என் மலர்
நீங்கள் தேடியது "fraud case"
- செல்போன் செயலி மூலம் மோசடி.
- உடந்தையாக இருந்த மேலும் ஒருவர் கைது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் செல்போன் செயலி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக அவரிடம் கூறினார். மேலும் இதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்கி வருமான வரி செலுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காக கோவில்பட்டி வாலிபரிடம் பணம் கேட்டுள்ளார்.
இதை நம்பிய அவர் ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்து 159-ஐ ஜி.பே மூலம் கொடுத்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி. உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் மோசடியில் ஈடுபட்டது தஞ்சாவூர் ரெட்டி பாளையம் ரோடு ஆனந்தம் நகரை சேர்ந்த ராஜவேல் (வயது 31) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை தூத்துக்குடி போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.
அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், இவருக்கு உடந்தையாக கர்நாடக மாநிலம் பெங்களூரு சிங்கசந்தரா பகுதியை சேர்ந்த கணேசன் (31) என்பரும் இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.
- 1100 கோடி மோசடி வழக்கை காவல் உதவி ஆணையர் உமா மகேஸ்வர ராவ் விசாரித்து வந்தார்.
- அவருக்கு சொந்தமாக உள்ள 13 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காவல் உதவி ஆணையர் உமா மகேஸ்வர ராவை தெலுங்கானாவின் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
உமா மகேஸ்வர ராவின் வீடு மற்றும் தெலுங்கானா, விசாகப்பட்டினத்தில் அவருக்கு சொந்தமாக உள்ள 13 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
அதில், சுமார் 3.5 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்களும், ரொக்கப்பணமும், தங்கம், வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டது.
தனது பதவியை பய்னபடுத்தி முறைகேடான வழிகளில் இவர் சொத்து சேர்த்துள்ளார் என்ற இவர் மீது குற்றசாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
1100 கோடி அளவில் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக சொல்லப்படும் சாஹிதி இன்ப்ரா மோசடி வழக்கை காவல் உதவி ஆணையர் உமா மகேஸ்வர ராவ் தான் விசாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தின் மத்திய குற்றப்பிரிவில் பொருளாதார குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையராக உமா மகேஸ்வர ராவ் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Senior police officer (ironically) serving as ACP in EOW, CCS #HyderabadPolice, T.S.UmaMaheswarRao, in custody after #ACBOfficials conducted raids on his house & 13 other locations in Telangana & AP (Vizag); Seized
— Uma Sudhir (@umasudhir) May 22, 2024
15 land documents, valuables like gold, silver worth Rs. 3.5 Cr pic.twitter.com/tWkgZc7OuW
- வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிவேதனுக்கு எந்த ஒரு ஒப்பந்த வேலையும் வாங்கி தரவில்லை.
குளித்தலை:
குளித்தலை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் நிவேதன் (வயது 31). இவர் சொந்தமாக தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் இவருக்கு பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இதையடுத்து மணிகண்டன், நிவேதனிடம் தமிழ்நாடு அரசின் எர்த் ஒர்க் காண்ட் ராக்ட் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய நிவேதன், மணிகண்டனிடம் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிவேதனுக்கு எந்த ஒரு ஒப்பந்த வேலையும் வாங்கி தரவில்லையாம்.
வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மணிகண்டன் ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிவேதன் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் குளித்தலை போலீசார் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி லட்சுமி கமலாதேவி மீது வேலை வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஆலோசிக்க வேண்டும்.
- தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது முறைகேடு.
தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என சங்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சங்கத்தில் இருந்து முறைகேடாக ரூ.12 கோடி செலவழித்த தொகையை திரும்ப அளிக்குமாறு பலமுறை கூறியும் விஷால் பதில் அளிக்கவில்லை.
இதனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.
- கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
- மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சான் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி கோவில் இடம் மோசடியில் கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் இறுதியில் வழக்கு பதிவு செய்து காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி.ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும், போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட காரைக்கால் சிவராமன், திருமலைராஜன், காரைக்கால் நகராட்சி நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்தி ஆகியோரை போலீசார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஊ.மங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 7 வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு தடையில்லா சான்று வழங்கியது அம்பலம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிய தடையில்லா சான்று வழங்கியது மோசடி நடந்துள்ளது.
இதையடுதது, ஊ.மங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 2 தலைமை காவலர்களான சங்கு பாலன், ஜோசப் சஸ்பெண்ட் செய்து கடலூர் மாவட்ட எஸ்.பி., ராஜாராமஜ் அதரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
7 வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு தடையில்லா சான்று வழங்கி அவர் பணியில் தொடர்ந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
- மதுரையில் வீடு வாங்குவது தொடர்பாக மோசடி நடந்துள்ளது.
- 2 பெண்கள் உள்பட 4 பேர்மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை தனக்கன்குளம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் திருநகர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், "நான் சண்முகம் தெருவில் உள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்க விரும்பினேன். இதற்காக குணசேகரன், ராஜபாண்டி, குணசேகரன் மனைவி பாண்டி மீனா, ராஜபாண்டி மனைவி பிரியா ஆகியோரிடம் ஒப்பந்தம் செய்திருந்தேன்.
அப்போது செக் பவுன்ஸ் மூலம் எனக்கு வீட்டை விற்காமல் மோசடி செய்து விட்டனர். எனவே போலீசார் இது தொடர்பாக போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சின்னசாமியிடம் மேற்கண்ட 4 பேரும் ஒப்பந்தம் வாயிலாக பணம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் திருநகர் போலீசார் கைது செய்தனர்.
- உரிமையாளர்கள் உள்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
- அபராதமாக ரூ. 3,95 கோடியை செலுத்த வேண்டுமென சிறப்பு நீதிபதி ரவி தீா்ப்பு வழங்கினார்.
நாமக்கல்:
நாமக்கல் டவுன் சேலம் சாலையில் எஸ்.ஆா்.ஒய். என்ற பெயரில் ஈமு நிறுவனம் 2012-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இங்கு ஈமு கோழிப் பண்ணையாளா் திட்டம், விஐபி திட்டம் போன்ற திட்டத்தை நடத்தி வந்த ஐம்புகுமாா், சம்பத், ஸ்ரீதா், திருப்பதி, முபாரக் பாஷா, மேகநாதன், இனுக் ஆன்ட்ரூஸ், சந்தோஷ் ஆகியோா் பொதுமக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகாா் எழுந்தது.
இதனைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டனா். 172 முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ. 4,24 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆா்.ஒய் ஈமு நிறுவனம் மீதும், அதில் தொடா்புடைய 8 போ் மீதும் கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கு விசாரணை முடிவு பெற்றதை அடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஆா்.ஒய். ஈமு நிறுவனம், ஜம்புகுமாா், சம்பத், ஸ்ரீதா், திருப்பதி மற்றும் இனுக் ஆன்ட்ரூஸ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதமாக ரூ. 3,95 கோடியை செலுத்த வேண்டுமென சிறப்பு நீதிபதி ரவி தீா்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முபாரக் பாஷா, மேகநாதன் ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா். இத்தகவலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தாங்கரை அருகிலுள்ள புதுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 29). இவர் மதுரை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
உசிலம்பட்டி கலாம் நகரைச் சேர்ந்த சத்யசீலன் (31) மற்றும் அவரது தாயார் பாண்டியம்மாள் தேவி ஆகியோர் என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி தந்தனர். இதன் அடிப்படையில் நான் அவர்களிடம் ரூ.13 லட்சம் கொடுத்தேன்.
இதையடுத்து எனக்கு மத்திய அரசு நிறுவனத்தின் பணியாணை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எனது நண்பர்களுக்கும் அரசு வேலை வாங்கித்தருமாறு ரூ.15 லட்சம் கொடுத்தனர்.
இதற்கிடையே நான் பணி ஆணையில் உள்ள நிறுவனம் குறித்து விசாரித்தேன். அப்போது அது போலி நிறுவனம் என்பது தெரியவந்தது. நாங்கள் அரசு வேலைக்காக கொடுத்த ரூ.28 லட்சத்தையும் சத்யசீலனும், பாண்டியம்மாள் தேவியும் திருப்பித்தர மறுத்து வருகின்றனர்.
மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
புகார் மனு மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை தனக்கன்குளம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கோட்டூர் கருப்பு என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2014-ம் ஆண்டு என் மனைவி ஜோதிக்கு தமிழக அரசின் சத்துணவு மையத்தில் வேலை தேடி வந்தேன். அப்போது எம்.கல்லுப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பாண்டி (50) மற்றும் அவரது மகன்கள் சந்திரசேகரன், குட்டிக்கண்ணன் ஆகிய 3 பேரும் என்னிடம் சத்துணவு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினர். இதனை நம்பிய நான் அவர்களிடம் ரூ.2.60 லட்சம் கொடுத்தேன். அவர்கள் வாக்குறுதி அளித்தபடி என் மனைவிக்கு வேலை வாங்கி தரவில்லை.
நான் அவர்களிடம் என் பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என்னிடம் வாங்கிய ரூ.2.60 லட்சத்தை திருப்பி தர மறுத்ததுடன் எனக்கு மிரட்டலும் விடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளா£ர்.
இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
குஜராத், டெல்லி, மராட்டியம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் ‘சுபிக்ஷா’ என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஆர்.சுப்பிரமணியன் என்பவர் இருந்தார்.
இவர், விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் விஸ்வபிரியா பைனான்ஸ் செக்யூரிட்டி என்ற பெயரில் நிதி நிறுவனங்களை நடத்தினார். இந்த நிறுவனங்களின் பெயரில், பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.150 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், ‘சுபிக்ஷா’ சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்காக வங்கிகளில் சுமார் ரூ.700 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சுப்பிரமணியன் மீது, மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
பின்னர், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யாமல், இடைக்கால அறிக்கையை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், அமலாக்கப்பிரிவு உதவி இயக்குனர் தாக்கல் செய்தார். இதை மாவட்ட நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், வழக்கை விசாரணைக்கு நீதிபதி எடுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சுபிக்ஷா சுப்பிரமணியம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்தார். பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், மேல் விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல இந்த சட்டத்தின்படி, புலன் விசாரணை முடிந்ததும், காலதாமதம் இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறுகிறது. அதற்கு கால அளவை நிர்ணயம் செய்யவில்லை.
அதனால், இடைக்கால அறிக்கையை கீழ் கோர்ட்டில் தாக்கல் செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. இதுபோல பிற அம்சங்களையும் கீழ் கோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்த பின்னர் தான் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் விதிமீறல் எதுவும் இல்லை. சட்டவிரோதமும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #tamilnews
விருதுநகரை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் செண்பகன் என்பவருக்குச் சொந்தமான இன்சுமதி சுத்திகரிப்பு நிலையம் என்ற தனியார் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் சுமார் 87.36 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான செண்பகத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். மதுரை, கோவை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அவருக்கு சொந்தமான 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.#EnforcementDirectorate #TamilNadu
தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், வைராபான் சுக்பான் (வயது 39). முன்னாள் புத்த துறவி. இவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை கற்பழித்து, கர்ப்பம் ஆக்கினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.
அவர் மீது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் புத்தருக்கு உலகிலேயே மிகப்பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும்தொகை திரட்டி ஏமாற்றினார்; வங்கிக்கணக்குகளில் 7 லட்சம் டாலர் (சுமார் ரூ.4¾ கோடி) குவித்து உள்ளார்; பல சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்; ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றெல்லாம் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.
இதில் அவர்மீது சட்ட விரோத பண பரிமாற்றம், மோசடி, ஆன்லைன் வழியாக நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய பாங்காக் கோர்ட்டு, அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மேலும் அவர்மீது புகார் கூறிய 29 நன்கொடையாளர்களுக்கு 8 லட்சத்து 61 ஆயிரத்து 700 டாலரை (சுமார் ரூ. 5 கோடியே 85 லட்சம்) திரும்பத்தர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
இவர் மீது தொடரப்பட்டு உள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Thailand #WirapolSukphol #tamilnews