search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electrocuted"

    • குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
    • சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் அர்ச்சு ணன்.

    கள்ளகுறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் அர்ச்சு ணன் (வயது 75). அதே பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. குடிநீர் வீணாகி செல்வதால் மி்ன்மோட்டரை நிறுத்த அங்கிருந்து சுவிட்ச்சை அணைக்க அர்ச்சுணன் முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய மணி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • மாணவியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.25 ஆயிரம் வழங்கினார்.
    • ஜோஸ்லின் ஹெனியா செரங்காட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துபட்டியை சேர்ந்தவர் டேவிட்ராஜ்-ரூபிஜெனிபர். இந்த தம்பதியின் மகள் ஜோஸ்லின் ஹெனியா (வயது 14). டேவிட்ராஜ் தனது குடும்பத்துடன் திருப்பூர் செரங்காட்டில் குடியிருந்து வருகிறார்.

    இவருடைய மகள் ஜோஸ்லின் ஹெனியா செரங்காட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி கழிவறைக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி காயம் அடைந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மாணவிக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

    மேலும் கழுத்து, கை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மேயர் தினேஷ்குமார் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அது மட்டுமின்றி அந்த மாணவியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.25 ஆயிரம் வழங்கினார்.

    • உறவினர் வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்தது.
    • எதிர்பாராத விதமாக சதீஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.

    மயிலாடுதுறை:

    கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீஷ் (வயது 28).

    எலக்ட்ரீசியன். இந்த நிலையில் சம்பவத்தன்று சதீஷ் தனது பெரியப்பா நாராயணன் என்பவரது வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்ததால், அவரது வீட்டிற்கு சென்று மின் வயரை சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சதீஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் அவர் வீட்டிற்குள்லேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சதீஷ் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சதீசுக்கு மனுஷா (23) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமிர்தலிங்கம் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார்.
    • ஓடிவந்த பெற்றோர் அறிவழகனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நல்லாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 40). இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் அமிர்தலிங்கம் வீடு கட்டும் போது கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவரது மனைவி அஞ்சலாட்சம் இவர்களுக்கு அன்பரசன் (9) அறிவழகன் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அமிர்தலிங்கம் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    அந்த வீட்டிற்கு தற்சமயம் மின்சார வயர் மூலம் மின் பல்ப் போட்டுள்ளார். இன்று காலை அந்த வீட்டிற்குள் அவரது பையன் அறிவழகன் சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அறிவழகன் மின்சார வயர் மீது மிதித்தான். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். அவனது சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அறிவழகனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அறிவழகனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறிவழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அமிர்தலிங்கம் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புது வீட்டில் மகன் மின்சாரம் தாக்கி பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • சித்தேரி பகுதியில் நேற்று பெய்த மழையினால் மின்கம்பி அருந்து கீழே கிடந்தது.
    • கீழே கிடந்த இந்த மின்கம்பி அந்த வழியாகச் சென்ற பெரியசாமி எதிர்பாராத விதமாக மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுபாக்கம் சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68) விவசாயி. இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதி வழியாக சென்றுள்ளார்.

    அப்போது சித்தேரி பகுதியில் நேற்று பெய்த மழையினால் மின்கம்பி அருந்து கீழே கிடந்தது. கீழே கிடந்த இந்த மின்கம்பி அந்த வழியாகச் சென்ற பெரியசாமி எதிர்பாராத விதமாக மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது பற்றி தகவல் அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெரியசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேப்பூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி வாலிபர், பள்ளி மாணவன் பலியானார்கள்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிதம்பரநாதன் (42) விவசாயி.

    சிதம்பரநாதன் பழைய ரேடியோ உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்கும் வேலை களை வீட்டிலேயே செய்து வந்தார்.

    இந்நிலையில் சிதம்பர நாதன் வீட்டில் இருந்த பழைய ரேடியோ வயர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது சிதம்பரநாதன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதில் சிதம்பரநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிதம்பரநாதன் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர் தவிட்டுப் பாளையம் பகுதியை சேர்ந்த–வர் பாபு. இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு சபரிஸ்ரீ (13) என்ற மகன் உள்ளார். இவர் தவிட்டுபாளையம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனந்தி கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மாணவன் சபரிஸ்ரீ விடுமுறை நாட்களில் அருகே உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சபரிஸ்ரீ வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது மின்சார பிளக்கில் வயரை இணைக்க முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அசாம் மாநிலத்தில் உள்ள குளம் ஒன்றில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற உள்ளூர்வாசிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Assam
    திஸ்பூர்:

    அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் 11 ஆயிரம் வோல்ட் மின் அழுத்தம் பாயும் உயர் மின் அழுத்தக்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. மின்சாரம் பாய்வதால் குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது.

    இதையடுத்து, மின்சாரம் தடை செய்யப்பட்டது என நம்பி அப்பகுதியைச் சேர்ந்த 78 பேர் குளத்தில் மீன் பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது திடீரென அந்த மின்கம்பி வழியே மின்சாரம் பாய்ந்து குளத்தில் இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.

    அவர்களை அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியாததால், 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்த அம்மாநில முதல் மந்திரி சர்பனந்தா சோனோவால், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். #Assam
    பாகிஸ்தானில் தேசிய கொடி ஏற்றியபோது மின்கம்பி, கொடிக்கம்பத்தில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து ஆசிரியரும், மாணவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். #PakistaniSchool #Electrocuted
    பெஷாவர்:

    பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணம், ககான் பள்ளத்தாக்கு பகுதியில் கிவாய் என்று ஒரு கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று காலை பிரார்த்தனைக் கூட்டத்தின்போது, ஆசிரியர் சபீர் அகமது என்பவரும், 3 மாணவர்களும் சேர்ந்து கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றினர்.

    அப்போது கொடிக்கம்பத்துக்கு மேலே இருந்த மின்கம்பி, கொடிக்கம்பத்தில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து ஆசிரியரும், மாணவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். அந்த மாணவர்கள் 4-வது கிரேடு, 5-வது கிரேடு மற்றும் 8-வது கிரேடு படித்து வந்தவர்கள் ஆவர்.மற்றொரு ஆசிரியரும், பள்ளி காவலாளி ஒருவரும் இந்த சம்பவத்தின்போது படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு காரணங்களையொட்டி பள்ளிக்கூடத்தை மூடினர்.

    பள்ளிக்கூடத்தில் தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஆசிரியரும், 3 மாணவர்களும் உயிரிழந்தது, அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. #PakistaniSchool #Electrocuted
    ஸ்ரீவைகுண்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்த மின்வாரிய ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பேச்சிமுத்து (வயது 38). மின்வாரிய ஊழியரான இவர் நேற்று முன்தினம் ஸ்ரீவைகுண்டம் தெற்கு தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் பேச்சிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை ஸ்ரீவைகுண்டம்–நெல்லை மெயின் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவைகுண்டம் மின்வாரிய அலுவலகத்தில் பேச்சிமுத்து துப்புரவு வேலை செய்து வந்ததாகவும், அவரை அவ்வப்போது ஒயர்மேன் வேலைக்கும் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதால் தான் அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாகவும், எனவே அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதி தமிழர் பேரவை அருந்ததியர் அரசு மாநில அமைப்பு செயலாளர் முருகேசன், தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் பேச்சிமுத்துவின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு மின்வாரிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் கமலம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் மாலையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு பொன் ராமு, ஸ்ரீவைகுண்டம் மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) பலவேசம் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், இழப்பீட்டு தொகை வழங்குவதற்கும், அரசு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் பேச்சிமுத்துவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    ×