search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைப்பு பணி தீவிரம்
    X

    உடைப்பை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள்.

    உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைப்பு பணி தீவிரம்

    • உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் 50 மீ்ட்டர் நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • இதனால் மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளதால், அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் வீணாகி காட்டுவாரியில் செல்கிறது.

    இதனால் 20 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாததால் பாசனத்து க்கு பாதிப்பு ஏற்படலாம் என விவசாயிகள் அச்சமடை ந்துள்ளனர்.

    காவிரி ஆற்றிலி ருந்து மாயனூர் கதவ னையிலிருந்து பிரிந்து வரும் தண்ணீர் திருச்சி வழியாக வாழவந்தான்கோட்டை ஏரிக்கு வந்ததும், அந்த ஏரி நிரம்பி அங்கிருந்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் சுரக்குடிப்பட்டி ஏரி, தேவராயன் ஏரி, நவலூர் ஏரி, ஓலமுத்து ஏரி, நெப்பிஏரி, வெண்டியம்பட்டி ஏரி, வெட்டி ஏரி, காமத்து ஏரி, ஓடை ஏரி என 20 க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது வழக்கம்.

    இந்த ஏரிகள் ஒன்று நிரம்பிய பி்ன் அடுத்து ஏரி நிரம்புவது வழக்கம்.

    இந்த ஏரிகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பாசனம் செய்வதுவழக்கம்.

    இந்நிலையில் உய்யக்கொ ண்டான் நீட்டிப்பு வாய்க்கா லில் 50 மீ்ட்டர் நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் அனைத்தும் காட்டுவாரி மூலம் சோளகம்பட்டி சைபன் வழியாக வெண்ணாறுக்கு செல்கிறது இதனால் மற்ற ஏரிகளுக்குதண்ணீர் செல்வது தடைப ட்டுள்ள தால், அப்பகுதி யில் விவசாயம் பாதிக்க ப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறியதாவது:-

    வாழவந்தான்கோட்டை ஏரியில் தண்ணீர் நிரம்பி அதிலிருந்து சுமார் 20 ஏரிகளுக்கு சங்கிலித் தொடர் போன்று ஒவ்வொரு ஏரியாக நிரம்புவது வழக்கம்.

    தற்போது உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் உடைந்ததால், தண்ணீர் அனைத்தும் வீணாகி காட்டுவாரியில் செல்கிறது.

    இந்த தண்ணீர் சோளகம்பட்டி சைபன் மூலம் வெண்ணாற்றில் கலக்கிறது.

    தற்போது தற்காலிகமாக மண் மூட்டைகளை வைத்து பொதுப்பணித்துறை பணியாளர்கள் அடைத்தாலும், தண்ணீர் வெளியேறுவதை தடுக்கு முடியாது.

    உடனடியாக போர்கால அடிப்படையில் தடுப்பணையை சீரமைத்து அப்பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×