என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GK Mani"

    • சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது
    • பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார்.

    தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார்.

    சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:

    * அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும்

    * அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

    * 8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

    என்று தெரிவித்துள்ளார்.

    • ஜி.கே.மணிக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
    • ஜி.கே.மணி சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    சேலம்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜி.கே மணி பா.ம.க. கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தொகுதியான பென்னாகரத்திற்கு அடிக்கடி சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை கேள்விப்பட்டு, அருள் எம்.எல்.ஏ அவரிடம் நலம் விசாரித்தார். அதே போல கட்சி நிர்வாகிகளும் அவரிடம் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்து வருகின்றனர். இதற்கு இடையே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவரிடம் நலம் விசாரித்தார்.

    • முதலமைச்சர், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
    • தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பேசவே அன்புமணி மு.க.ஸ்டாலினை சந்தித்தார்

    திண்டுக்கல்:

    பா.ம.க. கவுரவத்தலைவர் ஜி.கே.மணி இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழை வளர்க்க வேண்டும், மீட்டெடுக்க வேண்டும் என பா.ம.க தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக வருகிற 21-ந்தேதி தாய்மொழி தினத்தன்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    தமிழ் குறித்த விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளும் அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 28-ந்தேதி திண்டுக்கல்லில் தொடங்கி மதுரையில் நிகழ்ச்சி நிறைவடைகிறது. இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    முதலமைச்சர், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆனால் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பேசவே அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதில் வன்னியர்களுக்கு 10½ சதவீத இடஒதுக்கீடு, தமிழ் வளர்ச்சி, நீர் மேலாண்மை குறித்து மட்டுமே ஆலோசனை செய்யப்பட்டது என்றார்.

    அப்போது மாநில பொறுப்பாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர்கள் ஜான்கென்னடி, ஜோதிமுத்து, சிவக்குமார், மணி, திருப்பதி, வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

    • வன்னியர் இடஒதுக்கீட்டு ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
    • தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி இடஒதுக்கீடு சம்பந்தமாக பேச முற்பட்டார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்தார். அரசியல் செய்யும் இடம் இதுவல்ல என்று அனுமதி மறுத்தார். இதனால் ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் ஜி.கே.மணி, சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:-

    வன்னியர் இடஒதுக்கீட்டு ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வேதனை அளிக்கிறது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேச முயற்சி செய்தபோது சபாநாயகர் எங்களை பேச அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது. கல்வியில், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள்.

    10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை காலம் தாழ்த்தாமல் உடனே விரைந்து வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜி.கே.மணி தொண்டை வலியால் பேச முடியாமலும், தொடர் தலைவலி, தலைசுற்றல் ஆகியவற்றாலும் அவதிப்பட்டார்.
    • ஆபரேசனுக்கு முன்னதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஜி.கே.மணியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    சென்னை:

    பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்தார்.

    தொண்டை வலியால் பேச முடியாமலும், தொடர் தலைவலி, தலைசுற்றல் ஆகியவற்றாலும் அவதிப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் தொண்டை குரல்வளையில் ஏற்பட்டிருக்கும் கட்டியை அகற்ற வேண்டும் என்றனர். இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு அவருக்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    ஆபரேசனுக்கு முன்னதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஜி.கே.மணியை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருக்கு அறுவை மருத்துவம் செய்யவிருக்கும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பாபு மனோகரிடம் ஜி.கே.மணிக்கு மேற்கொள்ளப்பட விருக்கும் மருத்துவம் குறித்து கேட்டறிந்தார். நல்லமுறையில் கவனித்து கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.

    ஆபரேசன் முடிய மாலை 3 மணி வரை ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு மாலையில் வருவதாக கூறி சென்றார்.

    • பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் நாளை சித்ரா பவுர்ணமி (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் 4.16 மணி முதல் அடுத்த நாள் 24-ந்தேதி அதிகாலை 5.47 மணி உள்ளதால் கூட்டம் அலை மோதும்.

    தற்போது கடுமையான வறட்சியும், சுட்டெரிக்கும் வெயில் நிலவுவதால் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும், காவல் துறையும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
    • பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் கௌரவத்தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்து வந்த ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக நேற்று அறிவித்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார்.

    இந்நிலையில், திருவள்ளூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, "விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா பாமகவில் இணைய விரும்பினால் பரிசீலிப்போம்" என்று தெரிவித்தார்.

    முன்னாக தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதிலும், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்ததற்காக விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பா.ம.க.வில் மூத்தவர்கள் பலர் இருக்கும்போது அன்புமணி தலைவரானது ஏன்?
    • மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று மோடி அரசை கேட்பீர்களா?

    தி.மு.க.வில் எத்தனையோ தியாகங்கள் செய்து கட்சிக்காக சிறை சென்ற துரைமுருகன் இன்று தி.மு.க.விலேயே மூத்த அமைச்சராக இருக்கிறார். தி.மு.க.விற்காக எவ்வளவோ உழைத்த துரைமுருகனுக்கு பதவி தராதது ஏன்? என்றும், இன்னொரு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கலாமே எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதற்கு பதிலடியாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில்,

    பா.ம.க.வில் மூத்தவர்கள் பலர் இருக்கும்போது அன்புமணி தலைவரானது ஏன்?

    பா.ம.க.வில் இன்று வரை பாடுபடும் ஜி.கே.மணியிடம் இருந்து தலைவர் பதவியை பறித்தது ஏன்?

    இட ஒதுக்கீட்டிற்கே முட்டுக்கட்டையாக இருக்கும் பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி பேசுவாரா?

    மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று மோடி அரசை கேட்பீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளையே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற தயார்.
    • நான் 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவர் பதவியில் இருந்தேன்.

    பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * நாளையே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற தயார்.

    * தி.மு.க.வுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவையும் வழங்குவதற்கு தயார்.

    * ஆதரவு அளித்தால் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றுமா?

    * இப்போது உள்ள தடைகள் பா.ஜ.க. அணியிலிருந்து பா.ம.க. வெளியேறினால் உடனடியாக விலகி விடுமா?

    * நான் 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவர் பதவியில் இருந்தேன்.

    * பா.ம.க.விலிருந்து கேள்வி எழுப்பினால் தி.மு.க.விலிருந்து வன்னியரை வைத்து பதில் சொல்வதை கலைஞரை தொடர்ந்து ஸ்டாலினும் செய்கிறார்.

    * பா.ம.க.வில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.
    • முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததற்கு, அன்புமணி எதிர்ப்பு.

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.வின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டம் தொடங்கியவுடன், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி குறித்து பேசினார்.

    இதையடுத்து, புதுச்சேரி பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.

    அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததற்கு, அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

    பா.ம.க. கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆனவருக்கு பதவி அளிப்பதா என மேடையிலேயே அன்புமணி கேள்வி கேட்டார்.

    நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என்றும் நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தமாக கூறினார்.

    எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் கூறியதும், மேடையிலேயே சரி சரி என அன்புமணி கூறினார்.

    அன்புமணிக்கு முகுந்தன் துணையாக இருப்பார் என ராமதாஸ் கூற, தேவையில்லை என அன்புமணி பதில் கூறினார்.

    சரி சரி என கூறிய அன்புமணியிடம் வெளியேறுவது என்றால் வெளியேறு என்று ராமதாஸ் கூறினார்.

    பனையூரில் எனக்கு அலுவலகம் உள்ளது. அங்கு வந்து தொடர்பு கொள்ளுங்கள் என மைக்கை எறிந்து விட்டு அன்புமணி சென்றார்.

    இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் நேரடி மோதலால் யாரை ஆதரிப்பது என தெரியாமல் பாமக நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணியை சமாதானம் செய்ய குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழுவிற்கு பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமைத் தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அன்புமணியை வரவழைத்து நாளை பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண விழா நடைபெறுகிறது.
    • இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் சேதுநாயக்கின் திருமணம் நாளை மெய்யனூர் சூரமங்கலத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


    மேலும், இந்த விழாவில் திரைப்பிரபலங்கள் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ஜி.கே.மணியின் மகனான தமிழ் குமரன் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே. மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நாளை பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே. மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நாளை பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

    சென்னை சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில், பொதிகை தொலைக்காட்சி நிலையம் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நாளை காலை 10.30 மணிக்கு பாராட்டு விழா தொடங்குகிறது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். விழாவுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×