என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fasting"

    • நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
    • அய்யப்ப பக்தர்கள் அதி காலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர்.

    கடலூர்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம்1-ம் தேதி முதல் 60 நாட்கள்நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதனையடுத்து கார்த் திகை முதல் நாளை முன்னிட்டு பண்ருட்டி திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவில், காமராஜர் நகர் சக்தி விநாயகர் கோவில், சோமேஸ்வரன் கோவில், ஆகிய திருக்கோவில்களில் நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

    அதனைத் தொடர்ந்து விரதமிருக்கக்கூடிய அய்யப்ப பக்தர்கள் அதி காலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் மாலை அணிந்து சுவாமியே சரணம் அயயப்பா என்ற பக்தி கோசங்கள் முழங்க விரதத்தை தொடங்கினர். இதனால் கோவில் பகுதி முழுவதும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    • மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது.

     அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு முன் தென்னை, வாழை, மஞ்சள், நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தாற்போல் லேசான காற்றுக்கு பயிர்கள் அசைவது ரம்மியமாக காட்சியளிக்கும். காலப்போக்கில் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் நலிவடைந்த நிலையில் பலர் திருப்பூர் போன்ற நகரங்களில் வெவ்வேறு தொழில்களை நாடிச்சென்றனர். இருப்பினும் பழமையை மறவாமல் விவசாயம்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அங்கம் என்ற நோக்கில் பல இன்னல்களுக்கிடையே சில விவசாயிகள் மனம் தளராமல் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பயிர்களை நல்லமுறையில் பாதுகாத்து இரவு விடியவிடிய கண்விழித்து தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து நல்லமுறையில் பயிர்களை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தோட்டம் ,காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில் ,முன்பெல்லாம் தோட்டம், காடுகளில் விவசாயதொழிலுடன் ஆடு,மாடு, கோழிவளர்ப்பில் ஈடுபடுவார்கள். நாகரீக உலகத்தில் தற்போது நாட்டுக்கோழி, ஆடுகள் வளர்ப்பது மறைந்துவருகிறது. அதேசமயம் மான், மயில்கள் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயபயிர்களை நாசம் செய்துவிடுகிறது. அரும்பாடுபட்டு வளர்த்த பயிர்கள் நாசமாவதுடன் எங்கள் பாடு வீணாகி பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மட்டுமே மான்கள் இருந்த நிலையில் இப்போது அவினாசி ஒன்றியத்தில் 40 கி.மீ சுற்றளவிற்கு தோட்டம் ,காடுகளில் மான்கள், மயில்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது. எனவேதான் சிறுத்தை நடமாட்டம் தொடங்கிவிட்டது. வாழ்நாள் முழுவதும் மான், மயில்களுடன் போராடுவது போதாதென்று தற்போது எந்த நேரத்தில் தோட்டப்பகுதிக்குள் சிறுத்தை வருமோ என்ற அச்சத்தில் உள்ளோம்

    மான், மயில்களின்தொந்தரவை கட்டுப்படுத்த அரசு,விவசாயத்துறை, தோட்டக்கலை துறையினரிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் அதற்குஎந்த முயற்சியும் எடுப்பதில்லை. அரசும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் இதற்கு தீர்வுகாண அவினாசி ஒன்றியத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றுதிரண்டு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒன்றுதான் வழிஎன்றனர்.

    • புறம்போக்கு பகுதியில் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர்.
    • சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் காமராஜ் நகர் மற்றும் சரளைமேடு பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலையின் இருபுறமும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பல ஆண்டாக வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவர், மாவட்ட நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள‌ வீடுகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    நீதிமன்ற உத்திரவின்படி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அவர்களுக்கு திடுமல் கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள புறம்போக்கில் இடம் ஒதுக்குப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும், ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள புறம்போக்கு பகுதியில் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் பாதுகாப்பு

    இதையடுத்து, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச் செல்வி, ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது.
    • மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த2 மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை.

     விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவர் கிராமங்கள் உள்ளது. இதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவர் கிராமங்கள் இருக்கின்றது .இந்த மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது.

    இந்த மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த2 மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை.

    இந்த 2 மாவட்ட மக்களின் கோரிக்ககைளை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தில் அழகன் குப்பம் பக்கிங்காம் கால்வாயிலும் செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு ஆலம்பரா என்கிற இடத்திலும் 2 பீப்பிள் துறைமுகங்கள் அமைக்க கடந்த 2ஆண்டுக்கு முன் அரசு சார்பில் ரூபாய் 236 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரர்கள் மேற்கொண்டனர்.

    தற்போது இந்த பணிகள் கிடப்பில் உள்ளது. எனவே இந்த 2 மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டு உள்ள துறைமுகப் பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இ.சி.ஆர். சாலையில் அனுமந்தையில் உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது

    • ஸ்ரீ அம்மன் போர்வெல் என்ற நிறுவனத்தை கூட்டாக நடத்தி வந்தனர்.
    • ரிக்வண்டி மற்றும் சப்போர்ட் வண்டி என 2 வாகனங்கள் சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ளது என தெரிகிறது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த புதுப்பாளையம் காந்தி ஆசிரமம் அருகே உள்ள புளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி, (வயது 37). இவருக்கு கவிதா (32) என்ற மனைவியும் கர்ணிகா (7) என்ற பெண் குழந்தையும், நிஷாந்த் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

    பெரியசாமிக்கு சித்ரா என்ற மூத்த சகோதரி உள்ளார் .இவரது கணவர் சேகர் (48). இவரும், பெரியசாமியும் இணைந்து ஸ்ரீ அம்மன் போர்வெல் என்ற நிறுவனத்தை கூட்டாக நடத்தி வந்தனர். அதில் ரிக்வண்டி மற்றும் சப்போர்ட் வண்டி என 2 வாகனங்கள் சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ளது என தெரிகிறது.

    இந்த நிலையில் சித்ரா வுக்கும், பெரியசாமிக்கும் சொத்து தகராறு ஏற்படவே ரிக் வாகனத்தை பெரியசாமி தனது அக்காள் சித்ராவின் கணவருக்கே விட்டுக் கொடுத்து விடுவது எனவும், சொத்துக்கள் முழுமையும் பெரியசாமிக்கு விட்டுக் கொடுத்து விட வேண்டும் எனவும் பேசி முடிவான நிலையில் சேகருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2018 -ம் ஆண்டு உடல் நலம் தேறிய சேகர், பெரியசாமிக்கு சொத்து ஆவணத்தை மாற்றி தராமல் இருந்தார். மேலும் அவருக்கு தெரியாமல் அப்போதைய வட்டார போக்குவரத்து அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் உதவியுடன் பெரியசாமியின் கையெழுத்தை போலியாக போட்டு போலி ஆவணத்தை வைத்து ரிக் வாகனத்தையும், சப்போர்ட் லாரியையும் தனது பெயருக்கு சேகர் மாற்றி உள்ளார் என தெரிகிறது இதனை அறிந்த பெரியசாமி புகார் தெரிவிக்கவே அவரை அழைத்து சிலர் மிரட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெரியசாமி, தனது மனைவி கவிதா மற்றும் குழந்தைகளுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னுடைய ரிக் வாகனத்தை, தனது பெயருக்கு மாற்றம் செய்து தரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பெரியசாமி தெரிவித்தார். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • முறைகேடுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.

    கடலூர்:

    திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் சார்பாக தி.இளம ங்கலத்தில் பகுதியில் உள்ள ஆதிதிராவிட மாணவர்கள் விடுதி சேதமடைந்தது இருப்பதை கண்டித்தும், மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் தயா.பேரின்பம் தலைமையில் உண்ணா நிலை அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொரு ளாளர் பாண்டுரங்கன், மாநிலத் துணைச் செயலாளர் முருகானந்தம், மாநில இளைஞரணி துணை செயலாளர் வீரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கி பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஆதிதிராவிட நல விடுதியின் கட்டிடத்தின் தன்மை குறித்தும் அதில் நடந்த முறைகேடுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.

    போர்கால அடிப்ப டையில் ஆதிதிராவிட மாண வர்களின் பாது காப்பை உறுதிப்படுத்த தற்காலி கமாக விடுதியை மாற்று இடத்தில் அமைத்து தர வலியுறுத்தியும்.அரசி னர் ஆண்கள் மேல்நி லைப் பள்ளியின் அருகி லேயே ஆதிதிராவிட மாணவர் விடுதி அமைக்க வலியுறுத்தியும் உண்ணா நிலை போராட்டம் நடை பெற்றது. இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா, கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் முரு கேசன்,மங்களூர் ஒன்றிய செயலாளர் பாலமுரு கன், கிராம தெருக்கூத்து கலை பேரவை திட்டக்குடி தொகுதி செயலாளர் ராயர், கிளைச் செயலாளர் சாமிதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழிய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பியூலா எலிசபெத் ராணி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வித்யாவதி வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் சேகரன் விளக்க உரையாற்றினார்.

    சத்துணவில் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது பணிபுரியும் ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர், உதவியாளர் ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.

    ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,850 வழங்க வேண்டும். சத்துணவு மானியத்தை உயர்த்த வேண்டும். காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

    உதவியாளர், சமையலர் 5 ஆண்டுகள் பணி முடித்து இருந்தால் அவரவர் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    • 4 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
    • 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இன்று நடந்தது.

    மாவட்ட தலைவர்கள் வேலூர் அருணகிரிநாதன், திருவண்ணாமலை பாபு, ராணிப்பேட்டை பாஸ்கர், திருப்பத்தூர் விநாயகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாவட்ட செயலாளர்கள் கோபி கண்ணன் சங்கரன் கோவிந்தராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் மாரிமுத்து உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்யும் ஆணையை வழங்க வேண்டும் மத்திய அரசு அறிவித்த நாளில் அகவிலைப்படி வழங்க வேண்டும்.

    காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஊர் புற நூலகங்கள் மற்றும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.

    • புலவநல்லூர் கிராமத்தில் கடந்த ஆண்டு முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.
    • நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கூறி அப்பகுதியினர் நெல் மூட்டைகளுடன் உண்ணாவிரதம் இருந்தனர்.

    திருவாரூர்:

    மணக்கால் ஊராட்சி புலவநல்லூர் கிராமத்தில் கடந்த ஆண்டு முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.

    இந்த ஆண்டும் அந்த இடத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விவசாயிகளும் அந்த இடத்தில் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக வைத்துள்ளனர்.

    இந்நிலையில் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த கருத்து வேற்றுமைகள் நிலவுவதாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த இடத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் செயல்பாட்டிற்கு வராமல் நிறுத்தப்பட்டுள்ளது.

    உடனடியாக அந்த இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கூறி அப்பகுதியினர் நெல் மூட்டைகளுடன் உண்ணாவிரதம் இருந்தனர்.

    இந்த உண்ணாவிரதத்திற்கு மணக்கால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்துரு தலைமை வைத்தார்.

    இந்த உண்ணாவிரதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம், மணியன், அதிமுகவை சேர்ந்த சந்துரு, வளரும் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய செல்வம் மற்றும் தியாகு, மகேஷ், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி உண்ணாவிரதம் நடைபெற்றது.
    • சம்பவ இடத்திற்கு வந்த வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் மற்றும் வி.களத்தூர் போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மரவநத்தம் அம்பேத்கர் தெருவில் கழிவுநீர் கால்வாய் சரியாக அமைத்து தராததால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியது. இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கால்வாய் அமைக்கும் பணி தொடங்காததால் நேற்று பொதுமக்கள் ஒன்று திரண்டு மரவநத்தம் கிராமத்தின் பஸ் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் மற்றும் வி.களத்தூர் போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக பொக்லைன் எந்திரம் கொண்டு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்து இந்தப்பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


    • மார்ச் 1-ம் தேதி முதல் 5-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும்.
    • உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார கிளை செயற்குழு க்கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் வட்டாரச்செயலாளர் பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாரதி மோகன், பொதுக்குழு உறுப்பினர் சீமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் முருகேசன் கலந்துகொண்டு பேசினார்.

    தீர்மானங்களை வட்டார செயலாளர் செல்வசிதம்பரம் வாசித்தார். கூட்டத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் 5-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும்.

    20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 18-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் வட்டார பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பின்சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    நாமக்கல்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சம்பள முரன்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பின்சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    ×