search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishing village"

    • நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார்
    • பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார்

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். அவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் இன்று அவர், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார். அப்போது பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    எஸ்.ஜி.எம். ரமேஷை வரவேற்க வைத்த பட்டாசுகள் வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையானது. இதில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் அலுவலர், வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

    நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் எரிந்த வீடுகளை பார்வையிட வந்த நிலையில், அவரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    • வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    • தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கடலோர மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள புயல், சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிபெருக்கி அனைத்தும் தயாராக பயன்படுத்தும் நிலையில் இயங்கி வருகிறதா என ஆய்வு செய்ய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட புயல் எச்சரிக்கை பிரகடன ஒலிப்பான் கருவிகள் பயன்பாட்டில் தயாராக இருக்கிறதா? அதில் தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் உள்ளதா என அந்தந்த பகுதி தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • மீனவ கிராமத்தில் குடிநீர் தேக்கத்தொட்டி பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது.
    • குடிநீர் பிரச்சனையால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் 3இடங்களில் குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது.

    திருமுல்லைவாசல் ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி ஆளுனர் வருகை விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ரோட்டரி துணை ஆளுனர் ஜி.வி.என்.கணேஷ் தலைமை வகித்தார்.

    தலைவர் பி.பிரபாகர், செயலாளர் வி.தேவேந்திரன், பொருளாளர் என்.பைசல்அலி முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் நல்ல குடிநீர் வழங்கும் விதமாக போர்வெல் அமைத்து குடிநீர் எடுத்து குழாய் மூலம் மூன்று இடங்களில் குடிநீர் தேக்கத்தொட்டி வாயிலாக குடிநீர் வழங்கிட பயன்பாட்டிற்கு மாவட்ட ஆளுனர் ஜி.செங்குட்டுவன் அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுனர் ராமன் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார் பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
    • 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார்.

    சென்னை:

    சென்னை கோவளத்தில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். 27 வயதான இவர் அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வ தேச அளவில் பல வெற்றிகளை குவித்துள்ளார்.

    அலைச்சறுக்கு பயிற்சியாளராக இருந்த ராஜசேகருக்கு மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுமார் 1 வருட காலம் மலையேற்றத்திற்கான பயிற்சிகளை எடுத்தார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிக்க வேண்டும் என்பது அவரது கனவு.

    இதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். 6 மலைகளில் ஏறி அதற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

    எவரெஸ்ட சிகரத்தில் ஏறும் போது கடுமையான பனி, குளிரை தாங்க வேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங், நேபாள பகுதிகளில் தங்கி உடலை யும், மனதையும், குளிருக்கு தயார் செய்தார். இதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தயார் ஆனார்.

    கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். இதன் மூலம் அவர் தனது கனவை நனவாக்கியுள்ளார்.

    ஒரு மாதத்துக்கும் மேலான பயண அனுபவத்தில் பல கடுமையான சோதனைகள், தடைகளை கடந்து எவரெஸ்ட் சிகரத்தை ராஜசேகர் அடைந்து சாதித்து காட்டியுள்ளார்.

    • புதுவை காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பிள்ளைச்சாவடி கிராமத்தில் இரு தரப்பினரிடையே நிலவி வந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக நீண்ட காலமாக புதிய கிராம பஞ்சாயத்தார் நியமனம் செய்யப்படவில்லை.
    • அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரத்திடம் முறையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பிள்ளைச்சாவடி கிராமத்தில் இரு தரப்பினரிடையே நிலவி வந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக நீண்ட காலமாக புதிய கிராம பஞ்சாயத்தார் நியமனம் செய்யப்படவில்லை.

    இதனால் கிராம கோவில் திருப்பணிகள் போன்ற முக்கியப் பணிகள் முடங்கின.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரத்திடம் முறையிட்டனர். கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு இருதரப்பினரிடையே எம்.எல்.ஏ. சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி கிராமத்தில் அமைதியான சூழல் நிலவிடவும் புதிய கிராம பஞ்சாயத்தார்களை நியமனம் செய்திடவும் வழிவகை செய்தார்.

    இதன் விளைவாக புதிதாக கிராம பஞ்சாயத்தார் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    கிராம பஞ்சாயத்தார் எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி கிராம முன்னேற்றத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயல்பட்டு பல ஆண்டு காலமாக முடங்கிக் கிடக்கும் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கல்யாண சுந்தர எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    ×