search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "For free"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • மரக்கன்றுகளின் விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளவும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் இம்மாதத்திற்குள் மகோகனி, செம்மரம், வேங்கை, தேக்கு , ரோஸ்வுட் ஆகிய மரக்கன்றுகள் பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வரவுள்ளது.

    மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தேவைப்படும் மரக்கன்றுகளின் விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளவும் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • வழக்கமாக கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஒரு டன் முலாம்பழத்தை 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கொள்முதல் செய்து கொள்வர்.
    • தற்போது கேரளாவில் மழை பெய்து வருவதால் வியாபாரிகள் வாங்கிச் செல்ல வரு வதில்லை.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே குறிச்சி, கருங்கரடு, சென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் முலாம்பழம் பயிரிட்டுள்ளனர்.

    குருவரெட்டியூர் அடுத்து ள்ள தண்ணீர்பந்தல்பாளையத்தில் முலாம்பழம் விலை வீழ்ச்சியால் வயலில் அழுகும் நிலையில் பொதுமக்கள் பறித்து சென்றனர்.

    தண்ணீர் பந்தல்பாளையத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் தனது வயலில் 1½ ஏக்கர் முலாம்பழம் பயிரிட்டுள்ளார். 50 நாட்களுக்குள் அறுவடைக்கு வரும் முலாம்பழம் கடந்த ஒரு வாரமாக விலை கேட்க ஆள் இல்லாததால் வயலில் அழுகி வருகிறது.

    இது குறித்து விவசாயி சுதாகர் கூறியதாவது:-

    கடந்த ஜூன் மாதம் எனது வயலில் முலாம்பழம் பயிரிடத் தொடங்கினேன். 50 நாட்களுக்கு பிறகு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வியாபாரிகள் யாரும் விலை கேட்க வரவில்லை. வழக்கமாக கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஒரு டன் முலாம்பழத்தை 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கொள்முதல் செய்து கொள்வர்.

    ஆனால் தற்போது கேரளாவில் மழை பெய்து வருவதால் வியாபாரிகள் வாங்கிச் செல்ல வரு வதில்லை. இப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் உள்ளூர் வியாபாரிகளும் விலை கேட்க முன்வருவதில்லை.

    ஈரோடு மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்றால் முலாம்பழம் விலை வீழ்ச்சியால் ஒரு டன் 4 ஆயிரம் வரை விலை போகிறது. இது போக்குவரத்து செலவுக்கு மட்டுமே சரி ஆகி விடுகிறது.

    இதனால் ஒரு வாரமாக அறுவடை செய்யாமல் செடியிலேயே முலாம்பழம் அழுகி வருகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முலாம்பழத்தை இலவசமாகவே பறித்துச் செல்ல விட்டுவிட்டேன்.

    இதற்காக ரூ80 ஆயிரம் வரை உரம், ஆள் கூலி என முதலீடு செய்துள்ளேன். ஏக்கருக்கு 12 டன் வரை முலாம்பழத்தை அறுவடை செய்யலாம். முறையாக விற்பனை ஆகி இருந்தால் 50 நாளில் கூடுதலாக 70 ஆயிரம் வரை கிடைத்திருக்கும். விலை வீழ்ச்சியின் காரணமாக வியாபாரிகள் வராததால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏரிகள், குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.
    • வண்டல் மண் எடுக்க லாரிகளை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் அரங்க சங்கரய்யா, செயலாளர் கோவிந்தன், மாவட்ட தலைவர் சரவணன், வெற்றிமணி மற்றும் நிர்வாகிகள் சேலம் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஏரிகள், குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் வண்டல் மண் எடுக்க டிராக்டர் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற நிபந்தனை சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டிராக்டர் இருப்பவர்களி–டம் டிராக்டர் வைத்திருப்பவர்களிடம் மண் கொண்டு செல்லும் ட்ரெய்லர் பெட்டி இல்லை. வாடகை கட்டுபடியாகவில்லை என்ற காரணம் கூறி வாடகைக்கு வர மறுக்கிறார்கள். தற்போது மழை பெய்துள்ளதால் வண்டல் மண் எடுக்க வாடகை டிராக்டர் கிடைப்பதில்லை.

    குறிப்பிட்ட காலத்துக்குள் மண் எடுத்து பயன்படுத்த வேண்டும் என்பதால் தற்போது உள்ள டிராக்டர் வாகனங்கள் போதுமானதாக இல்லை. அதனால் மண் எடுக்கும் பணிகள் தாமதம் ஆகிறது.

    ஒரு டிராக்டர் வாடகை ஒரு லோடுக்கு ஒரு யூனிட் மட்டுமே சேர்த்து ரூ.1500. 4 டிராக்டர் லோடு கொள்ளும் லாரிக்கு வாடகை 4 யூனிட்டுக்கும் சேர்த்து ரூ.4500 மட்டுமே. லாரியை பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு ரூ.1500 முதல் ரூ.2000 வரை மிச்சமாகிறது.

    மேலும் டிராக்டர் மூலமாக நெடுஞ்சாலைகளில் மண் கொண்டு செல்லும்போது சாலைகளில் கொட்டுகிறது. இதனால் நடைபாதை சாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே வண்டல் மண் எடுக்க லாரிகளை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×