என் மலர்
நீங்கள் தேடியது "extortion"
- 26 ஆம் தேதி வீட்டைபூட்டிக்கொண்டு தனது தாய் வீடான கருவாட்சிக்கு சென்றனர்.
- ரூ68,000 ரொக்க பணம் யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர் என்ற ஊர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி கவிதா. இவர்கள் கடந்த 26 ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு தனது தாய் வீடான கருவாட்சிக்கு சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம் .உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 கிராம் தங்க நகை மற்றும் ரூ62,000 ரொக்கம் ஆகியவைகள் திருடு போய் இருந்தது. இதேபோல் அதே ஊர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்.
அவரது மனைவி ஜோதி லட்சுமி. இவர்களும் கடந்த 26-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு தனது தம்பியை பார்க்க திருச்சிக்கு சென்று விட்டனர் . மறுநாள் காலை அவருக்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலின் பேரில் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவை உடைத்து அதிலிருந்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ68,000 ரொக்க பணம் ஆகியவற்றை யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அவர்கள் தனித்தனியே கஞ்சனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறா ர்கள்.
- தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
- வாலிபர்கள் 2 பேரும் அந்த பெண்ணை மிரட்டி கூட்டுபாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை ேசர்ந்த 40 வயது பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த பெண் கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
சம்பவத்தன்று கள்ளக்காதல் ேஜாடி மரக்காணம் அருகே உள்ள தைலமர தோப்பில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு மரக்காணம் பகுதியை சேர்ந்த எழில் பரதன் மற்றும் அவரது நண்பரும் அங்கு வந்தனர். பின்னர் அந்த வாலிபர்கள் 2 பேரும் அந்த பெண்ணை மிரட்டி கூட்டுபாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவும் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும், உனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என அந்த பெண்ணை மிரட்டினர். இதனால் பயந்துபோன அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லவில்லை.
இதை சாதகமாக பயன்படுத்திய, எழில்பரதன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணை தனியாக வரவழைத்து அடிக்கடி பாலியல் பாலாத்காரம் செய்து, பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் பணம் கொடுக்காததால் ஆபாச வீடியோவை எழில்பரதன் வாட்ஸ்-அப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. நாளுக்குநாள் அவர்களின் தொல்லை அதிகரிக்கவே அந்த பெண் கோட்டக்குப்பம் போலீசில் இது தொடர்பாக புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழில்பரதன் மற்றும் அவரது நண்பரை தேடிவந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் அப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜா புலியகுளத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சார்லசை கைது செய்தனர்.
கோவை:
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையை சேர்ந்தவர் ராஜா (வயது 30). இவர் புலியகுளத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று ராஜா வேலை செய்து கொண்டு இருந்த போது புலியகுளம் அந்தோணியார் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சார்லஸ் (வயது 26) என்பவர் அங்கு வந்தார். அவர் பீர் பாட்டிலை உடைத்து ராஜாவின் கழுத்தில் வைத்து மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.900 ஆயிரம் பணத்தை பறித்து சென்றார். இது குறித்து அவர் ராமநாதபுரம போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சார்லசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- நேற்று இரவு பால குரு வழக்கம்போல் கடையில் வேலை முடித்து கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தை அருகே பைப் எலக்ட்ரிகல் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் விற்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை பாலகுரு என்பவர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பால குரு வழக்கம்போல் கடையில் வேலை முடித்து கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடைக்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலகுரு பணம் வைத்திருக்கும் பெட்டி சென்று பார்த்தபோது பெட்டி யை உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூபாய் 7000 ரொக்கப் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து பாலகுரு திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடத்த கடையை பார்வையிட்டனர். அப்போது கடையின் பூட்டை உடைக்காமல் கடையின் பின்புறம் இருந்த தகர கூறையை உடைத்து கடைக்குள் நுழைந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- ராஜேந்திரன் ( வயது 42). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
- அப்போது அங்கு வந்த சில நபர்கள், ராஜேந்திரனை வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி அவரிடமிருந்து 1 பவுன் செயின், ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் மணியனூர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 42). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 12- ந் தேதி மாலை தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள், ராஜேந்திரனை வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி அவரிடமிருந்து 1 பவுன் செயின், ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்- இன்ஸ்பெக்டர் வீரன்
மற்றும் போலீசார், வழிப்பறி யில் ஈடுபட்ட அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (19), கவியரசன் (25) ஆகிய இருவரையும் நேற்று கைது
செய்தனர். மேலும் தலைமறை வாக உள்ள அவர்களின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர். போலீசார், கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- அண்ணாதுரை (வயது 52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
- கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.700 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் மணியனூர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சீலநாயக்கன்பட்டி, வேலுநகர் பிரிவு ரோடு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சில நபர்கள் அண்ணாதுரையை திடீரென வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.700 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட தாதகாப்பட்டி தாகூர் தெரு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜடேஜா என்கிற தியாகராஜன் (32), சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த குரு என்கிற குப்பன் தாஸ் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிமிருந்து செயின், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
- மண்டபம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.5 லட்சம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதுகுறித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியை சோ்ந்தவர் புவனேஸ்வரா் (வயது 39). மண்டபம் அருகே சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.
இந்த நிலையில் புவனேஸ்வரா் அங்கு பெட்ரோல் விற்பனையான ரூ.4.89 லட்சத்தை எடுத்துக் கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள வங்கியில் செலுத்த மண்டபம் அருகே வளையா்வாடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த அடை யாளம் தெரியாத 2 நபா்கள் அவரிடமிருந்த பணப் பையை பறிக்க முயன்றனா். புவனேஸ்வரா் சப்தம் போட்டதையடுத்து அங்கிருந்தவா்கள் ஓடி வந்தனா். இதையடுத்து அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட அந்த பகுதியை சோ்ந்த சஞ்சய் (23), விக்ரம் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.
- ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.
- திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.
சேலம்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.
இவருடன் பயணித்த, மற்றொரு பயணி 5 ரோடு பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து ரமேஷிடம் பணம் பறித்த மர்ம நபரை தேடி வருகிறார்.
- தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என பேஸ்புக் மூலமாக தெரி வித்துள்ளார்.
- அந்த போலி சமூக வலைதள மூலமாக பணம் கேட்டால் தர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும் சிறுபான்மை துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தானின் மருமகனும் அமைச்சரின் நேர்முக உதவி யாளருமான ரிஸ்வானின் பெயரில் போலி பேஸ்புக் மூலமாக திண்டிவனம் ,செஞ்சி, சென்னை, போன்ற பல்வேறு ஊர்களில் உள்ள நபர்களின் மூலமாக தொடர்பு கொண்டு தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என பேஸ்புக் மூலமாக தெரி வித்துள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சரின் மருமகன் ரிஸ்வான் சைபர் கிரைம் போலீஸ் நிலை யத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் அந்த போலி சமூக வலைதள மூலமாக பணம் கேட்டால் தர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
- வாலிபர் நீ பணம் தராவிட்டால் கத்திைய எடுத்து குத்தி விடுவேன் என மிரட்டினார்.
- டிராவல்ஸ் அதிபர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூலூர்,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் கணியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று தனது நண்பரான பாய்சர் அலியுடன் கணியூர் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது அவர்களின் அருகே ஒரு கார் வேகமாக வந்தது. இவர்களின் அருகில் வந்ததும் கார் நின்றது. அதில் இருந்து ஒரு நபர் இறங்கினார்.அவர் அப்துல்ரகுமானின் அருகில் சென்றார். அப்போது அவர், நீங்கள் யார் என கேட்டார். அதற்கு காரில் இருந்து இறங்கிய நபர் எனது பெயர் கலைச்செல்வன். நான் இந்த ஏரியா ரவுடி. நீ வைத்திருக்கும் பணத்தை கொடுத்து விடு என்றார்.
ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் நீ பணம் தராவிட்டால் காரில் கத்தி வைத்துள்ளேன். அதனை எடுத்து உன்னை குத்தி கொன்று விடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அப்துல்ரகுமான் கையில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணத்ைத கொடுத்தார்.
இதையடுத்து அந்த நபர் காரில் ஏறி தப்பி சென்றார். இதுகுறித்து அப்துல்ரகுமான் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வடமாநில வாலிபர்களை மிரட்டி பணம் பறித்தது, ஊத்துப்பாளையத்தை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர்களான கலைச்செல்வன், கோகுலகிருஷ்ணன், சரண்குமார், விஜயகுமார் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் மாதப்பூரில் இருந்து கணியூர் செல்லும் சாலையில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, 4 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை சூலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயலில் அடைத்தனர்.
- வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிராமத்தில் கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி விவசாயி வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.
- பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிரா மத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 42). கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அந்த பொருளை எடுக்காமல் விட்டால், உங்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுமெனவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.
இதனால் பதறிப்போன பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.
இது குறித்து பழனி யம்மாள் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தியதில் புதையல் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றியது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதி செல்வராஜ் (41) என்பவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ேபாலீசார், அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.
- தனியார் ஆப் மூலம் ரூ.8,40,000 பரிசு கிடைத்துள்ளதாக தபால் வழியாக மர்ம நபர்கள் மூலம் கூப்பன் அனுப்பினர்.
- சுதா 27.09.2022 முதல் 27.01.2023 வரை சில தவணைகளாக மொத்தம் ரூ.3,79,100 பணத்தை வங்கியிலிருந்து அனுப்பியுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பெண்ணாடம் பகுதியை சேர்ந்த சுதாவிற்கு கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தனியார் ஆப் மூலம் ரூ.8,40,000 பரிசு கிடைத்துள்ளதாக தபால் வழியாக மர்ம நபர்கள் மூலம் கூப்பன் அனுப்பினர். அதை உண்மை என்று நம்பிய சுதா அதில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சுதாவிடம் பிரேம் குமார் மற்றும் சுனில் குமார் என்ற பெயரில் மர்ம நபர்கள் பேசினர். உடனே அவர்கள் கூப்பனில் உள்ள பரிசு தொகையை பெறுவதற்கு ரிசர்வ் வங்கியில் என்.ஓ.சி பெற வேண்டும் என்று கூறி அதற்கான தொகையை வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து சுதா 27.09.2022 முதல் 27.01.2023 வரை சில தவணைகளாக மொத்தம் ரூ.3,79,100 பணத்தை வங்கியிலிருந்து அனுப்பியுள்ளார். பின்னர் போனில் பேசிய நபர்கள் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால பாதிக்கப்பட்ட சுதா நேஷனல் க்ரைம் ரிப்போர்ட்டிங் கோர்ட்டில் புகார் செய்தார். புகாரின் பேரில் கடலூர் மாவட்ட இணையவழி குற்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.