என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Free Training"
- வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
- இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி மற்றும் தேர்வு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தின்படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
2023-ம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச நேரடி விரைவுப் பயிற்சி மற்றும் திருப்புதல் தேர்வு, திங்கட்கிழமை தோறும் காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பாடத் திட்டத்திற்கான முழுதேர்வு வியாழக்கிழமை தோறும் காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது.
பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- ஆசிரியர் வாரிய தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
- இத்தேர்வுக்கு https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்க படும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2582 பணிக்காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப் பிக்க கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். இத்தேர்வுக்கு https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் நாள் 07.01.2024 ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி TET PAPER-2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பொது பிரிவி னருக்கு அதிக பட்சமாக 53 வயதும், மற்ற பிரிவினருக்கு 58 ஆகவும் இருக்கும்.
எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300, மற்ற பிரிவினருக்கு ரூ.600 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் இதற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்ப முள்ளவர்கள் https://forms.gle/vXF8VpohQTKp8c4v9 என்ற இணைப்பினை பயன்படுத்தி வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ள நேரடி அறிமுக வகுப்பில் கலந்து கொள்ளலாம். மேலும் https://t.me/vnrstudycircle என்ற TELEGRAM CHANNEL வாயிலாக அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ராமநாதபுரம் மாவட்ட தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று (18-ந் தேதி) தொடங்கி உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுனர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, 04567-230160, 7867080168 என்ற எண்களில் தொடர்பு கொண்டோ விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
- மீனவ இளைஞர்களுக்கு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி நடந்தது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யோக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப் பட்டது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பி னர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டதின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறை களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை/துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவ லக வேலை நாட்களில் விலையின்றி கொள்ளலாம். பெற்று விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணைய தளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவ லகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்க ளுக்கு சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி, துணை, இணை இயக்குநர்கள் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
- பெட்கிராட் சார்பில் சோப், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் தயாரிக்க இலவச பயிற்சி நடந்தது.
- சோப், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் தயாரிப்பு பயிற்சி தொடக்க விழா நடந்தது.
மதுரை
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில், இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்ஜர் நிறுவ னம் மற்றும் மதுரை பெட் கிராட் தொழில் பயிற்சி நிறுவனம் இணைந்து சோப், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் தயாரிப்பு பயிற்சி தொடக்க விழா நடந்தது.
பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமை தாங்கினார். பொருளாளர் கிருஷ்ண வேணி, செயலாளர் சாராள் ரூபி, துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செய லாளர் அங்குசாமி வர வேற்று பேசினார். மதுரை மாநகராட்சி 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராம் குத்துவிளக்கேற்றி இலவச பயிற்சியை தொடங்கி வைத்தார்.
கே.வி.ஐ.சி. உதவி இயக்குநர் அன்புச் செழியன் பேசுகையில், சுயதொழில் தொடங்க நகர்ப்புறத்தில் 25 சதவீதமும், புறநகர் பகுதி களில் 35 சதவீதமும் மானிய மாக வழங்குகிறோம். இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி நீங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
இ.டி.ஐ.ஐ. முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், இந்த பயிற்சிக்கு குறித்த நேரத்தில் வருகை தந்து கவனமாக கவனித்து செய்முறை விளக்கங்களை கேட்டு நீங்கள் சிறந்த தொழில் முனைவோராக மாற வேண்டும் என பேசினார்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முதுநிலை மேலாளர் சதீஷ்குமார் பேசுகையில், மகளிர் குழு பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என வும், சவுத் இந்தியன் வங்கி அலுவலர் மீனாட்சி சுந்தரி தொழில் தொடங்க முத்ரா லோன் பெறலாம் எனவும் பேசினர்.
முடிவில் பயிற்சியாளர் கார்த்தியாயினி நன்றி கூறினார்.
- மதுரை பெட்கிராட் சார்பில் 17 வகையான பேக் தயாரிக்க இலவச பயிற்சி வழங்கப்பட்டது.
- அதற்கான வழிமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக எளிமையாக்கப்பட்டுள்ளது.
மதுரை
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்ஜர் நிறுவ னம், மதுரை பெட்கிராட் இணைந்து ஜூட் பேக், லேப்டாப் பேக், லஞ்ச் பேக், ஸ்கூல் பேக், வாட்டர்கேன் பேக், ஷாப்பிங் பேக் போன்ற 17 வகையான பேக் தயாரிக்கும் இலவச பயிற்சியை பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். பொருளாளர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட தொழில் மைய உதவி பொது மேலாளர் ஜெயா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், சுயதொழில் தொடங்கு வதற்கு மானியத்துடன் வங்கி கடன் வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.மேலும் அதற்கான வழிமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக எளிமையாக்கப்பட்டுள்ளது என்றார்.
இ.டி.ஐ.ஐ. முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், பயிற்சியின்போது தொழில் முனைவோராக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கு தன்னம்பிக்கையும் ஆர்வமும் உள்ளவர்கள் தான் தொடர்ந்து ஒரு தொழிலை செய்து முன்னேற முடியும் என பேசினார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் தங்கமலர் பேசுகையில், மானியத்துடன் கடன் வழங்க வங்கி நிர்வாகம் தயாராக உள்ளது. உரிய ஆவணங்களுடன் வந்து கடன் பெற்று சுயதொழில் துவங்க நீங்கள் முன்வர வேண்டும் என பேசினார்.
மதுரை மாநகராட்சி நகரமைப்பு குழு உறுப்பினரும், 61வது வார்டு கவுன்சிலருமான செல்வி செந்தில் பேசுகையில், 30 ஆண்டுகளாக இலவச தொழில் பயிற்சி நிறுவனமான பெட்கிராட் மூலமாக எங்களது பகுதியில் பல்வேறு தையல் தொழில் செய்யும் பெண்கள் முன்னேற்ற பாதையை நோக்கி சென்றுள்ளனர்.
எனவே நீங்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் விஜயவள்ளி நன்றி கூறினார்.
- பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
- இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ படிக்கும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவ லர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயா ராகும் போட்டி தேர்வா ளர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடத்தப்பட வுள்ளது. மேலும் விவரங்களுக்கு 94990 55908 என்ற செல்போன் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது 2 பாஸ்போட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும் இத்தேர்விற்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நாளை (23-ந்தேதி) காலை 10 மணிக்கு மஞ்சள் சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
- இப்பயிற்சியில் மஞ்சள் ரகங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம், ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
நாமக்கல்:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (23-ந்தேதி) காலை 10 மணிக்கு மஞ்சள் சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மஞ்சள் ரகங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம், ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து விளக்கம் அளிக்கப்படும். தகுதியான விவசாயிகள், ஆர்வமுள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் ெதரிவித்துள்ளது.
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
- ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மதுரை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய துணை இயக்குநர், சண்முகசுந்தர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் ஆய்வாளர் போட்டித் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் விரைவில் நடத்த இருக்கின்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, 2 மற்றும் குரூப் -4 போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம் காவல் ஆய்வாளர் பணிக்கான தேர்வுகள் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
அதன்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம் காவல் ஆய்வாளர் பணிக்கான மாதிரி தேர்வு கள் வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. சிறந்த வல்லுநர்களை கொண்டு தயாரிக்கப்படும் வினாக்களுக்கு மாதிரி தேர்வு எழுத விரும்பும் போட்டித் தேர்வாளர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள போட்டித்தேர்வு விண்ணப்பித்துள்ள விண்ணப்ப படிவம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலெக்டர் முருகேஷ் தகவல்
- காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது
திருவண்ணாமலை:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் படித்து முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரையில் காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தோராயமாக 6,553 காலிப்பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணியி ட ங்களுக்கான தோராயமாக 3,587 பணியிடங்க ளுக்கான போட்டித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்ப டவுள்ளதாக தெரிகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தினை சேர்ந்த தகுதியான, ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி பயனடையும் வகையில், அதற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்டு 19-ந் தேதி தொடங்கி, வார நாட்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அல்லது அலுவலக தொலைப்பேசி 04175-233381 என்ற எண்ணில் தங்களது பெயரினை வரும் 18-ந்தேதி க்குள் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு திருவண்ணா மலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்து ள்ளார்.
- பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
- தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போது நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போது நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.
குரூப் -4 தேர்வில், 17 பேர் சான்றிதழ் சரிபார்ப் புக்கு தேர்வாகியுள்ளனர். 2022-ம் ஆண்டு சீருடைப் பணியாளர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 5 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் உள்ளனர். மேலும் 2022 -ம் ஆண்டு போலீஸ் தேர்வில் 17 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் உள்ள னர். தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டிஎன்பி எஸ்சி குரூப் -1, 2, 4 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு வருகிற 14-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாட வாரியாக சிறந்த வல்லு நர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
மேலும் இத்தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் ஒவ் வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை களில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை தொலைபேசி எண்கள் மூலமோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் உமா கூறியுள்ளார்.
- கனரா வங்கியின் வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதி ராஜா
- 30 நாள் முழு நேர பயிற்சி வகுப்பில் எழுதப்படிக்க தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் நபா்களுக்கு கனரா வங்கி சாா்பில் செல்போன் பழுதுபாா்த்தல் மற்றும் சரிசெய்தல் தொடா்பாக இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இதுகுறித்து கனரா வங்கியின் வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதி ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
திருப்பூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ் மக்களுக்கு ெசல்போன் பழுதுபாா்த்தல் மற்றும் சரிசெய்தல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. 30 நாள் முழு நேர பயிற்சி வகுப்பில் எழுதப்படிக்க தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.
இந்தப் பயிற்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தொழில் தொடங்க ஆலோசனைகளும் வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா் -641652 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436, 94890-43923 என்ற செல்போன் எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1.6.2023 முதல்www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
- இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரைநடைபெறும்.
திருப்பூர் :
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் 129 காலிப்பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 1.6.2023 முதல்www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.
இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் 30.5.2023அன்று தொடங்கப்படவுள்ளது. மேலும் திங்கள் முதல் வெள்ளி வரை இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரைநடைபெறும். இவ்வகுப்பில் தொடர்ந்து மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.
மேற்காணும் இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை முன்பதிவு செய்ய திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோதொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்