என் மலர்
நீங்கள் தேடியது "Garbage dump"
- பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
- துர்நாற்றமும் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
வேளச்சேரி:
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
பெரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் தற்போது அதிக அளவில் குடியிருப்புகள் பெருகி மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. இதே போல் வாகன போக்குவரத்தும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்த நிலையில் பெரும் பாக்கம் ஊராட்சியின் பின் பகுதியில் ஜல்லடியான் பேட்டை பிரதான சாலையில் உள்ள காலி இடம் குப்பைகளை சேகரிக்கும் இடமாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு சேகரிக்கப் படும் குப்பைகள் பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம் ஓரகடம் அருகே உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சுற்றிலும் குடியிருப்புகள் உள்ள நிலையில் குப்பை சேகரிக்கும் இடம் தற்போது குப்பை கிடங்காக மாறி விட்டது. இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் அங்கேயே குவிந்து கிடப்பதால் தெருநாய்கள் மற்றும் மாடுகள் அந்த பகுதியில் அதிக அளவில் சுற்றி வருகின்றன.
நாய்கள் கழிவுகளை இழுத்து சாலையோரம் போட்டு செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். கடும் துர்நாற்றமும் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இங்கு கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி கிடங்கிற்கு மாற்ற ஊராட்சி நிர்வாகம் கடும் சிரமம் அடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, முறையாக பராமரிக்கப்படாத குப்பை கொட்டும் நிலையத்துக்குள் தெருநாய்கள், கால்நடைகள் அதிக அளவில் சுற்றி வருவதால் பெரும்பாக்கத்தில் இருந்து பள்ளிக்கரணை செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான நாட்களில், சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளில் பாதி மட்டுமே குப்பை கிடங்கிற்கு மாற்றப்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள குப்பை சேகரிப்பு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றனர்.
- தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது.
- டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை:
சென்னையில் கொளுத்தி வரும் கோடை வெயிலில் குப்பை கிடங்குகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சென்னை பெருநகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இரண்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தினமும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து தரம் பிரிக்கப்படுகிறது. இந்த குப்பை கிடங்குகளில் மலை போல் குவிந்திருக்கும் குப்பைகள் சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பிடித்து எரிவதையோ, சிறு தீப்பொறி மூலம் விபத்து ஏற்படுவதையோ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் வரை குப்பை கிடங்குகளில் உள்ள குப்பைகளில் தண்ணீர் தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு பொறியாளர் பாலமுரளி தெரிவித்தார். 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் இந்த இரண்டு கிடங்குகளிலும் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
பெருங்குடியில் 225.16 ஏக்கர் குப்பை கிடங்கை கமிஷனர் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் ஆய்வு செய்தார்.
பெருங்குடி குப்பை கிடங்கில் 2021-ம் ஆண்டு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. அது உடனே கட்டுப்படுத்தப்பட்டது. தனியாரிடம் இருந்து 3 டேங்கர்கள் வாடகைக்கு எடுத்து குப்பை மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது. மேலும் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியும் 2 கிடங்கிலும் கட்டப்பட்டு தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி லாரிகள் மூலம் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. குப்பை குவியல்களுக்கு இடையே 3 மீட்டர் அகலமுள்ள வழித்தடங்களும் தீ பரவாமல் தடுக்க அமைக்கப்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தை பொறுத்து ஒரு நாளைக்கு 2 முறை அல்லது அதற்கு மேல் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.
இது தவிர தீயணைப்பு வாகனங்கள் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பீடி, சிகரெட் துண்டுகளால் ஏற்படும் தீ விபத்தை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். குப்பை கிடங்கில் புகை ஏற்பட்டால் உடனடியாக அதனை அணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை காலம் முடியும் வரை குப்பை கிடங்குகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.
- இதில் நடிகர் தனுஷ் அங்குள்ள ஒரு பெரிய குப்பை மேட்டில் நடித்தார்.
- தனுஷின் துணிச்சலான நடிப்பை படக்குழுவினர் பாராட்டினார்கள்.
பிரபல நடிகர் தனுஷ் நடிக்கும் 51- வது படம் 'குபேரா'. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ஐதராபாத் , திருப்பதி உள்பட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது.

தனுஷின் முதல் தோற்றம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பு பெற்றது. அதில் அவர் யாசகனை போல காட்சியளித்தார்.
மேலும் சில நாட்களுக்கு முன் நாகர்ஜுனாவின் தோற்றம் வெளியானது. அதில் மழையில் அவர் குடை பிடித்தபடி நடந்து வர, பின்னால் கட்டு கட்டாக பணம் இருப்பது போல காணப்பட்டது.
இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இதில் நடிகர் தனுஷ் அங்குள்ள ஒரு பெரிய குப்பை மேட்டில் நடித்தார். இதில் அவர் 10 மணி நேரம் முககவசம் எதுவும் அணியாமல் நடித்துள்ளார்.

மேலும் உண்மையான உணர்ச்சி வர வேண்டும் என்பதற்காக அவர் முகக்கவசம் அணியாமல் அங்குள்ள துர்நாற்றத்தை சகித்து நடித்ததாக படக்குழு தெரிவித்தது.தனுஷின் துணிச்சலான நடிப்பை படக்குழுவினர் வியந்து பாராட்டினார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.
- மூச்சு திணறல் உள்ளதா? என்று சுகாதார துறையினர் ஆய்வு.
தஞ்சாவூர்:
தஞ்சை ஜெபமாலை புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் காரணாக மளமளவென தீ பரவி பற்றி எரிந்தன.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த ஆணையர் மகேஸ்வரி விரைந்து சென்று தீ அணைக்கும் பணியை துரிதப்படுத்தினார்.
இந்த தீ விபத்து காரணமாக புகை மண்டலமாக மாறியதால் ஜெபமாலைபுரம் மற்றும் சுற்றியுள்ள சீனிவாசபுரம், மேலவீதி, வடக்கு வீதி உள்ளிட்ட பகுதி மக்கள், மாணவர்கள் அவதியடைந்தனர்.
மேலும் துர்நாற்றத்துடன் கூடிய புகை பரவியதால் வாகன ஓட்டிகள் முகத்தை மூடியப்படி சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றனர். புகைமூட்டம் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.
மேலும் யாருக்காவது மூச்சு திணறல் உள்ளதா? எனவும் வீடு வீடாக சென்று சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த காற்றால் குப்பை கிடங்கில் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
- குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது.
- கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகளை போலீசார் கைப்பற்றினர்.
கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாகக் கொன்று புதைத்ததாக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைவிடப்பட்ட குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது கென்யாவில் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த குவாரிக்கு அருகில் இருந்த குற்றவாளியின் வீட்டை சோதனை செய்ததில், 10 செல்போன்கள், மடிக்கணினி, அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் ஆடைகள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகளை போலீசார் கைப்பற்றினர்.
தனது மனைவியின் கொலை தொடங்கி அடுத்ததாக 42 பெண்களை கொன்று அவர்களின் உடல்களை கைவிடப்பட்ட குவாரியில் அப்புறப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ஒப்பு கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான புகை வந்து கொண்டிருந்தது.
- இந்நிலையில் நேற்று இரவு புகை அதிகமாக பரவி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மொடக்குறிச்சி அருகே உள்ள தூரபாளையத்தில் உள்ள காலி இடத்தில் கொட்டி உள்ளனர்.
இங்கு குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான புகை வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு புகை அதிகமாக பரவி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு சுற்றுவட்டார குடியிருப்புகளில் புகை மூட்டம் அதிகரித்தது.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்சி அடித்து குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ, புகை மூட்டத்தை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி அணைத்தனர்.
- சிவகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பைகள் சிவகிரி சந்தைமேடு பகுதியில் உள்ள சந்தையின் உள்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.
- இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குப்பை மேட்டில் இருந்து திடீரென புகை வெளியேறியது.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பைகள் சிவகிரி சந்தைமேடு பகுதியில் உள்ள சந்தையின் உள்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே உரப்பூங்காவும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குப்பை மேட்டில் இருந்து திடீரென புகை வெளியேறியது.
பின்னர் நேரம் செல்ல, செல்ல இரவு 9 மணியளவில் குப்பை மேட்டில் தீ பிடித்து தீ மளமளவென எரிய தொடங்கியது.
இதைப்பார்த்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீ கட்டுப்படுத்தப்பட்டது.
தீ விபத்து நடந்த குப்பை மேட்டு பகுதிக்கு பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், துணை தலைவர் கோபால், ெசயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் விசுவநாதன், கவுன்சிலர்கள் தனபால், மருதாச்சலம், மற்றும் வரதராஜ், பாபு ராஜா, செந்தில், கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
தீ பிடித்து எரிந்த குப்பை மேட்டில் விடிய விடிய தூய்மை பணியாளர்கள் கண்காணித்தனர். அப்போது தொடர்ந்து காலையிலும் குப்பையில் இருந்து புகை வெளியேறி கொண்டு இருந்தது.
இதையடுத்து மீண்டும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புகை மீது தண்ணீர் பாய்ச்சினர். மேலும் பொக்லின் எந்திரம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு புகையை அணைக்கும் பணி நடந்தது.
குப்பை மேட்டில் தீ பிடித்து எரிந்ததால் அங்கு இருந்த பாட்டில்கள் வெடித்து சிதறியது. மேலும் கடுமையான புகை மண்டலம் நிலவியது.
- நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.
- தினமும் 100 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது.
தினமும் 100 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் எழும் புகை மூட்டத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை அங்கு திடீரனெ தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனால் சங்கரன்கோவில் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
உடனே பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். ஆனாலும் தொடர்ந்து தீப்பற்றி எரிந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக குப்பைக்கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் புகை எழும்பியபடியே உள்ளது. இதனால் அதனை சுற்றி உள்ள புதுக்காலனி, பாலாஜி நகர், சிவாஜி நகர், சத்திரம் புதுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
வழக்கமாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை கிடங்கில் குவிக்கப்படும் குப்பைகள் மீது அவ்வப்போது தண்ணீர் ஊற்றுவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் லாரி பழுது காரணமாக தண்ணீர் ஊற்றவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் திடீரென தீ ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வீதிகளில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் மருத்துவக்கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளின் மருத்துவ கழிவுகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டப்படுவதாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. எனவே மருத்துவக்கழிவுகளை குப்பையில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் ஈரோடு பெரியார்நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நேற்று காலை ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய உத்தரவின்பேரில் நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கு மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் கிடந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நடவடிக்கை எடுத்தார். மேலும், குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளும் அகற்றப்பட்டது.
ஆஸ்பத்திரிகளில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.