
நல்லமுத்து நேற்று இரவு தனது மொபட்டியில் பெருந்துறை ரோடு, புதுகாலனி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தார். பின்னர் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத வகையில் நல்லசாமி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நல்லமுத்துவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நல்லமுத்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
காலை, மாலை நேரங்களில் ஏராளமான பயணிகள் ரெயில் பெட்டியின் வாசலில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். இதனால் உயிர் பலி அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் தொங்கியபடி சென்ற முதியவர் கீழே விழுந்து பலியானார்.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயில் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது கூலி தொழிலாளி விநாயகம் (65) என்பவர் ரெயிலில் ஏற முயன்றார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் ரெயில் பெட்டி வாசலில் தொங்கியபடி நின்றார்.
ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் விநாயகரம் நிலை தடுமாறி பிளாட்பாரத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விநாயகம் பரிதாபமாக இறந்தார்.
கடந்த ஆண்டு பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் தண்டவாள மின்கம்பத்தில் மோதி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொள்ளம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர் குருசாமி(வயது60). கூலி தொழிலாளி. நேற்று இவர் மோட்டார்சைக்கிளில் சிவகிரி பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே திண்டுக்கல் மாவட்டம் கீழக்கோட்டையை சேர்ந்த டாக்டர் பாலாஜி(24) ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் குருசாமி பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியிலேயே குருசாமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் (வயது 64). இவர் அதே பகுதியில் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அல்போன்சை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜகோபாலன் (வயது 70). விவசாயி.
இவர் கடந்த 25-ந்தேதி வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக கபிஸ்தலம் கடை தெருவிற்கு சென்றார்.
அப்போது இவரது பின்னால் வந்த கார் ஒன்று ராஜகோபாலன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜகோபாலனை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுல்தான்மைதீன் (வயது 55). இவர் மதுரையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார்.
இன்று காலை 10 மணியளவில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
பாண்டாங்குடி விலக்கு அருகே வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
காரில் இருந்த சுல்தான் மைதீன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது குடும்பத்தினர் மீரா, அசார், வஜிதா, பாத்திமா, சிறுமிகள் அமீரா, சபீனா உள்பட 7 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
உடனே அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கிய 7 பேரை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சபீனாவை தவிர மற்ற 6 பேரின் உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, இன்ஸ்பெக்டர் பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் சேது பாவாசத்திரம் அருகே உள்ள சோலைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாகூரான் (வயது 62).
இவர் நேற்று முன்தினம் சோலைக்காட்டில் இருந்து சோமநாதன்பட்டினம் பகுதிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு கார் நாகூரான் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்டு காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மணல்மேடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி நாகூரான் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றி சேது பாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு போலீஸ் சரகம் குண்டாம்பட்டியை சேர்ந்தவர் ராஜசின்னப்பன் (வயது66) விவசாய கூலித்தொழிலாளி. இவர் இன்று காலையில் எரியோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வடமதுரை கலைமகள் பள்ளி வாகனம் வந்து கொண்டிருந்தது. வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கியதில் நிலைதடுமாறி ராஜசின்னப்பன் மீது மோதியது. இதில் அவர் வலது கால் துண்டிக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ் இன்று காலை 6 மணி அளவில் திண்டிவனம் அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது 60 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவர் சைக்கிளில் கீரைக்கட்டுகளை ஏற்றிக்கொண்டு அங்குள்ள வளைவில் திரும்பினார். அப்போது அவர் மீது அரசு பஸ் மோதியது.
இதில் முதியவர் உடல்நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊர்? என விசாரணை நடத்திவருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்