என் மலர்
நீங்கள் தேடியது "Gaganyaan mission"
- அக்டோபரில் ஒரு பரிசோதனை விண்கலன் அனுப்பப்பட இருக்கிறது
- மூன்றாம் கட்டமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்படுகிறது
இதுவரை எந்த நாடும் புரியாத சாதனையாக நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக அனுப்பி உலகையே இந்தியா திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
இதனை அடுத்து பல விண்வெளி ஆராய்ச்சிகளை நிகழ்த்த இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இஸ்ரோவின் திட்டங்கள் குறித்து விவரித்தார்.
அப்போது அவர், "இந்திய பிரதமர் நரேந்திர மோடி விண்வெளி ஆராய்ச்சிகளில் சிறப்பு கவனம் செலுத்தி நிதி பங்களிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். சந்திரயான்-3 திட்டத்திற்கு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் முயற்சிகளுக்கு கோவிட் தொற்று நெருக்கடிகளினால் தடை ஏற்பட்டது."
"தற்போது சந்திரயான்-3 வெற்றி அடைந்ததை அடுத்து ககன்யான் உட்பட பல திட்டங்களில் இனி இஸ்ரோ தீவிரம் காட்டும். இதன்படி ககன்யான் திட்டத்திற்காக, அக்டோபர் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் முதலில் ஒரு பரிசோதனை முயற்சியாக ஒரு சோதனை விண்கலனை அனுப்பும்."
"அடுத்த கட்டமாக "வியோமித்ரா" எனும் பெயரில் ஒரு பெண் ரோபோ விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பெண் மனித இயந்திரம் மனிதர்களின் நடவடிக்கைகளையும் பிரதிபலிக்க கூடியதாக இருக்கும்."
"இந்த இரு முயற்சிகளும் வெற்றி அடைந்ததும், அதில் இருந்து கிடைக்கும் அனுபவங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து அதன்படி மூன்றாவது முயற்சியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவோம். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதும் முக்கியம்," இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
- ககன்யான் திட்ட வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.
- இந்தியாவின் விண்வெளித்துறை வளர்வதோடு பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
திருவனந்தபுரம்:
ககன்யான் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கேரளா வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் ஆய்வு மையத்தில் ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். ஆளுநர் முகமது ஆரிப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இருந்தனர்.
இதையடுத்து, ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நிலவில் சந்திரயான் தரையிறங்கிய சிவசக்தி பாய்ண்ட் இந்தியாவின் திறமைகளை உலகிற்கு பறைசாற்றுகிறது. விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்கள் தனிநபர்கள் அல்ல. 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை விண்வெளிக்கு கொண்டு செல்பவர்கள். அவர்கள் இந்தியாவின் நம்பிக்கை, பலம் மற்றும் பெருமை. அவர்கள் 4 பேருக்கும் தேசத்தின் ஆசீர்வாதம் துணை இருக்கும்.
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் வீரர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டுங்கள். விண்வெளி வீரர்களின் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
விண்வெளி வீரர்களின் கடும் பயிற்சியில் யோவாவும் முக்கிய பங்காற்ற உள்ளது. ஒரே எண்ணத்துடன் தவம்போல் பயிற்சி செய்ய உள்ள விண்வெளி வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.
இந்தியாவின் விண்வெளித்துறை வளர்வதோடு பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ககன்யான் திட்டத்தில் பயன்படும் கருவிகள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரானவை என தெரிவித்தார்.
- ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார்.
- ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் ஒருவர்
ககன்யான் திட்டப் பணிகளை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் ஆய்வு மையத்தில் ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். ஆளுநர் முகமது ஆரிப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இருந்தனர்.
இதையடுத்து, ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பிறந்த இவர், உதகையில் உள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் படித்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேர்ச்சி பெற்று 2003-ல் இந்திய விமானப் படையில் சேர்ந்த இவர், சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
- விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதியிடம் இருந்து தங்கப்பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
- இந்திய விமானப்படையின் போர் விமான பிரிவில் பணி அமர்த்தப்பட்டு பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்.
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் 4 விமானிகளின் பெயரை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.
அவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் ஆவார். 19.4.1982 அன்று பிறந்த இவர், தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதியிடம் இருந்து தங்கப்பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
கடந்த 21.6.2003 அன்று இந்திய விமானப்படையின் போர் விமான பிரிவில் நியமிக்கப்பட்ட இவர், பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
மிகவும் சவாலான பணியான, இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கு 'டெஸ்ட் பைலட்'டாகவும் இருந்துள்ளார்.
இவருக்கு 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. பல்வேறு அதிநவீன விமானங்களை ஓட்டிய அனுபவம் வாய்ந்த இவர், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு பணியாளர்கள் சேவைக் கல்லூரியில் பயிற்சி பெற்றுள்ளார்.
விண்வெளிக்கு செல்லும் விமானி பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் கேரளாவைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 47.
விமானி அங்கத் பிரதாப், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 41. விமானி சுபன்சு சுக்லா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு வயது 38 ஆகும்.
இவர்களும், இந்திய விமானப்படையின் போர் விமான பிரிவில் பணி அமர்த்தப்பட்டு பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்.
- எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து இனி வணிகரீதியாக செயல்படுத்தப்படும்.
- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பூமி கண்காணிப்பு இ.ஓ.எஸ். 08 என்ற செயற்கைகோளை எஸ்.எஸ்.எல்.வி- 3டி ராக்கெட் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோமநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து இனி வணிகரீதியாக செயல்படுத்தப்படும். பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளுக்கு இதுவரை தேவையான உதிரி பாகங்களை தனியாரிடம் பெற்று வந்தோம். தொழில்துறையை மேலும் மேம்படுத்துவதற்காக இனி ராக்கெட் தொழில் நுட்பத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் பரிமாற்றம் தொடர்பாக பல நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. எதிர்பார்த்த படி பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டினர். அதில் தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறும்.
தனியார் நிறுவனங்களின் வணிக ரீதியான செயற்கைகோள்கள் இனி இஸ்ரோவின் கீழ் செயல்படும் என்.எஸ்.ஐ.எல். நிறுவன மூலம் ஏவப்படும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் வழங்கப்படும்.
எஸ்.எஸ்.எல்.வி- டி3 ராக்கெட் செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் விண்வெளியில் புற ஊதா கதிர்கள், காமா கதிர்கள் விண்வெளியில் எப்படி இருக்கிறது? என்பதை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இது ககன்யான் திட்டத்திற்கு உதவியாக இருக்கும்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக ஆளில்லா முதல் சோதனை ராக்கெட் திட்டம் வருகிற டிசம்பரில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வந்துள்ளது. அதற்கான ஒருங்கிணைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்.
தெற்கு திசைக்கு அனுப்ப வேண்டிய செயற்கைகோள்கள் அனைத்தும் குலசேகரப்பட்டினத்தில் இருந்து அனுப்புவது தான் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது விஞ்ஞானிகள் ராஜராஜன், நாராயணன், சங்கரன், வினோத், அவினாஷ் உள்பட பலர் இருந்தனர்.
- சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.
- வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் திட்டத்தின்படி சர்வதேச விண்வெளி மையத்தின் முதற்கட்ட அலகுகளை கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் நிலவிலேயே இருக்கும் நிலையில், சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் விண்கலம் நிலவில் தரையிறங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளது.
இந்த விண்கலம் நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு திரும்பி வந்து பூமியில் அது குறித்து ஆராய்ச்சி நடைபெற உள்ளது.
2040க்குள் இந்த விண்கலத்தை பூமியில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.20,193 கோடி செலவில் திட்டம் ககன்யான் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.