search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farming"

    • கற்பூர வெற்றிலை என்பது கற்பூர மணத்துடன் சற்று காரம் அதிகமாக இருக்கும்.
    • வயிற்றுப்பொருமல், அஜிரணக்கோளாறுகளை நீக்கக்கூடியது.

    உடுமலை :

    உடுமலை, மடத்துக்குளம் மற்றும் கரைவழிப்பகுதிகளில் குறிப்பாக கணியூர்ப் பகுதிகளில் வெற்றிலைக்கொடி விவசாயம் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. கணியூரில் கடந்த நூற்றாண்டுகளுக்கும் முன்பு வரையிலும் பயிர் செய்யப்பட்டு வந்த வெற்றிலைகொடியில் குறிப்பாக சர்க்கரை வெற்றிலை, கற்பூர வெற்றிலை , கம்மாறு வெற்றிலை. இதில் கற்பூர வெற்றிலை என்பது கற்பூர மணத்துடன் சற்று காரம் அதிகமாக இருக்கும். கம்மாறு வெற்றிலை என்பது காரத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மென்று தின்னக்கூடியது. வயிற்றுப்பொருமல், அஜிரணக்கோளாறுகளை நீக்கக்கூடியது. சாப்பிட்டவுடன் நம் முன்னோர்கள் வெற்றிலை போடச்சொன்னதும் இதுவே காரணம். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் , சுவாசப்பிரச்சினைகள், இருமல், சளி போன்றவற்றிற்கும் வெற்றிலை ஒரு மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

    கிராமப்பகுதிகளில் முதலில் திருமண அழைப்பு மற்றும் நல்ல காரியங்கள் அனைத்திற்கும் வெற்றிலை பாக்கு வைத்தே விருந்துக்கு அழைப்பர். கட்டாயம் விருந்து முடிந்தவுடன் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து விடுவர். அனைவரும் எடுத்துக்கொள்ளும் வகையில் நிரம்ப நிரம்ப வெற்றிலை பாக்கு சுண்ணாம்புடன் ஒரு தட்டில் வைத்து வழங்குவர்.

    கற்பூர வெற்றிலை, சர்க்கரை வெற்றிலை தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளம் பெருக நல்ல மருந்தாகவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர். வெற்றிலை போட்டு நன்றாக நாக்கு சிவந்தால் அஜிரணம் நீங்குவதும், இதனால் அன்பு, பாசம் அதிகமாகும் என்று வட்டார வழக்கில் கூறுவதும் உண்டு. இன்று கரைவழியில் முப்போகம் நெல்விளைச்சலும் இல்லை. வெற்றிலை கொடி விவசாயமும் இல்லை. கணியூர் வெற்றிலை என்பது கோவை, மதுரை போன்ற பெரிய பெரிய ஊர்களிலிருந்து வந்து கணியூரில் தங்கி வாங்கிச்சென்ற காலங்களும் உண்டு.

    மேலும் கணியூர்ப் பகுதியில் விளைந்த சர்க்கரை வெற்றிலை, கற்பூர வெற்றிலை வெளிமாநிலங்களுக்கும் மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆனதாகவும் இங்கிருக்கும் வயதான பெரியோர்கள் கூறுகின்றனர்.சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்பு வரை கணியூர் முதன்மைச்சாலையில் தற்போதிருக்கும் ஐ.ஓ.பி., வங்கி வளாகத்தில் உள்ள (பசுமடத்தில்) வெற்றிலை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்சென்றுள்ளனர்.ஒரு சில நாட்களில் பெரிய அளவிற்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தக் கூட்டத்தைப் பார்ப்பதற்காகவே வேடிக்கை பார்த்ததாகவும் தற்போது வயது முதிர்ந்த பெருமக்கள் தெரிவிக்கின்றனர்.

    கரைவழி நாட்டில் நெல் மட்டுமல்லாது வெற்றிலை கொடி விவசாயம் சிறப்பாக இருந்ததையும் தற்போது அதுமிகவும் அருகி வருவதையும் நாம் நம் கண் முன்னே பார்த்து வருகின்றோம்.கரைவழிநாட்டு விவசாயம் குறித்தும் கரை வழிநாடு குறித்தும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    • இலவச பயிற்சி முகாம் நாளை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
    • விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி முகாம் நாளை 20-ந்தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கான நாட்டுக் கோழி வளா்ப்பு இலவச பயிற்சி முகாம் நாளை 20-ந்தேதி ( வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. நாட்டுக்கோழி வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு பிறகு பணப்பயிர்களை பயிரிட அரசு உதவி செய்து வருகிறது.
    • இதனால் பூச்சி தாக்குதல் அதிகம் ஏற்பட்டு விவசாயத்தில் இழப்பு ஏற்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவனம் சார்பில் கூட்டு பொறுப்பு குழுவை சேர்ந்த பெண்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

    இயற்கை இடுபொருள் மற்றும் இயற்கை வேளாண் பயிற்சியாளர் பாலம் செந்தில்குமார் செயல்விளக்கம் அளித்தார்.

    இதுகுறித்து அவர் பேசுகையில்:-

    இயற்கை இடுபொருள்க ளான பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மண்புழு உரம், மீன் அமிலம் உள்பட 12 வகையான இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள் வேளாண் பயிர்களான நெல், உளுந்து, துவரை, தானியங்கள் உள்பட அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தும் முறைகள் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.

    டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு பிறகு பணப்பயிர்களை பயிரிட அரசு உதவி செய்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளால் நன்மை செய்யகூடிய மீன், நண்டு, நத்தைகள், சிலந்தி, குளவிகள் அழிந்து விடுகின்றன.

    இதனால் பூச்சி தாக்குதல் அதிகம் ஏற்பட்டு விவசாயத்தில் இழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் தொழில்முனைவோராக மாற வேண்டும். ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையை ஏற்படுத்தி நெல், தீவனம், மாடு, ஆடு, கோழி, மீன் வளர்ப்பு, காய்கறி, பழத்தோட்டம், தென்னை, வாழை, மூலிகை, மலர் செடிகள் போன்ற பயிர்களை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.

    இதற்கு அரசு, வங்கிகள் உதவி செய்து வருகிறது என்றார்.

    பயிற்சியில் 50 பெண்கள் கலந்து கொண்டனர்முன்னதாக மகளிர் ஒருங்கிணைப்பாளர் நதியா அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் சுந்தரி நன்றி கூறினார். 

    • உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் 50 மீ்ட்டர் நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • இதனால் மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளதால், அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் வீணாகி காட்டுவாரியில் செல்கிறது.

    இதனால் 20 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாததால் பாசனத்து க்கு பாதிப்பு ஏற்படலாம் என விவசாயிகள் அச்சமடை ந்துள்ளனர்.

    காவிரி ஆற்றிலி ருந்து மாயனூர் கதவ னையிலிருந்து பிரிந்து வரும் தண்ணீர் திருச்சி வழியாக வாழவந்தான்கோட்டை ஏரிக்கு வந்ததும், அந்த ஏரி நிரம்பி அங்கிருந்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் சுரக்குடிப்பட்டி ஏரி, தேவராயன் ஏரி, நவலூர் ஏரி, ஓலமுத்து ஏரி, நெப்பிஏரி, வெண்டியம்பட்டி ஏரி, வெட்டி ஏரி, காமத்து ஏரி, ஓடை ஏரி என 20 க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது வழக்கம்.

    இந்த ஏரிகள் ஒன்று நிரம்பிய பி்ன் அடுத்து ஏரி நிரம்புவது வழக்கம்.

    இந்த ஏரிகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பாசனம் செய்வதுவழக்கம்.

    இந்நிலையில் உய்யக்கொ ண்டான் நீட்டிப்பு வாய்க்கா லில் 50 மீ்ட்டர் நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் அனைத்தும் காட்டுவாரி மூலம் சோளகம்பட்டி சைபன் வழியாக வெண்ணாறுக்கு செல்கிறது இதனால் மற்ற ஏரிகளுக்குதண்ணீர் செல்வது தடைப ட்டுள்ள தால், அப்பகுதி யில் விவசாயம் பாதிக்க ப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறியதாவது:-

    வாழவந்தான்கோட்டை ஏரியில் தண்ணீர் நிரம்பி அதிலிருந்து சுமார் 20 ஏரிகளுக்கு சங்கிலித் தொடர் போன்று ஒவ்வொரு ஏரியாக நிரம்புவது வழக்கம்.

    தற்போது உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் உடைந்ததால், தண்ணீர் அனைத்தும் வீணாகி காட்டுவாரியில் செல்கிறது.

    இந்த தண்ணீர் சோளகம்பட்டி சைபன் மூலம் வெண்ணாற்றில் கலக்கிறது.

    தற்போது தற்காலிகமாக மண் மூட்டைகளை வைத்து பொதுப்பணித்துறை பணியாளர்கள் அடைத்தாலும், தண்ணீர் வெளியேறுவதை தடுக்கு முடியாது.

    உடனடியாக போர்கால அடிப்படையில் தடுப்பணையை சீரமைத்து அப்பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • விதை நெல்லை விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்குவதற்கு அரசு வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது.
    • பாய் நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்யும் பணி நெடும்பலம் அரசு விதை பண்ணையில் தொடங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு விதை பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி 10 ஏக்கர் மற்றும் மாப்பிள்ளை சம்பா 5 ஏக்கர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள நெடும்பலம், கீராந்தி, தீவாம்பாள்பட்டிணம் ஆகிய அரசு விதை பண்ணைகளில் தலா 15 ஏக்கர் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை வழியில் சாகுபடி செய்து விதை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் விதை நெல்லை விவசாயிகளுக்கு 50 சத மானிய விலையில் வழங்குவதற்கு அரசு வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது.

    இதன் முதல் கட்டமாக 5 ஏக்கர் நில பரப்பில் மாப்பிள்ளை சம்பா எந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்யப்ப ட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக தூயமல்லி பாரம்பரிய நெல் ரகத்தினை 10 ஏக்கர் பரப்பளவில் எந்திர நடவு முறையில் செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தில் நடவு செய்வதற்கு தேவையான நாற்றுகளை பாய் நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்யும் பணி நெடும்பலம் அரசு விதை பண்ணையில் துவங்கப்பட்டது.

    இப் பணியை மாவட்ட வேளாண்மை இயக்குனர் (பொ) ரவீந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாய் நாற்றங்காலில் பயன்படுத்த ப்படும் விதை நெல்லில் சூடோமோனஸ் மற்றும் உயிர் உரங்கள் கலந்து விதை நேர்த்தி செய்யும் செயல் விளக்கத்தினை பண்ணை வேளாண்மை அலுவலர் செந்தில் மற்றும் திருத்துறைப்பூண்டி துணை வேளாண்மை அலுவலர் ரவி செய்து காட்டினர்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை ஏழுமலை, மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன் கலந்து கொண்டனர்.

    • மீன்குஞ்சு, மீன் தீவனம், உரங்கள், மீன் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வேலி அமைத்தல் ஆகியவற்றிற்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • பயனாளியின் சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் பண்ணைக் குட்டை அமைந்துள்ள நிலம் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நெல்ைல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு 250 முதல் 1000 சதுர மீட்டர் அளவிலுள்ள பண்ணைக்குட்டையில் கிப்ட் திலேப்பியா மீன்வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன்குஞ்சு, மீன் தீவனம், உரங்கள், மீன் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வேலி அமைத்தல் ஆகியவற்றிற்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தினை செயல்படுத்திட அலகு ஒன்றுக்கு ஆகும் மொத்த செலவினமான ரூ.36 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

    மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு ஏற்றவாறு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகுந்த பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு பயனாளியின் சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் பண்ணைக் குட்டை அமைந்துள்ள நிலம் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பயனாளி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். பயனாளி இதற்கு முன்னர் கிப்ட் திலேப்பியா மீன்வளர்ப்பு செய்திட மானியம் பெற்றவராக இருத்தல் கூடாது.

    இத்திட்டத்தில் பயன்பற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், 42C, 26-வது குறுக்குத்தெரு, மகாராஜா நகர், நெல்லை-627011 என்ற அலுவலக முகவரியில் வருகிற 4-ந்தேதிக்குள் நேரில் விண்ணப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு 9384824355 அல்லது 9384824280 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×