search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fasting protest"

    • தென் மண்டல கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று பாளை ஜோதிபுரம் திடலில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் விருதுநகர், கன்னியா குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கால்நடை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தென் மண்டல கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று பாளை ஜோதிபுரம் திடலில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் விருதுநகர், கன்னியா குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கால்நடை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் மாரி வெங்கடேசன், ரே மண்ட் சிங்க், ஜெய் கணேஷ், மனோகரன், அண்ணா துரை ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட இணைச் செய லாளர் ஆண்ட்ரூஸ் முத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாள ர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாநில துணை த்தலைவர் கிறிஸ்டோபர் ஆகியோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 6-வது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படை யில் நியாயமான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வை யாளர்களுக்கு அடுத்தகட்ட பணி உயர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும்.

    அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் ஆய்வாளர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். தமிழக முழுவதும் கால்நடை ஆஸ்பத்திரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    • கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு வித்ய பிரகாஷ், என்ற வாலிபர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • வித்ய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடை பாரில் அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி, இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக கலப்பட மது விற்பனை நடைபெறுவதாகவும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவத்தை போல சின்னியகவுண்டம்பாளையத்திலும் நடைபெறாமல் இருக்க, சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மது விற்பனையை காவல்துறையினர் முழுமையாக தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை பணிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு அதே கிராமத்தை சேர்ந்த வித்ய பிரகாஷ், என்ற வாலிபர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து பணிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா கொடுத்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி வித்ய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • 23 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருக்காலை உரிமம் முடிவடைந்த நிலையில் அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17ந் தேதி முதல் கடந்த 23 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே காத்திருப்பு போராட்ட பந்தலில், அப்பகுதி மக்கள் 21 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதத்தை அனுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதற்கிடையே நேற்று மாலை உண்ணாவிரத பந்தலுக்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வாழ்த்தினார்.

    • புதியதாக 2 ஆயிரத்து 715 சுகாதார ஆய்வாளர்கள் பதவிகளை உருவாக்க வேண்டும்.
    • அரசாணை எண் 337ஐ உடனே ரத்து செய்ய வேண்டும்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் சங்க பொறுப்பாளர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு முதல் நிலை சுகாதார ஆய்வாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,புதியதாக 2 ஆயிரத்து 715 சுகாதார ஆய்வாளர்கள் பதவிகளை உருவாக்க வேண்டும், சுகாதார ஆய்வாளர்களுக்கு எதிரான அரசாணை எண் 337ஐ உடனே ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் 3-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் ,

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க ப்பள்ளி ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , இடைநிலை ஆசிரியர்களு க்கான ஊதிய முரண்பாடு களை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் , மத்திய அரசு அறிவித்த அகவிலை ப்படியினை நிலுவையின்றி அறிவித்த தேதியிலிருந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமை ப்பினர் உண்ணாவிரதப் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் திருப்பூர் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளிலி ருந்து ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷ ங்கள் எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    • பழனி மலைக்கோவிலில் வருகிற 27ம் தேதி குடமுழுக்குவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய த்துறை செய்து வருகிறது.
    • கருவறை, வேள்விச்சாலை மற்றும் குடமுழுக்கு நிகழ்ச்சி களை தமிழ் மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் வருகிற 27ம் தேதி குடமுழுக்குவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய த்துறை செய்து வருகிறது.

    இந்நிலையில் தமிழ் கடவுளாக பக்தர்களால் வணங்கப்படும் முருகன் கோவிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழியி லும் குடமுழுக்கை நடத்த வேண்டும் என தெய்வ த்தமிழ் பேரவை சார்பில் வலியுறுத்தப்பட்டு ள்ளது.

    பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் மண்ட பத்தில் இந்த அமைப்பின் நிர்வாகிகளின் ஆலோ சனைக் கூட்டம் நடை பெற்றது. பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை வகித்தார். வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார், பதிணென் சித்தர்பீடம், மூங்கிலடியார், சிம்மம், சத்தபாமா அம்மையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்கு மக்கள் முன்னனியைச் சேர்ந்த கண்ணன், வீரத்தமிழர் முன்னணியைச் சேர்ந்த முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன் பின் தெய்வத்தமிழ் பேரவையின் ஒருங்கி ணைப்பாளர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் குடமுழுக்கு விழா வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. கருவறை, வேள்விச்சாலை மற்றும் குடமுழுக்கு நிகழ்ச்சி களை தமிழ் மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும்.

    பிராமணர் அல்லாத தமிழ் அர்ச்சகர்க ளையும் குடமுழுக்கில் ஈடுபடுத்தி தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 20ம் தேதி பழனியில் உண்ணா விரத போராட்டம் நடத்த உள்ளோம்.

    இது அறப்போராட்டமாக வும், ஆன்மீக நிகழ்வாகவும் நடைபெறும். ஆன்மீகச் சடங்குகள் நிறைந்த நிகழ்வாக இருக்கும். 2019ம் ஆண்டு தஞ்சாவூர் கோவில் குடமுழுக்கின் போது பல்வேறு அமைப்புகள் இணைந்து உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொட ர்ந்தோம். அப்போதைய அரசு தாமாக முன்வந்து தமிழ்பாதி, சமஸ்கிருதத்தில் பாதியாக குடமுழுக்கு நடத்துவோம் என அறிவித்தது. அந்த தீர்ப்பை செயல்படுத்தி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

    தமிழ் மந்திர புத்தகங்களை இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. எனவே பழனி கோவிலில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி 7-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
    • வருவாய் அதிகாரிகள் விவசாயி விஜயகுமார், மற்ற விவசாயிகள் ஆகியோருடன் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்பல்லடம் ஒன்றியம் ,இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40).இவர் கடந்த 30-ந்தேதி வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவர் கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி இன்று 7-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் , கனிமவளத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் ஒன்றியம் ,கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் விதிகளை மீறி கல்குவாரி செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு முடிவடைந்த பின்னர் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி விஜயகுமாரிடம் " கல்குவாரியில் ஆய்வு செய்துள்ளோம்.ஆகவே உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். எனினும் பேச்சுவார்த்தையில் சமரசம் அடையாத விஜயகுமார் "கோடங்கிபாளையம்பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தார். தொடர்ந்து 7-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    மேலும் விவசாயி விஜயகுமாரின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் இணைந்து கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் குதிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் அதிகாரிகள் விவசாயி விஜயகுமார், மற்ற விவசாயிகள் ஆகியோருடன் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  

    • தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் இன்று பா.ஜ.க. மாநகர் மாவட்டம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
    • போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

    திருச்சி:

    தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று 5-ந்தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கன்டோன்மென்ட் பறவைகள் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    உண்ணா விரதத்தில் நிர்வாகிகள் மாநில இணைபொருளாளர் சிவ.சுப்பிரமணியம், கோட்டப் பொறுப்பாளர் இல. கண்ணன், தங்க.ராஜைய்யன், மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் கௌதம் நாகராஜன், பாலன், மாநில செயற்குழு உறுப்பினர் வரகனேரி பார்த்திபன், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் எம்.பி.முரளிதரன்,

    வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சுவேந்திரன், மாவட்ட செயலாளர் லோகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் காளீஸ்வரன், லீமா சிவகுமார், ஜெயகர்ணா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் காளீஸ்வரன், தண்டபாணி, ஒண்டிமுத்து, மாவட்ட துணைத்தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் இந்திரன், துணைத்தலைவர் சிவகுமார், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், இைளஞரணி மாநிலச் செயலாளர் என்ஜினியர் ஸ்ரீராம்,

    பொருளாளர் செல்வதுரை, மாவட்ட செயலாளர் நாகேந்திரன், எம்பயர் கணேஷ், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீராம் சங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் ஹரிக்குமார், மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார்,

    பொதுச்செயலாளர்கள் வீரமணி, குண்டு கோபால், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரேகா, விவசாய அணி மாவட்ட தலைவர் சக்திவேல், தரகு மேலாண்மை மாநில செயலாளர் சிட்டிபாபு, மண்டலச் செயலாளர்கள் புருஷோத்தமன், மல்லி செல்வம், பிரசாத், பழனிக்குமார், அருண், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பெட்ரோல், டீசல், மீதான வாட் வரியை குறைக்கவில்லை.
    • தமிழகம் முழுவதும் நடைபெறும் லாக் - அப் மரணங்கள், கொலை கொள்ளைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    மடத்துக்குளம் :

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பா.ஜ.க. சார்பில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி தலைமையில் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு உடுமலை நகரத்தலைவர் எம்.கண்ணாயிரம் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பி.கனகசபாபதி, கர்னல் பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். உண்ணாவிரத போராட்டத்தின் போது திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பெட்ரோல், டீசல், மீதான வாட் வரியை குறைக்கவில்லை. மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படவில்லை.தமிழகம் முழுவதும் நடைபெறும் லாக் - அப் மரணங்கள், கொலை கொள்ளைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அரசு போக்குவரத்துக்கு கழக ஊழியர்களுக்கு தீபாவளி ஸ்வீட் பாக்ஸ், தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஹெல்த் மிக்ஸ், பிஜிஆர் எனர்ஜி, ஜி ஸ்கொயர் உள்ளிட்ட ஊழல்களை கண்டித்து இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

    மேலும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு செய்யாமல், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா, போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சட்ட விரோத விற்பனையை அதிகரித்துக் கொண்டிருப்பதை கண்டித்தும் , தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்காததை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் தொடரும் என்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

    உண்ணாவிரத போராட்டத்தில் உடுமலை நகர முன்னாள் தலைவர் பி.என்.ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் ஆடிட்டர் ஏ.வடுகநாதன், முன்னாள் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் குரு பிரசாத், மாவட்ட மகளிர் அணி தலைவர் கார்த்திகா, மாவட்ட மருத்துவ அணி தலைவர் விஜய் கண்ணா, பிரச்சார பிரிவு தலைவர் சி.ஆர்.சின்ராஜ், மாவட்ட பட்டியல் அணி தலைவர் சித்தார்த், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் பாலகுரு, மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் விஷ்ணு, உடுமலை நகர பொருளாளர் எம்.ஐயப்பன் உள்ளிட்ட மாவட்ட, மண்டல, கிளை கழக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரே தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட தலைவர் . செந்தில்வேல் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாநில விவசாய அணி தலைவர் ஜி. கே. நாகராஜ் மற்றும் முன்னாள் எம்.பி., கார்வேந்தன் மற்றும் மாவட்ட,மாநில, ஒன்றிய நகர, அணிப்பிரிவு நிர்வாகிகள், 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×