என் மலர்
நீங்கள் தேடியது "Forest officers"
- ஆலங்குளம் செல்லும் சாலையில் அணைந்தநாடார்பட்டி அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
- நேற்றிரவு அந்த பள்ளி அருகில் மெயின்ரோட்டின் குறுக்காக 12 அடி நீள மலைபாம்பு சென்றது
முக்கூடல்:
முக்கூடல் அருகே உள்ளது இடைகால் கிராமம். இங்கு இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் அணைந்தநாடார்பட்டி அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு அந்த பள்ளி அருகில் மெயின்ரோட்டின் குறுக்காக 12 அடி நீள மலைபாம்பு சென்றது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் அம்பை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
- வனப்பகுதியில் 3 கூண்டுகளை வைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.
- திருப்பதி மலைபாதையில் சிறுத்தை ஒன்று 6 வயது சிறுமியை கடித்துக் கொன்றது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. சிவன் கோவில் அமைந்துள்ள மலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதி ஆகும்.
மலையின் கீழ் இருந்து பல கிலோமீட்டர் சென்றால் தான் கோவிலை சென்றடைய முடியம். அங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இதனால் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை மலைபாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கோவில் அருகே உள்ள வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரடி ஒன்று சுற்றி திரிந்தது. இதனைக் கண்ட பக்தர்கள் இதுகுறித்து ஸ்ரீசைலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் கரடியை பிடிக்க கோவில் அருகே வனப்பகுதியில் 3 கூண்டுகளை வைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி ஒன்று சிக்கியது.
இதையடுத்து வனத்துறையினர் கரடியை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். ஏற்கனவே திருப்பதி மலைபாதையில் சிறுத்தை ஒன்று 6 வயது சிறுமியை கடித்துக் கொன்றது.
இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாதுகாப்பாக அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
- கிராம மக்கள் கயிறு கட்டி பிடித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீராம் நகர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை முதலை குட்டி ஒன்று புகுந்தது. பிளாட்பாரத்தில் அதிக அளவில் பயணிகள் இல்லை. இதனால் முதலை குட்டி பிளாட்பாரத்தில் ஏறி ஊர்ந்து சென்றது.
இதனைக்கண்ட ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து முதலை குட்டியை லாவகமாக பிடித்தனர்.
இந்த குட்டிக்கு 6 மாதம் வயது என தெரிவித்தனர். முதலை குட்டியை பாதுகாப்பாக அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இந்த ரெயில் நிலையம் அருகே உள்ள கிராமத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பெரிய முதலை ஒன்று புகுந்தது. அதனை கிராம மக்கள் கயிறு கட்டி பிடித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை மீட்டு வனப்பகுதியில் விட்டனர். அடுத்தடுத்து முதலைகள் புகுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- இதுபோன்ற சூப்பர் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.
இந்த கோர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் அட்டமாலா வனப்பகுதியில் சிக்கித்தவித்த பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை 8 மணி நேரம் போராடி கேரள வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.
அவரது பதிவில், "இத்தகைய இருண்ட காலத்திலும் இதுபோன்ற சூப்பர் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது என்பதை இவர்களின் வீரம் நமக்கு நினைவூட்டுகிறது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.