search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Employee"

    • காரில் தூத்துக்குடியில் உள்ள கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அந்த காரை அவரது மகன் தனுஷ் ஓட்டினார்.
    • படுகாயம் அடைந்த ராஜமாணிக்கத்தை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள கோட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 60). இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

    இந்த நிலையில் ஒரு காரில் தூத்துக்குடியில் உள்ள கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அந்த காரை அவரது மகன் தனுஷ் ஓட்டினார். கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு சேலம் திரும்பினர்.

    கார் இன்று அதிகாலை 2 மணி அளவில் கருப்பூர் கரும்பாலை அருகே வந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் முன் பகுதியில் இருந்த ராஜமாணிக்கம் படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த ராஜமாணிக்கத்தை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் பரிதாபமாக இறந்தார். ஆனால் கார் மீது மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்து குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிற்காகமல் சென்ற லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவை முதலியார் பேட்டை அம்பேத்கார் நகர் அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துக்குமரன்
    • புதுவை போக்குவரத்து துறையில் அமலாக்கத்துறை உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை அம்பேத்கார் நகர் அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் புதுவை போக்குவரத்து துறையில் அமலாக்கத்துறை உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மருத்துவ விடுப்பில் இருந்த முத்துக்குமரன் நேற்று முன்தினம் பணிக்கு திரும்பினார். அன்று மாலை பணி முடிந்து தனது மைத்துனர் முருகன் என்பவரின் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    முதலியார்பேட்டை கடலூர் ரோடு ஆலை ரோடு சந்திப்பில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென முத்துக்குமரனையும், அவரது மைத்துனரையும் வழிமறித்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

    மேலும் அந்த கும்பலில் ஒருவன் மறைத்து வைத்தி ருந்த பேனா கத்தியை வைத்து முத்துக்குமரனின் காதில் குத்தினான். பின்னர் அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த முத்துக்குமரன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமரனையும் அவரது மைத்துனரையும் தாக்கிய கும்பல் யார்? அவர்கள் எதற்காக தாக்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
    • இணைய வழி மோசடிக்காரர்கள் தங்களை ராணுவ வீரர்கள், மத்திய அரசில் பணிபுரிகின்றேன்.

    புதுச்சேரி:

    இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மோசடிகளும் அதிகரித்துள்ளது. வித்தியாசமான முறையில் மக்களை ஏமாற்றி மோசடி செய்து வருகின்றனர். நான் மத்திய அரசில் பணிபுரிகிறேன். எனக்கு மாறுதல் உத்தரவு வந்துவிட்டது.

    எனவே என் வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்ய உள்ளேன் என தகவல் வந்தால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என புதுவை சைபர் கிரைம் போலீசார் வேண்டு கோளை வைத்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது: -

    பழைய புதிய பொருட்களை வாங்க விற்க உதவும் உதவும் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களில் இணைய வழி மோசடிக்காரர்கள் தங்களை ராணுவ வீரர்கள், மத்திய அரசில் பணிபுரிகின்றேன். எனக்கு மாறுதல் வந்து விட்டதால் நான் அடுத்த வாரம் டெல்லி செல்ல வேண்டும்.

    மேற்கண்ட பொருட்களை விற்க உள்ளேன் என புகைப்படங்களுடன் கூடிய விளம்பரங்களை வெளியி டுகின்றனர். அவர்களை தொடர்பு கொண்டால் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்ளை ரூ.90 ஆயிரத்துக்கு தருகிறேன் என கூறுகின்றனர். இதற்கு முன்பணமாக தொகையை செலுத்தியவுடன் இணைப்பை துண்டித்துவிடுவார்கள். இதுபோன்ற குறைந்த விலைகளில் பொருட்கள் கிடைக்கிறது என பொதுமக்கள் யாரும் பணத்தை மோசடி ந பர்களிடம் செலுத்தி ஏமாற வேண்டாம். இணைய வழி மோசடிக்காரர்கள், தங்களை ராணுவ வீரர்கள் அல்லது மத்திய படை பிரிவில் பணிபுரிவதாகவே சொல்கின்றனர்.

    மேலும் மோட்டார் சைக்கிள், ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பெரிய தொலைக்காட்சி போன்றவற்றின் படத்தை போட்டு அதிக விலை உள்ள பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கிறோம் என்கின்றனர். பேராசை பட்டு மக்கள் பணத்தை இழக்கின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் இதுபோன்று 14 புகார்கள் பதிவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 5-ம் வகுப்பு மாணவி கிள்ளை பூவாராகசாமி மண்டபம் வீதியில் உள்ள செண்பகவள்ளி என்பவரிடம் டியுஷன் படித்து வருகிறார்.
    • சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாய் தீபாவிடம் நடந்ததை கூறினார்.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் வசித்து வருபவர் தீபா. இவரது 10 வயதுடைய மகள் அங்குள்ள ஊராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், கிள்ளை பூவாராகசாமி மண்டபம் வீதியில் உள்ள செண்பகவள்ளி என்பவரிடம் டியுஷன் படித்து வருகிறார். வழக்கம் போல கடந்த 3-ந் தேதியன்று மாலையில் டியுஷனுக்கு 5-ம் வகுப்பு மாணவி சென்றார். அங்கு படித்துக் கொண்டிருந்த போது சீறுநீர் கழிக்க அந்த வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த டியுஷன் மாஸ்டரின் தந்தை தீயணைப்புத் துறையில் இருந்து ஒய்வு பெற்ற தர்மலிங்கம் (வயது 65), சிறுமியை அருகில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாய் தீபாவிடம் நடந்ததை கூறினார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தகவலறிந்த தர்மலிங்கம் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ள ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • 4 சதவீத அகவிலைப்படி முடக்கப்பட்ட சரண்டர் 21 மாத ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும்
    • புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்கிட வேண்டும்

    தென்காசி:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலு வலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் 4 சதவீத அகவிலைப் படி முடக்கப்பட்ட சரண்டர் 21 மாத ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும்,சி.பி.எஸ். ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல்,சத்துணவு, அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரபடுத்தி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

    மற்றும் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கால மாக மாற்றுவது, தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும், அரசாணை 152-ஐ ரத்து செய்திடவும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷம் எழுப்பப்பட்டது.இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
    • வீட்டிற்கு காலையில் சென்று பார்க்கும் போது பின்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே அவர்கள் வசித்து வந்த வீடு தற்சமயம் பழுது அடைந்திருப்பதால் வீட்டை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து அவர்கள் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியிருந்து பழுது பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு காலையில் சென்று பார்க்கும் போது பின்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் 300 கிராம் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமையாபானு வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    • விழுப்புரத்தில் துணிகரம் அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
    • சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே சாலா மேடு தந்தை பெரியார் நகர் கிருஷ்ணா சதுக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 65) இவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து குத்துவிளக்கு சந்தன கிண்ணம் போன்ற அரை கிலோ வெள்ளி பொருட்கள், 3 பவுன் நகை, மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சீனிவாசன் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவல் இந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பந்தமாக தடவிகள் நிபுணர்களும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடையவியள் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்து சென்று நின்றது யாரையும் கவி பிடிக்கவில்லை. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் திருட்டு சம்பவங்கள் அந்த பகுதியில் அதிகளவில் நிலவுவதால் அப்பகுதியில் வாழும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கியது.
    • மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கான பிரச்சாரம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கியது.

    மாவட்ட துணைத் தலைவர் கே.இராஜூ தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் வி.எஸ்.ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். மாநிலச் செயலாளர் சா.டேனியல் ஜெயசிங், மாநில துணைத் தலைவர் ஏ.பெரியதாக ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட நிர்வாகிகள் எம்.மேகநாதன், எஸ்.துர்க்காம்பிகா, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் வி.சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் து.இளவரசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் வேல் கண்ணன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி எம்.ஜி.ராமமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் ப.அருள்விழி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன் சேரல் நன்றி கூறினார்.

    • அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றி தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
    • திடீரென மயக்கம் ஏற்பட்டு இறந்துள்ளார்.

    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னிருகை பெருமாள். இவரது மனைவி ஆனந்தி தேவி (வயது 53).

    இவர் சீவலப்பேரியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றி தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

    சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த இவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். #JactoGeo
    வேலூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் இந்த போராட்டம் நடந்தது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஜாக்டோ-ஜியோ மாநில நிதி காப்பாளர் சேகர் தலைமையில் நடந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    காட்பாடியில் மாநில தலைமை குழு உறுப்பினர் ஜனார்த்தனன் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் அஜிஸ்குமார், குப்புராமன், ஆண்டாள், மாவட்ட தலைமை குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், செல்வகுமார், பாபு, ஆறுமுகம், குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், அரக்கோணம், ஆற்காடு, வாலாஜா, நெமிலி ஆகிய இடங்களில் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஏராளமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தனர்.

    அணைக்கட்டில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் 13 ஆசிரியர்கள் பங்கேற்றதாக ஜாக்டோஜியோ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகளில் பணிகள் பாதிக்கபட்டது.

    சில தொடக்க பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்க சென்றதால் பள்ளிக்கு பூட்டு போடபட்டது. அரசு அலுவலர்கள் போராட்டத்தால் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கபட்டன.

    திருவண்ணாமலையில் ஜாக்டோஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அண்ணா சிலை மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்,

    இதே போல் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு உள்பட மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். #tamilnews
    தஞ்சையில் மற்றும் கும்பகோணத்தில் தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக பேரணி, ரெயில் மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா முழுவதும் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 9 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

    அதன்படி நேற்று தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பேரணி, ரெயில் மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இன்று 2-வது நாளாக தஞ்சை பழைய பஸ்நிலையம் முன்பு குவிந்த ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியில் வர முடியவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அதே போல் மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு அரசு ஊழியர் வடக்கு வட்ட தலைவர் சரவணன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கும்பகோணம் புதிய பஸ்நிலையம் முன்பு இன்று தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

    தொ.மு.ச. தலைவர் செல்வராஜ் தலைமையில் திடீரென ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ. கண்ணன், ஐ.என்.டி.யூ.சி. செல்வராஜ் மற்றும் தில்லைவனம் கண்ணையன், எச்.எம்.எஸ் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத்தை மறுப்பது மிகப்பெரிய மோசடி என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #AnbumaniRamadoss #PMK

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதல்- அமைச்சரின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய மோசடி ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், அதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர முடியாது என்றும் கூறியிருக்கிறார். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கிறது. இது மன்னிக்க முடியாதது ஆகும்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வி‌ஷயத்தில் கடந்த 2011-ம் ஆண்டிலிருந்தே அரசு ஊழியர்களை ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுகள் ஏமாற்றி வருகின்றன. 2011-ம் ஆண்டுக்கான சட்டப் பேரவைத் தேர்தலில், ‘‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளும் அந்த வாக்குறுதியை ஜெயலலிதா அரசு நடைமுறைப்படுத்தவில்லை. 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக 26.2.2016 அன்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய ஓய்வு பெற்ற அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார்.

    இந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளைப் பல்வேறு கட்டங்களாக அழைத்து அவர்களின் கருத்து களைக் கேட்டறிந்து வந்தது. அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததால் அதன் பதவிக்காலம் 3 தடவை நீட்டிக்கப்பட்டது. அக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து சாந்தா ஷீலா நாயர் விலகிய நிலையில் ஓய்வுபெற்ற அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ந்தேதி புதியக்குழு அமைக்கப்பட்டது.

    அதன் பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் மேலும் ஒரு மாத நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகும் குழு அறிக்கை தாக்கல் செய்ததா? அக்குழு தொடர்கிறதா? என்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. அதனால் தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்தினர். அதற்கு எந்த பயனும் கிடைக்காத நிலையில் அடுத்த மாதம் 27-ந்தேதி மீண்டும் போராட்டம் நடத்த உள்ளனர்.

    அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் முதல்- அமைச்சரோ, மூத்த அமைச்சர்களோ பேச்சு நடத்தி, அரசின் நிலைமையை விளக்குவது தான் சரியானதாக இருக்கும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கையைப் பெற்று அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பது தான் சரியானதாக இருக்கும்.

    ஆனால், ஸ்ரீதர் குழுவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே முடிவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அக்குழுவின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படவில்லை; ஸ்ரீதர் குழு இன்னும் செயல்பாட்டில் உள்ளதா? என்பது கூட தெரியவில்லை. அவ்வாறு இருக்கும் போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எந்த அடிப்படையில் வந்தார்? என்பது விளங்கவில்லை.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று முதல்-அமைச்சர் அறிவிப்பதைப் பார்க்கும் போது அவர் தம்மை தமிழகத்தின் சர்வாதிகாரியாக நினைத்து செயல்படுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது.

    தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அது தொடர்பான கணக்கு வழக்குகளும் அரசு ஊழியர்களிடம் காட்டப்படவில்லை.

    இதற்கெல்லாம் மேலாக பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலேயே ஓய்வு பெற்று விட்டனர். இப்படிப்பட்ட ஒரு திட்டம் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு எந்த வகையிலும் சமூகப் பாதுகாப்பை வழங்காது.

    எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் முடிவை கைவிட்டு, ஸ்ரீதர் குழு அறிக்கையைப் பெற்று அதனடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #AnbumaniRamadoss #PMK

    ×