search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GeethaJeevan"

    • மரக்கன்றுகள் தேவைக்கு 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    • காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 4,50,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று (02-06-2024) தூத்துக்குடியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதல் மரக்கன்றை விவசாயிக்கு வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

    சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் மிகத் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

    அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார். அவர் முதல் மரக்கன்றை கூட்டாம்புளி கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் வழங்கி இந்நிகழ்வை துவங்கி வைத்தார்.

    இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 4,17,000 மரங்களும், தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்த வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.

    மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி தூத்துக்குடி மாநகர பகுதியான வி.வி.டி. சிக்னல் அருகில் வந்தது.
    • அமைச்சர்கள் , எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் மலர் தூவி வரவேற்று ஊர்தியில் உள் பகுதியில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தூத்துக்குடி:

    கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரின் பன்முக ஆற்றலையும், தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களை காட்சிப்படுத்தும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி தூத்துக்குடி மாநகர பகுதியான வி.வி.டி. சிக்னல் அருகில் வந்தது.

    'முத்தமிழ் தேர்'

    'முத்தமிழ் தேர்' அலங்கார ஊர்திக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பாராமரிப்பு துறை அசைமச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் தூவி வரவேற்று ஊர்தியில் உள் பகுதியில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் லெட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், சப்-கலெக்டர் கவுரவ்குமார், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, துணை மேயர் ஜெனிட்டா, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், பாலகுருசாமி, துணை அமைப்பாளர்கள் பிரதீப், அருணாதேவி, அரசு வக்கீல்கள் சுபேந்திரன், மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்தகபிரியேல்ராஜ், மாலாதேவி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஜெயக்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், பால்ராஜ், மாநகர அணி நிர்வாகிகள் பிக் அப் தனபால், சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், சேர்மபாண்டியன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, ஜான், சரவணக்குமார், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, தி.மு.க. மகளிர் அணி சந்தனமாரி, ரேவதி, பெல்லா, மற்றும் கருணா, ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், ஓன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், கொம்பையா, சரவணக்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராம ஜெயம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தொண்ட ரணி அமைப்பாளர் வீரபாகு, இலக்கிய அணி அமைப்பாளர் ரகுராமன், வக்கீல்கள் அணி அமைப்பாளர் செல்வ குமார், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாடசாமி, செந்தூர்மணி, பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி கணக்குகுழு தலைவருமான ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட 3-ம் மைல் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 25-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.
    • கோவில் கொடைவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட 3-ம் மைல் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 25-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச்செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மாணவரணி சத்யா செந்தில்குமார், கோவில் தர்மகர்த்தா, ராமசந்திரன், தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர்கள் கனகராஜ், ஆறுமுகம், மாரியப்பராஜா, மணிகண்டன், பரமசிவன், பாலசுப்பிரமணியன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சந்திரசேகர், துணைச்செயலாளர்கள் நாகராஜன், சந்தனராஜ், சுந்தர், மாசானமுத்து, கார்த்திஸ்துரை, முத்து, ராஜகுரு, சுப்பிரமணி, ராஜன், அர்ச்சகர்கள் இசக்கிமுத்து, லெட்சுமணன், பரமசிவன் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டூவி புரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொது மக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
    • அதில் சிலர் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் வார்டு வாரியாக நேரடியாக சென்று குறைகேட்பு முகாம் நடைபெற்றது.

    இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை சந்தித்தார்.

    இந்நிலையில் டூவி புரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொது மக்களிடம் நேரடி யாக மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    அதில் சிலர் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

    அதை பெற்றுக்கொண்டு அவர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனில் அக்கறை கொண்டு 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி யில் செயல்படுத்தாமல் பல பணிகளை முறைப் படுத்தாமல் இருந்ததை தற்போது முறைப்படுத்தி செய்து வருகிறோம். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம். அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறைகளை ஒவ்வொன்றாக முழுமையாக தீர்த்து வைப்போம் என்றார்.

    இதில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரிதங்கம், கவுன்சிலர்கள் கனகராஜ், நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், கடம்பூர் பேரூராட்சி கவுன்சிலர் நாகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • அமைச்சர் கீதாஜீவன் உத்தரவுப்படி முழுமையாக அந்த சாலை சீரமைக்கப் பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களை பெற்று வருகிறார்.

    மீன் மார்க்கெட்

    இந்நிலையில் 9-வது வார்டுக்குட்பட்ட பூபால் ராயர்புரம் மெயின் 5-வது தெரு சந்திப்பு பகுதியில் கடந்த 4-ந்தேதி குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் பூபால் ராயர்புரம் மீன்மார்க்கெட் பகுதிகளில் சில குறைபாடுகள் இருப்பதை சரி செய்ய மாநகராட்சி ஹார்விபுரம் பகுதியில் ஜான்சன் பள்ளிக்கு பின்புறம் உள்ள சாலை ஒப்பந்ததாரரின் மெத்தன போக்கால் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் தேவையற்ற பொருட்கள் குவியலாக இருந்தது.

    அவற்றை அப்புறப் படுத்தி அந்த சாலையை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அமைச்சருக்கு நன்றி

    இதனையடுத்து 5-ந்தேதி அமைச்சர் கீதாஜீவன் உத்தரவுப்படி முழுமையாக அந்த சாலை சீரமைக்கப் பட்டது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அமைச்சருக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    • ஆதிக்க எண்ணம் ஒருபோதும் தலை தூக்கக்கூடாது என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
    • சிறுபான்மையினருக்கு அனைத்து உரிமை களும் வழங்கப்பட்டு உள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில் மதுரையில் இன்று சிறப்பு கருத்தரங்கு நடந்தது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கி னார். சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வரவேற்றார்.

    அமைச்சர்கள் கீதா ஜீவன், பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

    அரசியலமைப்பு சட்டத்தில் சிறுபான்மையி னருக்கு அனைத்து உரிமை களும் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பெரு பான்மையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்க ளுக்கு அரணாக இருக்க வேண்டும்.

    தற்போதைய சூழ்நிலை யில் மக்களிடையே சாதி-மதம் அடிப்படையில் பிரி வினை ஏற்படுத்தி விடலாம் என்று நோட்டாவோடு போட்டி போடும் ஒரு குழு திட்டமிட்டு வருகிறது. மத உணர்வை மதிப்போம், மதவெறி கொள்ளாதே என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. நம்மிடம் ஆதிக்க எண்ணம் ஒருபோதும் தலை தூக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், நமது கலாச்சாரத்தில் சிறப்பான அடையாளங்கள் அனைத்தும் சிறுபான்மையி னரால் வந்தது. அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் நன்றாக திறமைகளை வெளிப்படுத்து கின்றனர். எல்லோரும் இணைந்து சமுதாயத்தை வழிநடத்தி செல்கிறோம். தமிழக வளர்ச்சிக்கு பல சமுதாயத்தினர் பெரிய அளவில் பங்களிப்பு கொடுத்துள்ளனர். எனக்கு கல்வி, திறமை இருந்தாலும் முதல்வர் தரும் ஆதரவும் ஊக்கமும் மட்டுமே என் பணி சிறப்பாக அமைய ஊன்றுகோலாக விளங்கி வருகிறது.

    இந்திய அரசு ரத்து செய்த சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொகையை, மாநில அரசு வழங்குவது தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதில் எம்.பி.க்கள் வெங்கடேசன், நவாஸ்கனி, மாணிக்கம்தாகூர், எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதய ராஜ், ஆளூர் ஷா நவாஸ், பிரின்ஸ், அப்துல் வஹாப், கோ.தளபதி, அப்துல்சமது, ராஜேஷ்குமார், புதூர் பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், சிறு பான்மையினர் ஆணைய துணைத் தலைவர் மஸ்தான், மதுரை கத்தோலிக்க உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, சி.எஸ்.ஐ. பேராயர் ஜெயசிங்பிரின்ஸ் பிரபாகரன், பெந்த கோஸ்தே திருச்சபை தேசிய துணை தலைவர் எடிசன், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத்அலி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, இயக்குநர் சுரேஷ்குமார், கலெக்டர் அனீஸ்சேகர், மேயர் இந்திராணி, அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் பயிற்சிப் பாசறை நடைபெற்றது.
    • தமிழன் பிரசன்னா, கோவி.லெனின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நடைபெற்றது.

    கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி தி.மு.க. இளைஞரணியினருக்கான இப்பயிற்சிப் பாசறை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சி கோவில்பட்டி சவுபாக்யா திருமண மண்டபத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.

    மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா, சமூக சிந்தனையாளர் கோவி.லெனின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். நகர்மன்றத் தலைவரும், தி.மு.க. நகரச் செயலருமான கா.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், தி.மு.க. ஒன்றியச் செயலர்கள் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், ராதாகிருஷ்ணன், அ.சுப்பிரமணியன், ஆ.சின்னப்பாண்டியன், தி.மு.க. நிர்வாகிகள் ராமர், ராஜகுரு, சண்முகராஜ், ரமேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை இருக்கும். அதனை வெளிப்படுத்த வேண்டும்.
    • சமூகவலைதளங்களில் அதிக அளவில் நண்பர்களை சேர்ப்பது தேவையற்றது. மனதை கட்டுப்படுத்தினால் பல விஷயங்களில் வெற்றி பெற முடியும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 56 அரசு பள்ளிக்கூடங்கள் உள்பட மொத்தம் 139 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 673 மாணவர்கள், 8 ஆயிரத்து 825 மாணவிகள் ஆக மொத்தம் 16 ஆயிரத்து 498 மாணவ, மாணவிகளுக்கு ரூ.8 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 175 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

    அமைச்சர் கீதாஜீவன்

    இதன் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 236 மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசியதாவது:-

    சைக்கிள் ஓட்டுவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. மேலும் கொரோனா காலத்துக்கு பிறகு மாணவ, மாணவிகளின் மனநிலை மாறி உள்ளது. படிக்காமல், பரீட்சை எழுதாமல் பாஸ் ஆகிவிடாலாமா என்று நினைக்கிறார்கள். அவ்வாறு பாஸ் ஆனால் எந்த பலனும் இருக்காது. அந்த எண்ணத்தை தூக்கி எறிந்து விட வேண்டும்.

    தினமும் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை படித்து விட்டால் எந்த சிரமமும் இருக்காது. எல்லோரும் 100 மதிப்பெண் பெற வேண்டும் என்று கூற மாட்டேன்.

    ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை இருக்கும். அதனை வெளிப்படுத்த வேண்டும். தேர்ச்சி பெறுவதற்காக மட்டும் படிக்கவில்லை. அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் படிக்கிறோம். ஆகையால் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும்.

    படிப்பு, விளையாட்டு, நண்பர்களுடன் இருத்தல் போன்ற ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும். டி.வி.சீரியல்களை மாணவிகளை அடிமைப்படுத்திவிடுகிறது. தற்போதைய சீரியல்கள் அறிவை வளர்க்கும் வகையில் இல்லை. அதே போன்று செல்போன்களை நல்ல விஷயங்களுக்காக மட்டும், தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். சமூகவலைதளங்களில் அதிக அளவில் நண்பர்களை சேர்ப்பது தேவையற்றது. மனதை கட்டுப்படுத்தினால் பல விஷயங்களில் வெற்றி பெற முடியும்.

    நல்ல முடிவு

    மாணவிகள் எப்போதும் நேர்மறை எண்ணம் கொண்ட வர்களாக இருக்க வேண்டும். சிறிய விஷயங்களுக்காக குழம்பக்கூடாது. பள்ளிக்கூடங்களில் உள்ள கட்டுப்பாட்டுக்கும், அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் உண்டு. அதனை மாணவிகள் புரிந்து கொள்ள வேண்டும். மாணவிகள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் கண்டிக்கிறார்கள். கீழ்படிதல் உள்ள மாணவ, மாணவிகள் நல்ல நிலையை அடைவார்கள். ஒவ்வொருவரும் தைரியமான குழந்தைகளாக இருக்க வேண்டும். மாணவிகள் எடுக்கும் நல்ல முடிவு வெற்றியைத் தரும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் புகார் கொடுக்க தயங்காதீர்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, தாசில்தார் செல்வக்குமார், கவுன்சிலர் பேபி ஏஞ்சலின், பள்ளி தலைமை ஆசிரியை ஞானம் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் கிராமப்பகுதிகளில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
    • சட்டத்திற்கு புறம்பான செயலில் குழந்தைகள் ஈடுபடுவது தமிழகத்தில் 2-வது மாவட்டமாக தூத்துக்குடி உள்ளதாக அமைச்சர் கூறினார்

    தூத்துக்குடி:

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை சார்பில் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

    குழந்தைநேய தூத்துக்குடி

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். பயிற்சி முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து, குழந்தைகளைக் கொண்டாடுவோம், குழந்தைநேய தூத்துக்குடி மாவட்டம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதனை கலெக்டர் செந்தில்ராஜ் பெற்று கொண்டார். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் கிராமப்பகுதிகளில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டும். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முறையான உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    சட்டத்திற்கு புறம்பான செயலில் குழந்தைகள் ஈடுபடுவது தமிழகத்தில் 2-வது மாவட்டமாக தூத்துக்குடி உள்ளது. இது வேதனை அளிக்கிறது.

    குற்றச்செயல்

    குற்றச்செயல்களில் சிறார்களை ஈடுபடுத்துவதில் 2-வது இடத்தில் இருப்பதால் முதல்-அமைச்சர் குழந்தைகள் சம்பந்தமான எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வேகப்படுத்தி இருக்கிறார்.

    ஆனால் முறையான சட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற முறையில் தான் செயல்பட்டு வருகிறோம்.

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் நாளை சிறப்பு நிகழ்வாக யூனிசெப் நிறுவனம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒரு வருடத்தில் சிறுவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுத்துவதை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் பூரணி, சரண்யாசதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
    • பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கீதாஜீவன் கேட்டறிந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் புதிய கால்வாய் அமைக்கும் பணிகள் இன்று காலை தொடங்கப்பட்டது. எட்டயபுரம் சாலை இசக்கியம்மன் கோயில் அருகில் மற்றும் திருச்செந்தூர் சாலை மாணிக்கம் மஹால் முன்பும் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கி கால்வாய் அமைக்கும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கீதாஜீவன் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர நகர அமைப்புக் குழு தலைவர் ராமகிருஷ்ணன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    ×