என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "factories"
- இளைஞர் சமுதாயத்தினர் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
- பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தொழில் வளர்ச்சிக்கு அளித்து வரும் அளப்பரிய ஊக்கம் காரணமாகப் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் இளைஞர் சமுதாயத்தினர் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
2021-ம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய பின் 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகும் எனும் இலக்குடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
அதன்படி திராவிட மாடல் அரசு 3 ஆண்டுகளில் மொத்தம் 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கத்தக்க வகையில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு முதலில் 27 புதிய தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளது. அத்துடன் மேலும் 19 தொழிற்சாலைகள் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 46 புதிய தொழிற்சாலைகள் இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் காரணமாக திராவிட மாடல் அரசின் தொழில் வளர்ச்சி சாதனைகள் இந்திய அளவில் சிறந்து விளங்குகின்றன இதனை ஓரிரு நாட்களுக்கு முன் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2023-2024ம் ஆண்டுக்கான கள ஆய்வையும் கணக்கெடுப்பையும் நடத்தியதில் உற்பத்தி தொழில்களில் தமிழ்நாட்டில் 7.5 சதவிகித வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் மற்றும் வேலை வாய்ப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனவே, தமிழ்நாடு தொடர்ந்து புரிந்துவரும் சாதனைகள் தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்னும் வரலாற்றைப் பறைசாற்றும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டில் 400 கோடியில் ஆலை.
- 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி இரவு அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றார்.
அந்த வகையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அனைத்து மாவட்டங்களில் இருக்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்தவும் தமிழக அரசு தொடர்ச்சியாக இத்தகைய பயணங்களை 4-வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு இருக்கிறார்.
அமெரிக்காவில் மின்பொருள் மற்றும் கனரக தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- சுவிட்சர்லாந்து வர்த்தக குழுவினர் தொழிலாளர்கள் நலன் குறித்து ஆய்வுக்காக திருப்பூர் வந்தனர்.
- திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடைதுணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடைதுணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் சுவிட்சர்லாந்து நாடும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர் சமூக நலன் குறித்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வர்த்தக அமைப்பு பிரதிநிதிகள் திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பின்னலாடை தொழிற்சாலைகளை நேரில் பார்வையிட்டு, பின்னர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி, சங்க உறுப்பினர்கள் குழு தலைவர் சிவசுப்பிரமணியம், தொழிலாளர்கள் குழு தலைவர் லோகநாதன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
சுவிட்சர்லாந்து வர்த்தக குழுவினர் தொழிலாளர்கள் நலன் குறித்து ஆய்வுக்காக திருப்பூர் வந்தனர். அப்போது அவர்களிடம், சம்பளம், போனஸ், பஞ்சப்படி, பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கி கூறினோம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் உள்ளிட்ட திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலைகள் குறித்தும் அவர்களிடம் தெரிவித்தோம். பசுமை சார் உற்பத்தியை கவுரவித்து, அங்கீகார சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். அப்போது திருப்பூர் நிறுவனங்கள், தொழிலாளர்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி பராமரிப்பதாக சுவிட்சர்லாந்து குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இக்கூட்டத்துக்கு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ராஜகுமாரி தலைமை வகித்தாா்.
- ஒவ்வொரு மின்சார வாரிய அலுவலகத்திலும் ஏதேனும் காரணங்களை கூறி முரண்பாடாக நடந்து கொள்கின்றனா்.
திருப்பூர்:
திருப்பூா் கோட்ட அளவிலான மாதாந்திர மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் குமாா் நகா் மின்சார வாரிய துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ராஜகுமாரி தலைமை வகித்தாா்.
இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் மாநகரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வணிகப் பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனா். திருப்பூா் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு மின்சார வாரிய அலுவலகத்திலும் ஏதேனும் காரணங்களை கூறி முரண்பாடாக நடந்து கொள்கின்றனா்.
இதுதொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சிறு, குறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு தாமதமின்றி விரைவாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்படும் என தெரிவித்தார். அவர் 2,000 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. வீட்டுக்கு வீடு ரூ.15 லட்சம் கொடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் 15 ரூபாய் கூட வந்து சேரவில்லை. கடந்த தேர்தலில் அளித்த வாக்கு உறுதிகளை மோடி நிறை வேற்றவில்லை.
ஜிஎஸ்டியால் தமிழகத்தில் 50,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கின்றனர்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் புதிதாக அணை கட்டுவோம். பென்னிகுக் கட்டிய அணையை உடைப்போம் என்று கூறும் கேரள அரசுக்கு மத்திய அரசு பச்சைக் கொடி காட்டுகிறது. தமிழகத்தை வஞ்சிக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. இதனால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பாலைவனமாக மாறி விடும்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை காக்க முயலாமல், மத்திய அரசுக்கு கைக்கூலியாக அதிமுக அரசு உள்ளது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்குமா? பாசிச சர்வாதிகாரம் நிலைக்குமா? என்பது தான். அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் பேசினார். #vaiko #parliamentelection
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் துப்புரவு மற்றும் சுகாதாரப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காக்களூர் தொழிற்பேட்டையில் இன்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் தலைமையில் அதிகாரிகள் டெங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
தொழிற்சாலைகளில் உள்ள குடோன், தண்ணீர் தொட்டிகளில் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கும் 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள 350 தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அபராதம் விதித்த தொழிற்சாலைகள் சீர் செய்யாவிட்டால் மேலும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.
தமிழக அரசின் ஆவின் பால் தொழிற்சாலையில் ஆய்வில் டெங்கு உற்பத்தியாகக் கூடிய வகையில் இல்லாவிட்டாலும், தூய்மையாக வைத்திருக்க நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
ஆய்வின் போது வட்டாட்சியர் தமிழ் செல்வன், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, விஜயகுமாரி மண்டலா துணை அலுவலர் சபாநாயகம் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் உடன் இருந்தனர். #DenguFever
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியினர் ஆளும்கட்சி மீதும், ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சியினர் மீதும் குற்றம்சாட்டி வருகின்றனர். உளவுத்துறையின் தோல்வி, சமூக விரோதிகள் ஊடுருவல் என்று விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் உண்மை குற்றவாளி மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்பது யாராலும் பேசப்படுவது இல்லை.
மாசு கட்டுபாட்டு வாரியம் ஆலைக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்குகிறது. ஆனால் அந்த நிபந்தனை பின்பற்றப்படுகிறதா? என கண்துடைப்புக்கு மட்டுமே ஆய்வு செய்கிறார்கள்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் லஞ்சம் பெருகி விட்ட காரணத்தால் கழிவு பொருட்களால் நிலத்தடிநீர், காற்று மாசுபடுகிறது. இதனால் புற்றுநோய் மற்றும் தோல்நோய் வந்து அழியபோவது பொதுமக்கள் என்பதை உணர வேண்டும். இந்த விஷயத்தில் தவறு செய்யும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொங்குநாட்டில் சாயக்கழிவுகள் மற்றும் தோல் கழிவுகள் நேரடியாக நீர்நிலைகளில் கலக்கப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கொங்குநாடு மக்கள் வாழ தகுதி இல்லாத இடமாக மாறிவிடும். இதேபோல் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளும் கழிவுகளை நேரடியாக நீர்நிலைகளில் கலக்கின்றன. கொங்கு மண்டலத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியிடும் தொழிற்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்.
சட்டசபையில் நடைபெறும் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளோம். அவரும் பரிசீலனை செய்வதாக கூறி உள்ளார். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதை மக்கள் விரும்பவில்லை. ஆக்கபூர்வமாக விவாதம் செய்வதையே விரும்புகின்றனர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அது தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் அமைப்பாக இருக்க வேண்டும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பெருவாரியான மக்கள் செய்து வரும் பெண்கள் பூப்பெய்தும் நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்கு உரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார். அந்த கூட்டத்தில் ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி கமலிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராசன், மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் துரை, செல்வம், சின்ராஜ், விவசாய அணி துணை செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், துணை செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் செல்வராஜ், கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்