என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fuel"
- விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது.
- மற்ற விமான நிறுவனங்களும் தங்களுடைய விமான டிக்கெட் கட்டணத்தை விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலந்தூர்:
சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் உள் நாட்டு விமான சேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் தற்போது விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள்.
விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை கடந்த மூன்று மாதங்களாக உயர்வை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் எரி பொருள் விலை உயர்வு காரணமாக முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்று முதல் விமான கட்டணத்தை ரூ.300 முதல் ரூ.1000 வரை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த கட்டண உயர்வு முதல் 500 கிலோ மீட்டர் வரை ரூ.300 ,501 கி.மீ - 1000 கிலோமீட்டர் வரை ரூ.400, 1001- 1500 கி.மீட்டர் வரைரூ.550, 1501 -2500 கி.மீட்டர் வரை ரூ.650, 2501-3500 கி.மீட்டர் வரை ரூ.800, 3500 கிலோமீட்டருக்கு மேல் ரூ.1000 என்ற அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் விமான டிக்கெட் கூடுதல் கட்டணம் உயர்வை முன்னிட்டு, மற்ற விமான நிறுவனங்களும் தங்களுடைய விமான டிக்கெட் கட்டணத்தை விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரு மாத கால எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு.
- நமது வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டி பிரச்சாரம்.
பூதலூர்:
பூதலூர் தாலூகா செங்கிப்பட்டி -கந்தர்வ கோட்டை சாலையில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் எரிபொருள் சேமிப்பு விழிப்புணவு கூட்டம் மற்றும் பிரச்சார பேரணியை நடத்தியது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்ச கத்தின் கீழ், இந்தியாவில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு மாத கால எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு, பெட்ரோ லிய பொருட்களை
வீணாகப்பயன்படுத்து வதைத் தவிர்த்து இவ்வ ளங்களை நீண்ட காலம் நீடிக்கும் வகையிலும், நமது வருங்கால சந்ததியினருக்கு
ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இவ்விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி நடை பெற்றது.
இதில் பாரத் பெட்ரோலிய அதிகாரிகள், டீலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கால நேரமும், கூடுதல் எரிபொருள் செலவும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது.
- தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பேரவை கூட்டம் கொரடாச்–சேரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார்.
பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பேசினார். கூட்டத்தில் கலந்துகொண்ட சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி, கே.சீனிவாசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் சிபிஎம் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது,
தஞ்சாவூர் முதல் நாகை வரையில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணி நீண்ட வருடங்களுக்கு பின் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனாலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.
இதனால் வேளாங்கண்ணி மற்றும் நாகப்பட்டினம், திருவாரூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி மற்றும் பல நகரங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தற்போது திருவாரூரில் இருந்து மன்னார்குடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் கால நேரமும், கூடுதல் எரிபொருள் செலவு வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. மேலும் தற்போது பெய்த மழையில் பல இடங்களில் சாலை சீர் குலைந்து, குண்டும், குழியுமாக மாறி அபாயகரமான சாலையாக காட்சியளிக்கிறது. தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
ஆகவே தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி திருவாரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி இந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து மேற்கோண்டு மக்கள் பயன்பாட்டு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- மாணவர்கள் தங்களது பள்ளியை குப்பையில்லா பள்ளியாக மாற்ற முயன்று வருகின்றனர்.
- மழை நீரை வீணாக்காமல் அதனை சேகரித்து மருத்துவ தோட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மகரிஷி வித்யா மந்திர் மாணவர்களின் அறிவியல் ஆய்வு செயல்பா டுகள் நடைபெற்றன. மகான் மகரிஷி மகேஷ் யோகி ஆசியுடன் உணர்வு நிலை சார்ந்த கல்வி கற்கும் மாணவர்கள் அதன் வெளிப்பாடாக ஆக்கபூர்வமான அறிவியல் செயல்பாடுகளுள் ஒன்றாக
தங்களது பள்ளியில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை நன்றாக மக்கச் செய்து பள்ளியில் பராமரிக்கப்படும் மருத்துவத் தோட்டத்திற்கு அவ்வுரத்தினை பயன்படுத்துகின்றனர்.
மக்காத குப்பைகளான நெகிழி போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்து அதனை பள்ளிக்கு பயன்படும் அழகுப் பொருட்களாக மீள் உருவாக்கம் செய்கின்றனர்.
நெகிழியை எரிப்பதால் ஓசோன் படலம் பாதிப்படையும் என்பதனால் அதனை எரிக்கும் போது ஏற்படும் புகையையும் சேகரித்து அதனையும் எரிபொருளாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த அறிவியல் ஆய்வுத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்களது பள்ளியை குப்பையில்லாத பள்ளியாக மாற்ற முயன்று வருகின்றனர்.
நீரின்றி அமையாது உலகு என்பதனை உணர்ந்த என் பள்ளி மாணவர்கள் வானம் உமிழும் அமிர்தமாம் மழை நீரை வீணாக்காமல் அதனை சேகரித்து மருத்துவத் தோட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மழை நீரை பள்ளியின் கழிவறைக்கும் பயன்படுத்தவும் திட்டமிட்டு ள்ளனர்.நீர் மாசு, நிலமாசு, காற்று மாசு என அனைத்து மாசுகளையும் நீக்கும் அறிவியல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரும் மாணவர்களையும் அதற்கு உறுதுணையாக உள்ள அறிவியல் ஆசிரியர்களையும் பள்ளி முதல்வர் அனிதாராம் ஊக்க மூட்டியும் உற்சாகமூட்டியும் பாராட்டினார்.
- புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகையிலிருந்து 2000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.
- எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்கிறார்.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்துள்ள ஆரியநாட்டுதெரு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிமாறனின் மகன் ஹரிஹரமாதவன். தனியார் கல்லூரியில் ஏரோஸ்பேஸ் படித்து வரும் இவர் புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகையில் இருந்து 2000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இவரது சைக்கிள் பயணத்தை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்லூரி மாணவன் ஹரிஹர மாதவன் நாகையில் இருந்து ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி அங்கிருந்து கோவை, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என 2000 கிலோமீட்டர் சைக்கிளிலேயே தனது பயணத்தை தொடர்கிறார்.
இதன் மூலம் வழி நெடுகிலும் சந்திக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் இவர் புவி வெப்பமயமாதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்கிறார்.
கோவையில் போலீஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது-
வரலாற்று சிறப்பு மிக்க போலீஸ் அருங்காட்சியகம் இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆதிகாலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை உள்ள பல்வேறு ஆயுதங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
140 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இங்கு காவல் துறை சார்பில் பல்வேறு ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள், மாணவர்கள் பார்த்து தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரி பொருள் நிரப்ப வரிச்சலுகை தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்க வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #CoimbatoreAirport #TNCM #Edappadipalanisamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்