search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood water"

    • பல வீடுகள் இன்னும் தண்ணீருக்குள்ளே இருக்கின்றன.
    • வெள்ளாளன்விளை மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 16, 17,18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக உடன்குடி அருகே உள்ள சடையநேரிகுளத்தில் கீழ்புறம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் வெள்ளாளன்விளை, வட்டன்விளை, செட்டிவிளை என்ற சிதம்பரபுரம், மருதூர் கரை, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், சீயோன்நகர், லட்சுமிபுரம், செட்டியாபத்துபோன்ற பகுதிகளெல்லாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது.

    பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டது. தற்போது தண்ணீர் வடிந்து போக்குவரத்து சீரானாலும் வெள்ளாளன்விளை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாளன்விளை நயினார்புரம் வட்டன்விளை, சிதம்பரபுரம் என்ற செட்டிவிளை ஆகிய பகுதியில் உள்ள மக்கள் இன்னும் வெள்ளநீருடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்.


    வெள்ளாளன்விளையில் பல வீடுகள் இன்னும் தண்ணீருக்குள்ளே இருக்கின்றன. 60 நாட்களை கடந்தும் தண்ணீரில் மூழ்கி விட்டது. இந்த வீட்டில் உள்ளவர்கள் அருகில் உள்ள கோவில்களிலும், உறவினர்கள் வீட்டிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த தண்ணீரை இன்னும் அப்புறப்படுத்த முடியவில்லை, இதனால் வெள்ளாளன்விளை மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

    பனைமரத் தொழிலாளர்கள், தென்னை, வாழை விவசாயம் மற்றும் பல்வேறு விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் தோட்டத்திற்கு எப்படி போவது? தோட்டத்தில் உள்ள நீர் இறைக்கும் பம்பு செட் மோட்டார் பயன்படுமா? என வருத்தத்தில் உள்ளனர்.

    அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் ஆலோசனையின் படி உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங் வெள்ளாளன்விளை ஊராட்சி மன்ற தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் நீர் இறைக்கும் பம்புசெட் மோட்டார் மூலமாக கடந்த 5 நாட்களாக இரவு பகலாக 2 மின் மோட்டார் முலம் தண்ணீரை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னும் தண்ணீர் குறைந்தபாடு இல்லை.

    மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் 2 மாதங்களை கடந்து தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

    • 3 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
    • வெள்ள நீர் வராமல் பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18-ந் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது.

    இந்நிலையில் உடன்குடி அருகே உள்ள சடையநேரி குளத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக லெட்சுமிபுரம், மாணிக்கபுரம் பகுதி சாலைகளில் கடந்து பத்தாங்கரை வழியாக செட்டிவிளை, வட்டன்விளை, வெள்ளான்விளை, பரமன்குறிச்சி கஸ்பா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.

    கடந்த 45 நாட்களாக குடியிருப்பு பகுதிகளையும், சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து வெள்ளாளன்விளை, வட்டன்விளை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    24 மணிநேரமும் ஜெனரேட்டர் உதவியுடன் இரவு, பகலாக தொழிலாளர்கள் பரமன்குறிச்சி வெள்ளாளன்விளை சாலையில் சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ள நீரை சீயோன்நகர் தேரிப்பகுதியில் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றி வந்த நிலையில் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சி தோல்வியடைந்தது.

    மேலும் பரமன்குறிச்சி-வெள்ளாளன்விளை, சீயோன்நகர், தண்டுபத்து, உடன்குடிக்கு நேரடியாக செல்ல முடியாமல் சுற்றி சென்று வந்தனர்.


    இதனையடுத்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்ற முடியாமல் தற்காலிகமாக அந்த திட்டம் கைவிடப்பட்டு பல ஆயிரம் டன் ராட்சத கற்களை கொண்டு சாலையை சீரமைத்தனர்.

    இதனால் போக்குவரத்து மட்டுமே நடந்து வருகிறது. எனினும் வெள்ளான்விளை, வட்டன்விளை பகுதியில் இன்றளவும் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளான்விளையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்கள் உறவினர்கள் வீடுகளிலும், ஆலயத்தின் பகுதியிலும் தங்கியிருந்து வருகின்றனர்.

    விவசாயிகள் தென்னை, பனை, வாழை போன்ற தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர், விவசாய பணியை தொடங்க முடியாமலும் உள்ளனர்.

    இந்நிலையில் தொடர்ந்து அந்த வெள்ளாளன்விளை, வட்டன்விளை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் அளித்து வந்தனர். இச்சூழ்நிலையில் முதல்வரின் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடங்கப்பட்டு திருச்செந்தூர் பகுதியில் மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் ஒருபகுதியாக வெள்ளாளன்விளை பகுதியில் அவர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பொது மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் வெள்ள நீர் வராமல் பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

    அப்போது அவருடன் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உலகநாதன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., குருச்சந்திரன், வெள்ளாளன்விளை ஊராட்சி மன்றதலைவர் ராஜரெத்தினம் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
    • அடித்துச் செல்லப்பட்ட 12 பேரில் நான்கு பேர் உயிர் தப்பினர்.

    தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக, முலுகு மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசித்து வந்த 12 பேர் நேற்று பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் உயிர் தப்பினர்.

    காணாமல் போன 8 பேரின் உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன.

    இதற்கிடையே, ஜூலை 22 முதல் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் எட்டு பேர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அந்த நபர் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு.
    • கடந்த வாரத்தில் செனாப் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்கள் மற்றும் பகுதிகளை மூழ்கடித்தது.

    பாகிஸ்தான், லாகூரிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பஞ்சாபின் கசூர் மாவட்டத்தில் உள்ள கந்தா சிங் வாலா அருகே

    சட்லஜ் ஆற்றின் வெள்ளத்தில் பாகிஸ்தானுக்குள் அடித்துச் செல்லப்பட்ட இந்தியக் குடிமகன் ஒருவர் உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மீட்புக்குழு 1122ன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " 50 வயதுடைய இந்தியர் காது கேளாதவர் மற்றும் சைகை மொழி மூலம் தொடர்பு கொள்கிறார். அவர் ஒரு இந்து என்று கூறினார். வெள்ள நீர் அவரை இங்கு இழுத்துச் சென்றது" என்றார்.

    இதைதொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அந்த நபர் புலனாய்வு அமைப்பிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

    சமீபத்தில் சட்லஜ் ஆற்றில் கந்தா சிங் வாலா என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் கந்தா சிங் வாலாவை ஒட்டிய தாழ்வான பகுதிகள் பாதிக்கப்பட்டன.

    இதற்கிடையே, "கடந்த வாரத்தில் செனாப் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்கள் மற்றும் பகுதிகளை மூழ்கடித்தது. இதன் காரணமாக 48,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று பஞ்சாப் அரசு கூறியுள்ளது.

    • நெல் பயிரிடப்பட்ட நிலங்களில் மழைநீர் புகுந்தது.
    • நீர் புகுந்ததால் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியது.

    கடலூர்:

    வடலூர் அருகே உள்ள மருவாய், வாலாஜ ஏரியும் அதன் உள்பகுதியில் உள்ள நைனார்குப்பம், மேலக் கொளக்குடி, கருங்குழி உள்ளிட்ட பகுதி யில் உள்ள நெல் பயிரிட ப்பட்ட நிலங்களில் மழைநீர்பு குந்தது. இதனால் நெற்பயி ரிகள் அழுகும்நிலையில் உள்ளது.

    மேலும் பரவனாற்று ங்கரை ஓரம் உள்ள ஓணான்குப்பம், அந்தாரசி பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழை நீரும் மழைநீருடன் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் இருந்து வெளிேயற்றப்படும் நீரால் பரவனாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகளின் நெல் பயிரி டப்பட்ட விளைநில கங்க ளில் நீர் புகுந்ததால் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியது. இதனால் நெல் பயிர்கள் அழகும் நிலையில் உள்ளன.

    • ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டு, 1,600 ஆண்டுகள் பழமையானது.
    • கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கோவில் கருவறை வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    திருமழபாடி:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டது. 1,600 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் குறித்த தகவல் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இக்கோவிலில் நடைபெறும் நந்திய பெருமான் திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக அதன் கரையில் உள்ள இந்த கோவிலுக்குள் ஊற்று நீர் புகுந்தது. இதைத் தொடர்ந்து சுவாமி கருவறை வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் இதனால் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

    பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பின்னர் இந்த கோவிலுக்கு தற்போது அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில்,கோவிலின் உள்ளே தேங்கி உள்ள நீரை மோட்டார் மூலம் வெளியேற்ற வேண்டும் என்று அரசுக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரால் திட்டு கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.
    • அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி. பாரதி சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரால் திட்டு கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையை பாதிக்க ப்பட்ட கிராமங்களுக்கு அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி. பாரதி சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு போர்வை, பிஸ்கட் மற்றும் வயதானவர்களுக்கு வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வழங்கினார்.

    அப்போது கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சிவக்குமார், நகர செயலாளர் வினோத், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், நிர்வாகிகள் சிவ.மனோகரன், நாகரத்தினம், சொக்கலிங்கம், மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று காலை கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கோரிகுளம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று காலை கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 28057 கன அடி திறக்கப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தஞ்சையில் உள்ள 20 கண் கல்லணை கால்வாயில் இருந்து செல்லும் தண்ணீர் 5 குளங்களுக்கு செல்லும். தஞ்சை கோரிகுளம், தைக்கால் குளம், மோத்திரப்ப சாவடி குளம், ருக்மணி குளம், நாகை சாலை குளம் ஆகிய 5 குளங்களுக்கு செல்கிறது.

    தற்போது கோரிகுளம் பகுதியில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை காவிரி தண்ணீர் இங்குள்ள 6 வீடுகளை சூழ்ந்தது. இன்று மதியம் வரை 6 வீடுகளையும் தண்ணீர் சுற்றி சூழ்ந்ததால் அங்கு வசித்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கு வசித்த வந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இன்று இரவுக்குள் இந்த வீடுகளை வெள்ள நீர் முழுவதுமாக சூழ்ந்து விடும் என தெரிகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் குளங்கள்- ஏரிகளுக்கு செல்ல முடியாமல் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வருகிறது. #tamilnews
    ×