என் மலர்
நீங்கள் தேடியது "Government School Teacher"
- பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாட்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி:
தேனி அருகே உள்ள நாகலாபுரம் தனியார் பள்ளி முதல்வராக இருப்பவர் செந்தில்குமார் (50). இவரது பள்ளியில் குப்பிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (வயது 39) என்பவரின் மகன் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் அந்த மாணவருக்கும், சக மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து விசாரிப்பதற்காக அருண்பிரகாஷ் அந்த பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாட்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் அருண் பிரகாஷ் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அருண்பிரகாஷ் குமணன் தொழு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாட்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
- அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி:
தேனி அருகே உள்ள நாகலாபுரம் தனியார் பள்ளி முதல்வராக இருப்பவர் செந்தில்குமார் (50). இவரது பள்ளியில் குப்பிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (வயது 39) என்பவரின் மகன் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் அந்த மாணவருக்கும், சக மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து விசாரிப்பதற்காக அருண்பிரகாஷ் அந்த பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாட்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் அருண் பிரகாஷ் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அருண்பிரகாஷ் குமணன் தொழு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொடக்கக்கல்வி துறையின் கீழ் 3,312 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.
- அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 8 -ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரிய வழக்கில் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை ஏற்று பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து மாறுதல் கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த மே 15-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடத்தப்பட்டது. இதன்மூலம் தொடக்கக்கல்வி துறையின் கீழ் 424 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,111 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,777 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 3,312 பேர் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.
இந்த மாறுதலால் அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ரகுநாத் (59). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜூலியட் பிரேமலதா(56).
- காலை 10 மணிக்கு புறப்பட்டு காரில் பெங்களூர் நோக்கி சென்றனர். மதியம் 1 மணியளவில் கிருஷ்ணகிரி அருகே ஒரு பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த சுவரின் மீது மோதியது.
நாமக்கல்:
நாமக்கல் பொன்விழா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத் (59). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜூலியட் பிரேமலதா(56).
அரசு பள்ளி ஆசிரியர்
இவர் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள தங்கள் மகனைப் பார்ப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் நாமக்கல்லில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காரில் பெங்களூர் நோக்கி சென்றனர். மதியம் 1 மணியளவில் கிருஷ்ணகிரி அருகே ஒரு பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த சுவரின் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியை ஜூலியட் பிரேமலதா உயிரிழந்தார். அவரது கணவர் ரகுநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆசிரியையின் உடல் நாமக்கல் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலரும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்சோ வழக்கில் கைதான இடைநிலை ஆசிரியர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலங்கொம்பு அரசு பள்ளியில் 7,8, 9-ம் வகுப்புகளில் படித்து வரும் 9 மாணவிகளுக்கு அந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த நடராஜன் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவிகள் புகார் அளித்தும், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியைகள் அதனை கண்டு கொள்ளாமல், அதற்கு உடந்தையாக இருந்தாகவும் தெரிகிறது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா அளித்த புகாரின் பேரில் போலீசார் இடைநிலை ஆசிரியர் நடராஜன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் சம்பவம் தெரிந்தும், புகார் அளிக்காமலும், நடவடிக்கை எடுக்காமலும் இருந்த தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியைகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் கைதான இடைநிலை ஆசிரியர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடராஜன் ஒரு வாரத்திற்கு முன்பே சஸ்பெண்டு செய்யப்பட்டு விட்டார்.
அதனை தொடர்ந்தே அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆசிரியர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர் தம்பயா தலைமை உரையாற்றினார்.
- தமிழக அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்படி தம்பயாவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
சேலத்தில் நேற்று காவிரி- சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்திய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர் தம்பயா தலைமை உரையாற்றினார்.
இந்நிலையில், விழாவில் பங்கேற் தம்பயாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முறையாக பள்ளிக்கு செல்லாமல், அதிமுக பணிகளில் ஈடுபட்டு வந்ததால் தொடக்க பள்ளி கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், தமிழக அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்படி தம்பயாவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தம்பயா கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஆர்.வடிவேல் (வயது 37).இவரது தந்தை பெயர் ராமன், தாயின் பெயர் சிந்தாமணி இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வளையகாரன் வலசு.
இவர் பிஎஸ்ஸி (கணிதம்)எம்.ஏ.பிஎட். (வரலாறு) பட்ட படிப்பு முடித்து, அம்மா பேட்டை அருகே உள்ள மறவபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
கடந்த 17.01.2002 முதல் இன்று வரை 17 வருடங்களாக அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார் இவர் ஐ.ஏ.எஸ். கனவுடன் இரண்டு முறை சிவில் சர்வீஸ் தேர்வுகளும் எழுதியுள்ளார்.
கடந்த 2013 முதல் 3 முறை குரூப் 1 தேர்வுகள் எழுதப்பெற்று முதல் முறையாக நேர்முக தேர்வில் கலந்து கொண்டு டிஎஸ்பியாக தேர்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவியின் பெயர் பிளாரன்ஸ் இவரும் அரசு பள்ளி ஆசிரியையாக பணி புரிகிறார். இவருக்கு அறிவமுது (11) என்ற மகளும் அமுதப் பிரியன் ( 9) என்ற மகனும் உள்ளனர்.
டி.எஸ்.பி.யாக தேர்வு பெற்ற இவரை சக ஆசிரியர்களும் அப்பகுதி பொதுமக்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். #tamilnews
தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைசெயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் ஈடுபடுத்தும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற புதிய விருதினை தமிழக அரசு இந்த ஆண்டு முதல் வழங்குகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஆறு ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் பள்ளியில் மிகசிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தியமைகாக புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றியம் உடையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் சுப்பிரமணியன் என்பவருக்கும் இந்த ஆண்டிற்கான கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா விருதுநகரில் நடந்தது. விழாவில் ஆசிரியர் சுப்பிரமணியனுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விருது வழங்கினார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி. பள்ளிகல்வித் துறை இயக்குனர், தொடக்க பள்ளி இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருது பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியன் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் 8-ம் வகுப்பு மாணவர்களையும் பங்கேற்க செய்து வெற்றி பெற செய்துள்ளார். தொழில்நுட்ப பாடங்களையும் நடத்தி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்தி வருகிறார்.
விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஊர்பொதுமக்கள் வாழ்த்துக்களை கூறினர்.