search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gathering"

    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • முடிவில் நூலக பணியாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

    மதுக்கூர்:

    பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம், வாசகர் வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக 2-ம் நிலை கிளை நூலகர் அண்ணாமலை அனைவ ரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் மதுக்கூர் கிளை நூலகத்தை முழு நேர நூலகமாக மாற்றி காலை 8 முதல் இரவு 8 மணி வரை நூலகம் செயல்படவும், மேலும், 2 நூலகரை நியமிக்க வேண்டும், மதுக்கூரில் உள்ள படித்த கல்வியாளர்கள் மாணவ- மாணவிகள் அனைவரையும் உறுப்பி னராக சேர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் மேகலாதன், துரை ராசு, அ.தி.மு.க. கிளை செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் துரைராஜன், வட்டார கல்வி அலுவலர் ஓய்வு சுப்பிரமணியன், முத்துக்க ண்ணு, செல்வம், பாலசுப்பி ரமணியன், எஸ்.எஸ்.ராஜன், வாசகர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் புரவலராக அ.தி.மு.க. மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தண்டாயுதபாணி, அன்னை திருமண மண்டபம் ஹரிகரன், கோவிந்தராசு, கதிர்வேலன், கோவிந்தராஜ், வக்கீல் முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் எஸ்.எஸ்.ராஜன், செந்தில்குமார், சண்முகா ஸ்டோர் ஆகியோர் தலா ரூ.1000 செலுத்தி கொண்டனர்.

    முடிவில் நூலக பணியாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

    • சந்தேகப்படும்படி நபர்களை பார்த்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
    • வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு செல்லும்போது காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கள்ளபெரம்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டிபாளையம் ரோட்டில் உள்ள மண்டபத்தில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா தலைமையில் நடைபெற்றது.

    இதில் கள்ளபெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய், வல்லம் உட்கோட்டம் தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேதிதாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா வழங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது :-

    வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு செல்லும்போது காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். கேட்டின் பூட்டை வெளியில் இருந்து திறக்க முடியாதபடி அமைக்க வேண்டும்.

    கதவில் வெளியில் இருப்பவர்களை பார்க்கும் லென்ஸ் பொருத்தலாம். பாதுகாப்பிற்காக இரவு காவலர்களை நியமிக்கலாம்.

    நகைகளை வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க வேண்டும். சந்தேகப்படும் படி நபர்களை பார்த்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சி.சி.டி.வி. கேமரா பொருத்தலாம்.

    கவனத்தை திசை திருப்பி வழிப்பறி, கொள்ளைகள் போன்றவற்றை தவிர்க்க கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.

    • பொது மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.
    • இந்த கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமை வகித்து பொதுமக்களிடம் பேசினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வடகரையாத்தூர், கரபாளையத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த மார்ச் 11-ல் படுகொலை செய்யப்பட்டார்.இதையடுத்து, பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகு திகளில் தீ வைப்பு, குளத்தில் விஷம் கலப்பது, மரங்களை வெட்டி சாய்ப்பது போன்ற அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தது.

    இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், அந்த பகுதியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா உத்தரவின் பேரில் ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் முக்கியமான சந்திப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கண்கா ணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தி உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று ஆனங்கூர், பாகம்பாளையம், அய்யம்பாளையம் பகுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமை வகித்து பொதுமக்களிடம் பேசினார்.

    அப்போது, பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி களில் தேவையற்ற சம்ப வங்கள் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குற்றவாளி களை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    பொதுமக்களாகிய நீங்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே குற்றவாளிகளை கண்டுபிடிக்க இயலும். நீங்கள் வீட்டில் இருக்கும் போதும் அல்லது வெளியில் செல்லும்போதும், ஏதாவது ஒரு வகையில் குற்றவாளிகள் குறித்து தகவல் கிடைக்கலாம். அந்த தகவலை உடனடியாக காவல்துறையினிடம் தெரிவிக்க வேண்டும்.

    அப்போது தான் இனி வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் செய்ய முடியும் என்றார். மேலும், ஒவ்வொரு நாள் இரவும், ஒவ்வொரு ஊரில் இருந்தும் தினமும் 10 இளைஞர்கள் போலீசாருNamakkal District News,டன் இணைந்து இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக் கொண்டார். அதற்கு போலீசார் உடன் இணைந்து ரோந்தில் ஈடுபடுவதாக இளைஞர்கள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    • 52 மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
    • வருவாய் தொடர்பான பிரச்சனைகள் குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில்நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதில் நேரடியாக வழங்கப்பட்ட 27 மனுக்களுடன் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்ட காவல்துறை தொடர்பான மனுக்கள் 25 உள்ளிட்ட 52 மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

    மேலும் சொத்து பிரச்சனை, குடும்ப தகராறு, வருவாய் தொடர்பான பிரச்சனைகள் குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.

    இந்த முகாமில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஈஸ்வரன், வெள்ளைத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • அங்கன்வாடி மையங்களுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தவமணி தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் பிரேமா முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பொறுப்பா ளர்கள் சித்தரா, மாலதி, திரிபுரசுந்தரி மற்றும் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ 26 ஆயிரமும், ஓய்வூதியமாக ரூ 9 ஆயிரமும் வழங்கிட வேண்டும்.

    மருத்துவ காப்பீடு தொகை மருத்துவ செலவுகளுக்கு ஏற்ப முழுமையாக வழங்கிட வேண்டும்.

    அங்கன்வாடி மைய பராமரிப்புக்காக வழங்கப்படும் ரூ 3 ஆயிரம் தொகையினை பணியாளர்க ளுக்கு நேரடியாக வழங்கிட வேண்டும். சிலிண்டர் மற்றும் உணவு செலவுகளுக்கான தொகையை முன்பணமாக வழங்கிட வேண்டும்.

    சிலிண்டருக்கு வழங்கப்படும் தொகை பில்லில் உள்ளவாறு முழுமையாக வழங்கிட வேண்டும்.

    அங்கன்வாடி மையங்களுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.

    காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

    கோடை வெயிலின் தாக்கம் கருதி அங்கன்வாடிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை காலத்தில் உலர் உணவு பொருட்களாக வழங்க வேண்டும்.

    10 ஆண்டுகள் பணி முடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். மகப்பேறு விடுப்பு காலத்தை ஒரு வருடமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

    பணியிட மாறுதல் அளித்திட வேண்டும்.

    இவைகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போரட்டத்திலும் ஈடுபட போவதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • இந்த பேரணி யில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கலையமுதன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர், ஒன்றிய பொருளாளர் சின்னதுரை, நகர செயலாளர் சீனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்றத் தொகுதி செயலாளர் மதியழகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் கலந்து கொண்டு வருகிற ஏப்ரல் 14- ந் தேதி புரட்சியாளர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரில் மத்திய அரசை கண்டித்து ஜனநாயகம் காப்போம் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார். அப்போது மாநில இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன், மாநில தொண்டரணி செயலாளர் கூத்தக்குடி பாலு, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பொன்னிவளவன், மாவட்டத் துணைச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் மக்கா கலீல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, முகம் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ஆதிகர்ணன் நன்றி கூறினார்.

    • பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதி–யில் செயல்பட்டு வரும் நகைக் கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் போலீசார் சார்பில் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதி–யில் செயல்பட்டு வரும் நகைக் கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி கலையரசன் தலைமை வகித்து பேசியதாவது:-

    நகை கடையின் பாதுகாப்பு கருதி நகைக் கடைக்கு முன்பும், கடைக்கு உள்ளேயும், நகை வைத்திருக்கும் முக்கியமான பகுதிகளிலும், கல்லாப்பெட்டி உள்ள பகுதிகளை பார்க்கும் வகையிலும் தரமான காமிராக்கள் பொருத்த வேண்டும்.

    நகை கடைகளில் அலாரம் வைக்க வேண்டும். இரவு நேரங்களில் வாட்ச்மேன் அமர்த்த வேண்டும். கடைகளுக்கு தரமான உறுதியான பூட்டுக்களை போட வேண்டும். இரவு நேரங்களில் மின் விளக்குகளை எரிய விட வேண்டும்.

    தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வட மாநில நபர்களால் திருட்டு நடைபெறுவதால், தாங்கள் கடை வைத்திருக்கும் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வட மாநிலத்தவர்களோ மற்றவர்களோ நின்று கொண்டு நோட்டமிட்டால் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அஜாக்கிரதையாக நகைக்கடைக்காரர்கள் இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜேடர்பாளையத்தில் உள்ள கொத்தமங்கலம் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் உலக மீன்வர் தினத்தை முன்னிட்டு மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • மீன் வளத்தை பாதுகாப்பது, மீனவர்களின் வாழ்வா தாரத்தை உயர்த்துவது மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து விளக்கி கூறினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையத்தில் உள்ள கொத்தமங்கலம் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் உலக மீன்வர் தினத்தை முன்னிட்டு மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மீன்வ ளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்-ஆய்வா ளர் கோகிலவாணி தலைமை வகித்தார். கொத்தமங்கலம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் கலைவாணி கலந்து கொண்டு மீன் வளத்தை பாதுகாப்பது, மீனவர்களின் வாழ்வா தாரத்தை உயர்த்துவது மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து விளக்கி கூறினார்.

    கூட்டத்தில் கொத்த மங்கலம், பள்ளி பாளையம், ஜேடர்பாளையம், ஆனங்கூர் மற்றும் பொன்மலர் பாளையத்தை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் வழிகாட்டுதலின் பேரிலும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதன் உடல் நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.
    • என சுகாதார இணை இயக்குநர் அறிவுறுத்தல்

    சேலம்:

    சேலம் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

    தமிழக கூடுதல் அரசு செயலர் உத்தரவின்படியும் சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அறி வுறுத்தலின்பேரிலும் சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் வழிகாட்டுதலின் பேரிலும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதன் உடல் நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வருகிற 17-ந்தேதி சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் நடத்தி அதன் விபரத்தை தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் வாரியாக நடத்தப்பட்ட விபரத்தை dcifsalem@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் தலைமையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் போதை பொருள் பயன்பாட்டினை தடுக்க ஒவ்வொரு வட்டங்களின் வாரியாக விழிப்புணர்வு பயிற்சிகள் மேற்கொள்ளபட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் விவசாயிகளுக்கு பொட்டாஷ் பாக்டீரியா பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • மேலும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இன்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலத்தினை சுரந்து பயிர்வளர்ச்சியினை மேம்படுத்துகிறது.

    பரமத்தி வேலூர்:

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொட்டாசியம் பயிர்வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் துணை புரிகின்றது. நீர் மற்றும் இலை உற்பத்தி செய்யும் பொருட்களை செடிகளின் பல்வேறு பாகங்களுக்கு கடத்துவதற்கு பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்து உதவுகிறது. தண்டுப்பகுதிகளுக்கு உறுதியை அளித்து செடிகள் சாயாமல் இருக்கவும், பூச்சி, நோய்க்கிருமிகள் செடிகளை எளிதில் தாக்காமல் இருக்கவும் சாம்பல் சத்து பயன்படுகிறது.

    பிரச்சூரியா ஆரென்சியா என்ற பொட்டாசியத்தை இடம்பெயரச் செய்யும் பாக்டீரியா மண்ணில் கரையாமல் கனிமநிலையில் உள்ள பொட்டாசியத்தை கரிம அமிலங்கள் மற்றும் நொதிகளை சுரந்து கரைத்து பயிர்களுக்கு அளிக்கிறது. மேலும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இன்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலத்தினை சுரந்து பயிர்வளர்ச்சியினை மேம்படுத்துகிறது. எனவே விவசாயிகள் மேற்கண்ட பிரச்சூரியா ஆரென்சியா என்ற பொட்டாசியத்தை இடம்பெயரச் செய்யும் பாக்டீரியாவை தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோஸ்பைரில்லம் அல்லது ரைசோபியம், மணிச்சத்தை கரைத்துக் கொடுக்கும் பாஸ்போபாக்டீரியாவுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

    இந்த பாக்டீரியா திட மற்றும் திரவ வடிவங்களில் கிடைக்கிறது. இதனால் மண்ணில் உள்ள இயற்கையாக கிடைக்கும் சாம்பல் சத்தினை பயிர்கள் எடுத்துக்கொள்வது சுலபமாகி, பொட்டாஷ் உரத்திற்கு செலவிடும் தொகையினை விவசாயிகள் சேமிக்கலாம். இந்த பாக்டீரியாவை பயிர்களுக்கு பயன்படுத்தி பலன் அடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கிகள் நேரடி கடன் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு வங்கிகள் நேரடி கடன் வழங்குவது தொடர்பாக மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில் கூடுதல் கலெக்டர் (வருவாய் ) சுகபுத்ரா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏற்காடு பஞ்சாயத்தில் அனைத்து கிராமங்களையும் தூய்மையான கிராமங்களாக மாற்றுவதற்காக “எனது குப்பை எனது பொறுப்பு” கூட்டம் நடைபெற்றது.
    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தெருக்களை சுகாதாரமாக வைத்து கொள்ள ஆலோ–சனை வழங்கினர்.

    ஏற்காடு:

    ஏற்காடு பஞ்சாயத்தில் அனைத்து கிராமங்களையும் தூய்மையான கிராமங்களாக மாற்றுவதற்காக "எனது குப்பை எனது பொறுப்பு" கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி தலைமை வகித்தார், துணை தலைவர் பாலு முன்னிலை வகித்தார்.

    ஏற்காடு லாங் கில்பேட்டை அந்தோணியார் கோயில் சமுதாய கட்டிடத்தில் ஊர் பொதுமக்கள், இளை ஞர்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது, எனது குப்பை எனது பொறுப்பு குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தெருக்களை சுகாதாரமாக வைத்து கொள்ள ஆலோ–சனை வழங்கினர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை 9-வது வார்டு உறுப்பினர் அம்முராஜா செய்து இருந்தனர்.

    ×