என் மலர்
நீங்கள் தேடியது "Free"
- நாட்டு நலப்பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம்.
- “பறவைகள் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் உரையாற்றினார்.
நாகப்பட்டினம்:
நாகூர் தேசிய மேல்நிலை ப்பள்ளி நாட்டு நல பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம் முட்டம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய பசுமை படை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவர்களது இல்லங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
"பறவைகள் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் ஆதி லிங்கம் உரையாற்றினார்.
நகராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.முத்தமிழ் ஆனந்தன். மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய வெங்கடேசன். மற்றும் ஆசிரியர்கள் செங்குட்டுவன், முத்துக்குமார், விமல், தேசிய பசுமைப்படை ஆசிரியர் சக்தி வேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.
- சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
- டி.என்.பி.எஸ்.சியால் அடுத்த ஆண்டு 25.02.2023 அன்று நடத்தப்பட உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 முதல் நிலைத் தேர்வில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயின்ற 104 தேர்வர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கான முதன்மைத்தேர்வு டி.என்.பி.எஸ்.சியால் அடுத்த ஆண்டு 25.02.2023 அன்று நடத்தப்பட உள்ளது. முதன்மைத் தேர்வுக்கான வழிகாட்டுதல் மற்றும் இலவச பயிற்சி வகுப்பு வருகிற 22-ந்தேதி காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. மேலும் பாடத்தொகுப்புகள், இலவ சமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எழுதவுள்ள தேர்வர்கள் பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை 21-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் empvgslm08@gmail.com, mailto:empvgslm08@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்தோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 94990 55941 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி கோட்டை அரிமா சங்கம் மற்றும் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பரமத்தி கோட்டை அரிமா சங்க தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் ராகா ஆயில் தமிழ்மணி வரவேற்றார். பரமத்தி அ.தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். முகாமினை குமாரபாளையம் தங்கமணி எம்.எல்.ஏ, பரமத்தி வேலூர் சேகர் எம்.எல்.ஏ, அரிமா சங்கம் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.
முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திலகவதி வெற்றிவேல், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜே.பி.ரவி, பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, பரமத்தி நகர செயலாளர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சேலம்:
மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் 12,523 எம்.டி.எஸ். காலிப்பணியிடங் களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியி–டப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 17.02.2023 ஆகும்.
இத்தேர்விற்கான கல்வித்தகுதி, 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். மேலும், 1.1.2023 அன்று எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 28 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்–பட்–டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதி–லிருந்து விலக்கு அளிக்கப்–பட்டுள்ளது. மேலும், இத்தேர்வினை தமிழ் மொழியிலும் எழுத மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அனுமதித்துள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பிக்குமாறும், இலவசப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெ–றுமாறும் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
- மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் வழங்கினார்.
- மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற மாற்றுத்திறனாளி இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வ ீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) வித்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வரும் 25-ந் தேதி தென்னை மற்றும் பாக்கு சாகுபடி குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது.
- தென்னை சாகுபடியில் தற்போது விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் நகரில் வரும் 25-ந் தேதி தென்னை மற்றும் பாக்கு சாகுபடி குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது. தென்னை சாகுபடியில் தற்போது விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தென்னை ஆயுள் முழுவதும் வருமானம் தரக்கூடிய ஒரு நீண்ட கால பயிர் ஆகும். இதே போல் பாக்கு மர சாகுபடியும் நீண்ட கால நிரந்தர வருவாய் தரக்கூடியதாகும்.
தென்னை மற்றும் பாக்கு மரங்களில் அவ்வப்போது ஏற்படும் நோய் தாக்குதல்கள் மற்றும் பராமரிப்பு பற்றி விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இந்நிலையில் நாமக்கல் கால்நடை மருத்து வக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 25-ந் தேதி தென்னை மற்றும் பாக்கு சாகுபடி குறிப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் மண்பரிசோதனையின் முக்கியத்துவம், நாற்றாங்கால் பராமரிப்பு, ஊட்டச்சத்து, நீர் மற்றும் களை மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து தெளிவாக விளக்க வுரை அளிக்கப்படும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 2023-ம் ஆண்டிற்கு, நாமக்கல் மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
- வருகிற மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இப்பயிற்சி நடைபெறும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 2023-ம் ஆண்டிற்கு, நாமக்கல் மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இப்பயிற்சி நடைபெறும். தினசரி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கையுந்துபந்து, கபாடி, வாள்சண்டை மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும்.
இந்த பயிற்சி முகாமில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்துகொள்ளலாம்.
மாணவரல்லாத, விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அலுவலக வேலை நேரங்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நேரடியாக பதிவு செய்து கொள்லாம் அல்லது dsonmk@gmail.com என்ற இமெயில் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- 7500 -க்கும் மேற்பட்ட குரூப்- பி மற்றும் குரூப்- சி ஆகிய பதவி களுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
- தேர்வுக் கட்டணமாக ரூ. 10/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து ள்ளதாவது:-
மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்.எஸ்.சி) 7500 -க்கும் மேற்பட்ட குரூப்- பி மற்றும் குரூப்- சி ஆகிய பதவி களுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 ஆகும்.
இத்தேர்விற்கான கல்வித்தகுதி, குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன் 01.08.2023 அன்றைய நிலையில் எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறைவிதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணமாக ரூ. 10/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதி லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 04.05.2023 அன்று சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. வகுப்புகள் தொடர்பான விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பித்து, இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.
- கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் ஏற்பாடு
- பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் அழைப்பு
கரூர்,
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் உள்ள இணையதள பிரிவில் 2023-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வருகிற 8-ந் தேதி இலவசமாக பார்க்கவும், மதிப்பெண் பட்டியலலை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கரூர் மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.
- இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது https://forms.gle/sZxeG2nU2o7mrKoz7 என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பபிக்கலாம்.
சேலம்:
சேலம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் சேர்க்கைக்கு 30-ந் தேதிக்குள் தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் 4 புகைப்படத்துடன் நேரில் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயிற்சி பெற்று பயன்பெறலாம். இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது https://forms.gle/sZxeG2nU2o7mrKoz7 என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பபிக்கலாம். மேலும் சேலம் ஏற்காடு மெயின்ரோட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.
- கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த, ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.
- 103 பள்ளிகளில், நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களைக் காட்டிலும், கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
நாமக்கல்:
கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த, ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.
அதன்படி 145 தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற 1,892 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 103 பள்ளிகளில், நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களைக் காட்டிலும், கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மீதம் உள்ள, 42 தனியார் பள்ளிகளில், இருக்கின்ற இடங்களுக்கு ஏற்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதை யடுத்து, குலுக்கல் முறையில் மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற 103 பள்ளிக ளில் சிறப்பு முகாம் நடந்தது.
அதற்காக, ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
மேலும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி குலுக்கல் நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும், மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கை பெற, 1,600 மாணவ, மாணவியர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், 42 தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ், நேரடியாக மாணவ, மாண வியர் தேர்வு செய்யப்பட்ட னர் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
சேலம்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அதிகாரி 129 பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படு வதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர், இரண் டாம் நிலை காவலர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலா என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.