என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Function"

    மலர்கள் மற்றும் எலுமிச்சம்பழ மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை...

    கரூர் :

    நொய்யல் அருகே முனியாதபுரத்தில் காவிரி கரை அருகே சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் காவல் தெய்வமாக விளங்கும் முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைமாத கடைசி நாளை முன்னிட்டு முனியப்பசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. ெதாடர்ந்து மலர்கள் மற்றும் எலுமிச்சம்பழ மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முனியப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு...

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நலைப் பள்ளியில் 21-ஆம் ஆண்டு விழா நடந்தது. நடந்த விழாவிற்கு கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். கல்விநிறுவன செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கல்வி அலுவலர் சண்முக சுந்தரம், முன்னாள் எஸ்பி கலியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். மேலும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் கலைசெல்வன், டாக்டர் கோசிபா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கு, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர்களுக்கு இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சியை காரைக்குடி பல்கலைக்கழக பேராசிரியர்இராசவேலு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன், தலைவர் கரு.இராஜேந்திரன், அருங்காட்சியக ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் ஜெ.ராஜாமுகமது ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் பே.முத்துசாமி, தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளார் சாலை செந்தில் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    லயன்ஸ் சங்கம், சின்மயா கலைக்கூடம் ஸ்ரீநித்திய சுந்தரநாட்டியாலயா சார்பில் விழா நடைபெற்றது.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுரை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் லயன்ஸ் சங்கம், சின்மயா கலைக்கூடம் ஸ்ரீநித்திய சுந்தரநாட்டியாலயா சார்பில் 2ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இதில் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். லயன்ஸ் சங்க செயளர் புண்ணியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியை பாஸ்கர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கருணாநிதி, மகேஸ்வரி நாதசுரம் இசைக்கப்பட்டது. திருமானூர் பரதநாட்டியம் கிருபாதேவி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேலும் நிகழ்ச்சியில் புண்ணியமூர்த்தி, வடிவேல் முருகன், ஜெயபாலன், சத்தியசீலன் மற்றும் கிராம நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி, கைலாகம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் லயன் சங்கம் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

    வெளிநாட்டிலுள்ள தமிழ் ஓலைச் சுவடிகளை மீட்க வலியுறுத்தபட்டது

    அரியலூர்:

    வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் தமிழ் ஓலைச் சுவடிகளை மீட்டு அவைகளை அச்சிட்டு வெளிக்கொணர்ந்தால் தமிழரின் வரலாற்றில் திருப்பு முனை உருவாகும் என்றார் மொழி அறிஞர் ம.சொ.விக்டர்.அரியலூரில் தமிழ் வழிக்கல்வி இயக்ககம் சார்பில் நடைபெற்ற தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த நாள் மற்றும் உலக தாய்மொழி நாள் விழாவில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: உ.வே.சா தமிழ்மொழி வரலாற்றில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளார். அவரின் தமிழ் பணிக்கு அரியலூர் மண் பெரும்பங்காற்றியுள்ளது.அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் தான் உவேசா வுக்கு அதரவு அளித்து தமிழ் கற்றுகொடுத்து அவர்களின் தமிழ்ப்பணிக்கு துணை நின்றனர். உவேசா கரங்களுக்கு கிட்டாத கணக்கில் அடங்கா ஓலைச் சுவடிகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் பாதுக்காக்கபடுகிறது. அவை அனைத்தையும் மீட்டு வந்து நாம் அச்சிட்டு வெளிக்கொணர்ந்தால் உலகில் தமிழரின் வரலாற்றில் புதிய திருப்புமுனை உருவாகும் என்றார்.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்க்களம் நிறுவனர் புலவர் அரங்கநாடன் தலைமை வகித்தார். ஓவியர் முத்துகுமரன், தமிழ்ச்சித்தர் துரைவேலூசாமி, கவிஞர் அறிவு மழை, ஓவியர் அன்புச்சித்திரன், வள்ளலார் கல்வி நிலைய தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜன், தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவி காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக தமிழக் களம் இளவரசன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் பாண்டியன் நன்றி தெரிவித்தார். இவ்விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொண்டமங்கிணம் ஆதிசிவன் கோவிலில் நடந்தது

    குளித்தலை, 

    குளித்தலை அருகே கடவூர் வட்டத்திற்குட்பட்ட தொண்டமாங்கினத்தில் உள்ள குள்ளாயிஅம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஆதிசிவன் சுயம்பேஸ்வரர் கோவிலில் மஹா சிவன்ராத்திரியை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு ஆதி சிவன் வழிபாட்டு மன்றம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக 108 திருவிளக்கு பூஜை, மற்றும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நான்கு கால சிறப்பு பூஜைகளும் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு வேண்டுதல்களை எண்ணி மலர்கள் தூவி திருவிளக்கு பூஜை செய்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. சிவன் வழிபாட்டு மன்றத்தினர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். தொடர்ந்து இன்று மாலை கரகம் விடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்
    • கோவில் மருளாளி பேச்சியம்மன் வேடமணிந்து வந்தார்

    மலைக்கோட்டை:

    திருச்சி பெரிய கடைவீதி பகுதியில் பூக்குளம் அங்காள பரமேஸ்வரி கோவில் உள் ளது. இந்த கோவிலில் அங் காள பரமேஸ்வரி, பேச் சியம்மன், மதுரை வீரன், பாலதண்டாயுதபாணி, நவ–கிரகங்கள் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் 87-ம் ஆண்டு மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கியது.அன்று இரவு காப்பு அணிவித்து, கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு முகக்கப்பரை எடுத்து வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 19-ந்தேதி மகா அபிஷேக ஆராதனை மற்றும் புஷ்பக்கப்பரை தாங்கும் உற்சவமும் அதை தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் நிகழ்ச்சியும் மகா தீபாராதனை நடைபெற்றது. 20-ந்தேதி உற்சவர் அம்பா–ளுக்கு அன்னபூரணி அலங் காரத்துடன் மகா தீபாரா–தனை நிகழ்ச்சி நடைபெற் றது.

    21-ந்தேதியான நேற்று காலை 10.30 மணிக்கு மேல் அங்காள பரமேஸ்வரி மற் றும் பேச்சி அம்மனுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மேல் பேச்சி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும் அருட்காட்சி–யுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது.தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு மேல் மயானக்கொள்ளை எனப்படும் அஸ்தி பூஜை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் மருளாளி ராஜேந்திரன், பேச்சியம்மன் வேடத்தில் அங்காள பர–மேஸ்வரி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, கையில் சூலாயுதம் ஏந்தி பெரிய கடை வீதி, என்.எஸ்.பி. ரோடு, நந்தி கோவில் தெரு, சிந்தாமணி பஜார், ஓடத்துறை வழியாக ஓயாமரி சுடுகாட்டிற்கு சென்று அங்கு எரிந்து கொண்டிருந்த ஒரு பிணத்தை சூலாயுதத்தால் குத்தி எடுத்து சாப்பிட்டு, பின்னர் குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை–யொட்டி கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் அறிவியல் தின விழா நடைபெற்றது
    • மாணவர்கள் அனைவரும் சர்.சி.வி.ராமன் முகமூடி அணிந்து தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, துணை தலைவி வேதநாயகி, ஆசிரியர்கள் அலெக்ஸாண்டர், கண்ணன், ஆகியோர் தேசிய அறிவியல் தினம் குறித்து வாழ்த்துரை வழங்கினர்.

    அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரஹ்மத்துல்லா, செயலாளர் சின்ன ராஜா ஆகியோர் தேசிய அறிவியல் தினம் குறித்து உரையாற்றினர். மாணவர்கள் அனைவரும் சர்.சி.வி.ராமன் முகமூடி அணிந்து தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக அனைவரையும் ஆனந்தராஜ் வரவேற்றார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச்சாமி, கௌரி, தனலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    • ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்
    • அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு நடைபெற்றது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி பல்லவராயன் பத்தையில் உள்ள அங்காளம்மன் மற்றும்வலம்புரி விநாயகர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுப்பட்டி பல்லவராயன் பத்தை மற்றும் சுற்றுவட் டார பகுதிகளில் உள்ள கோட்டைக்காடு கன்னியான்கொல்லை, கடு க்காக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் விநாயகர் கோயிலி ல் இருந்து முளைப்பாரியை தலையில் சுமந்து வந்தனர். மேள தாள இசை முழக்கத்தோடு வந்த இந்த ஊர்வம்அங்காளம்மன் கோயில் வந்தடைந்தது. அங்கு குதிரை நடனத்துடன் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • மலர்களால் சிறப்பு அலங்காரம் தீபாராதனை
    • பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    கரூர்,

    கரூர் காகிதபுரம் குடியிருப்பில் காசி விஸ்வநாதர் கோவிலில், பிர தோஷத்தை ஒட்டி, நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட 18 வகை யான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப் பட்டு தீபாராதனை நடந்தது. நன்செய் புகழூர் மேகபாலீஸ் வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திர வியங்களால் அபிஷேகம் செய்யப் பட்டது. பின், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண் பிக்கப்பட்டது. க்தர்கள் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பெண்கள் அதிக அளவு கலந்து கொண்டு வடம் பிடித்தனர்
    • இன்று தீர்த்த வாரி நடைபெறுகிறது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. உலக புராதன சின்னமாக விளங்கும் இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பிரம்மோத்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்காக விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினசரி சாமிக்கு மகா அபிஷேக ஆராதனையும், யாகசாலை பூஜைகள், சாமி வீதிஉலா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை யாகசாலை பூஜைகள் முடிந்து தேர் வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சந்திரசேகர சுவாமி, சந்திரமவுலி தாயார், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். வீதி உலாவின்போது ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாக அலுவலர் செந்தமிழ் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தேர் புறப்பட்டு ராஜவீதி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் இதன் நிலையை அடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரியும், கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நேர்த்திகடன்
    • இன்று தெப்பத் திருவிழா நடைபெறுகிறது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது.குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் மாசிமக நாளில் நடைபெறும் திருவிழாவில், கோவில் முன்பு உள்ள ஆசிய அளவில் சிறப்பிடம் பெற்ற 33 அடி உயர குதிரை சிலைக்கு அதன் உரத்திலேயே பக்தர்கள் பூ மற்றும் காகித மாலைகள் அணிவித்து வழிபடுவது வழக்கம்.நடப்பாண்டு திருவிழாவையொட்டி கிராம மக்களின் சார்பில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, குதிரை சிலைக்காக தயாரிக்கப்பட்ட நீளமான வேட்டி, துண்டு, பச்சை நிற வஸ்திரம் ஆகியவற்றை கயிறு மூலம் கட்டி குதிரை சிலைக்கு அணிவித்தனர்.தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கார், வேன், சுமை ஆட்டோ, லாரி, டிராக்டர்களில் பூ மற்றும் காகித மலைகளை எடுத்து வந்து, கோவிலின் இருபுறச் ச ாலையிலும் பல கி.மீ. தொலைவிற்கு காத்திருந்து குதிரைக்கு மாலை அணிவித்து வழி பாடு மேற்கொண்டனர். கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. கோவிலை சுறி 50க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு குதிரைக்கு சுமார் 2,500க்கு மேல் மாலை பக்தர்களால் அணிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இன்று மாலை தெப்ப திருவிழா நடைபெற உள்ளதை தொடர்ந்து பக்தர்கள் குதிரைக்கு மாலை அணிவித்து வருகின்றனர்.

    ×