என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishermen strike"

    • பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
    • வெளிமாவட்ட மீனவர்கள் வந்து சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு எச்சரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த தொழிலை நம்பி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இந்த மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு, கட்டு மரங்களில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.

    இதனிடையே கடலில் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    இதற்கு ஒருதரப்பை சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். என்றாலும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் கணடிப்பாக உள்ளதால் சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையே வெளி மாவட்ட மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கருதுகிறார்கள். இந்த வலையை பயன்படுத்தினால் மீன்வளம் அழியும் என்று அவர்கள் மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். வெளிமாவட்ட மீனவர்கள் வந்து சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு எச்சரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மீன்பிடி தளங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் மீனவ கிராமங்களில் ஊர்கூட்டம் நடத்த தயாராக உள்ளனர். மேலும் மீனவர்கள் போராட்டத்தால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க மீனவ கிராமங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    ராமேசுவரத்தில் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் மீன்களின் விலை சற்று உயர்ந்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் ரோந்து கப்பல்களையும், மீனவர்களின் படகுகள் மீது மோதச்செய்தது.

    இந்த விபத்தில் முனியசாமி என்ற மீனவர் கடலில் விழுந்து இறந்தார். இலங்கை கடற்படையினரின் இந்த செயலை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று (15-ந் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்றும் 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடருகிறது. இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. 5,000 மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

    ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே மீன் பிடிக்கச் செல்வதால் மீன் வரத்து குறைவாக இருந்தது. இதனால் மீன் விலை சற்று உயர்ந்துள்ளது.

    பொங்கலைத் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் மீனுக்கு அதிக தேவை உள்ளது. ஆனால் தற்போது ராமேசுவரத்தில் வேலை நிறுத்தம் நடந்து வருவதால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.

    இலங்கை கடற்படையை கண்டித்தும் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். #RameswaramFishermen

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த 28-ந் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் காட்டுராஜா, வர்கீஸ், ராமன் உள்பட 4 பேர் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    மேலும் வேலாதயுதம் என்பவருக்கு சொந்தமான படகை சேதப்படுத்தி மூழ்கச்செய்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த செயல் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது குறித்து நேற்று மீனவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இன்று (1-ந் தேதி) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    வேலை நிறுத்தத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகமும் வெறிச்சோடி காணப்பட்டது.

    இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் தவறான காரணங்களை கூறி மீனவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் படகுகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.

    இதற்கு மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசிடம் கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றனர். #RameswaramFishermen

    டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டிப்பது. டீசல் விலையேற்றத்தால் மீன்பிடி தொழில் முற்றிலும் நஷ்டமாகி வருகிறது. அதனால் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வேண்டும். விசைப்படகு ஒன்றிற்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும். சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் அனைத்து விசைப்படகு மீனவர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நேற்று முதல் நாகை மாவட்டத்தில் அனைத்து விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர். வேலைநிறுத்த போராட்டத்தால் நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் துறைமுக கரைகளில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் நாகை கடுவையாற்றுக்கரையில் ஏராளமான விசைப் படகு மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்திவைத்துள்ளனர்.

    வேலைநிறுத்த போராட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அந்த ஆர்ப்பாட்டத்திலேயே அடுத்த கட்ட போராட்டத்தினை அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
    இலங்கை ராணுவத்தை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #Fishermenstrike #Fishermen

    கன்னியாகுமரி:

    ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடித்து அவர்களது உடமைகளை பறிமுதல் செய்வதை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் இன்று மாநிலம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.

    இந்த மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதனால் விசைப்படகுகள் சின்ன முட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வெளியூர் வியாபாரிகள் இங்கு வராததால் துறைமுகம் மற்றும் மீன் சந்தை வெறிச் சோடி காணப்பட்டது. வருகிற 8-ந்தேதிக்கு முன்பு இதில் நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். #Fishermenstrike #Fishermen

    டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் தொடங்கி உள்ளனர். #Fishermenstrike #Fishermen

    ராமேசுவரம்:

    டீசல் விலையை குறைக்க வேண்டும், இலங்கை சிறையில் வாழும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    தமிழக மீனவர் சங்க செயலாளர் சேசுராஜா தலைமையில் கடந்த 30-ந் தேதி நடந்த கூட்டத்தில் 3-ந் தேதி போராட்டத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டது.

    அதன்படி இன்று ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். இதனால் 6 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வில்லை.


    இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க நிதி உதவி வழங்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றப்படா விட்டால் 8-ந் தேதி உண்ணாவிரதம் இருப்பது என்றும் மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #Fishermenstrike #Fishermen

    பெட்ரோல்,டீசல் விலை உயர்வு எதிரொலியாக பாம்பன் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #fishermenstrike #FuelPrice

    ராமேசுவரம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடந்த 10 நாட்களாக மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடலில் மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு 1800 லிட்டர் டீசலுக்குத்தான் மானியம் வழங்கப்படுகிறது. அதன் பிறகு தேவைப்படுபவர்கள் கூடுதல் விலை கொடுத்து தான் டீசல் வாங்க வேண்டும். கூடுதல் விலை கொடுக்க வேண்டியதிருப்பதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    டீசல் விலையை உடனே குறைக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 105 விசைப்படகுகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #fishermenstrike #FuelPrice

    இலங்கை கடற்படையயை கண்டித்து 3-வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #Fishermenstrike

    ராமேசுவரம்:

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் மண்டபத்தை சேர்ந்த 16 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை கடற்படையை கண்டித்தும் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட 186 விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய- மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 9-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

    3-வது நாளான இன்றும் வேலை நிறுத்தம் நீடிக்கிறது. இதன் காரணமாக 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன. 3 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இதற்கிடையில் 2-வது நாளாக இன்றும் பாம்பன், ராமேசுவரம் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசிவருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவளத்துரை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். சூறாவளியால் பொரும் பாலான படகுகள் கடலுக்கு செல்லவில்லை. ஆனாலும் சில மீனவர்கள் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கடலுக்கு சென்றனர். #Fishermenstrike

    இலங்கை கடற்படையயை கண்டித்து 2-வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #Fishermenstrike

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களையும், விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் செல்வது அடிக்கடி நடந்து வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என மீனவ சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரம், மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

    இவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மீன்பிடி தடைக்காலத்திற்கு பின் இலங்கை கடற்படையினர் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அங்கு பராமரிப்பின்றி வைக்கப்பட்டுள்ள 187 விசைப் படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

    இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி நேற்று முதல் ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக 650 விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் வெறிச் சோடி காணப்பட்டது. இன்றும் 2-வது நாளாக மீனவர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

    இது குறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி தடைகாலம் முடிந்து ஆர்வத்துடன் மீன்பிடிக்கச் சென்றால் இலங்கை கடற்படை எங்களை தாக்கி விரட்டியடிக்கிறது. இதனால் உயிர் பயத்துடனேயே தொழிலுக்கு செல்ல வேண்டியுள்ளது.

    மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர். #Fishermenstrike

    இலங்கை கடற்படையயை கண்டித்து இன்று ராமேசுவரம் துறைமுக விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம். #Fishermenstrike

    ராமேசுவரம்:

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு எல்லை தாண்டி வந்ததாக கூறி மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த 12 மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். மேலும் மீனவர்களையும் தாக்கி விரட்டியடித்தனர்.

    அங்குள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் சங்கங்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் இலங்கை கடற்படையயை கண்டித்து இன்று ராமேசுவரம் துறைமுக விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடை பெற்றது. இதனால் 110 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதில் பங்கேற்றனர்.

    மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்காவிடில் எங்களது போராட்டம் தீவிரமடையும் என மீனவர் சங்கத்தினர் தெரிவித்தனர். #Fishermenstrike

    ×