search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly man murder"

    • கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மகேந்திரனை தேடி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அடுத்துள்ள கே.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர் (வயது60). இவரும், அதே பகுதியை சேர்ந்த பெரியதம்பி மகன் மகேந்திரன் (32) என்பவரும் நேற்று இரவு அப்பகுதியில் மது அருந்தியுள்ளனர்.

    அப்போது போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பன்னீர் அருகில் உள்ள மளிகை கடையில் வைத்து இருந்த மண்எண்ணையை எடுத்து மகேந்திரனின் பைக்கில் ஊற்றி தீ வைத்தார்.

    இதனால் 2 பேரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் கோபமடைந்த மகேந்திரன் கல்லை எடுத்து பன்னீர் தலையில் போட்டு கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் பன்னீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சாமல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மகேந்திரனை தேடி வருகின்றனர்.

    • மது வாங்கி வைத்திருந்த உதய்யிடம் கோபால் தனக்கும் மது தருமாறு கேட்டுள்ளார்.
    • உதய் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமார்நகர் 60 அடி ரோடு பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனால் அவரை மர்மநபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்யப்பட்டவர் அப்பகுதியை சேர்ந்த கோபால் (வயது 30) என்பவருடன் சேர்ந்து குப்பைகளை அள்ளி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோபாலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவரின் பெயர் உதய் என போலீசாரிடம் கோபால் தெரிவித்தார்.

    உதய்யும், கோபாலும் குமார்நகர் பகுதியில் குப்பைகளை அள்ளி விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது குடித்து வந்துள்ளனர். நேற்று கோபாலுக்கு மது குடிக்க பணம் இல்லை.

    அப்போது மது வாங்கி வைத்திருந்த உதய்யிடம் கோபால் தனக்கும் மது தருமாறு கேட்டுள்ளார். ஆனால் உதய் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபால் அங்கு கல்லை எடுத்து உதய்யின் தலையில் போட்டுள்ளார். இதில் உதய் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கோபால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். ஆனால் போலீசார் விசாரணையில் சிக்கி கொண்டார். தொடர்ந்து கோபாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருப்பையா அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
    • கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் யாரேனும் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவலை அடுத்த பச்சேரி கீழமடத்து தெருவை சேர்ந்தவர் கருப்பையா(வயது 62).

    இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கருப்பையாவின் மனைவி தனது மகன் வீட்டில் தங்கி இருப்பதால் கருப்பையா மட்டும் பச்சேரியில் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம்போல் வீட்டுக்குள் தூங்க சென்ற கருப்பையா, இன்று காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. அவரது வீட்டின் கதவு பூட்டிக்கிடந்ததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது கருப்பையா படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனே அவர்கள் புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட கருப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருப்பையா அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதனால் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் யாரேனும் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமீபகாலமாக மாரி-முத்துமாலைக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
    • இதுதொடர்பாக இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவமாயன் காலனியை சேர்ந்தவர் முனியசாமி (வயது 70), மீனவர்.

    இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். கடைசி மகன் மணிமன்னன். இவருக்கு திருமணமாகி முத்துமாலை (20) என்ற மகள் உள்ளார்.

    இவருக்கும் திரேஸ்புரத்தை சேர்ந்த மாரி (24) என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    சமீபகாலமாக மாரி-முத்துமாலைக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை முனியசாமி தனது பேத்தி முத்துமாலையை பார்ப்பதற்காக திரேஸ்புரம் சென்றார்.

    அப்போது அங்கிருந்த மாரியின் சகோதரர்கள் சின்னத்தம்பி, சேர்மன் மற்றும் அவரது உறவினரான லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த ஓட்டை என்ற கருப்பசாமி ஆகிய 3 பேரும் எப்படி இங்கே வரலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் வாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் முனியசாமி கீழே சரிந்து விழுந்தார்.

    இதற்கிடையே முனியசாமியை தேடி அவரது குடும்பத்தினர் திரேஸ்புரம் வந்தனர்.

    அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வடபாகம் இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று காலை சின்னத்தம்பி, சேர்மன், ஓட்டை என்ற கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    கருங்கல் அருகே முதியவர் கல்லார் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே பூடேற்றி கொசவன்விளையை சேர்ந்தவர் சபரிமுத்து (வயது 65). கூலி தொழிலாளி.

    பூடேற்றி காஞ்சிறாங்கோட்டு விளையை சேர்ந்தவர் தொபியாஸ் (47). கூலி தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவு சபரிமுத்து பக்கத்தில் உள்ள ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சபரிமுத்துவை வழிமறித்து தொபியாஸ் தகராறில் ஈடுபட்டார். அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த தொபியாஸ் அந்த பகுதியில் இருந்த கல்லால் சபரிமுத்துவை முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில் முகம் சிதைந்து பலத்த காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த சபரி முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொபியாசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தொபியாஸ் கொலை நடந்த போது குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பலியான சபரிமுத்துவின் உடல் பிரேதபரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
    ×