என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Government Arts College"
- மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர்.
- குழுவினர் நடத்திய விசாரணையில் பேராசிரியர் பிரேம்குமார் மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியது உண்மை என தெரிய வந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்ட மாணவ-மாணவிகள் என பலர் படித்து வருகிறார்கள்.
இந்த கல்லூரியில் வணிகவியல் துறை தற்காலிக கவுரவ விரிவுரையாளராக பிரேம்குமார் (40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் தரக்குறைவாக பேசியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் விசாரணை நடத்தினார். மேலும் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதை தொடர்ந்து குழுவினர் நடத்திய விசாரணையில் பேராசிரியர் பிரேம்குமார் மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியது உண்மை என தெரிய வந்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி.யிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பாரதியார் பல்கலைக்கழத்தில் உள்ள அதிகாரிகளிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பாராதியார் பல்கலைக்கழக அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து மாணவர்கள், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்ன்ர் கல்லூரி முதல்வரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.
மேலும் புகார் அளிக்கப்பட்ட பேராசிரியர் பிரேம்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் மாணவ-மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசியதும், தரக்குறைவாக பேசியதும் தெரிய வந்தது.
இதையடுத்து பேராசிரியர் பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதைதொடர்ந்து அவரை உயர் அதிகாரிகள் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து உத்தரவிட்டனர்.
- பேராசிரியை சாதி ரீதியாக பேசியதால் நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
- கும்பகோணம் கலை கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலை கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ கடந்த மாதம் 18-ந்தேதி வகுப்பறையில் மாணவர்களை அவமதித்ததாக புகார் எழுந்தது.
பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ சாதி ரீதியாக பேசியதால் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கும்பகோணம் கலை கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை சாதிப்பெயர் கூறி திட்டிய பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடந்து வந்த நிலையில் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டம், மாணவர்களின் தொடர் வகுப்பு புறக்கணிப்பு காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- நடப்பாண்டில் 89 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
- ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சேலம்:
சேலம் வின்சென்டில் இயங்கி வரும் அரசு கலை கல்லூரியில் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த கல்லூரியில் 20 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. இளநிலை படிப்புக்கு 1400 இடங்கள் உள்ளன. இதற்காக நடப்பாண்டில் 89 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இங்கு சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு கடந்த 29-ந் தேதி நடைபெற்றது.
இந்தநிலையில் பொதுப்பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று கல்லூரியில் தொடங்கியது. கல்லூரி முதல்வர் செண்பக லெட்சுமி கலந்தாய்வை தொடங்கி வைத்தார்.
இதில் இளங்கலை கணிதம், புள்ளியில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், நிலவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அப்போது கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., பி.ஏ. தமிழ், பி.காம், பி.காம். சி.ஏ, பி.காம். கூட்டுறவு, நிலவியல் உள்பட பல்வேறு பாடப் பிரிவுகளை மாணவ-மாணவிகள் விரும்பி தேர்வு செய்தனர். இதனால் அந்த பாடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டது. தொடர்ந்து நாளை ( 11-ந் தேதி) பி.காம், பிகாம் சி.ஏ., கூட்டுறவு, பி.பி.ஏ., பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியில் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறப்பட்ட செல்போன்குறுஞ்செய்தி, இ.மெயில் விவரம் ஆகியவற்றுடன் 10,11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் , சாதி சான்று, மாற்று சான்று, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. வருகிற 15-ந் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும்.
- முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும். ஏற்கனவே கடந்த 20-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டன.
வருகிற 27-ந் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 2-வது சுற்று ஜூன் 24 முதல் 29-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்த வருடமும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் சேருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களில் 100-க்கு 100 எடுத்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட போட்டி அதிகமாக உள்ளது. கடந்த வருடம் தேவையின் அடிப்படையில் 20 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டன. அதுபோல இந்த ஆண்டும் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய் என நிர்ணயம்.
- விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 24ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் நாளை முதல் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய், பதிவு கட்டணம்- 2 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வாயிலாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சபாநாயகர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முடிவு
- கல்லூரியின் மேம்பாட்டுக்காக தேவைப்படும் அனைத்தையும் விரைந்து செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவளகுப்பம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தின் போது தற்போது கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் இயங்கி வருவதால் கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றை தனித்தனி வளாகமாக மாற்றும் வகையில் புதிய மதில் சுவர் அமைக்க வேண்டும். கல்லூரியின் மேம்பாட்டுக்காக தேவைப்படும் அனைத்தையும் விரைந்து செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக விரைந்து ஆலோசித்து புதிய மதில் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்த ஆய்வு கூட்டத்தின் போது மேல்நிலைக் கல்வி இயக்குனர் அமன் சர்மா, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு, லட்சுமி, காந்தன், தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஞானசேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
- வருகிற 22-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெறுகிறது.
- 23-ந்தேதி அன்று கணிதம், இயற்பியல், உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும் பொதுக்கலந்தாய்வு நடைபெறும்.
கும்பகோணம்:
கும்பகோணம், அரசு கலைக் கல்லூரி முதல்வர் மாதவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது:-
கும்பகோணம், அரசினர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவியர்களுக்கான பொதுக் கலந்தாய்வு வருகிற 22-ந் தேதி மற்றும் 23 ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெறுகிறது.
வருகிற 22 ந் தேதி அன்று தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், வணிகவியல், வணிக மேலாண்மை மற்றும் புவியியல் ஆகியப் பாடப்பிரிவுகளுக்கும்
23-ந் தேதி அன்று கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புள்ளியியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் பொதுக்கலந்தாய்வு நடை பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 14 இளநிலை பட்டப்படிப்புகளும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன.
- பொதுப்பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
உடுமலை :
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பொதுப்பிரிவு மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கீ.கல்யாணி கூறியதாவது:- உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 14 இளநிலை பட்டப்படிப்புகளும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. இதில் 2023- 2024 ம் கல்வியாண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு துறை என மொத்தம் 21 பேர் சேர்ந்தனர். அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் பெற்ற தரவரிசைப்படி பொதுப்பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
இதில் பிபிஏ., பாடப்பிரிவில் 10 மாணவர்களும்,பி.காம் பாடப்பிரிவில் 52 மாணவர்களும்,பி.காம்(சிஏ) பாடப்பிரிவில் 59 மாணவர்களும்,இ.காமர்ஸ் பாடப்பிரிவில் 11மாணவர்களும்,பொருளியல் பாடப்பிரிவில் 6 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 2 மாணவர்களும் ஆக மொத்தம் 140 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர் .முதல் கட்ட கலந்தாய்வின் 3- ம் நாளான இன்று கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அறிவியல் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் 10,11,12-ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்று சான்றிதழ்,ஆதார் அட்டை,சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 6 , இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல்,தரவரிசை நகல் , கல்லூரிக்கட்டணம் உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும்.கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோருடன் வரவேண்டும்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
- ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனர்.
- தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தாராபுரம் :
திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி கட்டும் பணி மற்றும் மூலனூா், குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.23.25 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகளை செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடா்ந்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தாராபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் அருகில் ரூ.11.38 கோடி மதிப்பில் அரசு கலைக்கல்லூரி கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி நபாா்டு வங்கி நிதி உதவியின் கீழ் கட்டப்பட்ட மயில்ரங்கம் ஆட்டுச்சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தையில் 40 கடைகளுடன், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் வகையில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க இலக்காக நிா்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.
முன்னதாக மூலனூா் பேரூராட்சி வாா்டு எண் 8ல் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வடுகப்பட்டி சாலை முதல் வெங்கல்பட்டி சாலை வரை ரூ.30 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைத்தல், ரூ.6.67 லட்சம் மதிப்பில் சின்னகாம்பட்டி ஆதிதிராவிடா் காலனியில் புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தல், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூா் ஊராட்சி, சோ்வகாரன்பாளையம் அன்னமாா் கோவில் அருகில் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.17 கோடி மதிப்பீட்டில் மானூா்பாளையம் முதல் மேற்கு சடையம்பாளையம் சாலை வரை புதிய தாா்சாலை அமைத்தல், ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புளியம்பட்டி முதல் வெள்ளியம்பாளையம் வரை புதிய தாா்சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.23.25 கோடி மதிப்பீட்டிலான வளா்ச்சித் திட்டப்பணிகளைத் அமைச்சா்கள் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் அசோக்குமாா், திருப்பூா் மாநகராட்சி 4வது மண்டலத்தலைவா் இல.பத்மநாபன், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன், மூலனூா் பேரூராட்சி தலைவா் தண்டபாணி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- தொடர்ந்து நடைபெற்ற பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணாவின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் கணிதத் துறை மாணவி சுபாஷினி போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் மூன்றாம் பரிசு பெற்றார்.
மேலும் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக 14 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
இதில் மூன்றாம் ஆண்டு தமிழ்துறை மாணவன் சூர்யா இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்லூரி முதல்வர்முனைவர் விஜயலட்சுமி கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேரவை தலைவர் குமார், தமிழ்துறை தலைவர் சசிகுமார், துறை தலைவர்கள் நாராயணசாமி, சாந்தி, கார்த்திகா, உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன், நூலகர் சுப்பிரமணியன், நுண்களை மன்ற போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வாழ்த்து பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 8ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- மொத்தம் 62 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
உடுமலை :
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2022 -23 ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 8ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன.
முதல் கட்ட கலந்தாய்வில் பெரும்பான்மையான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் கலை பாடப்பிரிவுகளில் 17 இடங்கள் அறிவியல் பாடப் பிரிவுகளில் 13 இடங்கள் வணிகவியல் பாடப்பிரிவுகள் 32 இடங்கள் என மொத்தம் 62 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கடந்தாய்வு வரும் 27 -ந்தேதி நடைபெற உள்ளது. இது குறித்த குறுஞ்செய்தி தரவரிசை பட்டியலின் படி ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். எஸ்எம்எஸ். பெறப்பட்ட மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 6 போட்டோக்கள் கொண்டு வர வேண்டும். மேற்கண்டவாறு கல்லூரி முதல்வர் சோ. கி.கல்யாணி தெரிவித்துள்ளார்.
- செஞ்சியில் அரசு கலைக்கல்லூரி இந்த வருடமே கல்லூரியை தொடங்குவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
- அரசு வெளியிட்டுள்ள இணையதள விண்ணப்பத்தில் அரசு கலைக்கல்லூரி செஞ்சி என்ற விலாசமும் இடம்பெற்றுள்ளது.
விழுப்புரம்:
செஞ்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி இல்லாததால் செஞ்சி பகுதியை சேர்ந்தவர்கள் திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு சென்று படித்து வந்தனர்.
இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு இப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அதனை ஏற்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் செஞ்சிக்கு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். அதற்காக செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி அருகே இடமும் தேர்வு செய்யப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் பார்வையிடப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடமே கல்லூரியை தொடங்குவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தற்போது அரசு வெளியிட்டுள்ள இணையதள விண்ணப்பத்தில் அரசு கலைக்கல்லூரி செஞ்சி என்ற விலாசமும் இடம்பெற்றுள்ளது.
அதன்படி 2022 - 2023-ம் ஆண்டுக்கு கடந்த 22-ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கேட்டு க்கொள்ளப்பட்டுள்ளது. இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் நேரில் விண்ணப்பிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடமே அரசு கலை அறிவியல் கல்வி கல்லூரியை தொடங்கி நடத்த தனியார் இடம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்