என் மலர்
நீங்கள் தேடியது "encounter"
- காவலர் முத்துக்குமாரை கல்லால் அடித்து கொன்ற வழக்கு.
- தேனி மாவட்டம் கம்பம் அருகே தலைமறைவாக இருந்த ரவுடி பொன்வண்ணனை சுட்ட போலீசார்.
மதுரை உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் மீது போலீசார் என்கவுண்ட்டர் நடத்தினர்.
காவலர் முத்துக்குமாரை கல்லால் அடித்து கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாராரி பொன்வண்ணன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
இதில், படுகாயமடைந்த பொன்வண்ணனை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, பொன்வண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொன்வண்ணன் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே அவ்வப்போது என்கவுன்டர் நடைபெறுகிறது.
- இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
6இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது அவ்வப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.
சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள கேர்லாபால் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
- கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் என்கவுண்டர் நடைபெற்றது.
- இதில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சியை எல்லை பாதுகாப்புப் படைவீரர்கள் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர காட்டுப் பகுதியில் 5 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறப்பு செயல்பாட்டுக்குழு மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸ் ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் உதவியுடன் இந்த நடவடிக்கையில் இறங்கியது.
அப்போது வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கதுவா என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதுகாப்புப் படைவீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை.
- ஐந்து பயங்கரவாதிகளில் இரண்டு பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட முயற்சி மேற்கொள்கின்றனர்.
இதை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஐந்து பயங்கரவாதிகள் கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர காட்டுப் பகுதியில் ஊடுருவியதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஐந்து வீரர்கள் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த வீரர்களுக்கு கதுவா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறப்பு செயல்பாட்டுக்குழு மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸ் ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் உதவியுடன் இந்த நடவடிக்கையில் இறங்கியது.
- அதிகாலை விமானத்தில் வந்த இருவரும் உடைகளை மாற்றினார்களே தவிர ஷூவை மாற்றவில்லை.
- கைது செய்யப்பட்டவர்கள் மீது பல மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
சென்னையில் 8-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகைகளை பறித்த கொள்ளையன் நேற்று நள்ளிரவு தரமணி ரெயில் நிலையம் அருகே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்நிலையில் வடமாநில கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் நேற்று சைதாப்பேட்டையில் ஆரம்பித்து காலை 6 மணி முதல் 7 வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.
* தாம்பரத்தில் இதேபோன்று நகை பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் உடனடியாக காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்தது.
* கடைசி நேரத்தில் வந்து விமானத்தில் ஏறுபவர்கள் குறித்து கண்காணிக்குமாறு முன்பே ஏர்போர்ட் அதிகாரிகளிடம் கூறி இருந்தோம்.
* அதிகாலை விமானத்தில் வந்த இருவரும் உடைகளை மாற்றினார்களே தவிர ஷூவை மாற்றவில்லை. அதுவும் ஒரு ஆதாரமானது.
* ஐதராபாத் செல்ல இருந்த விமானத்தில் அமர்ந்திருந்த கொள்ளையர்களை விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
* செயின் பறிப்பு கொள்ளையர்கள் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுள்ளனர்.
* நேற்று பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் மீது மும்பையில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
* ஒருவன் முந்தைய நாள் இரவும், மற்ற இருவரும் அடுத்த நாள் அதிகாலையும் சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
* ஒருவன் முன்னதாக வந்து பைக் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்த பின்னர் மற்ற இருவர் அடுத்த நாள் வந்து கைவரிசை.
* கடந்தாண்டு சென்னையில் நடந்த 34 செயின் பறிப்பு சம்பவங்களில் 33-ல் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளன.
* நேற்று நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் இரானி கொள்ளையர்கள். இவர்கள் இதற்கு முன்பு சென்னையில் கொள்ளைகளை அரங்கேற்றினரா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
* சென்னையில் கொள்ளையன் சாலையில் பைக் ஓட்டிய வேகத்தை பார்க்கும்போது இதற்கு முன்பே வந்ததுபோல் தான் உள்ளது.
* கைது செய்யப்பட்டவர்கள் மீது பல மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
* அனைத்து நகைகளையும் மீட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பீஜப்பூரில் நடந்த என்கவுண்டரில் 18 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாவட்டத்தின் பீஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு காட்டில் பாதுகாப்புப் படையின் கூட்டுப்படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், கான்கர் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்டரில் 4 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று நமது வீரர்கள் மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். சத்தீஸ்கரின் பீஜப்பூர் மற்றும் கான்கரில் நமது பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மோடி அரசாங்கம் நக்சலைட்டுகளுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது. மேலும் சரணடையாத நக்சலைட்டுகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாடு நக்சலைட்டுகளிலிருந்து விடுபடும் என பதிவிட்டுள்ளார்.
- சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 18 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
- இந்த சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ராய்ப்பூர்:
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது அவ்வப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் பீஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு காட்டில் பாதுகாப்புப் படையின் கூட்டுப்படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதில் 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த சண்டையின்போது மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) வீரர் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒரு பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவன்.
- பயங்கரவாதிகள் வைத்திருந்த ஏகே74 , ஏகே 56 ரக துப்பாக்கிகள் பறிமுதல்
ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக
காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. தெரிவித்தார். முக்தியார் பட் என்ற அந்த பயங்கரவாதி, சிஆர்பிஎஸ் மற்றும் ஆர்.பி.எப் அதிகாரிகள் சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடையவர் என அவர் கூறினார். பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே74 ரகம் , ஏகே 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைதுப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
- மோகன்காடி, சுமித்ரா உள்பட 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்.
- பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. காட்டு பகுதிகளில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகளை பிடிக்க காதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பொம்ரா காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் பிரிவு குழு உறுப்பினர்களாக மோகன்காடி, சுமித்ரா உள்பட 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியோர் பொம்ரா காட்டில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இன்று காலை நடந்த தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் காட்டுக்குள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி., கூறும்போது, "பொம்ரா காட்டுப் பகுதியில் துப்பாக்கி சண்டை நிறுத்தப்பட்ட பிறகு ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகளின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன. அப்பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது" என்றார்.
- இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.
- பயங்கரவாதிகள் மேலும் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
சோபியான் மாவட்டம் சைனாபுரா நகரில் முன்ஜா மர்க் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.
இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.
- பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே அந்த பகுதியில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டாக அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதற்கு வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதனை அடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே அந்த பகுதியில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வீரர்கள் கொண்டு வந்து உள்ளதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- அவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.
- குற்றவாளிகளிடம் இருந்து வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபி தெரிவித்தார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான அத்திக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் இன்று போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜான்சியில் அவர்களை மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபி தெரிவித்தார்.
உமேஷ் பால் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் அத்திக் அகமது மற்றும் அவரது கூட்டாளிகள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.