என் மலர்
நீங்கள் தேடியது "Government employees"
- காளை மாட்டு சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- இதில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்ட ங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஈரோடு:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்கு மார் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட செயலாளர் வெங்கிடு முன்னிலை வகி த்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்த லைவர் மகாவிஷ்ணன் தொடக்க உரையாற்றினார்.
தேர்தல் வாக்குறுதிப்படி சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு பண பலன்களை மீண்டும் வழங்க வேண்டும்.
அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அதே விகிதத்தில் வழங்க வேண்டும். இளைஞர்களின் அரசு வேலை கனவை பறிக்கும் அரசாணைகள் 115 ,139, 152-ஐ ரத்து செய்ய வேண்டும்.
வருவாய் கிராம உதவியா ளர்களுக்கு அலுவலக உதவியாளர்க ளுக்கு இணையாக ரூ.15,700 ஊதியம் வழங்க வேண்டும். 4 மாத பணி நீக்க காலத்தை ஓய்வூதியத்திற்கு பொருந்தும் வகையில் அரசாணை வழங்க வேண்டும்.
எய்ட்ஸ் கட்டு ப்பாட்டு திட்டத்தில் உள்ள பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
காப்பீட்டு திட்டத்தை அரசை ஏற்று நடத்த வேண்டும். காலி பணியிட ங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பாரபட்சத்தை கைவிட்டு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் பணிபுரியும் சமையலர் உதவியாளர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்ட ங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.
- கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.
- பல்லடம்,உடுமலை,தாராபுரம்,மடத்துக்குளம்,அவிநாசி வட்டார நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் முதலாம் மாநில பிரதிநிதித்துவ பேரவை வரவேற்பு குழு கூட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். இதில் மாநில தலைவர் தமிழ்செல்வி, திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பல்லடம்,உடுமலை,தாராபுரம்,மடத்துக்குளம்,அவிநாசி வட்டார நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்துகிறதோ, அப்போதெல்லாம் மாநில அரசும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது. ஆனால் தொடர்ச்சியாக கடந்த நான்கு தவணைகளாக அகவிலைப்படி காலதாமதமாக வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து அரசு ஊழியர்களின் ஒப்படைப்பு விடுப்பு பணப்பலன் என்பது வழங்கப்படாமல் உள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு ஆகியும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாமல் மௌனம் சாதித்து வருகிறது. முன்பு நிதி அமைச்சராக இருந்த பி .டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என அறிவித்தார். தற்போது புதிதாக பதவியேற்றுள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது குறித்து தற்போது அறிவிப்பு வெளியிட முடியாது என தெரிவித்து வருகிறார்.
அதே போல தொகுப்பூதி யத்தில் பணியாற்றி வரும் வருவாய் கிராம உதவியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள் ஆகியோரை நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த போது அவர்களை பகுதி நேர ஊழியர்கள் என அரசு தெரிவித்து வந்தது. இதற்கிடையேஅரசு புதிதாக காலை உணவு திட்டம் என அறிவித்துவிட்டு அதை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றாமல் தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிடுகிறது. சத்துணவு திட்டத்தில் மதிய உணவிற்கு வழங்கப்பட்டு வரும் தொகையை விட அதிகமாக காலை உணவு திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளது. தொடர்ச்சியான எங்கள் கோரிக்கைக்கு தீர்வு காண தொடர் போராட்டமே தீர்வு தரும் என நாங்கள் நம்புகிறோம். ஏற்கனவே 2 தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளோம். வரும் ஆகஸ்ட் 12,13-ந் தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து மாநில பேரவை கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து விவாதித்து அறிவிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 54 துறைகளில் குரூப்-4 மூலம் பணியில் சேர்ந்த பலர் அதிக பலன் அடைந்து வந்தனர்.
- அரசுத் துறையிலும் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இதில் ஒவ்வொரு ஜாதியினரும் வேலையில் சேர்ந்த பிறகு அவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தாலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் பதவி உயர் வழங்கப்பட்டது.
இந்த நடைமுறை 1990-ல் இருந்து பின்பற்றப்பட்டு வந்தது.
சுழற்சி அடிப்படையிலான பதவி உயர்வில் (ரோஸ்டர் சிஸ்டம்) காலியிடங்கள் பதவி மூப்பு அடிப்படையில் நிரப்பப்படாமல் ஜாதி அடிப்படையில் சில பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதன் மூலம் வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை, கணக்கு கருவூலம், வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 54 துறைகளில் குரூப்-4 மூலம் பணியில் சேர்ந்த பலர் அதிக பலன் அடைந்து வந்தனர்.
இதன் பிறகு இந்த நடைமுறையை அதிக அளவில் செயல்படுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 இடங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 18 இடங்கள், பழங்குடியினருக்கு 1 இடம் மீதம் உள்ள இடங்களுக்கு பொது பிரிவு மூலம் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நடைமுறையால் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி இருந்தும் பல பேருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அரசு ஊழி யர்கள் அரசின் முடிவை எதிர்த்து 2004-ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட் ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சட்ட விரோதம், தமிழ்நாடு அரசு தேர்வாணைய விதிகளின்படி தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று 2015-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதி செய்தது.
ஆனாலும் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் பழைய நடைமுறைப்படியே (ரோஸ்டர்சிஸ்டத் தில்) பதவி உயர்வுகள் நிரப்பப்பட்டு வந்தது.
இதனால் சுப்ரீம் கோர்ட்டில் 2021-ம் ஆண்டு மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு நிரப்ப கூடாது என்றும் பணி மூப்பு அடிப்படையில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய விதிகளை பின்பற்றி அரசுப் பணிகளில் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும், அனைத்து நிலைகளிலும் சினியாரிட்டி லிஸ்டை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் கோர்ட்டு இப்போது தெளிவுபடுத்தியது.
இதன் அடிப்படையில் ரோஸ்டர் சிஸ்டத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் இப் போது பதவி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
அதிலும் குறிப்பாக வட்டார போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சித் துறை, கணக்கு கருவூலத்துறை, வணிக வரித்துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய் உள்ளிட்ட 54 துறைகளில் பணியாற்றும் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
ஒவ்வொரு அரசுத் துறையிலும் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் சீனியாரிட்டியில் பணி மூப்பு மூலம் பதவி உயர்வு கிடைக்கும் நம்பிக்கையில் பல அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
- குறிப்பிட்ட ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.
- ஊழியர்கள் தங்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவன சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
அரசு துறை பணிகளுக்கு வெளிநாட்டு சாதனங்களை சார்ந்து இருப்பதை தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த ரஷியா அதிரடி தடை விதித்துள்ளது. திங்கள் கிழமை முதல் அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன ஐபோன் மற்றும் இதர சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்று ரஷிய வர்த்தக துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷியாவின் தொலை தொடர்பு, அரசு ஊடகத் துறை என்று அரசு துறையை சேர்ந்த அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும். ஏற்கனவே குறிப்பிட்ட சில நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இந்த பட்டியலில் அனைத்து அரசு அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசு பணிகளை மேற்கொள்வதற்காக ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த அரசு தடை விதித்து இருக்கிறது. இதன் காரணமாக அரசு அதிகாரிகள் அலுவல் பூர்வ தகவல் பரிமாற்றத்தை தவிர்த்து, தங்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவன சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை கொண்டு உளவு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, ரஷியாவின் ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மிக கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது அரசு ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
நேட்டோ நாடுகளில் வசிக்கும் ரஷிய அதிகாரிகள் பயன்படுத்தும் ஐபோன்களில் பிரத்யேக உளவு மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்ததாக ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் குற்றம்சாட்டி இருந்தது. ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து இருப்பதோடு, பயனர் தனியுரிமையை பாதுகாப்பதில், மிக கடுமையாகவும், கவனமாகவும் செயல்பட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறது.
- புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு உருவாக்கப்பட்டது.
- போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் பாசிக், பாப்ஸ்கோ, அமுதசுரபி உட்பட அரசு சார்பு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கணக்கில் சம்பளம் வழங்கப்படவில்லை.
தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதையடுத்து புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் கோரிக்கை மாநாடு நடத்தினர்.
மாநாட்டில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக அரசு முத்தரப்பு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
தொடர்ந்து மாபெரும் கோரிக்கை பேரணியை தொழிலாளர்கள் நடத்தி முதலமைச்சரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்டமாக பெருந்திரள் காத்திருப்பு போராட்டத்தை கூட்டு போராட்டக்குழு வினர் இன்று நடத்தினர்.சட்டசபை அருகே மிஷன் வீதி மாதாகோவில் எதிரே இந்த போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
பல்வேறு அரசு சார்பு நிறுவன சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முத்து ராமன், ரமேஷ், ஜெயசங்கர், பிரபு, தரணிராஜன், தணிகை மலை, செங்குட்டுவன், துரை செல்வம், பாஸ்கர பாண்டி யன்கண்ணன், சண்முகம், யோகேஷ், கதிரேசன், முருகானந்தம், பிரேம் ஆனந்த், ராஜேந்திரன், திருக்குமரன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தை தொடங்கி வைத்து மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கம் எம்பி, எதிர்கட்சித்தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் ஆகியோர் பேசினர். ஏ.ஐ.டி.யூ.சி. கவுரவ தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா அரசு ஊழியர் சம்மேளனம் ஆனந்தராசன், மாதர்சங்கம் ஆசைத்தம்பி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அரசு சார்பு நிறுவனங்க ளுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும். நிறுவ னங்களை திறந்து நடத்தி அரசு சார்பு நிறுவன ஊழி யர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
- அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு.
- கடந்த மாதம் அரசு ஊழியர்கள் ஐ போன் வேலையின்போது பயன்படுத்தப்பட கூடாது என ரஷியா கூறியது.
பீஜிங்:
உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு.
சீனாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சீனர்களில் பலரும் ஐ-போன் மற்றும் ஐ-பேடு சாதனங்களை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ஆப்பிள் நிறுவனம் அடுத்த வாரம் புதிய ஐ போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில், வேலை நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களையும் அந்நிய நாட்டு முத்திரையிலான கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது. அத்தகைய கருவிகளை அலுவலகத்துக்குக் கொண்டுவர வேண்டாம் என ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என வால் ஸ்ட்ரீட் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது கவலையை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சீனா-அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஐ போன்கள், ஐ பேடுகளை வேலை நோக்கங்களுக்காக அரசு ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது என ரஷியா கடந்த மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- மகளிர் உரிைம திட்ட பணிகளை செம்மையாக செய்திட மாவட்ட, வட்ட அளவில் அரசு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்,
- தேர்தலின் போது அரசு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
சேலம்:
சேலம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க கிளை மாநாடு சேலத்தில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். மகளிர் உரிைம திட்ட பணிகளை செம்மையாக செய்திட மாவட்ட, வட்ட அளவில் அரசு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தாசில்தார், ஆர்.டி.ஓ. கலெக்டர் அலுவலகங்களுக்கு தேவையான கணினி, பிரிண்டர், ஜெராக்ஸ் மிஷின், இணைய தள வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்தலின் போது அரசு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் அர்த்தனாரி, பொருளாளர் முருகபூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.
- சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம்.
- தமிழக அரசுக்கு ரூ.167 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு.
2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர, பகுதி நேரப் பணியாளர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.167 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் எனவும் அறிவித்துள்ளது.
- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றித் தாருங்கள் என்று வலியுறுத்துகிறோம்.
- அடுத்த மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
சென்னை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி அலுவலகம் முன்பு மறியல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததோடு கல்லூரி சாலையில் நூற்றுக்கும் மேலான போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளிக் கல்வி துறையின் அலுவலக வளாக கதவுகள் பூட்டப்பட்டு தடுப்பு வேலிகள் போடப்பட்டது.

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், மாயவன், அன்பரசு ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அங்கு திரண்டனர். போலீசார் முன் எச்சரிக்கையாக அவர்களை ஒன்று சேர விடாமல் உடனடியாக கைது செய்து பஸ்சில் ஏற்றினர்.
மறியலில் ஈடுபட வந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக கைது செய்யப்பட்டதால் மறியல் போராட்டத்தில் அவர்களால் ஈடுபட முடியவில்லை. மறியலுக்கு முன்பே 200 பேர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது:-
போராட்டம் நடத்தக்கூட அரசு அனுமதி மறுக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றித் தாருங்கள் என்று வலியுறுத்துகிறோம்.
பாராளுமன்ற தேர்தலில் அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை நிச்சயமாக வீசும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை. அடுத்த மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில், போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்த குமார், பீட்டர் அந்தோணிசாமி, கே.கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன.
அதன் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில் போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் வருகிற 15-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது, அதே நாளில் வட்டக் கிளைகளில் காலை 10 மணிக்கு தொடங்கி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் வருகிற 26-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த 2 போராட்டங்களையும் மிகவும் வலுவாக நடத்திடும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட மையங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை நடத்துவது எனவும், வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் தலைமை செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வரும் அரசின் நிலைப்பாடு குறித்து விரிவான பிரசாரங்கள் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
- வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பணியில் இருந்து மாற்று திறன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்
- எல்லா தேர்தல் நேரங்களிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அலைக்கழிப்பு செய்து மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்
அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பணியில் இருந்து மாற்று திறன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்.
இதய நோய், புற்றுநோய். காசநோய் மேலும் உடலில் பலதரப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் கர்ப்பமுற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியைகளின் மருத்துவ அறிக்கையை பெற்று விலக்களிக்க வேண்டும்
அதாவது எல்லா தேர்தல் நேரங்களிலும் இதுபோன்று பாதிப்புள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை அலைக்கழிப்பு செய்து மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்த சிரமத்தை போக்க ஒவ்வொரு தாலுக்கா அலுவலகங்களிலும் இதற்கென தனி அலுவலர்களை நியமித்து அவர்களை அலைக்கழிப்பு செய்யாமல் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.
அரசு ஊழியர்களும் தேர்தலில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். ஏற்கெனவே ராஜஸ்தான் மாநிலத்தின் அரசு மருத்துவர் தீபக் கோக்ரா துங்கார்பூர் சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிட மாநில உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அது மட்டுமின்றி அவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் அரசு பணி வழங்க வேண்டும் என உத்தரவு அளித்ததை தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட்டு இருந்ததை சுட்டிக்காட்டிய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நல கூட்டமைப்பு, இதனை பின்பற்றி விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்.
வெற்றி பெற்றால் அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே பதவியில் பணியில் சேரலாம் என்ற உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது.
- இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி புரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் தொகுக்கப்பட்டு 1.7.2024 அன்று காலை 10 மணிக்கு அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது.
cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.