என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "female employee"
- நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
- சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார்.
திருப்பூர்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 39 வயது பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கி அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தனது கணவன்-மகனுடன் சேர்ந்து வாழ விரும்பினார். இதற்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
அப்போது யூ டியூப்பில் பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜூன் கிருஷ்ணன் என்ற சாமியார் மாந்திரீகம் மூலம் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வீடியோ க்களை பார்த்துள்ளார். இதையடுத்து கணவரை தன்னுடன் சேர்த்து வைப்பதற்காக சாமியார் அர்ஜூன் கிருஷ்ணனின் வராகி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமியாரிடம் நடந்த விவரத்தை கூறியதுடன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
அப்போது கணவன் மற்றும் மகனை சேர்த்து வைப்பதற்கான பரிகாரங்கள் செய்ய முன்பணமாக ரூ.10 ஆயிரம் கட்டுமாறு அர்ஜூன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் ரூ.10ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார். கட்டிய சிறிது நாட்களுக்கு பின் பரிகாரம் செய்ய அதிக செலவாகும். ரூ.1.50 லட்சம் கொடுத்தால்தான் பரிகார பூஜைகளை ஆரம்பிக்க முடியும் என சாமியார் தெரிவித்துள்ளார்.
கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் அந்த பெண் தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி பணத்தை சாமியாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு சாமியார் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அர்ஜூன் கிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற நிலையில் அந்த பெண்ணை , சாமியார் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் மேற்கண்ட விவரங்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி 50 பெண்களிடம் பணம் பெற்று சாமியார் ஏமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாமியாரை கைது செய்து விசாரித்தால் இந்த சம்பவத்தில் மேலும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
- ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகிறார்கள்.
- காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் நேருநகர் அருகே, வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏராள மான பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில், வட்டார வளர்ச்சி அளவிலான கூட்ட மைப்பு பெண் ஊழி யர்களிடம், அவர்களின் மேல் அதிகாரியாக, வட்டார வளர்ச்சி அலு வலக இணைப்பு அதிகாரி மகேஸ் குமார் (வயது36) வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு கீழ் வேலை செய்யும் பெண் ஊழியரு குளை, தனது வீட்டு வேலை களை செய்யச் சொல்வது, ஆபச மாக பேசுவது போன்ற வேலைகளை செய்யச் சொல்வதாக கூறப்படு கிறது. மேலும், முடியாது என மறுக்கும் பெண்கள் குறித்து, மேல் அதிகாரி களிடம் தவறான புகார் களை அளித்து, வேலையை விட்டு நீக்கிவிடு வேன் என மிரட்டியதாக கூறப்படு கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல், 40 வயது திருமணம் ஆன பெண் ஊழியர் ஒருவரை சொந்த வேலைகளை செய்ய சொன்னபோது, அவர் முடியாது என மறுத்தால், அந்த பெண் ஊழியரை கடுமையாக பேசி, உன்னை உடனே வேலையை விட்டு நீக்கு கிறேன் என மிரட்டியதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அப்பெண் ஊழியர், அலுவலகத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த ஊழியர்கள், அவரை காரைக் கால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் காரைக்கால் மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், காரைக்கால் வட்டார வளர்ச்சி அவலு வக இணைப்பு அதிகாரி மகேஸ்குமார், பெண் ஊழி யர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, சொந்தவேலை செய்ய சொல்லி மிரட்டுவது, ஆபச மாக பேசுவது, கை, கால் களை அமுக்க சொல்வது என தொடர்ந்து இன்னல் கொடுத்து வருகிறார். இது குறித்து அந்த அதிகாரியின் அத்துமீறல் பேச்சு பதிவு செய்யப் பட்டுள்ளது. எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி யுள்ளனர். இது காரைக்கா லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆட்டோவில் சென்ற ஐ.டி. பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கவிதாவின் உறவினர் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
தென்காசி மாவட்டம் புளியங்குடி சுப்பிரமணியன் தெருவை சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகள் ரபீனா பாத்திமா (வயது24). இவர் மதுரை இலந்தைகுளத்தில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலை முடிந்து மேலூர் பைபாஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ஆட்டோவில் சீருடை அணியாமல் மேலும் 2 பேர் பயணம் செய்தனர்.
சிறிதுதூரம் சென்றதும் அவர்கள், ரபீனாபாத்திமா விடம் இருந்த 2 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு, அவரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கிவிட்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ரபீனாபாத்திமா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் யார்? என்று போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கவிதா (43) சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், வீட்டில் வைத்திருந்த 5¾பவுன் நகைகளை திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து கவிதா கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். மேலூர் வெள்ளாளபட்டியைச் சேர்ந்த உறவுக்காரர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக தனது புகாரில் தெரிவித்திருந் தார். அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கவிதாவின் உறவினர் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிதி நிறுவன பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கலங்காபேரி புதூரை சேர்ந்தவர் பாண்டி.இவரது மனைவி ராமேஸ்வரி(வயது 25) இவர் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதே நிதி நிறுவனத்தில் சங்கர பாண்டியா புரத்தைச் சேர்ந்த ரவி (35) என்பவரும் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனத்தில் இருந்து தனிநபருக்கு ரூ.46ஆயிரம் கடன் வழங்கியது போல் ஆவணம் தயார் செய்து பணத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் ராமேஸ்வரி மற்றும் ரவிக்கு இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரவி, ராமேஸ்வரியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது உறவினர் பொன் குமார் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதுபற்றி அறிந்த ராமேஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவி மற்றும் ராமேஸ்வரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நிதி நிறுவனத்தில் இருந்து முறைகேடு செய்த பணத்தை செலுத்தி விட வேண்டும் என்றும் ,ரவி அனுப்பிய ஆபாச படத்தை அழித்துவிட வேண்டும் என்றும் உறுதி வாங்கினர்.
இதைத் தொடர்ந்து சம்சிகாபுரம் பகுதியில் உறவினருடன் சென்ற ரமேஸ்வரியை, ரவி வழிமறித்து ரூ.46 ஆயிரம் தர முடியாது என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் .
இது குறித்து ராமேஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தா.ர் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை தேடி வருகின்றனர்.
- ஜோஸ்வின் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
- ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டாரா?
கடலூர்:
கடலூர் சாவடியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி ஜோஸ்வின் (வயது 42). இவர் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயக்க நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஜோஸ்வின் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ஜோஸ்வினுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக விடுமுறையில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 18-ந் தேதி முதல் மீண்டும் மருத்துவ விடுப்பு நீடிக்க வேண்டும் என அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகள் விடுப்பு தரவில்லை என கூறப்படு கிறது. இதன் காரணமாக ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார்.
- கோர்ட்டு வளாகத்தில் சிறுநீர் கழித்து ஒழுங்கீனமாக செயல்பட்டுள்ளார்.
கோவை:
கோவை காந்திபுரம் சாஸ்திரி வீதியை சேர்ந்தவர் கபாலி என்கிற இளமுருகன் (வயது 43). கூலி தொழிலாளி. இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு விசாரணை கோவை கோர்ட்டில் நடந்து வருவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், கபாலி கோவை கோர்ட்டுக்கு சென்றார். அப்போது அவர் கோர்ட்டு வளாகத்தில் சிறுநீர் கழித்து ஒழுங்கீனமாக செயல்பட்டுள்ளார். இதனை குற்றவியல் நீதிமன்ற தலைமை கிளார்க் சுமித்ரா என்பவர் கண்டித்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கபாலி தகாத வார்த்தைக ளால் பேசி கோர்ட்டு ஊழியர் சுமித்ராவுக்கு மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து சுமித்ரா ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகா ரின் பேரில், போலீசார் மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து கபாலி எ ன்கிற இளமுரு கனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
.
- கடலூர் அருகே மின்சாரத்துறை பெண் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தனது மகள் திருமணத்திற்காக நத்தப்பட்டு மின்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த கோடீஸ்வர ஆனந்த் என்பவரிடம் பணம் கேட்டு உள்ளார்.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 51). இவர் தமிழ்நாடு மின்சாரத் துறையில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகள் திருமணத்திற்காக நத்தப்பட்டு மின்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த கோடீஸ்வர ஆனந்த் என்பவரிடம் பணம் கேட்டு உள்ளார். அவரிடம் பணம் இல்லாததால், மகாலட்சுமி தொடர்ந்து பணம் கேட்டதற்காக தன்னுடைய சம்பள வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாய் லோன் எடுத்து மகாலட்சுமிக்கு வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் கோடீஸ்வர ஆனந்த் பலமுறை மகாலட்சுமியிடம் தான் வழங்கிய 4 லட்சம் ரூபாய் பணத்தை வழங்குமாறு வலியுறுத்தி வந்தார். ஆனால் மகாலட்சுமி பணம் தராமல் காலம் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோடீஸ்வர ஆனந்த் மீண்டும் பணம் கேட்டதற்கு பணம் தர முடியாது என மகாலட்சுமி கூறி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் மகாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருத்தாசலம் அருகே சத்துணவு பெண் ஊழியரை குத்திக்கொன்றது ஏன் என்று சரண் அடைந்த கணவன் பரபரப்பு தகவல் அளித்தார்.
- ராஜலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலுார்:
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆவினங்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், (வயது32), கொத்தனார். அவரது மனைவி ராஜலட்சுமி (வயது 25). ராஜலட்சுமி, கம்மாபுரம் அரசு தொடக்க பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்தார். எனவே கணவன்-மனைவி கம்மாபுரத்தில் உள்ள ராஜலட்சுமியின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில், இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்றும் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினை உருவானது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிப்போனது.
அத்திரமடைந்த நாகராஜ் வீட்டில் இருந்த கத்தியால் மனைவி ராஜலட்சுமியின் கழுத்து, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். மனைவியை கொலை செய்த கத்தியோடு, அருகில் இருந்த கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் நாகராஜ் சரணடைந்தார். கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து, கொலைக்கான காரணம் குறித்து, கணவர் நாகராஜிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நடந்த விவரத்தை அவர் தெரிவித்தார்.
வளசரவாக்கம் வீரப்பாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தேவராஜ் (70). டவுன் பஞ்சாயத்து என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கிண்டி போரூர் டிரங்க் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் மசாஜ் செய்வதற்காக சென்ற போது அங்கு பணிபுரிந்த ராணி என்பவர் அறிமுகமானார். இதை தொடர்ந்து தேவராஜ் வீட்டிற்கே சென்று ராணி மசாஜ் செய்து வந்தார்.
இந்த நிலையில் ராணி நேற்று காலை தேவராஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் வங்கியில் லோன் எடுப்பது குறித்து ஆலோசனை கேட்க வந்ததாக கூறி பேசிவிட்டு சென்றார்.
அதன் பின் தேவராஜ் தனக்கு சொந்தமான நிலத்தை விற்ற பணமான ரூ.8 லட்சத்தை வங்கியில் போடுவதற்காக பணம் இருந்த பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பணப்பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பணத்தை ராணி கொள்ளையடித்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தப்பி ஓடிய மசாஜ் சென்டர் ஊழியர் ராணியை தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மவுசமி கவுதம்(வயது 35). திருமணம் ஆன இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இவர் இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். இவருக்கும், இவருடன் பணிபுரியும் சிலருக்கும், விமான நிறுவனம் சார்பில் தென் மேற்கு டெல்லியில் உள்ள குர்கான் நகரில் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக குர்கான் சுசாந்த் லோக் பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து அவர் பயிற்சிக்கு சென்று வந்தார். அதன்பின்பு கடந்த வியாழக்கிழமை இரவு விடுதியில் உள்ள தனது அறைக்கு உறங்கச் சென்றார்.
நேற்றுமுன்தினம் வெகு நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விருந்தினர் இல்ல ஊழியர்கள் கதவை தட்டினர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் மவுசமி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு, அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பயிற்சியை முடித்து மவுசமி வெள்ளிக்கிழமை அசாம் செல்ல திட்டமிட்டு இருந்துள்ளார். ஆனால் அப்படிச் செல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். துப்பட்டாவை பயன்படுத்தி அவர் தூக்குப் போட்டு உள்ளார் அவருடைய உறவினர்கள் வந்த பிறகு பிரேத பரிசோதனை நடத்தப்படும். இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார். #Airlines #FemaleEmployee #Suicide #MausumiGautam
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மொங்கம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பரமேஷ். இவருடைய மனைவி சுமதி (39).
இவர் பெள்ளாதி கூட்டுறவு கடன் வசதி சங்கத்தில் அலுவலக ஊழியராக வேலை பார்த்து வந்தார். சுமதி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காரமடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சக்தி வேல், சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சுமதி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மோசடி புகார் கூறியதால் சுமதி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சுமதி வேலை பார்த்த கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக மனோகரன் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகை மோசடி நடைபெற்றதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து செயலாளர் மனோகரன் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மனோகரன் கூட்டுறவு சங்கத்திற்கு வந்துள்ளார். அப்போது சங்க உறுப்பினர்கள் அவரை முற்றுகையிட்டு உள்ளனர். அவர்களிடம் கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை பார்க்கும் சுமதியும் மோசடி செய்துள்ளார் என கூறிவிட்டு மனோகரன் அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து பெள்ளாதி கிராமத்தை சேர்ந்த நசீர், சண்முகம், முகேஷ் வெங்கட், தொட்டி பாளையம் ராஜேந்திரன், ஆண்டவன் முருகேஷ், கனகராஜ் ஆகிய 6 பேர் சுமதியை தகாத வார்த்தைகளால் திட்டியதும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து கூட்டுறவு சங்க செயலாளர் மனோகரன் உள்பட 7 பேர்மீது சுமதியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்